கலகம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

சுமார் மூன்றாண்டுகளாக இழுத்து இழுத்து கடைசியாக பிணந்தின்னிகளின் கோவணத்தை காட்டாது மாடர்ன் உலகத்திலே ஜட்டியை மாட்டி விட்டு  “அட நம்புங்கப்பா இவன் நொம்ப நல்லவன் ,அவன் என்ன பண்ணுனான் இந்த உலகத்த விட அவனுக்கு கடவுள் உலகம்தான் புடிச்சிருக்கு”  என்கிறார் பாலா.இனி கதைக்குள் செல்வோம்.

 

 

kadavul-low

 

 

தொடர்ந்து தன் வீட்டில் பல பேர் செத்து போவதால் ஜோசியக்காரனிடம் போய் குறி கேட்கிறார் ஒருவர்.அதற்கு அந்த ஜோசியனோ உன் பையன் தான் இதற்கு காரணம். அவனை விட்டு பிரிந்து வாழ்வது மட்டுமே இதற்கு தீர்வு என்கிறார்.உடனே தன் மகனை காசியில் கொண்டு போய் விட்டு விட்டு பல ஆண்டுகளுக்குப்பின்  மகனை பார்க்க திரும்புகிறார்.வந்தவருக்கோ மிக்க அதிர்ச்சி தன் மகன் அகோரியாகி இருக்கிறான்.அவனின் குருவிடம் கெஞ்சி கூத்தாடி தன் ஊருக்கே அழைத்து வருகிறான்.

 

குருவோ அகோரிக்கு சொந்தம் பந்தம் இருக்க கூடாது நீபோய்விட்டு ஏதும் இல்லாது வா என்க .எல்லாவற்றையும் இல்லாததாக்குவதற்கு அப்பனுடன் செல்கிறான்  ருத்ரன் அகோரி.

 

யார் அகோரி : இவர்கள் முற்று துறந்தவர்கள்,முக்காலமும் அறிந்தவர்கள்,ஒருவருக்கு மோட்சம் கிடைக்க வேண்டுமா இல்லையா என்பதையா என்பதை இவர்கள் தான் தீர்மானிக்கிறார்கள். அதே போல் ஒருவரை பார்த்த வுடனே அவனின் கர்ம பாவங்களை அறிந்து விடுவார்கள்,தேவையெனில் தீர்ப்பும் வழங்குவார்கள்

 

தன் வீட்டுக்கு வரும் அகோரி ருத்ரன் எதுவுமே சாப்பிடாது கஞ்சா குடித்த படி வீட்டில் உள்ளவர்களை ஆபாசமாக திட்டிகொண்டும் இருக்கின்றான்.ஆத்தாளிடம் சன்டை போட்டுக்கொண்டு தான் சுயம்பு எனக்கூறிக்கொண்டு கஞ்சா இருக்கும் மலைதேடி சென்று அங்கே குடிகொள்கிறான்,மற்ற சாமியார்களெல்லாம் கஞ்சா அடித்து விட்டு படித்து விட இவன் மட்டும் கஞ்சா அடித்து தியானம் செய்து கொண்டிருக்கின்றான்.இங்கு இயக்குனர் சொல்லுகிறார் ஒரு தத்துவத்தை கஞ்சா போதைப்பொருளல்ல அது கடவுளை வழிபடுவதற்கான ஒரு வழி,அவ்வழியை மற்றவர்கள் பயன் படுத்துவதுகுற்றமென்றாலும் சாமியார்கள் பயன்படுத்துவது குற்றமாகாது.ஏனினில்  ஒரு தவறு உலக நன்மைக்காக பயன் படுத்தும் போது அது குற்றமாகாது.

 

இதோடு பிச்சைக்காரர்காளாக்கப்பாட்ட உடல் ஊனமுற்றோர்  வாழ்வின் கொடுமையும் சேர்கிறது ஆனால் அவர்களின் இன்னல்களோடு இருந்தாலும் மகிழ்ச்சியாகவே இருப்பதாகவே சித்தரிக்கப்படுகின்றது,ஆனால் கண்தெரியாத பெண் கடத்தி கொண்டுவரப்ப்ட்டதுமே நிலமை மேலும் சீரியசாகிறது,ஊனமுற்றோரை தன் கட்டுப்பாட்டில் வைத்தி  இருக்கும் தாண்டவனுக்கு இந்த கண் தெரியாத பெண்ணை பாலியல் தொழிலுக்கு அனுப்ப மாமாஒருவன் ஆலோசனை கூற  அப்பெண்ணை தூக்கி கொண்டுபோவதற்காக மாமா வருகிறார் பிறகு வேறென்ன  நம்ம ரஜினி படம் போலவே கதானாயகி கற்புக்கு எவ்வித பாதிப்பும் வராது  ருத்ரன் காப்பாறுகிறான் .

 

ஒரு பத்து பேரை அடித்து விட்டு வெளியே வரும் ருத்ரன் அந்த விபச்சார புரோக்கரை பாத்தவுடனே தன்னுடைய முக்கால அறிவால் அவன் தீய சக்தி என்பதை அறிந்து மக்கள் முன்னிலையில் அடித்து கொன்றுவிடுகிறான்.தக்க சாட்சி இல்லாதால் வழக்காடுமன்றன் அவனை விடுவிக்கிறது.

 

மீண்டும் கதாநாயகிக்கு தாண்டவன் மூலம் மண்டை உடைக்கப்பட்டு கைகால்கள் நொறுக்கப்படுகின்றது. கதானாயகி தவழ்ந்து   தவழ்ந்து  மலை மீது வந்து அகோரி ருத்ரனிடம் கேட்கிறாள் “சாமி என்ன கொன்னுடுங்க எங்களால இந்த வாழ்க்கய வாழ முடியல என்ன விபச்சாரியாக்கி விடுவாங்க” இந்து தர்மத்தின் படி ஒரு பெண் கற்பை இழந்து வாழ்வதை விட சாவது தான் உசித மானது என்பதனால்  அகோரி கதாநாயகிக்கு மோட்சம் கொடுத்து விட்டு காசிக்கு செல்கிறார்.


********


படம் இவ்வளவுதான் “நான்கடவுள்”  இது கடவுள் சம்பந்தப்பட்ட சமாச்சாரம் என்பதால்  கொஞ்சம் லேட்டாகவே அகோரி உட்பட அனைவரின் பாத்திரமும் புரிகிறது.அப்புறம் தான் விளங்கியது  எவனோ ஒருவன்,ரஜினி விஜய் மசாலா பாணியில் இது ஒரு ஆன்மீகப்படம்.கதானாயகியின் சேயையை தொட்டல் பறந்து பறந்து கதானாயகன் அடிப்பான் இங்கேயும் மெய்யாலும் தாவிதாவி அடிக்கிறான்.அங்கேயும் கற்பு காக்கப்படுகிறது,இங்கேயும் கற்புகாக்கப்படுகிறது.


அந்த கதாநாயகன் தம் கொஞ்சம் தண்ணீ,இவனோ எப்போதும் கஞ்சா என்ன இருந்தாலும் ரெண்டு பேரு கற்ப காப்பாத்திட்டாங்கல்ல.கல்கி பகவான் லோகத்த காக்க வந்துட்டார்.


ஆனால் உண்மையில் அகோரி எனப்படும் காட்டுமிரண்டிகளின் வாழ்வு முக்திமட்டும் தருவதல்ல,அவர்களின் வேலையே பிணத்தை எரிப்பது காசு வாங்கிகொண்டு அப்பிணம் சொர்க்கத்துக்காக  செல்ல விசா வங்கிதருவது தான்,பிணத்தை எரித்தவுடன் அந்த மண்ட ஓட்டினை உடைத்து அதையே தட்ட்டாக்கி வைத்து சாப்பிடுவார்கல்.பிணத்தின் சாம்பலை உடலெங்கும் பூசிக்கொண்டு அம்மணமாய் திரிவார்கள்.

 

அப்புறம் தான் முக்கிய வேலையையே தொடங்கும் ஆத்தங்கரையோரத்தி தியானம் செய்த படி காத்திருப்பார்கள். எதாவது பிணம் புனித கங்கையில் மிதந்து வருமல்லவா அதை எடுத்து தக்க மந்திரங்கள் செய்து  புனிதமாக்கி எந்த பகுதி யாருக்கு வேண்டுமோ அவர்கள் வெட்டி தின்னுவார்கள்.சிலர் அதை தீயில் சுட்டும் தின்கிறார்கள்,

 

அப்படிதின்னும் பிணந்தின்னிகளின் ஒருவன் சொல்லுகிறான் “எனக்கு கோழிக்கும் மனிதனுக்கும் வித்யாசம் தெரியவில்லை” இந்த அகோரிகளின் வேலையைத்தான் பாசக ஆர் எஸ் எஸ் கும்பல் நாடெங்கும் செய்து கொண்டு வருகிறது,முசுலீம்களின் உடல்களை வெட்டித்தள்ளியது.இந்த அக்கோரிகள் தான் பாபர் மசூதி இடிப்பின் போதும் படைபடையாய் முன்னணியில் நின்றார்கள்,ராம ராஜ்யத்தில் பிணந்திண்ணிகளுக்காக தனித்துரை ஏற்படுத்தப்படலாம்,பிணங்கள் கிடைக்காத பட்சத்தில் முசுலீம்கள் கிறித்துவர்கள் பின்ன தாழ்த்தப்பட்டவர்கள் பிணமாக்கப்பட்டு அந்த மோட்சம் தரும் புண்ணியவாண்களுக்கு புசிக்கதரப்படலாம்.

 

இது மிகையான கூற்று அல்ல.இந்த 2009 ஆண்டில் மனிதனை அந்தப்பிணத்தை தின்னும் ஒரு க்கூட்டம் உண்டெனில் அது இந்தியாவில் இந்த அகோரிகள் தான் .இப்படி வெட்ட வெளிச்சமாய் பிணத்தை தின்னும் மிருகங்களை கைது செய்து முட்டியை பெயர்க்காது சுட்டுக்கொள்ளாமல் சாமி சாமி என்று புனிதம் என்று போற்றி வருகின்றனர்.இப்படி ஒரு பிணந்திண்ணிகளின் கட்சியான பாசகவோ ஏனைய மற்ற கட்சிகளோ இதை கண்டு கொள்வதில்லை,காரணம் மதம்.மக்களின் மத உணர்வுகளில் யாரும் தலையிடக்கூடாதுகடைந்தெடுத்த பிழைப்புவாதிகள் எல்லோரும் சொல்லு கின்றனர்.

 

மதம் ஒரு அபின் என்றார் ஆசான் மார்க்ஸ்.அது எவ்வளவு உண்மை.செத்துப்போன பிணத்தை குறிப்பிட்ட நாளுக்கு மேல் வீட்டில் வைத்திருந்தால்  கைது செய்யும் போலீசு,பிணந்தின்னிகளை ஒன்று செய்வதில்லை,ஒன்று செய்யாது,ஏன் பலரும் இதை எல்லாம் ஒரு பொருட்டாக மதிப்பதில்லை. போராடும் மக்களுக்கெதிராக தூக்கப்படும் லத்திக்கம்புகள் பிணந்திண்ணிகளுக்கு கால் துடைக்கக்கூட பயன் படுவதில்லை என்பது தான் உண்மை.

 

இப்போது சொல்லுங்கள் மார்க்ஸ் சொன்னாரே மதம் ஒரு அபின் அது எத்துணை உணமை.

 

குறிப்பு


இது இந்துத்துவ பிரச்சாரப்படம்தான் ,கடவுளை கெட்ட வார்த்தையில் திட்டுவதாக காட்டுவதெல்லாம் ஆபாச நாயகன் செயமோகனுக்கு கைவந்த கலை.அவரால் தனிமனிதனை ஆபாசமாக வர்ணிக்கும் போதுதான்  அவருக்கு மோட்சம் கிட்டுமோ  என்னவோ? யாருக்க தெரியம் ஒருவெளை அந்த அகோரிக்கு தெரிந்தாலும் தெரியலாம்.


மேலும் கீழே  உள்ள சுட்டி மூல வீடியோ காட்சிகளை காணத்த்வறாதீரகள்.

http://www.youtube.com/watch?v=44r6McYybvI

Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது