Language Selection

சர்வதேசியவாதிகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

தமிழால் ஏய்த்து தமிழினத் துரோகத்தால் கொழுத்த கருணாநிதி குடும்பத்தாரின் இல்லத் திருவிழாவே செம்மொழி மாநாடு!!கலைஞர் என்பது பெயரல்ல... அது தமிழினத் துரோகத்தின் வரலாறு!

கலைஞரின் துரோகத்தால் ஈழமே சுடுகாடு

துரோகத்தை மறைக்கவே செம்மொழி மாநாடு!…

பள்ளிகளில் தமிழ் இல்லை

கல்லூரிகளில் தமிழ் இல்லை

நீதிமன்றத்தில் தமிழ் இல்லை

தமிழில் படித்தால் வேலை இல்லை

தமிழ் கற்ற தமிழனுக்கு திருவோடு –

உயர் தனிச் செம்மொழிக்கு மாநாடு!

***

அமெரிக்கா பறக்கிறான் ஐ.டி. தமிழன்

சிங்கப்பூர் குருவியாய் தஞ்சைத் தமிழன்

துபாயில் துவள்கிறான் துறையூர்த் தமிழன்

அகதியாய் அலைகிறான் ஈழத்தமிழன்

உள்ளூர்த் தமிழா … ஊர் ஊராய் ஓடு!..

உலகத் தமிழா …! கோவையில் கூடு!..

***

விவசாயித் தமிழனுக்குத் தண்ணியில்ல…

நெசவாளித் தமிழனுக்கு நூல் இல்ல…

தொழிலாளித் தமிழனுக்கு உரிமையில்ல..

பட்டதாரித் தமிழனுக்கு வேலையில்ல…

மாணவத் தமிழனுக்கு கல்வியில்ல…

மீனவத் தமிழனுக்கு கடல் இல்ல…

தமிழன் வாழாமல் தமிழ் வாழுமா?

தண்ணியே இல்லாமல் மீன் வாழுமா?

***

மழலையர் வாயிலிருந்து

அம்மா அப்பாவை பிடுங்கிவிட்டு

மம்மி டாடியை ஊட்டியவர் யார்?

தமிழைப் படிப்பது தரக்குறைவு என்று

தமிழனையே சிந்திக்கத் தூண்டிய

தலைமகன் யார்?

கொள்ளையர் மனம் குளிர

கோவிந்தராசன் கமிட்டி அமைத்த

கொற்றவன் யார்?

’’தண்ணி’’யையே பிளேடாக்கி

தமிழச்சிகளின் தாலியறுத்த

தவப் புதல்வன் யார்?

உயர்நீதி மன்றத்தில் தமிழில் வழக்காட

உண்ணாவிரதமிருந்த வழக்குரைஞர்களை

உள்ளே தள்ளி அழகு பார்த்த

காவல் தெய்வம் யார்?

அவர் தான் கலைஞர்…

அவ்ர் தா………ன் கலைஞர்!.

***

கலைஞர் என்பது பெயரல்ல…

அது தமிழினத் துரோகத்தின் வரலாறு!

*

ஃபோர்டுக்கு சேர நாடு

சோனிக்கு சோழ நாடு

கோக்குக்கு பாண்டிய நாடு

ஹூண்டாய்க்கு தொண்டை நாடு

நாதியற்ற தமிழனுக்கு

நாலுநாள் மாநாடு!

வள்ளலுக்கு வள்ளலாம்

கலைஞருக்கு ஓ போடு!

***

மம்மி டாடி படிக்கும் நர்சரிகளே!

மெட்ரிக் படிக்கும் ஸ்டூடண்டுகளே!

கான்வெண்டில் தமிழ் கற்ற கனிமொழி

அழைக்கிறார்!

“கோவைக்கு வெல்கம்!”

***

மக்கள் கலை இலக்கியக் கழகம்.

விவசாயிகள் விடுதலை முன்னணி.

புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி.

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி.

http://vrinternationalists.wordpress.com/2010/06/25/உள்ளூர்த்-தமிழா-ஊர்-ஊராய/