Tue04302024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்
Sunday, 09 April 2006
பெண் பனி. (புனைவு.) PDF Print Write e-mail
Written by admin2
Sunday, 09 April 2006 19:58
அரசியல்_சமூகம் / ப.வி.ஸ்ரீரங்கன்

"நாடா கொன்றோ
காடா கொன்றோ
அவலா கொன்றோ
மிசையா கொன்றோ
எவ்வழி நல்லவர்-ஆடவர்
அவ்வழி நல்லை
வாழிய நலனே."

அகதிக் காண்டம்:

எங்கெல்லாம் வாழ்வு சுதந்திரமானதாக இருக்கிறதோ வேலைகள் செய்யப்படக்கூடியதாக இருக்கிறதோ அங்கேதாம் "எங்களது நாடு" இருக்கின்றதென்று ஜீல்ஸ் நொடாஸ்க்கி கூறிக்கொண்டான்.அவன் புறநானூறை நிச்சியம் படித்திருக்கமாட்டான்.ஆனால் நான் அக நானூறில் புரண்டு அமுங்கிப் போவதாகக் காலம் பின்னிச் செல்கிறது.பாரீஸ் கம்ய+ன் போராளிக்கும் ஈழவிடுதலைப் போராளிக்கும் எதோவொரு விதத்தில் தொடர்பாடத்தக்க ஒரு பொறி கிடைத்தால் அது பெரும்பேறான வாழ்வமைதிப் பேரவா எனக்கு.

இடப்பட்ட பெயர்:இராஜன் கந்தசாமி.

பிறப்பு:1960

"யார் அப்பாவென்ற உறுதிப்பாடு-ஒழுங்கான உறுதிப்பாடு உனக்குத் தெரியாது.என்மூலமாவது சில தகவல்களை நீ பெற்றுவிடுதல் உன் தவறான பிறப்புக்கு என் உத்தியோடுகூடிய தெரியப்படுத்தல்".-அத்தான்

கொஞ்சக் காலத்துக்கு முந்திய பொழுதொன்றில் நான் தெருவோரப் பொந்துக்குள் காலத்தைக் கழித்தபோது,யாருமே உறவுகொண்டாட-முறைகள் சொல்ல முனைந்ததாக எனக்கெட்டியவரை ஞாபகமில்லை.இப்போதுள்ள நிலைமையில் கடைந்தேற்றச் செயல்கள் வரம்பின்றி என் தலையில் கொட்டப்படும்போது நான் அந்த எல்லையிலிருந்து எங்கோவொரு தொலைவில்-ஏதோவொரு தொடைச்சதையில் உறவைப் பலப்படுத்தியபடி.

இராஜன் கந்தசாமி என்ற இயற்பெயரிலும் ராகவன் என்ற மாணவர் பேரவைப் பெயரிலும் தோழர் சன்னதிக்குச் சவாரிசொல்லிக் கொடுத்தவன் நான்.என்னுடைய பராமரிப்பில் ஒரு பகுதியிருந்தபோது நானே நடுத்தெருவில் சில தலைகளை உருட்டியவன்.சம்பேதுருவார் கோவிலிலும் அந்தக்கூடுதூக்கும் சம்பவத்திலும் ஞானப்பிரகாசரின் தோட்டாவுக்கு டாட்டா காட்டியவனின் தோளில் ஏறி நிற்க ஆசைப்பட்ட என் அக்காளின் அருமைப் புருஷனுக்கு என் ஆதாரா சுருதி அறியக்காலமுமில்லை,நேரமுமில்லை.கோவில் திருவிழாவில் யாரோ பற்றியெறிந்த சிகரட்டை ஊதியிழுத்த இராஜனாகவே அவரது மதிப்பீடு.ஓரிரவில் மடைதிறக்கும் நீரோட்டமாக நானும் சமைந்தபோது எங்கோவொரு தெருமுனையில் ஊர் சுற்றும் பொடிசுவென்ற என் வீட்டார் மதிப்போடு நான் கோலாச்சிய வரலாறுதாம் கதை சொல்வதற்கான தளமாகும்.

கருக்கட்டிய வரலாறு:

போன ஜென்மத்தில் முக்காலத்தின் முதுமையானவொரு இடைவேளையில் சில நல்ல காற்றுக் கருப்புகளில் வேள்வி செய்யப்பட்ட பொழுதொன்றில் சூரியனையிழந்துபோன புவிப்பரப்பில் பினாட்டுக்கூடையை இழைத்துக்கொண்டிருந்தவளின் தொடைக்களுக்கு நடவே கூரிய ஆயுதம் செங்குத்தாகப் பாய்ந்தபோது அஞ்சல் செய்யப்பட்ட நீர்த்துளியின் பிணைவுடன் கொண்ட பங்கீட்டுப் பிணைவு,உருப்பெற்றதும்-வெளிப்பட்டதும் காலத்தில் வாழும் ஒரு நிலையென அன்று எதிர்வு கூறிய பாதிரியார் சிங்கராஜருக்கே வெளிச்சம்.நாரந்தனையைச் சுற்றிக் கோழிகளை வளர்த்துக்கொண்ட ஒரு கோமான் பாதிரியாகி,பிசப்பான கைங்காரியம் லேசுப்பட்டதல்ல.சின்ன வயதில ஆத்தையின் சேலைத் தலைப்பில் தொங்கியபடி அவரின்ர பிரசங்கத்தால் தமிழில் ஒரு படி நிறைகூடிய மண்டைக்கனத்தை எனக்குள் திணித்த என் தாய்க்கும் வித்தியாசம், வெள்ளை அங்கியில் மட்டுமென்றே நான் கருதுவதும் ஒரு வம்பு நிலைதாம்.

நேற்றைய அல்லது அதற்குமுன்னைய இதையும் மீறிய"எப்பவோ"என்ற நிலைமைக்குள் அறுபட்டுப்போனவொரு அநாதையுணர்வுக்குள் நாவடிய நனைந்து, நுழைவதென்பது ஒரு யுகத்தின் பல மில்லியன் பிளவுக்குள் புகுவது போன்ற சங்கடமான சமாச்சாரம்.ஆனால் என்னைச் சுற்றியவொரு மிதப்பான உறவுக் குழுமத்துக்கு இஃது அவல் தின்னக ;கூலியாவென்ற கதைதாம்.அம்மாவுக்குத் தீச்சட்டி தலையில் வைத்தபோது, எனது அப்பாவினது பெயருக்கும்,அடுத்வொரு பெயருக்கும் இடைப்பட்ட வெளிகளுக்குள் என் சுயம் கருக்கொண்டிருக்க நான் வெளிக் கிளம்பியது காலத்தின் கோலமானதாகவே பட்டது.

அப்பனுக்கு ஆடடிச்சுக் குத்தரிசியில் சோறுகாச்சி,மேற்சோறை அள்ளிப் போட்டவளை அம்மணமாய்ப் பார்த்ததாய் அத்தார் அதட்டியபோது,அடங்கிப்போவது நான் என்பதாக அவன் உணராதிருப்பினும்,நோக்கத்திலொரு நீண்ட கனவிருந்தது.எனது கூட்டைப் பிய்த்தெறிவதும்,பேருக்கு முன்னாள் அவலத்தைக்காவுவது என்பதாகவும் அவன் போட்ட முடிச்சுகளை அவிழ்த்துப் பார்ப்பதில் அம்மாவைக் கருவிலிருந்தே கருவறுப்பதாகப் பட்டது!


அகதிக் காண்டம் தொடர்வது...

தேசத்தின் குறிப்பை எழுதுவதில் பலரின்று பிரபலமானார்கள்.பாதியோ மீதியோ, படைப்பாக்குவதில் "பன்னைக்காரன் பொண்டில் பணியக்கிடந்து செத்தாள்"என்றமாதிரி, செவிட்டு இராஜனுக்குமொரு சிங்காரக் கனவு குடைந்தபோது,கை கொடுத்த காலம்தாம் கடைந்தெடுத்த வம்புத் தனங்களாகிக் கிடந்தது.முற்றிலுமொரு மொன்னைத்தனமான முயற்சியில் கால் வைப்பது "தனக்கெடா வேலை தன் பிடரிக்குச் சேதம்"என்றடிக்கடிக் குறித்துரைத்த சபாரெட்னம் வாத்தியை நான் கிழங்கர் சபாரெத்தினமென்று கரம்பொன் சண்முகநாத வித்தியாசாலைக்குள் வைத்துத் திட்டியதும்,அவரென்ர "இயக்க ஸ்தானத்தில்" கண்டும் காணாததாய் இருந்தபோது நடுத்தெருவில் தலை தெறிக்க நான் "உசக்கப் போய்" ஓவராய் கண்டவர் நிண்டவரெல்லாரையும் கடிச்சுக் குதறியவொரு பொழுதில் கால்முறியுமொரு காலத்தை அருளாநந்தசிவம் மாஸ்டரின் கடைப்பொடி"இது எங்கட இயக்கத்தால் கட்டாயம் நடக்கும் மச்சான்.கெதியாய் மாறு"எண்டபோது சன்னதிக்கு ஆப்பு வைத்தால் எனக்கென்ன!தலை தப்பினது தம்பிரான் புண்ணியமென சித்தப்பாவின் முகத்துக்கு முன்னால் நீட்டிய கரம் "பலதைப்பார்த்த அநுபவத்தை" அவருக்குக் கற்றுக் கொடுத்தபோது நானும் ஜேர்மனியை வந்தடைந்தபோது, எனக்கு அவமானமாக இருந்தது,"தோழமைக்கு இதுவா இலக்கணமென்பது"எப்படியோ சன்னதியைக் குத்திய கத்தி குடலை வெளியில் இழுத்தெறிந்த போது, நாரந்தனை மொட்டை வேளாளரின் மகிழ்ச்சியாய் இருந்ததும்- எனக்கு உயிராபத்திலிருந்து விடுதலைக்கு வித்திட்டதாகப்பட்டது.

தொடைகளுக்கு நடுவில் கோவணம் கட்ட மறுத்தபோது ஜேர்மனியின் "அழகு" நடுச் சாமத்திலும் அந்தமாதிரியாய் இருந்திருந்து அநுபவமாகியது.அப்போதெல்லாம் அக்கம் பக்கதைப் பார்த்து, அப்பனின்ர தங்கச்சி மோளை"தந்தனத் தந்தனத் தளம் வரும் சந்தன..."எண்ட பாட்டோடு பிழிந்தெடுத்த சில பொழுதுகளின் அவஸ்த்தை வந்தே தொலைந்தது.ஆப்பு வைத்த மாதிரி "அகதி"நாமம் சூடிக் கொண்ட பொழுதுகளுக்குள் என்னென்ன ஆறுதலை மாற்றாக்க முடியுமோ அதையெல்லாம் தேடியபோது,இடையில் வந்தவொரு பீடையைக் இன்றுவரை மறப்பதற்கில்லை.

வைத்தியனிடம் போய் "எய்ட்ஸ்"பரிசோதனையில் "நெக்கடீவ்"என்ற அத்தாட்சிப் படிப்பில் நிம்மதி வந்தாலும்,சில நேரத்தில் மனதில் நிம்மதி குலைகிற பொழுதுகளாகவும் சில "குறிப்புகள்"உடலிலும் உள்ளத்திலும் தோன்றி மறையும்போதுதாம் அத்தானைப் பரிகாசிப்பது வெறும் தேவையில்லாதவொரு சமாச்சாரம்.கிராமத்தின் எல்லைகள் பற்பல மறைப்புகளில் கிழிபட்டே கிடக்கிறதென்பதையும்,அதன் மறைப்புக்குள் வேறொரு உலகம் முருகன் கோவில் இரவு உடுக்கை அடியில் அமிழ்ந்து போனதையும் நான் பல பொழுதுகளில் அறிந்திருந்தேன்.இந்தச் சூழலில் சாமி ஆடுபவனின் தொடைகளின் நடுவில் ஆடிய பாம்பு எத்தனை குமரிகளுக்குப் பேய் ஓட்டினதை சீதணத்தில் உரைத்துப் பார்த்ததையும் நினைத்தபோதுதாம் என் பிணக்கைத் தீர்க்காத மனதின் "துரத்தல்களை"சிக்மன் ப்பொரைட்டின் ஒளியில் கழுவிவிடுவதில் நான் கஞ்சல்தனம் காட்டவில்லை!

Read more...