Language Selection

சமூகவியலாளர்கள்

ஒன்று
மணம் முடிந்தது.
தனியிடம், விடுதலைபெற்ற இரண்டுள்ளம், அளவு
கடந்த அன்பு - இவை மகிழ்ச்சிக் கொடியேற்றிக்
காதல் முரசு முழக்கின - இன்ப விழா! முடிவில்லை.

இரண்டு
ஒருநாள் அவர்கள் இந்த உலகில் இறங்கி வந்து
பேசலுற்றார்கள்.
"மக்கள் தொடர்பில்லாதது. தென்றலில் சிலிர்க்கும்
தழை மரங்கள் உள்ளது. ஊற்றிற் சிறந்த நீர் நிலையின்
துறையில் அமைந்த நுழைவாயிலுல்லது. அழகிய
சிறுகுடில்! நாம் அங்கே தங்கலாம் - இது என் அவா
அத்தான்."
"ஆம்! குறைவற்ற தனிமை!"
பறந்தார்கள்.
மூன்று
"நாயின் நாக்கைப் போன்ற சிவந்த மெல்லடியைத்
தூக்கிவை குடிசையில்."
"நான் மட்டுமா?"
அதிர்ந்தது அவள் உள்ளம்!
இமைப்போதில் ஒன்றில் ஒன்று புதைந்த இரண்டுடல்
குடிசையில் நுழைந்தன.
"விட்டுப் பிரிவேன் என்று அச்சப் பட்டாயா?"
"மன்னிக்க வேண்டும்!"
குடிசை சாத்தப் பட்டது.
நாவற்பழம் நீர்நிலையில் விழுந்து கொண்டிருக்கும்
இச்சிச் சென்ற ஒலி குடிசைக்குள் சென்றது. அதே
ஒலி குடிசையினின்றும் வௌிவந்தது. இது எதிரொலி
யன்று!

நான்கு
"தேக்கும் அதில் உடல் பின்னிய சீந்தற் கொடியும்
பார், நம்மைப்போல!"
"இல்லை, அரண்மனை கசந்தால் அழகிய குடிலில்
குடியேறத் தேக்கு நடவாது; சீந்தல் நகராது."
வானில் ஓர் ஒலி!
"வைகையின் மங்கிய ஒளியில் மங்காத இன்னிசையை
உதிர்த்தன வானப் புட்கள், ஆணும் பெண்ணுமாக!"
"நாமும் வானில் -- அடடா சிறகில்லையே!"
நீர்நிலை கட்டித் தழுவிக் கொண்டது இருவரையும்.

ஐந்து
"கெண்டைகள் துள்ளி விளையாடி நீரின் அடிமட்டத்தில்
அள்ளி நுகர்வன இன்பத்தை!"
"நாமும் அங்கு இன்பம் நுகர்வோம் -- அடடா, நாம்
மீன்களல்லவே!"
கண்ணிமைப்போது நான் நீருக்குள் ஒளிந்து கொள்கிறேன்!
பிற்பகுதியும் கேள்."
"நிறுத்துங்கள்! முற்பகுதியே என் பாதி உயிரைப் போக்கி
விட்டது!"
மாற்றிச் சுவைக்கும் நான்கு விழிகள் தம்மிற் பிரியாமல்
நீராடின.

ஆறு
"கரையேறுங்கள் என்னோடு."
"மாலையின் குளிரும் நனைந்த சேலையின் குளிரும்
உன் இன்பத்தைப் பெருக்கவில்லையா?"
"தவறு! நம் இருவர்க்கும் நடுவில் முயல் நுழையும் வௌி,
இதற்கு நனைந்த ஆடை காரணம்."
"அதோ நம்மை நோக்கி நம் வீட்டு ஆள்."
குடிசையில் மறைந்தார்கள் ஓடி!

ஏழு
"அழைத்துவரச் சொன்னார்கள் அப்பா."
"ஏன்?"
"கப்பல் வந்திருக்கிறது."
"மெல்லப் பேசு!"
"என்ன ஓசை குடிசையின் உட்கட்டில்? விட்டு
விட்டு இசைக்கும் ஒருவகைச் சிட்டுக் குரல்!"
"என்ன சொன்னார் அப்பா?"
"அனுப்ப வேண்டுமாம் உம்மை."
"சிங்கைக்கா?"
"ஆம். -- என்ன அங்கே திட்டென்று விழுந்த
உடலின் ஓசை!"
"நாலு நாட்கள் நீடிக்கலாமா?"
"இன்றைக்கே! இதென்ன குடிசையில் வெள்ளம்?"
"நீ போ! இதோ வருகின்றேன்."
எட்டு br> "தேம்பி அழுது திட்டென்று வீழ்ந்து கண்ணீரை
ஆறாய்ப் பெருக்கினை அன்புடையாளே!"
"இறக்கமாட்டேன் அத்தான், உனைவிட்டுப்
பிரியவில்லை என்று நீங்கள் உறுதி கூறுமட்டும்."
"கடமை என் வாயை அடைக்கிறது."
"என் மடமை கிடந்து துடிக்கிறது."
"மடமை அல்ல; உயிரின் இயற்கை."
" `தந்தை சொற்படி நடக்கட்டும் என் அத்தான்'
என்று என் நெஞ்சுக்குக் கூற என்னால் முடிகிறது;
உயிருக்குச் சொல்லி நிறுத்த முடியவில்லை."
ஒன்பது
"தோழி, நான் அப்பாவிடம் போகிறேன்."
"நீர் நிலையை அடுத்த குடிசையிலா அப்பா இருக்கிறார்?"
"என் கால்கள் என்னை ஏமாற்றுகின்றன. என் பிரிவால்
அவள் சாகிறாள்! சென்று காப்பாற்று."
"எவ்வளவு நேரம்?"
"நேரமா?"
"எத்தனை நாள்?"
"நாளா? அடுத்த ஆண்டில் வந்துவிடுவேன்."
"கால் நாழிகை சாக்காட்டின் கதவைச் சாத்திப் பிடித்துக்
கொண்டிருக்க முடியும். ஐயா! அடுத்த ஆண்டில் அவள்
உடலின் துகள் கலந்த மண்ணும் மட்கி வௌியுடன்
வௌியாய்க் கலந்ததென்ற கதை பழமையாய்விடும்."
"என் துன்ப உள்ளத்தைத் தந்தையிடம் கூறுகிறேன்."

பத்து
(நூலேணியில் அழுகுரல், கண்ணீர் -- அவன் கப்பலேறுகிறான்.")
கப்பலுக்குள் - "இங்கே உட்கார வேண்டும் நீவிர்."
"கணவனும் மனைவியும் தங்கும் இடமல்லவா இது?"
"இறந்திருப்பாளானால், அது அவள் செய்த முதல்
குற்றம். இறந்தசெய்தி என் காதில் எட்டாதிருக்க
முயன்றிருப்பாளானால் அது இரண்டாவது குற்றம்."
"இரண்டாவது குற்றத்திற்கு அவள் ஆளாகவில்லை.
தன் நிலையை விளக்கும்படி என்னை அனுப்பினாள்."
"பயனற்றது இவ்வுலகம்! ஒரு பற்று என்னை வாட்டு
கின்றது. அவள் இறந்தாள்; ஆதலால் நான் இறந்தேன்.
இதை அவள் அறியாளே! நீவிர் சான்றாகக் கடலில்
கலக்கிறேன்."
சிரிப்பு! - இரண்டு இளைஞர்கள் தோழியும் தலைவியு
மாகிறார்கள்.
"அத்தான்! நாம் இருவரும் சிங்கைக்குப் போகிறோம்."
"தோழி! என் மாமாவிடமும் அத்தையிடமும் உடலும்
உயிருமாக இருவரும் செல்லுகின்றார்கள் என்று கூறு!"
வாழ்க, காதல் வாழ்வு!

 

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp166a.htm#dt203

1. உவகை
(இரவு! அவள் மாடியில் நின்றபடி தான் வரச்
சொல்லியிருந்த காதலனை எதிர்பார்க்கின்றாள்.
அவன் வருகின்றான்.)

காதலன்
என்மேல் உன்றனுக் கெத்தனை அன்படி!
என்உயிர் நீதான்! என்னுடல் நீதான்!
உன்னை யன்றிஇவ் வுலகின் ஆட்சியும்
பொன்னும் வேண்டேன், புகழும் வேண்டேன்.
காத்திருப் பேன்எனக் கழறினை வந்தேன்.
பூத்திருக் கும்உன் புதுமுகம் காட்டினை.
மாளிகை உச்சியின் சாளரம் நீங்கி
நூலே ணியினைக் கால்விரல் பற்றித்
தொத்தும் கிளிபோல் தொடர்ந்திறங் குவதாய்
முத்தெழுத் தஞ்சல் எழுதினை! உயிரே
இறங்கடி ஏந்தும் என்கை நோக்கி!
(அவள் நூலேணி வழியாக இறங்குகிறாள்.)
காதலன்
வா பறந்து! வாவா மயிலே!
(அவளைத் தோளில் தாங்கி இறங்குகிறான்.)
காதலன்
வளைந்தது கையில் மாம்பழக் குலைக்கிளை!
ஒரேஒரு முத்தம் உதவு. சரி!பற!
(இருவரும் விரைந்து சென்று அங்கிருந்த ஓர்
குதிரைமேல் ஏறி அப்புறப் படுகிறார்கள்.)

2. வியப்பு
(இருவரும் ஒரு சோலையை அடைகிறார்கள்.
குதிரையை ஒரு மரத்தில் கட்டி)
காதலன்
வந்து சேர்ந்தோம் மலர்ச்சோ லைக்கண்!
என்னிரு தோளும் உன்உடல் தாங்கவும்,
உன்னிரு மலர்க்கைகள் என்மெய் தழுவவும்
ஆனது! நகரினை அகன்றோம் எளிதில்!
(இருவரும் உலாவுகின்றனர்.)
காதலன்
சோம்பிக் கிடந்த தோகை மாமயில்
தழைவான் கண்டு மழைவான் என்று
களித்தாடு கின்றது காணடி! வியப்பிது!
(சிறிது தொலைவில் செல்லுகிறார்கள்.)

3. இழிப்பு
காதலன்
குள்ளமும் தடிப்பும் கொண்ட மாமரத்
திருகிளை நடுவில் ஒருமுகம் தெரிந்தது!
சுருங்கிய விழியான்; சுருண்ட மயிரினன்;
இழிந்த தோற்றத்தன் என்னபார்க் கின்றான்?
நமைநோக்கி ஏனவன் நகரு கின்றான்?
உற்றுப்பார்! அவன் ஒருபெருங் கள்வன்.
காலடி ஓசை காட்டாது மெல்லஅக்
கொடியோன் நம்மேற் குறியாய் வருவதை
உணர்க! அன்புக் குரியாய் உணர்க!
(தம்மை நோக்கி வரும் அத்தீயனை
இருவரும் பார்க்கிறார்கள்.)

4. வெகுளி (கோபம்)
காதலன்
வெகுளியை என்உளத்து விளைக்கின் றானவன்!
புலிபாய்ந் திடும்எனில் போய்ஒழிந் திடும்நரி!
(காதலன் கண்ணிற் கனல் எழுகின்றது. தன்
உள்ளங்கை மடங்குகின்றது. அந்தக் கள்வன்
தன்னை நெருங்குவதையும் காதலன் காணு
கின்றான். காதலி காணுகின்றாள்.)

5. நகை
காதலன்
நட்டு வீழ்ந்தான் நடை தடுமாறி!
கள்ளுண் டான்.அவ் வெள்ளத்தி லேதன்
உள்ளம் கரைத்தான். உணர்வி ழந்தான்.
உடைந்தது முன்பல் ஒழுகிற்று குருதி!
(இருவரும் சிரிக்கிறார்கள்.)
காதலன்
ஆந்தைபோல் விழித்தான். அடங்காச் சிரிப்பை
நமக்குப் பெண்ணே நல்விருந் தாக்கினான்.
(இருவரும் மறுபுறம் செல்லுகிறார்கள்.)

6. மறம் (வீரம்)
காதலன்
என்ன முழக்கம்? யார்இங்கு வந்தனர்?
கால்பட்டுச் சருகு கலகல என்றது.
(உறையினின்று வாளை உருவும் ஓசை கேட்கிறது.)
காதலன்
எவனோ உறையினின் றுருவினான் வாளை;
ஒலிஒன்று கிலுக்கென்று கேட்டது பெண்ணே!
ஒருபுறம் சற்றே ஒதுங்கி நிற்பாய்.
நினது தந்தை நீண்முடி மன்னன்
அனுப்பிய மறவன் அவனே போலும்!
(காதலி ஒருபுறம் மறைந்து, நடப்பதை
உற்று நோக்கியிருக்கிறாள்.)
காதலன்
(தன்னெதிர் வந்து நின்ற மறவனை நோக்கி)
அரசன் ஆணையால் அடைந்தவன் நீயோ?
முரசு முழங்கும் முன்றிலுக் கப்பால்
அரண்மனை புனைந்த அழகு மாடியில்
வைத்தபூ மாலையை வாடாது கொணர்ந்தது
இத்தோள்! உனைஇங் கெதிர்ப்பதும் இத்தோள்!
நேரிழை இன்றி நிலைக்காது வாழ்வெனக்
கோரி அவளைக் கொணர்ந்ததும் இத்தோள்!
போர்மற வர்சூழ் பாரே எதிர்ப்பினும்
நேரில் எதிர்க்க நினைத்ததும் இத்தோள்!
உறையி னின்று வாளை உருவினேன்.
தமிழ்நாட்டு மறவன்நீ தமிழ்நாட்டு மறவன்நான்
என்னையும் என்பால் அன்புவைத் தாளையும்
நன்று வாழ்த்தி நட வந்தவழி!
இலைஎனில் சும்மா இராதே; தொடங்குபோர்!
(வாட்போர் நடக்கிறது.)
காதலன்
மாண்டனை! என்வாள் மார்பில் ஏற்றாய்;
வாழி தோழா! நின்பெயர் வாழி!
(வந்தவன் இறந்து படுகிறான்.)

7. அச்சம்
(காதலன் தன் காதலியைத் தேடிச் செல்கிறான்.)
காதலன்
அன்பு மெல்லியல், அழகியோள் எங்கே?
பெருவாய் வாட்பல் அரிமாத் தின்றதோ!
கொஞ்சும் கிள்ளை அஞ்ச அஞ்ச
வஞ்சக் கள்வன் மாய்த்திட் டானோ!
(தேடிச் செல்லுகின்றான். பல புறங்களிலும்
அவன் பார்வை சுழல்கின்றது.)

8. அவலம்
(காதலி ஒருபுறம் இறந்து கிடக்கிறாள். காதலன் காணுகிறான்.)
காதலன்
ஐயகோ அவள்தான்! அவள்தான்! மாண்டாள்.
பொரிவிழிக் கள்வன் புயலெனத் தோன்றி
அழகு விளக்கை அவித்தான்! நல்ல
கவிதையின் சுவையைக் கலைத்தான் ஐயகோ!
என்றன் அன்பே, என்றன் உயிரே!
என்னால் வந்தாய், என்னுடன் வந்தாய்.
பொன்னாம் உன்னுயிர் போனது! குருதியின்
சேற்றில் மிதந்ததுன் சாற்றுச் சுவையுடல்!
கண்கள் பொறுக்குமோ காண உன்நிலை?
எண்ணம் வெடித்ததே! எல்லாம் நீஎன
இருந்தேன்; இவ்வகை இவ்விடம் இறந்தாய்!
தனித்தேன், உய்விலை. தையலே, தையலே!
என்பால் இயற்கை ஈந்த இன்பத்தைச்
சுவைக்குமுன் மண்ணில் சுவர வைத்துக்
கண்ணீர் பெருக்கிநான் கதற வைத்ததே!
ஐயகோ பிரிந்தாய்! ஐயகோ பிரிந்தாய்!

9. அறநிலை
கல்வி இல்லார்க்குக் கல்வி ஈகிலார்
செல்வம் இல்லார்க்குச் செல்வம் ஈகிலார்
பசிப்பிணி, மடமைப் பரிமேல் ஏறி
சாக்காடு நோக்கித் தனிநடை கொண்டது!
அன்போ அருளோ அடக்கமோ பொறுமையோ
இன்சொலோ என்ன இருத்தல் கூடும்?
வாழான் ஒருவன் வாழ்வானைக் காணின்
வீழ இடும்பை விளைக்கின் றானே!
வையம் உய்யு மாறு
செய்வன செய்து கிடப்பேன் இனிதே!

 

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp166a.htm#dt202

..........
நம்முடைய முயற்சிகள் திசை தவறிப் போகின் றன என்று சொல்ல நான் தயாராக இல்லை. சமூகப் பிரச்சினைகளில் கவனம் செலுத்துவதைப் போல, பொருளாதாரப் பிரச்சனைகள் மீது உரிய கவனம் செலுத்த நீண்ட காலமாக நாம் தவறி விட்டோம் என்பதை ஒப்புக் கொள்கிறேன். எனவே, தீண்டத்தகாதோர் என்பதைக் காட்டிலும், தொழிலாளர்கள் என்னும் அடிப்படைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, நாம் இன்று திரண்டிருக்கிறோம் என்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. இது ஒரு புதிய திருப்பம். ஆனால், சிலர் இந்தத் திருப்பத்திற்கு ஒரு தீய உள்ளர்த்தம் கற்பிக்கிறார்கள். இதில் நான் பங்கேற்பதற்காக என் மீது எதிர்மறை விமர்சனம் செய்தார்கள். தொழிலாளர் தலைவர்கள் அல்லாமல் வேறு இடத்தில் இருந்து இந்த விமர்சனம் வந்திருந்தால், நான் அதை லட்சியம் செய்திருக்க மாட்டேன். இத்தகைய மாநாட்டைக் கூட்டுவதன் மூலம் நாம் தொழிலாளர்களைப் பிளவுபடுத்துகிறோம் என்று தொழிலாளர் தலைவர்கள் விமர்சனம் செய்கிறார்கள்.

என்னைப் பொறுத்தவரை, இந்நாட்டுத் தொழிலாளர்கள், இரண்டு எதிரிகளோடும் போராட வேண்டியுள்ளது. ஒன்று பார்ப்பனியம்; மற்றொன்று முதலாளித்துவம். தொழிலாளர்கள் பார்ப்பனியம் என்னும் பகைமைச் சக்தியுடனும் போராட வேண்டியுள்ளது என்பதை நமது விமர்சகர்கள் புரிந்து கொள்ளத் தவறுவதால், இத்தகைய விமர்சனங்கள் வருகின்றன. பார்ப்பனியம் என்னும் எதிரியை நாம் சமாளிக்க வேண்டும் என்று சொல்லும்போது, என்னைத் தவறாகப் புரிந்து கொள்ளக் கூடாது. பார்ப்பனர்கள் ஒரு வகுப்பினர் என்ற அடிப்படையில் அதிகாரம், உரிமைகள், நலன்கள் ஆகியவற்றைப் பெறுவதை நான் பார்ப்பனியம் என்று சொல்லவில்லை. அந்தப் பொருளில் நான் பார்ப்பனியம் என்ற சொல்லைப் பயன்படுத்தவில்லை.

சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய உணர்வுகளின் எதிர்மறைதான் பார்ப்பனியம் என்று சொல்கிறேன். இந்த எதிர்மறை உணர்வு, எல்லா வகுப்பினரிடையிலும் உண்டு, பார்ப்பனர்களோடு அது நின்று விடவில்லை. பார்ப்பனர்கள் அதைத் தோற்றுவித்தவர்கள் என்ற போதிலும், அது எல்லா வகுப்பினரிடையிலும் ஊடுருவி உள்ளது என்பது உண்மை. பார்ப்பனியம் எங்கும் பரவி எல்லா வகுப்பினரின் சிந்தனை, செயல்களில் ஆதிக்கம் செலுத்துவது மறுக்க முடியாத உண்மை. இந்தப் பார்ப்பனியம், சில வகுப்புகளுக்கு உரிமை மிகுந்த உயர்வுகளை வழங்குகிறது என்பதும் மறுக்க முடியாத உண்மை. பிற வகுப்புகளுக்கு சம வாய்ப்புகளை மறுக்கிறது என்பதும் உண்மை. பார்ப்பனியம் சேர்ந்துண்ணல், கலப்பு மணம் ஆகிய சமூக உரிமைகளை மறுப்பதோடு நின்று விடுவதில்லை. அப்படி நின்றிருந்தால், யாரும் அதைப் பற்றிக் கவலைப்பட்டிருக்க மாட்டார்கள். அது, சிவில் உரிமைகளையும் பதம் பார்க்கிறது.

(பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு: 17(3), பக்கம்:175)

 

http://poar-parai.blogspot.com/2007/05/blog-post_2512.html


***********************************************************************************************


அரசு என்ற இந்த நூல் , யா.மி.ஸ்வேர்திலோ பல்கலைக் கழகத்தில் கி.பி. 1919 ஜீலை 11 - இல் , வி.இ.லெனின் ஆற்றிய விரிவுரை ஆகும். கி.பி.1984 இல், மாஸ்கோ முன்னேற்றப் பதிப்பகத்தாரால் பதிக்கப்பட்ட இந்த நூல் சில மொழிபெயர்ப்புத் திருத்தங்களுடன் வெளியிடபடுகிறது.

***********************************************************************************
தோழர்கள்ளே ! நீங்கள் முன்மொழிந்த திட்டத்தின்படி இன்றைய உரைக்குரிய பொருள் அரசு என்பதாகும். இப்பொருள் பற்றி ஏற்கெனவே உங்களுக்கு எந்த அளவு தெரிந்த்துள்ளது. என்பதை நான் அறியேன். நான் நினைப்பது சரியானால் உங்களது வகுப்புகள் இப்பொழுதுதான் தொடங்குகின்றன. இப்பொருளை முறையாக நீங்கள் அணுக தொடங்குவது இதுவே முதல் தடவையாகும். அப்படியானால் கடினமான இப்பொருள் பற்றிய முதற் பேச்சில் , எனது உரையில் பலருக்குப் போதிய அளவு தெளிவாகவும்,புரியக் கூடிய விதத்திலும் கருத்துக்களை விளக்குவதில் நான் வெற்றி பெறாமல் போகலாம். அப்படு நேர்ந்து விடுமாயின் , அது பற்றிக் கலக்கமுற வேண்டாம் என்றும் உங்களைப் கேட்டுக் கொள்கிறேன்.


ஏனெனில் , அரசு என்பது பற்றிய பிரச்சினை மிக மிகச் சிக்கலும் கடினமுள்ள ஒன்று; முதலாளித்துவ அறிஞர்கள், எழுத்தாளர்கள் தத்துவஞானிகளால் ஒருவேளை மற்ற எந்தப் பிரச்சினையையும்விட மிகுதியாகக் குழப்பி விடப்பட்ட ஒன்றாகும். ஆகவே இப்பொருளை, ஒரு சுருக்கமான பேச்சில் , ஒரே முறையில் தெளிவாகப் புரிந்து கொள்ளுவது சாத்தியம் என்று ஒரு போதும் எதிர்பார்க்கக் கூடாது. இப்பொருளை பற்றிய முதற் பேச்சுக்குப்பின், விளங்கிக் கொள்ளாத, அல்லது உங்களுக்குத் தெளிவில்லாத இடங்களை நிங்கள் குறித்து வைத்து, இரண்டாவது , மூன்றாவது, மற்றும் நான்காவது முறையும் அவற்றை அணுக வேண்டும். அவ்வகையில் , நீங்கள் விளங்கிக் கொள்ளாதவற்றைப் படிப்பது மூலமும், தனிப்பட்ட விரிவுரைகள், உரையாடல்கள் ஆகியவற்றினாலும் , மேலும் நிறைவு செய்து விளக்கம் பெறாலாம். மீண்டும் ஒருமுறை நாம் கூடி உறையாட முடியுமென்று நம்புகிறேன். விரிவுரைகள் , உரையாடல்கள் ஆகியவற்றோடு மார்கசும் எங்கெல்சும் எழுதிய மிகமிக முக்கியமான நூல்களிலும் சிலவற்றையேனும் படிப்பதில் நீங்கள் சிறிது நேரம் ஈடுபடுவீர்கள் என்றும் நம்புகிறேன்.


சோவியத் கட்சிப் பள்ளிக்கூட மாணவர்களுக்கான நூல்நிலையத்தில் உள்ள நூல் பட்டியலிலும், உதவிப் புத்தகங்களிலும் மிகமிக முக்கியமான இந்நூல்களைக் காணக்கூடும் என்பதில் ஐயமில்லை. இந்நூல்களினுடைய வாசகத்தின் சிக்கல் காரனமாக, உங்களில் சிலருக்கு முதலில் திகில் உண்டாகலாம்.இருந்தாலும், இதனால் நீங்கள் ஏதும் கலக்கமடையக்கூடாது என்று மறுபடியும் கூறுகிறேன். முதல் முறை படிக்கும் பொழுது தெளிவில்லாதது, இரண்டாம் முறை படிக்கும் பொழுது அல்லது பின்னர் அந்த்ப் பிரச்சினையைச் சற்று வேறுபட்ட ஒரு கோணத்திலிருந்து அணுகும் பொழுது தெளிவாகி விடும். ஏனென்றால், இந்தப் பிரச்சினை மிகச் சிக்கலானது.


அதோடு , முதலாளித்துவ அறிஞர்களும், எழுத்தாளர்களும் இதனை மிகவும் குழப்பியும் விட்டிருக்கிறார்கள் என்படைத் திரும்பவும் சொல்கிறேன். ஆகவே இந்தப் பிரச்சினையை ஆழமாக ஆராய்ந்து, அதில் சொந்த முயற்சியால் தேர்ச்சி பெற விரும்பும் யாரும் இதனைப் பல முறையில் முனைந்து பயில வேண்டும். அதனைத் தெளிவாகவும், திண்ணமாகவும் புரிந்து கொள்ளுவதற்குப் பல்வேறு கோணங்களிலிருந்தும் இப்பிரச்சினையைப் பரிசிலீக்க வேண்டும்.


இப்பிரச்சினைக்கே மீண்டும் திரும்புவது என்பது மிகவும் எளிது. ஏனெனில் , அரசியல் முழுவதற்குமே இது அவ்வளவு மூலாதாரமான, அடிப்படையான ஒரு பிரச்சினையாகும். மேலும் , தற்காலம் போல அத்தனை புயல் வீசும் புரட்சிகரக் காலங்களில் மட்டும் அல்லாமல், மிக மிக அமைதியான காலங்களில் கூட, ஒவ்வொரு நாளும் எந்த்ச் செய்தித்தாளிலும் ஏதேனும் ஒரு பொருளாதர அல்லது அரசியல் பிரச்சினையோடு சம்பந்தப்பட்டு இந்தப் பிரச்சினை உங்களை எதிர்நோக்கும்.


அரசு என்பது என்ன? அதன் தன்மை யாது? அதன் பொருள் என்ன? நம்து கட்சி, முதலாளித்துவத்தைக் தூக்கி எறியப் போராடும் கட்சி, அதாவது கம்யூனிஸ்டுக் கட்சி, அரசு விசயத்தில் கொண்டுள்ள நிலை என்ன? இக்கேள்விகளுக்கு ஏதேனுமொரு தொடர்பில் ஒவ்வொரு நாளும் நீங்கள் திரும்ப நேரும். மேலும், வெவ்வேறு நிலைமைகளில் , மிகமிக அற்பமான பிரச்சினைகளையொட்டி, மிகவும் எதிர்பாராத சந்தர்ப்பத்தில் எதிரிகளோடு நடத்தும் உரையாடல்களிலும், விவாதங்களிலும் இந்தப் பிரச்சினை உங்கள் எதிர்நிறக் காண்பீர்கள்.


ஆதலால், உங்கள் படிப்பின் பயனாய் , அரசு என்பது பற்றி நிங்கள் செவிமடிக்கும் உரையாடல்கள். விரிவுரைகள் ஆகியவற்றின் பயனாய் , நீ£ங்கள் இந்தப் பிரச்சினையைப் பிறர் துணையின்றியே அணுகும் ஆற்றலைப் பெறுவது மிகவும் முக்கியமாகும். இப்பிரச்சினையைப் பிறர் துணையின்றி ஆராயும் வழியை நீங்கள் கற்றால்தான், உங்கள் கொள்கைத் துணிபுகளில் போதிய அளவு உறுதி கொண்டவர்களாக உங்களை நீங்கள் கருத முடியும் . யாரையும் எதிர்த்து எந்த நேரத்திலும் அவற்றைப் போதிய வெற்றியுடன் பாதுகாத்து நிற்க முடியும்.


இச்சுருக்கமான குறிப்புகளைத் தொடர்ந்து , இனி நான் இப்பிரச்சினையையே ஆராயப் போகிறேன். அரசு என்பது என்ன? அது எவ்வாறு தோன்றியது? முதலாளித்துவத்தை அறவே தூக்கியெறியப் போராடும் தொழிலாளி வர்க்கத்தின் கட்சியான கம்யூனிஸ்டுக் கட்சி, அரசைப் பற்றிக் கொள்ள வேண்டிய அடிப்படையான உறவு நிலை யாது? இதுவே பிரச்சினை ஆகும்.





(தந்தை பெரியார் அவர்கள் பகத்சிங் தூக்கிலிடப்பட்டதும், ‘குடியரசு’ வார இதழில் எழுதிய தலையங்கம்)

திரு. பகத்சிங் தூக்கிலிடப்பட்டதைப்பற்றி அனுதாபங்காட்டாதார்கள் யாருமே இல்லை. அவரைத் தூக்கிலிட்ட காரியத்திற்காக சர்க்காரைக் கண்டிக்காதவர்களும் யாரும் இல்லை. அதோடு மாத்திரமல்லாமல் இந்தக் காரியம் நடந்துவிட்டதற்காக திரு. காந்தியவர்களையும் அநேக தேசபக்தர்கள் என்பவர்களும், இப்போது வைகின்றதையும் பார்க்கின்றோம்.இவை ஒருபுறம் நடக்க இதே கூட்டத்தாரால் மற்றொருபுறத்தில் என்ன நடக்கின்றது என்று பார்ப்போமானால் சர்க்கார் தலைவரான ராஜப் பிரதிநிதி மதிரு. இர்வின் பிரபுவைப் பாராட்டுவதும், அவரிடம் ராஜி பேசி முடிவு செய்து கொண்ட திரு. காந்தி அவர்களைப் புகழ்வதும், பகத்சிங்கை தூக்கிலிடக்கூடாது என்கின்ற நிபந்தனை இல்லாத ராஜி ஒப்பந்தத்தைப் பற்றி மிக்க திருப்தியடைந்திருப்பதோடல்லாமல், அதை ஒரு பெரிய வெற்றியாய்க் கருதி வெற்றிக் கொண்டாட்டங்கள் கொண்டாடுவதுமான காரியங்கள் நடைபெறுகின்றன.

இவ்வளவோடு மாத்திரமல்லாமல் திரு. காந்தியவர்கள் திரு. இர்வின் பிரபுவை மகாத்மா என்று கூறி அந்தப்படியே அழைக்கும்படி தேச மகா ஜனங்களுக்கும் கட்டளையிடுவது, திரு. இர்வின் பிரபு அவர்கள் திரு. காந்தியவர்களை ஒரு பெரிய மகான் என்றும், தெய்வத்தன்மை பொருந்தியவர் என்றும், வெள்ளைக்காரர்கள் அறிய விளம்பரம் செய்வதுமான காரியங்களும் நடைபெற்றன.ஆனால் இப்போது வெகு சீக்கிரத்தில் அதே மக்களால் ‘‘காந்தீயம் வீழ்க’’ ‘‘காங்கிரஸ் அழிக’’ ‘‘காந்தி ஒழிக’’ என்கின்ற கூச்சல்களும், திரு, காந்தி அவர்கள் செல்லுகின்ற பக்கம் கருப்புக்கொடிகளும் அவர் பேசும் கூட்டங்களில் குழப்பங்களும் ஏற்படுவதும் சகஜமாகிவிட்டன. இவைகளையெல்லாம் பார்க்கும்போது, அரசியல் விஷயமாய்ப் பொது ஜனங்களுடைய அபிப்பிராயம் என்ன? கொள்கை என்ன? என்பதைக் கண்டு பிடிக்கவே முடியாமல் இருப்பதோடு அப்படி ஏதாவது ஒரு கொள்கை யாருக்காவது உண்டா என்று சந்தேகிக்க வேண்டியதாகவுமிருக்கிறது.

எது எப்படி இருந்தபோதிலும், திரு. காந்தியவர்களின் உப்பு சத்தியாக்கிரக கிளர்ச்சி ஆரம்பித்த காலத்திலேயே, இக்கிளர்ச்சி மக்களுக்கோ, தேசத்திற்கோ சிறிதும் பயன்படாது என்றும், பயன்படாமல் போவதோடல்லாமல் தேசத்தின் முற்போக்குக்கும், கஷ்டப்படும் மக்களின் விடுதலைக்கும் விரோதமானது என்றும் எவ்வளவோ தூரம் எடுத்துச் சொன்னோம். நாம் மாத்திரமல்லாமல் திரு. காந்தியவர்களே இக்கிளர்ச்சி ஆரம்பிப்பதற்கு காரணமே, பகத்சிங் போன்றவர்கள் செய்யுங்காரியங்களை கெடுப்பதற்கும், ஒழிப்பதற்குமே என்று கருத்துப்பட நன்றாய் வெளிப்படையாகவே எடுத்துச் சொல்லியுமிருக்கின்றார். போதாக்குறைக்கு அக்கம்பக்கத்து தேசத்தவர்களில் உண்மையான சமதர்மக் கொள்கையுடைய தேசத்தார்களும் ‘‘திரு. காந்தியவர்கள் ஏழைகளை வஞ்சித்து விட்டார், சமதர்மக் கொள்கைகளை ஒழிக்கவே தன்காரியங்களைச் செய்கின்றார், திரு. காந்தி ஒழியவேண்டும், காங்கிரஸ் அழிய வேண்டும்’’ என்று ஆகாயமுட்டக் கூப்பாடு போட்டுக்கொண்டே இருந்தார்கள். ஆனால் நமது தேசிய வீரர்கள், தேசபக்தர்கள் என்பவர்கள் ஒன்றையும் கவனியாமல், பலாபலனையும் உணராமல் விளக்கைப் பிடித்துக் கொண்டு கிணற்றில் விழுவதுபோலவும், பந்தயங்கூறிக்கொண்டு பாறையில் முட்டிக்கொள்வது போலவும் தலை கிறுகிறுத்துக் கண் தெரியாமல் கூத்தாடினார்கள், அதன் பயனாய் சிறை சென்று வீரர்களை ‘‘வாகை மாலை சூடி’’ திரும்பி வந்தார்கள். அதன் பெருமைகளையும் அடைந்து கொண்டார்கள். பிறகு இப்போது பகத்சிங் தூக்கிலிடப்பட்டதைப் பார்த்துவிட்டு, ‘‘காந்தீயம் வீழ்க’’ ‘‘காங்கிரஸ் அழிக’’ ‘‘காந்தி ஒழிக’’ என்று கூப்பாடும் போடுகின்றார்கள். இதனால் என்ன பயன் ஏற்பட்டுவிடும் என்பது நமக்கு விளங்கவில்லை.

நிற்க, நம்மைப் பொருத்தவரை நாம் உண்மையைச் சொல்ல வேண்டுமானால், பகத்சிங் அவர்கள் இந்த மாதிரி பொருப்பும் கவலையும் அற்ற மூட மக்களும், மட மக்களும் பலாபலனை எதிர்பாராமல் எப்படியாவது தங்களுக்கு கௌரவம் கிடை;ததால் போதுமென்கின்ற சுயநல மக்களும் உள்ள நாட்டில் உயிருடன் வெகுகாலம் இருந்து கொண்டு இவர்களது நடவடிக்கைகளைப் பார்த்துக்கொண்டு வினாடிதோரும் வேதனைப் பட்டு இவர்களது முட்டுக்கட்டைகளை அனுபவித்துக் கொண்டிருப்பதைப் பார்க்கிலும் அவர் தன் உயிரை விட்டு மறைய நேர்ந்தது, பகத்சிங்கிற்கு மெத்த ‘‘சாந்தி’’ என்றும், நன்மை யென்றுமே கருதுதுகின்றோம். அந்தப் பேற்றை நாம் அடைய முடியவில்லையே என்றுதான் கவலைப்படுகின்றோம்.

ஏனெனில் ஒரு மனிதன் தன் கடமையைச் செய்தானா? இல்லையா? என்பதுதான் கேள்வியே தவிர, பலன் என்ன ஆச்சுது என்பது இங்கு நமது கேள்வி அல்ல. ஆனாலும் காமறிந்து, இடமறிந்து கடமையைச் செலுத்த வேண்டும் என்பதை நாம் ஒப்புக்கொள்ளுகின்றோமாயினும் பகத்சங் கொள்கைக்கு காலமும் இடமும், நடப்பும் விரோதமாயில்லை என்றே சொல்லுவோம். ஆனால் அவர் தனது கொள்கையை நிறைவேற்றக் கைக்கொண்ட முறைகளில் சிறிது தவறு நேர்ந்துவிட்டதாக நம் புத்திக்குத் தோன்றிய போதிலும் அவரது கொள்கை குற்றமுடையது என்று சொல்ல நாம் ஒருக்காலும் துணியவே மாட்டோம், அதுவேதான் உலகத்தின் சாந்தநிலைக் கொள்கையாகும். நிற்க, உண்மையிலேயே பகத்சிங் அவர்கள் தனது கொள்கைகள் முழுவதையும் சரி என்று மனப்பூர்த்தியாய் நிச்சயித்துக்கொண்டு அதை நிறைவேற்ற அவர் நடந்து கொண்ட மாதிரிகள்தான் சரியான மார்க்கம் என்று அவர் முடிவும் செய்து கொண்டு இருப்பாரேயானால் கண்டிப்பாக அவர் நடந்துகொண்டபடியேதான் நடந்து இருக்க வேண்டியதென்று நாம் சொல்லுவதோடு அந்தப்படி அவர் நடக்காமல் இருந்திருந்தால் அவர் யோக்கியமான மனிதரென்று சொல்ல முடியாது என்றும் சொல்லுவோம். ஆதலால் இப்போது நாம் அவரை ஒரு உண்மையான மனிதர் என்று சொல்லுவோம்.

இந்தியாவுக்கு பகத்சிங் கொள்கைதான் உண்மையாக வேண்டியது என்பது நமது பலமான அபிப்பிராயமாகும். ஏனெனில் நாமறிந்தவரை திரு பகத்சிங்கிற்கு பொது உடைமையும்தான் அவரது கொள்கையென்று கருதி இருக்கின்றோம். இதற்கு உதாரணம் என்னவென்றால் திரு பகத்சிங் பஞ்சாப் கவர்னருக்கு எழுதிய கடிதத்தில் கீழ்க்கண்ட வாக்கியம் காணப்படுகிறது. அதாவது:-‘‘பொதுஉடைமைக் கட்சி அதிகாரம் பெற்று ஜனங்களுக்குள் வித்தியாசமான அந்தஸ்துகள் இல்லாமல் இருக்கும்வரை எங்கள் யுத்தம் நடந்துகொண்டுதானிருக்கும். எங்களைக் கொல்வதோடு இந்த யுத்தம் முடிந்துவிடாது. அது பகிரங்கமாகவும் ரகசியமாகவும் நடந்துதான் தீரும்’’என்று குறிப்பிட்டிருக்கிறார். அன்றியும் அவர் கடவுள் விஷயத்திலோ எல்லாம் கடவுள் செயல் என்பதிலோ நம்பிக்கை இல்லாத தன்னம்பிக்கையுடையவர் என்றும் கருதிக்கொண்டிருக்கின்றோம். ஆகவே இந்துக்கொள்கையானது எந்த சட்டத்தின்படியும் குற்றமாக்கக்கூடியது அல்லவென்றும் ஆவதாயிருந்தாலும் கூட யாரும் பயப்பட வேண்டியதில்லை என்றும் சொல்லுவோம். ஏனென்றால் அதனால் பொது மக்களுக்கு எவ்வித நஷ்டமோ, கஷ்டமோ ஏற்பட்டுவிடாது என்று உறுதிகொண்டிருக்கின்றோம். அந்தப்படி ஒரு சமயம் ஏதாவது ஏற்படுவதாயிருந்தாலும் நாம் நம் மனப்பூர்வமாய் யாதொரு தனிமனிதனிடமாவது, தனி வகுப்புகளிடமாவது, தனி தேசத்தார்களிடமாவது துவேஷம் இல்லாமலும் எந்த தனி மனிதனுடைய திரேகத்திற்கும் துன்பமுண்டு பண்ணாமலும் நம்மை எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் கஷ்டப்படுத்திக்கொள்ளவும் சம்மதிக்கின்றதான தியாகத்தன்மையுடன் இருந்துகொண்டு அக்கொள்கையை நிறைவேற்ற முயற்சிக்கின்றோம். ஆதலால் நாம் எதற்கும் கவலைப்படவோ, பயப்படவோ வேண்டியதில்லை என்று சொல்லுகிறோம்.

இன்னும் விளக்கமாகச் சொல்ல வேண்டுமானால், சாதாரணமாக நாம் தீண்டாமை ஒழிய வேண்டும் என்று சொல்லுவதில் என்ன தத்துவம் அடங்கி இருக்கின்றதோ அதுதான் மக்களின் ஏழ்மைத் தன்மை ஒழிய வேண்டும் என்பதிலும் அடங்கி இருக்கின்றது. தீண்டாமை ஒழிவதாயிருந்தால் எப்படி மேல்ஜாதி, கீழ்ஜாதி தத்துவம் அழிந்து தானாக வேண்டும், அதுபோலவேதான் ஏழ்மைத்தன்மை ஒழிவதாயிருந்தால் முதலாளித் தன்மை, கூலிக்காரத் தன்மை ஒழிந்துதானாக வேண்டும். ஆகவே இந்தத் தன்மைகள் மறைபடுவதுதான் சமதர்மத்தன்மை பொதுஉடமைத் தன்மை என்பவைகளை ஒழிய வேறில்லை. இந்தக் கொள்கைகள்தான் திரு பகத்சிங் போன்றவர்களின் கொள்கைகள் ஆதலால் இக்கொள்கைகளை நியாயமானவை யென்றும், அவசியமானவை என்றும் கருதுகின்ற ஒருவன் காங்கிரஸ் ஒழிக! காந்தீயம் அழிக!! என்று சொல்லுவதில் நமக்கு ஆச்சரியமோ, குற்றமோ ஒன்றுமே இல்லை. ஆனால் இந்தக் கொள்கைக்காரர்கள் காங்கிரசுக்கு ஜே, காந்திக்கு ஜே என்று சொல்லுவதுதான் நமக்கு மிக ஆச்சரியமாயிருக்கின்றது.

திரு. காந்தியவர்கள் என்றையதினம் கடவுள்தான் தன்னை நடத்துகின்றார் என்றும், வருணாச்சிரமந்தான் உலக நடப்புக்கு மேலானதென்றும், எல்லாம் கடவுள் செயல் என்றும் சொன்னாரோ அன்றே பார்ப்பனீயத்திற்கும், காந்தீயத்திற்கும் வித்தியாசமில்லை என்று கருதியதுடன் அத்தத்துவம் கொண்ட காங்கிரசு ஒழிந்தாலொழிய நாட்டுக்கு நன்மை இல்லையென்றும் கருதிவிட்டோம். அந்த உண்மை இன்றுதான் மக்களில் சிலராவது கண்டுபிடித்து காந்தீயம் அழிக என்று சொல்லத்தக்க அறிவையும் துணிவையும் அடைந்திருக்கின்றார்கள். இது நமது கொள்கைகளுக்கு ஒரு பெரிய வெற்றியாகும். திரு பகத்சிங் தூக்கிலிடப்பட்டு உயிர்துறந்திருக்காவிட்டால் இந்த வெற்றி இவ்வளவு பிரபலத்தில் ஏற்படுத்துவதற்கு ஆதாரமே இருந்திருக்காது. அன்றியும் பகத்சிங்கை தூக்காமல் இருந்திருந்தால் காந்தீயத்திற்கும் இன்னமும் ஆக்கம் ஏற்பட்டு இருக்கும் என்றுகூடச் சொல்லுவோம். சுபமாக, தானாகவே நோய்கொண்டு அவஸ்தைப் பட்டு செத்துச் சாம்பலாகி இருக்க வேண்டிய பகத்சிங்குக்கு இந்திய மக்களுக்கு ஏன் உலகமக்களுக்கே உண்மையான சமத்துவமும், சாந்தியும் அளிக்கத்தக்க பாதையைக் காட்டுவதற்கு பயன்படத்தக்கதாய் தனது உயிரைவிட நேர்ந்தது. சாதாரணத்தில் வேறு யாரும் அடைய முடியாத பெரும்பேறு என்றே சொல்லி, பகத்சிங்கை மனமார, வாயாரா, கையார பாராட்டுகின்றோம்! பாராட்டுகின்றோம் !! பாராட்டுகின்றோம் !!!

இதே சமயத்தில் ந்மது அரசாங்கத்தாரையும் இனியும் இப்படிப்பட்ட உண்மையான எண்ணமுடையவர்களாகப் பார்த்து மாகாணத்திற்கு 4 பேர் வீதமாவது தூக்கிலிட வேண்டுமென்றும் மனமார வேண்டுகின்றோம்.---

 

http://illakkia.blogspot.com/2008/03/blog-post_3788.html

மற்ற கட்டுரைகள் …

TPL_INFINITY_MORE_ARTICLE