Tue04302024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்
Sunday, 10 February 2013
அப்சலுக்கு தூக்கு-அதிர்ச்சியூட்டும் உண்மைகள்! அருந்ததி ராய்!! PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Sunday, 10 February 2013 10:37
அரசியல்_சமூகம் / வினவு

‘அப்சல் குருவை தூக்கிலிடு அவனது உயிர் அழிந்து போக வேண்டும்’
இந்திய நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் என்ற அதிவிசித்திர கதை

 

நமக்குத் தெரிந்தது இவ்வளவுதான்: டிசம்பர் 13, 2001 அன்று, இந்திய நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் நடந்து கொண்டிருந்தது. (ஊழல் விவகாரங்களின் வரிசையில் இன்னும் ஒரு விவகாரத்தில் தேசிய முன்னணி அரசாங்கம் தாக்குதலுக்கு உள்ளாகியிருந்தது). காலை 11.30 மணிக்கு, 5 ஆயுதம் தாங்கிய மனிதர்கள் IED ( (உருவாக்கப்பட்ட வெடிக் கருவி) பொருத்தப்பட்ட வெள்ளை அம்பாசடர் காரை நாடாளுமன்ற கட்டிடத்தின் நுழைவாயில் வழியாக ஓட்டி வந்தார்கள். அவர்கள் தடுக்கப்பட்ட போது, காரிலிருந்து வெளியில் குதித்து சுட ஆரம்பித்தார்கள். அதைத் தொடர்ந்து நடந்த துப்பாக்கிச் சண்டையில் அனைத்து போராளிகளும் கொல்லப்பட்டார்கள். கூடவே 8 பாதுகாப்புக் காவலர்களும், ஒரு தோட்டக்காரரும் கொல்லப்பட்டார்கள். நாடாளுமன்ற கட்டிடத்தை வெடித்துச் சிதற வைக்கும் அளவுக்கும், ஒரு படையணி முழுவதுமான சிப்பாய்களை எதிர்க்கும் அளவுக்கும் வெடி கருவிகளை வைத்திருந்தார்கள் என்று காவல் துறை சொன்னது. வழக்கமான மற்ற பயங்கரவாதிகளைப் போல இல்லாமல், இந்த ஐந்து பேரும் கணிசமான சாட்சியங்களை விட்டுச் சென்றார்கள். ஆயுதங்கள், மொபைல்கள், தொலைபேசி எண்கள், அடையாள அட்டைகள், புகைப்படங்கள், உலர்பழ பொதிகள் மற்றும் ஒரு காதல் கடிதம் கூட இவற்றில் அடங்கும்.

Read more...
Last Updated ( Sunday, 10 February 2013 10:43 )