Sun05052024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்
February 2007

Sunday, 25 February 2007

முன்னுரை : மனித அவலங்களின் மிதற்கும் அரசியலும் கோட்பாடுகளும்! PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Sunday, 25 February 2007 14:18
பி.இரயாகரன் - சமர் / 2007

book _10.jpgசமகாலத்தில் நடைபெற்ற தொடர்ச்சியான பல்வேறு மனிதவிரோதசெயல்கள் மீதான ஒரு தொகுப்பு நூல் இது. மனிதத்தை நோக்கியும், மனிதத்தை நேசித்தலை நோக்கி முன்னேறுதல் என்பது அன்றாடம் அடிசறுக்குகின்றது. அதுவென்னவென்று கேட்கின்ற அளவுக்கு, அது அர்த்தமிழந்த ஒன்றாக பல்லிளித்து நிற்கின்றது. நாள்தோறும் மனிதனுக்கு எதிரான புதிய சதிகள், திட்டங்கள். பாவம் தமிழ்பேசும் மக்கள். மனிதனுக்கு எதிரான நிலைகளில், நிலைமைகளில் அன்றாடம் நடக்கும் அதிரடி மாற்றங்கள், அதிர்வுகள். அவற்றில் சிலவற்றை இந்த நூல் மூலம் உங்களுடன் பேச முனைகின்றேன்.

Read more...
Last Updated ( Saturday, 30 August 2008 18:31 )


Saturday, 24 February 2007

பெரும்பான்மை திட்டம் பேரினவாதமே என்பதை இனம் காண்பதும், மாற்றாக குறைந்தபட்ச ஜனநாயகத் தீர்வும் PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Saturday, 24 February 2007 19:28
பி.இரயாகரன் - சமர் / 2007

(இந்த விமர்சனத்தை தீர்வை முன்வைக்கும் அனைத்து தரப்புக்கும், இதன் மீது அக்கறை உள்ள அனைத்து சமூகப் பிரிவுக்கும் முடிந்தளவுக்கு அனுப்பிவைக்கவும்)

 

கொடூரமான புலிப்பாசிசம் ஒருபுறம், பேரினவாத அரசு நடத்தும் சதிகள் சூழ்ச்சிகள் கூடிய பாசிசம் மறுபுறம். இரண்டும் ஒன்றையொன்று சார்ந்து நிற்பதால், அனைத்தையும் மோசடி செய்தல், ஏய்த்து ஏமாற்றுதல், சமூகங்ளை இங்குமங்குமாக நம்பிக்கையூட்டி அலைக்கழித்தல்,

Read more...
Last Updated ( Friday, 18 April 2008 21:10 )


Sunday, 18 February 2007

கொரில்லா-ம் நாவலாசிரியர் ஷோபாசக்தியைக் குறிவைக்கும் புலிகள்! (நிதர்சனம் விதைக்கும் வினை.) PDF Print Write e-mail
Written by admin2
Sunday, 18 February 2007 20:37
அரசியல்_சமூகம் / ப.வி.ஸ்ரீரங்கன்

"முதலில் ஒத்திகை பின்பு போட்டுத் தள்ளுதல்."

தமிழ் இலக்கியச் சூழலுக்குள் அதிர்வுகளைச் செய்துகொண்டிருப்பவர் சோபாசக்தி.

தனது கொரில்லா மற்றும் ம் நாவல்களுடாகப் பதிந்து வைத்திருக்கும் ஈழத்து போர்க்கால வாழ்க்கைகள் இன்றைய ஈழப் போராட்டத்தின் பல பரிணாமங்களைப் பேசுபவை.அவரது சிறுகதைகளுடாகப் போராட்டத்தினதும் ஈழமக்களினதும் வாழ்க்கைப் பெருஞ் சுமைகளை விமர்சனரீதியாச் சொல்பவர் சோபா சக்தி.இந்த மனிதனைக் குறிவைத்துப் புலிகளின் உத்தியோபூர்வத் தமிழ் இணையத் தளமான நிதர்சனம்.கொம் அவதூறுச் செய்தி விதைத்துக் கருத்துக்கட்டுவது ஒருவித ஒத்திகையா? 

Read more...

மக்கள்தான் புலிகளை தோற்கடித்தவர்களே ஒழிய, கருணா என்ற பாசிச கூலிக்கும்பல் அல்ல PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Sunday, 18 February 2007 16:18
பி.இரயாகரன் - சமர் / 2007

இந்த உண்மை புலியெதிர்ப்பு கும்பலுக்கு கசப்பான ஒன்று. இதனால் மக்கள் புலிகளை தோற்கடிக்கவில்லை என்று காட்டுவதே, புலியெதிர்ப்பு எடுபிடி பேர்வழிகளின் சுத்துமாத்து அரசியலாகும். இந்த மோசடியை உண்மையானதாக காட்ட, மக்களையும் கருணா கும்பலையும் ஒன்றாக காட்டுவதே இவர்களின் அரசியலாகும். அதை அவர்கள் "கருணாவின் அரசியலை நேசிக்கும் கிழக்கின் மக்களும், அந்த மக்களை நேசிக்கும் கருணாவின் அரசியலும்.." என்றவாறாக தமது புலியெதிர்ப்பு அரசியல் நிலைக்கு ஏற்ப, கயிறு திரிப்பதே இவர்களின் அரசியல் சாரமாகும் புலிகள் வேறு மக்கள் வேறு அல்ல என்பதை எப்படி புலிகளும் அதன் பினாமி எழுத்தாளர்களும் மறுக்க முனைகின்றனரோ, அதையே புலியெதிர்ப்புக் கும்பலும் செய்ய முனைகின்றது.

Read more...
Last Updated ( Saturday, 06 December 2008 07:27 )


Tuesday, 13 February 2007

யாழ் மேலாதிக்கம் என்றால் என்ன? PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Tuesday, 13 February 2007 16:15
பி.இரயாகரன் - சமர் / 2007

இந்தக் கேள்விகளும், குழப்பங்களும், திரிபுகளும் மலிந்த ஒரு சமூக அமைப்பில் நாங்கள் வாழ்வதால், இதை தெளிவுற வைப்பது அவசியமாகிவிடுகின்றது. இந்த வகையில்

Read more...


Saturday, 10 February 2007

கொலைகாரர்களும் கொலையைக் கண்டிப்போரின் வக்கிரமும் PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Saturday, 10 February 2007 16:12
பி.இரயாகரன் - சமர் / 2007

கொலைகள், ஒரு நாளில் எத்தனை கொலைகள். இவை பட்டியலிட முடியாதளவில் நடக்கின்றது. கொல்பவனும் தமிழன், கொல்லப்படுபவனும் தமிழன். ஏன் ஏதற்கு கொல்லப்படுகின்றோம் என்று தெரியாத, ஒரு நிலையில் கொல்லப்படுகின்றோம். இன்று நீ நாளை நான், இப்படி கொல்லப்படுகின்றோம். மரணத்தின் தேசமாக, தேசியமாக பாடை கட்டிச் செல்லுகின்றது எமது தேசம்.

Read more...


Thursday, 08 February 2007

யாழ் மேலாதிக்கத்தின் கோவணம் தான் கிழக்கு மேலாதிக்கம் PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Thursday, 08 February 2007 16:03
பி.இரயாகரன் - சமர் / 2007

மனிதன் கற்றுக் கொள்வதற்கு வரலாறு தந்துள்ள படிப்பினைகள், மனித அவலங்கள் ஊடாகவே எம்முன் பரந்து விரிந்து வீழ்ந்து கிடக்கின்றது. ஆனால் நாங்கள் அந்த யாழ்ப்பாணிய மேலாதிக்க வழியில் தான், அதுவும் அந்த குண்டுச் சட்டியில் தான் குதிரை ஓட்டுவோம் என்றே கங்கணம் கட்டி ஆடுகின்றனர். இதை அம்பலப்படுத்தும் வரலாற்றுத் தேவை எம் முன் மீண்டும் மீண்டும் எழுகின்றது. கருணாவின் பிளவும், அதன் பின் அண்மையில் கிழக்கில் இராணுவத்தின் மீள் ஆக்கிரமிப்புகளும் வெற்றி பெற்று வருகின்ற இன்றைய நிலையில், புலியெதிர்ப்புக் கும்பல் போடுகின்ற அரசியல் வேஷங்களும், அவர்களின் கூத்துகளும், யாழ் மேலாதிக்கத்தின் ஒரு நாற்றமடிக்கும் கோவணமாகவே, கிழக்கு மேலாதிக்கம் மாறுகின்றது.

Read more...
Last Updated ( Sunday, 31 August 2008 07:17 )


Wednesday, 07 February 2007

ஏப்பிரலில் தமிழீழம் கிடைக்கும்... PDF Print Write e-mail
Written by admin2
Wednesday, 07 February 2007 20:33
அரசியல்_சமூகம் / ப.வி.ஸ்ரீரங்கன்

ஏப்பிரலில் தமிழீழம் கிடைக்கும்,சொல்கிறார்: பிரபாகரனின் அத்தார் இராஜேந்திரன்!

//வன்னியில் கட்டாயப் பிள்ளை பிடிப்பும், வீட்டுக்கொருவர் போராடக் கட்டளையும்; காணுமிடமெல்லாம் அன்னையர் கதையும் இதுவாய்ப் போச்சு!//


மீளவும் பிள்ளைகள் பிடிப்பு,போராட்டம்.புண்ணாக்கு...முன்பெல்லாம் சிறியவர்களாக இருக்கும்போது நமக்குப் பெரிய அச்சம் இருப்பது இரண்டு விஷயத்துக்காக.இந்த இரு விஷயமும் கடை தெருவுக்குப் போகும்போதும்,தனிமையில் இருட்டுப்பட்ட பொழுதுகளில் தெருவினில் நடக்கும்போதும் மிகவும் கொடிய அச்சத்தை எமக்கு ஏற்படுத்துவது.இந்த முக்கியமான இரண்டும் எமக்கு வளர்ப்போடு ஊட்டப்பட்டது.நாங்கள் எல்லோருமே இதை உணர்ந்திருப்போம்.

 

Read more...


Friday, 02 February 2007

ரீ.பீ.சீ யை நிரந்தரமாகவே நிறுத்த முனையும் பாசிசம் PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Friday, 02 February 2007 19:24
பி.இரயாகரன் - சமர் / 2007

பாசிசம் சமூகத்தை அறிவால் வெல்வதில்லை. மனித மனங்களை வெல்வதில்லை. மாறாக அடக்குமுறையால், மோசடித்தனத்தால் வெல்ல முனைகின்றது. அது தனது ஈனத்தனமான கொலைப் பண்பாட்டால், உறையவைக்கும் அச்சத்தை விதைத்து, தன்னைத்தான் பலமானதாக காட்டிக்கொள்ளுகின்றது.

Read more...
Last Updated ( Friday, 18 April 2008 21:09 )

Page 1 of 3