Tue04302024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்
Wednesday, 14 May 2014
மக்கள் கிளர்ச்சிக்குப் பயப்படும் இனவாத மஹிந்த அரசும் - தமிழ் இனவாதிகளும்! PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Wednesday, 14 May 2014 14:29
புதிய ஜனநாயக மக்கள் முன்னணி / புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

அனைத்துப் பலகலைக்கழக மாணவர் ஒன்றியம் கடந்த வைகாசி 7 ஆம் திகதி மாணவர்களின் உரிமைகளை முன்னிறுத்தியும், அவர்களின் மனித உரிமைகளைக்கோரியும் மஹிந்த ராஜாபக்ஷவின் உத்தியோகபூர்வ வாசஸ்தலமான அலரி மாளிகைக்கு முன் மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடாத்தினார்கள். தற்போது வெளிவந்துள்ள தகவல்களின் படி, இப்போராட்டமானது பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய தலைமையினான இலங்கையின் பாதுகாப்புக்குப் பொறுப்பான போலிஸ், இராணுவம் மற்றும் புலனாய்வு நிறுவனங்களின் தலைமைகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இலங்கையின் அதிஉச்ச பாதுகாப்பு வலயத்திலுள்ள ஜனாதிபதி வாசஸ்தல பகுதிக்குள் எவ்வாறு திட்டமிட்ட முறையில் மாணவர்கள் புக முடிந்து என்பதைக் கண்டறிந்து அறிக்கை சமர்பிக்குமாறு பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய அனைத்துப் பாதுகாப்புப் பிரிவினரையும் பணித்துள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் தெரிவிகின்றன.

Read more...
Last Updated ( Wednesday, 14 May 2014 14:31 )

ருகுணு பல்கலைக்கழக மாணவர்களிற்கு உயர்கல்வி அமைச்சரின் அச்சுறுத்தல்! PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Wednesday, 14 May 2014 11:09
சமகால நிகழ்வுகள் / Newsflash

எதிர்வரும் நாட்களில் ருகுணு பல்கலைக்கழகத்தில் “தேசத்தின் மகுடம்” கண்காட்சி நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு மாணவர் எவராது இடையூறு விளைவித்தால் கடும் தண்டனையினை அனுபவிக்க வேண்டியிருக்கும். இடையூறு விளைவிக்கும் மாணவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினரும் இந்த நாட்டில் இடம் கிடையாது. வேறு நாட்டில் தான் வாழ வேண்டியிருக்கும் என உயர்கல்வி அமைச்சர் S. B. திஸ்சநாயக்கா எச்சரித்துள்ளார்.

பதவிக்காகவும் சிறைத்தண்டனையில் இருந்து தப்புவதற்க்காகவும் கட்சி தாவிய கிரிமினல், சண்டித்தனப் பாணியில் மாணவர்களையும் அவர்களது குடும்பங்களையும் மிரட்டுகின்றார். மக்களை மிரட்டி, அடக்கி, அச்சுறுத்தி ஆட்சியில் நீண்ட காலத்திற்கு யாரும் நிலைத்ததாக வரலாறு கிடையாது என்பதனை இவருக்கு யாராவது ஞாபகப்படுத்துவது நன்று.

Read more...
Last Updated ( Wednesday, 14 May 2014 11:12 )