Wed05082024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்
Wednesday, 20 October 2010
வாழ்ந்த மண்ணில் மீள வாழக் கோரும் சிங்கள மக்களும், அதை மறுக்கும் தமிழ்தேசியமும் PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Wednesday, 20 October 2010 21:39
பி.இரயாகரன் - சமர் / 2010

30 வருடங்களுக்கு முன் தமிழ் மண்ணில் வாழ்ந்த மக்கள், தமிழ் தேசியத்தால் வரலாறு அற்றவர்களாக போய்விடவில்லை. ஆம் 1980 களில் 10000 மேற்பட்ட சிங்கள மக்கள் யாழ்குடாவில் வாழ்ந்தார்கள். 1990 வரை ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட முஸ்லீம் மக்கள் யாழ் குடாவில் வாழ்ந்தார்கள். இது தமிழ்தேசியத்துக்குள் புதைந்து போன ஒரு வரலாறல்ல. அந்த மக்கள் அங்கு வாழ்ந்தார்கள் என்றால், தமிழ்மக்களின் சொந்த இணக்கத்துடன் தான். அவர்களுக்கு இடையில் எந்த குறுகிய இனத் துவேசமும் இருக்கவில்லை. அதுதான் அவர்களை அங்கு வாழவைத்தது. இது எம்மைச் சுற்றிய கடந்த இணக்கமான ஒரு வரலாறு. யாழ்நகரில் ஒரு விகாரையும், சிங்கள மகாவித்தியாலயம் என்ற ஒரு பாடசாலையும் கூடத்தான் அங்கு இருந்தது.

Read more...
Last Updated ( Wednesday, 20 October 2010 21:40 )

"புலிகள் உண்மையில் தோற்றார்களா…. புலிகள் தோற்கவில்லை." உண்மைகள் மேலான பொய் (தீபச்செல்வன் வலதுசாரிய அரசியல் - பகுதி : 16) PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Wednesday, 20 October 2010 04:59
பி.இரயாகரன் - சமர் / 2010

மக்கள் தான் புலிகளைத் தோற்கடித்தனர் என்ற உண்மையை மறுக்க, மக்களை அரசு தோற்கடித்துவிட்டது என்ற உண்மையை கொண்டு, புலியை நியாயப்படுத்துகின்றனர். இங்கு மக்கள் புலியை தோற்கடித்ததை மறுப்பதே, தீபச்செல்வனின் இன்றைய அரசியல். உண்மைகளை மறுப்பதன் மூலம், வலதுசாரியம் தன்னைத்தான் தக்க வைக்க முனைகின்றது.   தீபச்செல்வன் கூறுகின்றார் "புலிகளைச் சிதைத்து உறங்க வைத்ததன் மூலம் மக்களைத்தான் அரசு  தோற்கடித்திருக்கிறது" என்கின்றார். இங்கு அரசு புலியைத் தோற்கடிக்கவில்லை. புலி தன்னைத்தான் தோற்கடித்தது. அதாவது மக்களுக்கு எதிரான புலி அரசியல் மூலம், புலி தன்னையே தோற்கடித்தது. மக்களைப் பார்வையாளராக்கி, ரசிகர் கூட்டமாக்கினர். புலிகள் வேறு மக்கள் வேறு என்ற இடைவெளி, அதிகாரமும் பணமும் குவிந்த போது மேலும் அகலமாகியது.  பேரினவாத அரசு இதற்குள் புகுந்து, மக்களை தன் பங்குக்கு மேலும் தனிமைப்படுத்தியபடி புலியை இலகுவாக அழித்தது. இந்த நிலைமை என்பது புலியின் சொந்த அரசியல் மூலம் உருவானது.

Read more...
Last Updated ( Wednesday, 20 October 2010 05:07 )