Language Selection

கலையரசன்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இலங்கை அரசு வன்னித் தமிழரை தடுப்பு முகாம்கள் அடைத்து வைப்பதாக, மேற்குலக நாடுகளுக்கு முறைப்பாடு செய்பவர்கள், ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். இதே மேற்குலக நாடுகள் தான், குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த மக்களை, தடுப்பு முகாம்களுக்குள் அடைத்து வைத்திருக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தின.

 

அது மட்டுமல்ல, தற்போதும் இந்த தடுப்பு முகாம்கள், மனித உரிமைகள் பற்றி வாய்கிழிய உலகிற்கு உபதேசம் செய்யும் நாடுகளில், நடைமுறையில் உள்ளன. அமெரிக்க, அவுஸ்திரேலியா மற்றும் மேற்கு-ஐரோப்பிய நாடுகளில் அகதிகளையும், சட்டவிரோதமாக தங்கி இருப்போரையும், வருடக்கணக்காக தடுப்பு முகாம்களுக்குள் அடைத்து வைத்து வதைப்பது அரசின் கொள்கையாக உள்ளது.

 

 



*** நெதர்லாந்தில் உள்ள தடுப்புமுகாம் பற்றிய ஆவணப்படம்
*** "அவுஸ்திரேலியாவின் அகதிகள் சிறைச்சாலை" - ஆவணப்படம்

அவுஸ்திரேலிய தடுப்புமுகாம் பற்றிய காணொளி: