Sun04282024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்
Wednesday, 04 April 2007
தமிழரின் வானாதிக்கம். PDF Print Write e-mail
Written by admin2
Wednesday, 04 April 2007 20:51
அரசியல்_சமூகம் / ப.வி.ஸ்ரீரங்கன்

ந்தச் சங்கதி குறித்துப் பல்வேறுதரப்பட்ட பார்வைகள் முன்வைக்கப்படுகின்றன.தமிழ்ச் சமூகத்தில் மிகவும் தீவிர அரசியல் அறிவுடையவர்கள்கூடப் புலிகளின் "வான் தாக்குதல்" குறித்துக் கருத்துப் பகிர்கின்றபோது,அதை வெறும் ஹீரோயிசத் தாக்குதலாக வர்ணித்துக் குறுக்கி விடுகிறார்கள்.ஆனால் இது வெறும் தனி நபர் வாதப் பெருவிருப்பின் முன்னெடுப்பில்லை-இது வெறுமனவே அரசியலற்ற தாக்குதல் அல்ல.இதற்குள் வரப்போகும் தென்னாசியப் பிராந்திய ஆதிக்கப் பலப்பரீட்சைப் பெறுபேறுகள் அடங்கியுள்ளன.இதில் எந்த ஆதிக்கம் வெற்றி கொள்ளும் என்பதை முன்கூட்டியே தீர்மானிக்க முடியாதிருப்பினும் இந்தத் தாக்குதல் மிகவும் பாரிய பின்னடைவை இந்திய வெளியுறவுக் கொள்கைக்கும், அதன் தென்னாசிய ஆதிக்கத்துக்கும் பெரும் அதிர்வையும் அடியையும் கொடுத்திருக்கிறது.இத் தாக்குதலுக்கு ஒரு திட்டமிட்ட ஒத்தாசை இருக்கிறது.அமெரிக்காவின் "புதிய உலக ஒழுங்குக்கு"ஒரு 11 செம்ரெம்பர் தாக்குதல் அவசியமாக இருந்தது.அவ்வண்ணமே தென்னாசியப் பிராந்தியத்தில் இலங்கையை இந்தியாவின் ஆதிகத்திலிருந்து மீட்டெடுப்பதற்குப் புலிகளின் வான் தாக்குதல் அமெரிக்க-ஐரோப்பிய ஏகாதிபத்தியங்களுக்கு அவசியமாக இருக்கிறது.இத்தகைய அரசியல் நலன்களின் அடிப்படையைப் புரியாதிருப்பதற்கான வெளித் தோற்றங்கள் மிகவும் கவனமாகத் திட்டமிடப்பட்டுள்ளது.இதைச் சாத்தியப்படுத்திய விதமானது முற்றிலும் சுய முன்னெடுப்பைக் காட்சிப்படுத்தும் நுணுக்கத்தோடு செயற்படுத்தப்பட்டுள்ளது.

 

Read more...

Page 1 of 2