Language Selection

கங்கா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

மக்கள் மரணத்தில் அவலத்தில்
உலகப்பிதாக்கள் கையைநம்பி
தேசம்காக்க கூவியழைத்த கொள்கையில்
நையப்புடைக்கப்பட்டு நடுத்தெருவில் தேசியம்
காட்டுக்குள் வீரரென கதையளப்பும்
பூட்;டியமுகாம் வாழ்வை நீட்டிப்போடும்
பாசிசநகர்வுக்கு பலம்சேர்க்கும்

புதிராய் நகரும் புலத்துத்தலைமைக்கு…
மேன்மைதங்கிய ஜனாதிபதியால்
அரசியல் அரிச்சுவடி கற்பிக்கப்படுகிறது
இந்தியநகர்வை ஈழப்போரின் முதற்புள்ளியில்
கிள்ளியெறியும் முனைப்புகளை
எள்ளிநகையாடி சங்காரம்செய்த
சரித்திரதவறு உணர்த்தப்படுகிறது

 

என்செய்வோம்
கையிற்சுட்டும் தெளியாக் கனவுலகில்
உலகஇரட்சகரின் பையைநிரப்பும் நீட்சியில்…
செய்வதறியா சிறைக்குள் எம்மினமோ
பாசிசத்தின் கையைஎதிர்பார்த்து
காலம் நகர்கிறது ..இனி
வெல்லுமென்பது இனஇணைவில்
வர்க்கப்போரே நடப்புவரலாறாய் தெரிகிறது

 

சொல்லில் செயலில் இணைந்தெழுந்து
இனத்து இணைவுத்தடையகற்றி
உழைப்பவர் ஒன்றிணைவே தேசியத்தின்
இருப்பிற்கு உறுதியெனும் நடப்புச்சொல்கிறது
இழந்ததுபோதும் இனியெனினும்
உழைப்போன் தத்துவத்தை உயர்த்துவோம்
குரலெழுப்பி கூடுதற்கு உழைப்போம்

 

மாற்றுக்கருத்துக்களிடம்
மானுடநேசரிடம்
ஊடகவியலாளரிடம்
தேசியத்தின் நலனேற்கும் வர்க்கப்பிரிவினரிடம்
துப்பாக்கிகள் மௌனிக்கட்டும்
முடிந்தால் பொதுஎதிரிக்கெதிராய் திருப்புங்கள்