Tue04302024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்
Friday, 09 May 2014
அலரி​ மாளிகைக்குள் மாணவர்கள் புகுவதென்பது புதிய விடயம் ஒன்றல்ல! புபுது ஜாகொட PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Friday, 09 May 2014 07:02
சமகால நிகழ்வுகள் / Newsflash

இன்று பல்கலைக்கழகங்களுக்குள்ளும் மாணவர்கள் மத்தியிலும் அரசு தேவையற்ற வன்முறைகளை பிரயோகித்து வருகின்றது.

ரஜரட்ட பல்கலைக்கழக மாணவர்களுக்கு வகுப்புத்தடை விதித்து இன்றுடன் 150 நாட்கள் கடந்தும் எந்த விதமான முடிவும் இதுவரை மாணவர்களுக்கு இந்த அரசால் வழங்கமுடியவில்லை. இன்று முன்னிலை சோசலிச கட்சி நிப்போன் ஹோட்டலில் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டின் போது கட்சியின் பிரச்சார செயலாளர் புபுது ஜாகொட  இவ்வாறுதெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

இம்மாணவர்கள் விரிவுரைகளுக்கு செல்லவும் 03 வருட காலம் தடை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு இந்த அரசு தொடர்ச்சியாக தங்களது உரிமைகளை கேட்டு நியாயமான போராட்டங்கள் நடத்தும் மாணவர்கள் மீது தடைகளை விதித்து அவர்களின் வாழ்க்கையில் விளையாடுவதை ஏற்றுக்கொள்ள முடியாதென்றும் அரசு மாணவர்கள் விடயத்ததில் நீதியாக நடந்து கொள்ளாவிட்டால் தொடர்ச்சியான மாணவர் போராட்டங்களை நடத்தப் போவதாகவும். அவரது உரையின் போது தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

 

Read more...
Last Updated ( Friday, 09 May 2014 07:04 )

இந்துவின் மைந்தர்கள், ஹாட்லியின் காவலர்கள் மற்றும் தமிழ்ச்சினிமா கோமாளிகள்!! PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Friday, 09 May 2014 06:55
புதிய ஜனநாயக மக்கள் முன்னணி / புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

"எதிர்காலத்திலே வைத்தியர்கள் தமது சொந்தக் கிராமங்களிலே சேவையாற்றல் வேண்டும். தமது கிராமங்களிலே வாழ்ந்து மக்கள் பணியாற்றலே நோக்கமாகும். அதற்கு இணங்க மறுப்பவர்கள், வேறு தொழிலைத் தேடிக் கொள்ளலாம். ஈழத்தில் தமிழில் கற்க இணங்குபவர் மீண்டும் தமது கல்வியைத் தொடரலாம்" என்றும் தாம் இறந்தபின் ஒரு நினைவுக்கல் இருக்குமாயின் "தமிழருக்கான மருத்துவ ஊழியர்" (medichl Evangelist to the Tamils) என அதில் பொறிக்குமாறும் வேண்டிக் கொண்ட அமெரிக்கரான வைத்தியக்கலாநிதி சாமுவேல் ஃபிஸ்க் கிறீன் போன்ற மனிதாபிமானிகள், கன்டி பேரின்பநாயகம், ஒரேற்றர் சுப்பிரமணியம், கார்த்திக்கேசன் போன்ற சமுக உணர்வும், கடமை உணர்ச்சியும் கொண்ட ஆயிரம், ஆயிரம் ஆசிரியர்கள் உருவாக்கிய பெருவிருட்சம் தமிழ்மக்களின் கல்வி. அர்ப்பணிப்பு என்ற ஒரு சொல் மட்டும்தான் அவர்களிடம் இருந்தது. அதைத் தவிர வேறெந்த வசதியும் அவர்களிடம் இருக்கவில்லை. ஆனால் அயராது உழைத்தார்கள். கல்வி வெள்ளம் தமிழ் சமுதாய வாழ்வு எங்கும் நிறைந்தது.

Read more...
Last Updated ( Friday, 09 May 2014 07:00 )