Language Selection

அசுரன்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

டிசம்பர் 6, 1992 அயோத்தி பாபர் மசூதியை இடிக்க கையில் கடப்பாரைகளுடன் 200,000 காவி வெறியர்கள்கூடினர்.

கையில் கடப்பாரைகளுடன் இத்தனை பேர் காராப் பூந்தி சாப்பிடக் கூடியதாக போலீசு நினைத்துவிட்டது போலும், அவர்களை தடுக்கவோ அல்லது இத்தனை பேர் ஓரிடத்தில் அபாயகரமான முறையில் கூடுவதை நிறுத்தவோ போலீசு ஒன்றுமே செய்யவில்லை. இதுவே, நியாயமான கோரிக்கைகளுக்கு ஒரு பத்து பேர் கூடினாலே சட்டம் ஒழுங்கு என்று ஒப்பாரி வைத்து தடியடி நடத்தி மண்டையுடைக்கும் போலீசு, காவிக் கறையைக் கண்டால் மட்டும் பல்லிளிக்கிறது.

பாபர் மசூதி இடிக்கப்படுவதிலிருந்து காக்கப்பட வேண்டும் என்று 1992க்கு முன்பே நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதுவும் நீதிமன்றத் தீர்ப்புதான். நாளை வரவிருப்பதும் நீதிமன்ற தீர்ப்புதான். எது மீறப்பட வேண்டும், எது கட்டாயமாக்கப்படும் என்று முடிவு செய்பவர்கள்/செய்தவர்கள் என்றுமே காவி பயங்கரவாதிகள்தான்.

அரசின் ஆயுதப் படைகள் அமைதியாகப் பார்த்து ரசிக்க, காவி பயங்கரவாதிகள் மசூதியை இடித்துத் தள்ளினர்.

அத்துடன் நில்லாமல், அருகாமை முஸ்லீம் வீடுகள், சொத்துக்களை தாக்கினர். பத்திரிகை, ஊடகத் துறையினரும் தாக்கப்பட்டனர். போலீசு அமைதியாகவே இருந்தனர். அவர்களது கடமை காவி வெறியர்களுக்கு பாதுகாப்பு கொடுப்பது போலும்.

இதற்குப் பிறகு நடைபெற்ற ஜவ்விழுக்கும் நீதிமன்ற நடவடிக்கையின் ஒரு பகுதியாக அகல்வாய்வு செய்யப்பட்டது. அங்கு ராமன் இருந்ததற்கு எந்த விஞ்ஞான ஆதாரமும் இல்லையென்று முடிவானது. இதுவும் நீதிமன்ற தீர்ப்புதான் ஆனால் காவி வெறியர்கள் கூறினர், அது எங்கள் நம்பிக்கையென்று.

2002ல் வி ஹெச் பி வெறியர்கள் ராமர் கோயிலை கட்டப் போகிறோம் என்று இன்னொரு ரவுண்டு கிளம்பினர், அப்படி போன கும்பலில் ஒன்று திரும்பி வரும் போது வழி நெடுக ரவுடித்தனம் செய்து கொண்டே சென்றது. அந்த கும்பல்தான் குஜராத்தில் ரயில் பெட்டியோடு எரியூட்டப்பட்டது. அது விபத்தா, அல்லது தாக்குதால என்பதைவிட அந்தக் கும்பல் எரியூட்டப்பட்டதற்கு பின் உள்ள நியாயங்களே என் கண்ணுக்குத் தெரிகின்றன.

இடிக்கப்பட்ட பாபர் மசூதி இடத்தில் இன்று பலத்த பாதுகாப்புகளுடன் ராமனது வழிபாடு நடந்து வருகிறது. கேட்டால் ஸ்டேட்டஸ் க்யூ என்கிறார்கள். அதாவது இதன் பொருள் எனக்கு விருப்பபடும் போது நீதிமன்றம், சட்டம் சொல்கிறபடி நட என்பேன். ஆனால், எனக்குப் பிடிக்கவில்லையெனில் நானே அதனை மீறுவேன் என்பதே ஆகும்.

இதுதான் இந்தியாவைப் பிடித்துள்ள பன்றிக் காய்ச்சல். காவிப் பன்றிக் காய்ச்சல். காய்ச்சலும், பன்றியும் என்று ஒழிக்கப்படுமோ அன்றுதான் இந்தியாவிற்கு விடிவு.

அசுரன்

**

இதே டிசம்பர் 6தான் காவிப் பன்றிக் காய்ச்சலுக்கு மருந்து சொன்ன அம்பேத்கரின் இறந்தநாள் ஆகும். காவி வெறியர்களின் காழ்ப்புணர்ச்சியைக் கவனியுங்கள், டிசம்பர் ஆறு அன்றுதான் பாபர் மசூதி, பெரியார் சிலை உடைப்பு எல்லாம் அரங்கேறின.