Fri05032024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்
Thursday, 21 June 2012
யோ.கர்ணனின் "சேகுவேரா இருந்த வீடு" என்ற சிறுகதைத் தொகுப்பின் ஊடான "புனர்வாழ்வு" அரசியலை இனம் காணல் PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Thursday, 21 June 2012 13:41
பி.இரயாகரன் - சமர் / 2012

கடந்தகால இயக்க நடத்தைகள், இயக்க புனைவுகள் சார்ந்தும், மக்களின் அவலங்கள் சார்ந்தும் யோ.கர்ணன் கதைசொல்வது ஏன்? சமூகம் மீதான அவரின் சமூகப் பார்வை தான் என்ன? இனவொடுக்குமுறைக்கு எதிரான அவரின் செயல்பாட்டுத்தளம் என்ன? புலிக்கு பின் எல்லா சந்தர்ப்பவாதிகளும், பிழைப்புவாதிகளும் புதிய முகமூடிகளுடன், மூடிமறைத்த தங்கள் நோக்கங்களுடன் களத்தில் இறங்குகின்றனர். இதை யோ.கர்ணனின் கதைகளிலும் காணமுடியும். அரசு வழங்கிய (சுய) "புனர்வாழ்வை" இந்த கதைகள் மூலம் இனம் காணமுடியும்.

கதைகளின் நோக்கம் மிகத் தெளிவானது. சமூக நோக்கு கொண்டவர்களை அரசியல் மற்றும் போராட்டத்தில் ஈடுபடுவதில் இருந்து அன்னியப்படுத்துவது தான். அதே நேரம் சமூக நோக்கு கொண்டவர்களை பற்றிய வெறுப்பை, மக்கள் மத்தியில் ஊட்டுவதுதான். இந்த வகையில் கதைகள் கடந்தகால இயக்கங்கள் நடத்தையை கருப்பொருளாக கையில் எடுத்து, மனித அவலங்களைக் காட்டி வெறுப்பை ஊட்டுகின்றது. யுத்தத்தின் பின் போராட்டத்துக்கு எதிரான பொது உணர்வுகளை, அரசியல் ரீதியாக வளர்ப்பதை அடிப்படையாக கொண்டதே இந்த "புனர்வாழ்வு" கதைகள். மக்களுக்கும் "புனர்வாழ்வு" அழிக்க இந்த கதைகள் மூலம் முனைகின்றது. அந்த நோக்கில் இவர்கள் எழுதுகின்றனர், எழுத வைக்கப்படுகின்றனர். போராட்டம் தவறானதா? இல்லை. மாறாக அதன் அரசியலும், அதன் சமூகப் பார்வையும், அதன் நோக்கமும் தான் தவறானதாக இருந்தது. இதை தங்கள் கதைகளில் கூறுவதை இவர்கள் மறுதலிக்கின்றனர். இந்த அடிப்படையில் விமர்சனம் சுயவிமர்சனத்தைக் கூட, இவர்கள் தங்களளவில் செய்ய மறுக்கின்றனர். இந்த அடிப்படையில் சமூகத்தை வழிநடத்தும் வண்ணம், சமூகப் பொறுப்புடன் இவர்கள் கதை சொல்லவில்லை.

Read more...
Last Updated ( Thursday, 21 June 2012 13:48 )

எம்மினத்தை இனவாதத்துக்கு எதிராக அணிதிரட்டாது புரட்சியை நடத்தமுடியுமா? - சிங்கள மக்களுடன் பகிரங்க உரையாடல் : 12 PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Thursday, 21 June 2012 10:50
பி.இரயாகரன் - சமர் / 2012

யாரைக் கொண்டு தான் புரட்சியை நடத்தமுடியும்? சில புரட்சியாளர்களின் புரட்சிக் கோசம், மக்களுக்கு எதிரான சதியாகிவிடும். நாம் ஒடுக்குமினமாக இருந்தால், ஒடுக்கப்பட்ட இனத்துக்காக போராடவேண்டும். அந்தப் போராட்டத்தை ஒடுக்கும் இனத்துக்குள் தான் நடத்தவேண்டும். இனவொடுக்குமுறையை அந்த இனம் சார்ந்து முன்னெடுப்பதால், அந்த மக்களை அதற்கு எதிராக அணிதிரட்ட வேண்டும். சிங்களப் புரட்சியாளர்கள் அதைச் செய்யாது, ஒடுக்கப்பட்ட இனத்தை அணுக முற்படுகின்றனர். ஒரு தவறான அரசியல் பாதை.

Read more...
Last Updated ( Thursday, 21 June 2012 10:56 )