Language Selection

கலையரசன்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இலங்கை தமிழ் ஊடகவியலாளர் திசைநாயகம், பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ், கடந்த 6 மாதங்களுக்கு மேலாக தடுத்து வைக்கப்பட்டுள்ளார். ஆங்கில மொழி பத்தி எழுத்தாளரான இவரது விமரிசனக் கட்டுரைகள் சில இலங்கை அரசுக்கு சங்கடத்தை ஏற்படுத்தியதன் காரணமாக, இவர் பயங்கரவாத தடுப்பு பொலிஸாரால், மார்ச் மாதம் கைது செய்யப்பட்டார். 

 

பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழே கைது செய்யப்பட்டதை காரணமாகக் காட்டி, இவரை பிணையில் விடுவதற்கு உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது. இலங்கையில் சுதந்திர ஊடகத்திற்கான இயக்கம், திசைநாயகத்தை விடுதலை செய்யக்கோரி சாத்வீக போராட்டங்களை நடத்தி வருகின்றது. இலங்கையில் யுத்தம் தீவிரமடைந்து வரும் நேரம், ஊடகவியலாளருக்கு சுதந்திரமாக செய்யல்பட தடைகள் ஏற்படுகின்றன. ஒரு சிலர் வன்முறைக்கு உள்ளாகின்றனர். இதனால் விரைவில் யுத்தைதை நிறுத்தி சமாதானத்தை மீட்பதன் அவசியத்தை பலர் வலியுறுத்தி வருகின்றனர். மேலதிக விபரங்களுக்கு இங்கே இணைக்கப் பட்டுள்ள வீடியோவையும் (நன்றி: YA டிவி), இணையத் தொடுப்புகளையும் பார்வையிடவும்.