பார்ப்பவர்கள் சொல்கிறார்கள் -
நமது பாதை பழுதுபட்டது,கொள்கை கேலிக்குரியது என்று.உண்மையிலேயே உயர்வானதாய்இருப்பதனால் தான்
முட்டாள்தனமானது என்ற முரசொலி.சாயம் போகாமல் காணாமல் போகாமல்நிலையாக நிற்கிறதே அதுதான்அதன் உயர்வின் சூட்சமம்.
முன்னோர்கள் பயந்தமூடக்கொள்கையாயிருந்தால்எப்போதோ போயிருக்கும்இடம் தெரியாமல்என்னிடம் இருப்பதோமூன்று நகைப்பெட்டகங்கள்.
முதாவது, கருணைஇரண்டாவது, சிக்கனம்மூன்றாவது, தலைவனாகத்தன்னை முன்னிறுத்தாமை.
இன்றைய 'வீரம்'கருணையை அறிவதில்லை.தாராளம் சிக்கனத்தைஇழந்து நிற்கிறது.தலைமை அடக்கத்தை மறந்து...
கருணையில்லாத துணிவுசிக்கனமில்லாத வள்ளல் குணம்அடக்கமற்ற தலைமைப் பண்புஅழிவு அருகில் வருவதன் அடையாளம்.போரில் தொடர்ந்த வெற்றிக்குக்காரணம் கருணைதான்.
தற்காத்துக் கொள்பவனைத்தாங்கி நிற்பது கருணைதான்.கருணையே ஆயுதமாக -கடவுள் காப்பாற்றுபவராக -உலகம் உருள்கிறது.* சீன தத்துவ ஞானி லாட்சு
மூன்று நகைப் பெட்டிகள்!
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Helvetica Segoe Georgia Times
- Reading Mode