Mon04292024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்
Friday, 22 May 2020
பொருளாதார நெருக்கடி அரசியல் நெருக்கடியாக மாறும் - என்ன செய்ய வேண்டும்? PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Friday, 22 May 2020 13:18
பி.இரயாகரன் - சமர் / 2020

செல்வந்தர்கள் தொடர்ந்து செல்வத்தைக் குவிப்பதையே, முதலாளித்துவம் பொருளாதாரத்தின் வளர்ச்சியாக கருதுகின்றது. அனைத்துச் செல்வத்துக்குமான மனித உழைப்பு நின்று போகும் போதும், உற்பத்தியில் இலாபம் குறையும் போது, முதலாளித்துவ பொருளாதாரத்தின் பொது நெருக்கடியாக மாறுகின்றது. கொரோனா வைரஸ் தொற்று உலக உற்பத்தியை நிறுத்தியதுடன், தொடர்ச்சியான பொருளாதார மந்தநிலையை உருவாக்கி இருக்கின்றது. கொரோனா முடிவுக்கு வராத (மே மாதம்) இன்றைய சூழலில் 8.8 ரில்லியன் டொலர் (8 800 000 000 000), அதாவது உலகப் பொருளாதாரத்தில் 5.8 – 8.8 சதவீதமான பொருளாதார இழப்பு குறித்து ஆசியன் வளர்ச்சி வங்கி எதிர்வு கூறியிருக்கின்றது.

இதன் பொருள் உலகம் பொருளாதார நெருக்கடியை நோக்கிப் பயணிக்;கின்றது. அது அரசியல் நெருக்கடியாக, வர்க்க முரண்பாடுகளாக எழும். கொந்தளிப்பான இந்த சூழலை முதலாளித்துவமானது

1.மக்களை இன – மத - சாதி - நிற ஒடுக்குமுறை மூலம் பிளந்து, வர்க்க மோதலை  தவிர்க்க முனையும்.

2.நிதி மூலதனத்தைக் கொண்டு இலாபத்துக்கான சந்தையை சரியவிடாது பாதுகாக்கும்.

3.அரசுடமைகளை தனியுடமையாக்குவதன் மூலம் முதலாளித்துவத்தின் இலாபத்தை தக்கவைக்கும் அதேநேரம், நிதிமூலதனத்தைத் திரட்டிக் கொண்டு தன்னை தகவமைக்க முனையும்.

இந்த வகையில் முதலாளித்துவம் ஒற்றைப் பரிணாமம் கொண்டதல்ல. இது தன்னை தற்பாதுகாத்துக் கொள்ள எல்லாவிதமான ஏற்றத்தாழ்வான – நெளிவுசுழிவான வழிமுறைகளைக் கையாளும்.

பாட்டாளி வர்க்கம் அரசியல்ரீதியாக இதை விளங்கிக் கொண்டு தன்னை தயார் செய்வதும் - அரசியல் நெருக்கடியின் போது அரசியல் அதிகாரத்தை பெறுவதற்கு தயாராக - தன்னை அரசியல்ரீதியாக அமைப்பாக்கி இருக்கவேண்டும்.    இன்றைய உற்பத்திமுறையும், நுகர்வும் மனித தேவைகளை பூர்த்தி செய்வதற்காக    உருவானதல்ல. மாறாக செல்வந்தர்கள் மேலும் செல்வந்தராவதற்கானதாக இருக்கின்றது. இதனால் இது இயற்கை குறித்து அக்கறைப்படுவதில்லை. வாழ்வியல் சார்ந்த மனித உரிமைகள், தேவைகள் குறித்து அலட்டிக் கொள்வதில்லை.

Read more...
Last Updated ( Tuesday, 26 May 2020 14:04 )

கொரோனா வைரஸ்சை சீனாவுக்குள்ளேயே முடக்கியிருக்க முடியுமா!? PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Friday, 22 May 2020 13:15
பி.இரயாகரன் - சமர் / 2020

அமெரிக்கா கூறுகின்றது கொரோனா வைரஸ்சை சீனாவுக்குள் முடக்கி - உலகெங்கும் பரவுவதை தடுத்திருக்க முடியும் என. இது அமெரிக்கா கூற்று மட்டுமல்ல, முதலாளித்துவ சிந்தனைமுறையில் சிந்திக்கின்ற, மனிதர்களின் பொதுக் கருத்தியலுமாகும்.

சீனாவைப் பொறுத்தவரை கொரோனா வைரஸ்சை தன் எல்லைக்குள் கட்டுப்படுத்தி இருக்கும் ஆற்றலையும், அது உலகெங்கும் பரவுவதை தடுக்கும் வல்லமையையும் கொண்டிருந்தது. சமூகத்தை முன்னிறுத்தி அறிவியல்ரீதியாக அணுகினால் சாத்தியமானாக இருந்த போதும், பொருளாதாரரீதியான சிந்தனையும் நடைமுறையும் அதை சாத்தியமற்றதாக்கியது.

சீனாவைக் கடந்து வைரஸ்சின் பரவலை சீனா கட்டுப்படுத்தத் தவறியது என்ற குற்றச்சாட்டின் உண்மைத்தன்மை குறித்த கேள்விகளை ஆராய முன்பு – அனைத்து நாடுகளும் பதில் சொல்ல வேண்டிய இரு விடயங்கள் இருக்கின்றது

1.சீனாவை விட்டு வைரஸ் நாடு கடந்த பின் - சீனா போல் அல்லது உங்கள் வழியில் ஏன் உங்கள் நாட்டில் வைரஸ்சைக் கட்டுப்படுத்த முடியவில்லை? எது தடுத்தது? அனைத்து நாடுகளும் இதற்கு பதில் சொல்ல வேண்டும்.

2.வைரஸ் பரவலைத் தடுக்க அரையும் குறையுமாக முடக்கி – மீளவும் செல்வந்தர்கள் செல்வத்தைக் குவிக்க இயல்பு வாழக்;கைக்கு திரும்பும் உங்கள் நடவடிக்கை - வைரஸ் தொற்றை மீள பரவலாக்கும் நடவடிக்கையாகும். இதற்கு பதில் சொல்ல வேண்டும்.

இப்படி உங்கள் நடத்தைகள் ஒருபுரும் இருக்க மறுபக்கம் உங்களையே கட்டுப்படுத்த முடியாதபோது, சீனாவை குறிவைத்து அரசியல் நடத்துவது ஏன்? சீனா கட்டுப்படுத்தத் தவறிய விடையத்தைப் பார்ப்போம். சீனா வேண்டுமென்றே பரப்பியது என்ற குற்றச்சாட்டை, அறிவியல் அடிப்படையின்றி அமெரிக்கா அவதூறாகவே முன்வைத்து வருகின்றது. மேற்கு ஆதரவு முதலாளித்துவச் சிந்தனையாளர்களும் இந்தக் குற்றச்சாட்டையே மீள முன்வைக்கின்றனர். இப்படி அரசியலாகும் இந்தப் பின்னணியில் - என்ன நடந்தது என்பதைப் பார்ப்போம்.

சீனா உலகெங்கும் பரப்பியது என்பது பொய். உலகெங்கும் திட்டமிட்டோ அல்லது சீன சுற்றுலாப் பயணிகள் மூலமே, கொரோனா வைரஸ் தொற்று உலகெங்கும் நிகழவில்லை. முhறாக சீனா அல்லாத அந்தந்த நாடுகளைச் சேர்ந்தவர்களே, சீனாவில் இருந்து கொரோனாவைக் காவி வந்தனர். இவர்கள் சீனா சென்ற சுற்றுலாப் பயணிகளுமல்ல.

அப்படியானால் கொரோனா வைரஸ்சை காவி வந்தவர்கள் யார்? இவர்களைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் அரசுகளுக்;கு (சீனாவுக்கு) இருந்ததா? இதை ஏன் இன்று வரை (சீனா உட்பட) யாரும் பேச மறுக்கின்றனர்?

Read more...
Last Updated ( Monday, 25 May 2020 11:56 )

அமெரிக்காவின் மருத்துவமும் - கொரோனாவும் PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Friday, 22 May 2020 13:09
பி.இரயாகரன் - சமர் / 2020

அமெரிக்காவின் (முதலாளித்துவத்தின்) மருத்துவக் கொள்கையென்ன? "நோய் என்பது மனிதன் தனக்குத் தானே - தன் நடத்தைகள் மூலம் தேடிக் கொள்ளுவதே. இதற்கு அரசு – சமூகம் எந்தவகையிலும் பொறுப்பேற்க முடியாது" மருத்துவம் தேவையென்றால், பணத்தைக் கொடுத்து வாங்கு - மருத்துவ காப்;புறுதியை செய்து கொள். இதுவே அமெரிக்க அரசினதும் - ஆளும் வர்க்கங்களினதும் கொள்கையாகும். மருத்துவத்தில் அரசு தலையிட முடியாது. அதாவது மக்களின் உழைப்பிலிருந்து கிடைக்கும் வரியை - மருத்துவத்திற்கு செலவிட முடியாது.

இது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் தனிப்பட்ட கொள்கையல்ல, அமெரிக்க அரசின் பொதுக் கொள்கை. ஆளும் முதலாளித்துவ வர்க்கத்தின் சிந்தனைமுறை. உலக முதலாளித்துவத்தின் பொது வழிமுறையுமாகும்.

இன்று அமரிக்காவில் நோயை எதிர்கொள்ளுவதும் - மருத்துவத்தைப் பெறுவதும் என்பது, தனிப்பட்ட அந்த நபரின் பொறுப்பாக இருக்கின்றது. அரசு அதற்கு உதவுவதில்லை. நோயாளி பணத்தைக் கொடுத்தால் மட்டுமே, நோயை எதிர்கொள்ளமுடியும். பணமில்லாதவன் நோயுடன் வாழ்வதும், செத்துப் போவதும் .. அவரவர் தேர்வாகவும், அதில் அரசு தலையிடுவதில்லை. இதற்கு அமைவாக சமூகம் இதற்கு பொறுப்பல்ல என்ற முதலாளித்துவச் சிந்தனை முறையில், சமூகத்தை சுயநலமாக சிந்திக்கவும் - செயற்படவும் வைத்திருக்கின்றது.

 

சமூகமாக மனிதன் வாழ்தல் என்பது தனியுடமை சமூகத்தில் இருக்க முடியாது. இதுதான் முதலாளித்துவ சிந்தனைமுறை. அதாவது பொருளை முதன்மையாகக் கொண்ட உலகத்தில் இயற்கை எப்படி இருக்க முடியாதோ, அதுபோல் சமூகம் என்பது தனியுடமைச் சமூகத்தில் இருக்க முடியாது. இயற்கை, சமூகம் தொடங்கி மனிதம், அறம் வரை அனைத்தும், தனிமனித சுதந்திரத்தில் தலையிடுவதாகவே - முதலாளித்துவம் கருதுகின்றது.

இங்கு அரசு என்பது சொத்துடமைச் சமூக அமைப்பைப் பாதுக்காகும் உறுப்பாக இருக்க முடியுமே ஒழிய, அதற்கு முரணாக செல்வத்தை பகிர்ந்தளிக்கும் உறுப்பாக இருக்க முடியாது என்கின்றது முதலாளித்துவம். கல்வி, மருத்துவம், உணவு, நீர், இருப்பிடம் .. என எதுவும், மக்களின் அடிப்படை மனித உரிமையில்லை, மாறாக இவை அனைத்துமே சந்தைக்குரிய முதலாளித்துவப் பொருள். முதலாளித்துவத்தில் மனிதவுரிமை என்பது செல்வந்தர்களின் செல்வக் குவிப்பிற்கு தடையான எதுவும் மனிதவுரிமையல்ல, மாறாக செல்வக் குவிப்பிற்கு உதவுவது மட்டும் தான் மனிதவுரிமை.

இந்த அடிப்படையில் தேர்தல் மூலம் வாக்கு போட்டு தேர்ந்தெடுக்கப்படும் அமெரிக்க ஜனநாயகவாதிகளின் மருத்துவக் கொள்கை என்பது, பணத்திற்கு விற்கும் - வாங்கும் பொருள். அமெரிக்காவில் இது வெளிப்படையாக வெளிப்பட்டாலும் - உலகெங்குமான உலக முதலாளித்துவத்தின் பொதுக் கொள்கையும், நடைமுறையும் இதை நோக்கித்தான் பயணிக்கின்றது.

 

Read more...
Last Updated ( Monday, 25 May 2020 11:52 )

அரசியலாகியுள்ள கொரோனா மரணங்கள் PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Friday, 22 May 2020 13:05
பி.இரயாகரன் - சமர் / 2020

அரசும் அதன் மீதான அதிகாரமே எல்லாம், வைரஸ் என்பது கால் தூசு. இது தான் இயற்கை மீதான முதலாளித்துவ அரசுகளின் கொள்கைகள். இப்படித் தான் கொரோனா வைரஸ் குறித்து முதலாளித்துவ ஆளும் வர்க்கங்கள் கருதியதுடன் - அதையே நடைமுறையாக்கினர்.

ஆனால் இயற்கையும், இயற்கை விதியும் இதைக் கடந்தது என்பதையும் - கொரோனா வைரஸ் தன் வழியில் மனிதனை கொல்லத் தொடங்கிய போது - மனிதனுக்கு புரியத் தொடங்கியது இயற்கை முதலாளித்துவ அதிகாரத்தையும் கடந்ததென்று. தங்கள் வர்க்க அரசியல் அதிகாரங்கள் மூலமும், நவீன தொழில்நுட்பம் மூலமும், வைரஸ்சைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

கொரோனா மரணங்கள் தங்கள் வர்க்க சர்வாதிகார தனியுடமை கட்டமைப்பையே தகர்த்துவிடும் என்ற பொது நெருக்கடியை அடுத்து, வைரஸ் தொற்றினை இயற்கை வடிவத்தில் முடக்கி கட்டுப்படுத்தும் நடவடிக்கையை, மெதுவாகவும் -  அரைகுறையுமாக தொடங்கினர்.

மூலதனத்தை முதன்மைப்படுத்தி முன்னெடுக்கும் முடிவுகளால் ஏற்பட்ட தயக்கம், தாமதம் கொரோனா மரணங்களாகவும் – மரண எண்ணிக்கை அதிகரிப்புமாகவும் பரிணமித்தது. மரணம் இன்று அரசியலாகியுள்ளது. இந்த அரசியலானது வர்க்க அரசியல் முரண்பாடாக மாறவில்லை. மாறாக ஆளும் வர்க்கத்தினுள்ளான முரண்பாடாக மட்டும் - குறுகி வெளிப்படுகின்றது. வர்க்கரீதியாக ஓடுக்கப்பட்ட வர்க்கமோ, வர்க்க அரசியலுக்கு பதில் பொருளாதாரவாத அரசியலுக்குள் முடங்கிக் கிடக்கின்றது. வர்க்க அரசியல் கோரிக்கைக்கும் - பொருளாதார கோரிக்கைக்கும் இடையிலான அடிப்படை வேறுபாட்டை மார்க்சியம் மிகத் தெளிவாக கொண்டிருந்த போதும், பொருளாதார கோரிக்கைக்குள் அல்லது எதுவுமற்ற கொரோனா அரசியலாக சர்வதேசியம் குறுகிக் கிடக்கின்றது.

Read more...
Last Updated ( Friday, 22 May 2020 21:10 )