Language Selection

புதிய கலாச்சாரம்

04_2006.jpg

ஒரு நிழப்படம் - சில கேள்விகள்

            தோ, இங்கே நீங்கள் பார்க்கும் நிழற்படத்தில் ஓர் ஆப்பிரிக்கப் பெண்  ஒரு சின்னஞ்சிறு கை அவள் வாயை வருடிப் பொத்தியபடி இருக்கிறது. அந்தக் கை சொல்லாமல் சொல்கிறது ""பால் கொடு அம்மா.'' அவன் அவளது மகன். ""என்னைக் கவனி'' என்று கை அசைவில் ஊமைச் சொல்லை உதிர்க்கும் இந்தக் குழந்தையைக் கவனியுங்கள். தாய்தான் அதன் உலகம்.

04_2006.jpgநாளங்காடி, பொழுதங்காடி

 

யவனர் வந்து கால்தடம் பதித்து...

 

நீட்டி முழக்கும் நெய்தற்குறிப்பில்

 

சேர்த்துக் கொள்ளுங்கள் இதையும்

கோட்டுச்சேரி சுனாமி குடியிருப்பில்

 

வெறிநாய் வந்து கால்தடம் பதித்து

04_2006.jpg

எடுக்கப்படாமல் நிரம்பி வழியும் குப்பைத் தொட்டிகள், துருப்பிடித்துப்போன தகர வண்டிகள், தூரத்தில் வரும்போதே பீதிக்குள்ளாக்கும் தகரடப்பா லாரிகள், சரக் சரக் என்று விட்டு விட்டுக் குப்பையை வாரும் பிரம்பாலான மிலாறு, வாரும்போதே பாதியைக் கீழே கொட்டும் ஓட்டை இருப்புச் சட்டிகள், தேய்ந்து போன மண்வெட்டிகள். வெளிறிக் கசங்கிய காக்கி உடையில் இந்தக் கருவிகளுடன் போராடிக் கொண்டிருக்கும் துப்புரவுப் பணியாளர்கள் இதுதான் மாநகராட்சித் துப்புரவுப் பணிக்களத்தின் தோற்றம்.

1950  பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கெதிராகப் போராட்டம் நடத்தி அடிமைத் தளையறுத்து, இந்தியக் குடிமக்களுக்கு ஜனநாயக உரிமைகளை வழங்குவதற்கான அரசியல் சட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டதாகப் பெருமையுடன் நினைவு கூறப்படும் ஆண்டு. இதே ஆண்டில்தான் அமெரிக்க அடிமைத்தனத்தின் திரவ வடிவமான கோகோ கோலாவும் இந்தியாவில் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது.

04_2006.jpg

"இது கொள்கைக் கூட்டணியல்ல, அரசியல் கூட்டணி'' என்றார் போயஸ் தோட்டத்தை விட்டுவெளியில் வந்த வை.கோபால்சாமி. கொள்கை என்றால் என்ன? அரசியல் என்றால் என்ன?

 

            இதற்கு 1999இலேயே திருமாவளவன் பதில் சொல்லியிருக்கிறார். ""தேர்தல் புறக்கணிப்பு எங்கள் கோட்பாடு  பங்கேற்பு என்பது நிலைப்பாடு'' என்றார்.

04_2006.jpg

சி முக்கியமான அரசியல் நிகழ்வுகள் மட்டும்தான் அவற்றின் சாரத்தை சுருங்கக் கூறும் சான்றுகளைத் தடயமாக விட்டுச் செல்கின்றன. புஷ்ஷின் இந்திய வருகை அந்த ரகத்தைச் சார்ந்தது. ""புஷ் தங்கியிருந்த நட்சத்திர விடுதியின் அதே தளத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த நாய்களை சார்ஜன்ட் மேஜர், லெப்டினன்ட் என்ற அவற்றின் பதவியின் பெயரால்தான் அழைக்க வேண்டுமெயன்றி நாய்கள் என்று தவறியும் அழைத்துவிடக் கூடாது''

04_2006.jpg

 நாட்டுப்புறப் பாடல் பேழைகளை வெளியிடும் ராம்ஜி இசை நிறுவனம் சாதாரண மக்களின் இசையார்வத்தைப் பூர்த்தி செய்வதில் பலரால் பாராட்டையும் அங்கீகாரத்தையும் பெற்றுள்ள ஒரு பிரபலமான நிறுவனம் ஆகும். இதன் நிறுவனர் ராம்ஜி எஸ்.பாலன் மற்றும் அவரது நண்பர்கள் தயாரித்து இயக்கி வெளியிட்டிருக்கும் திரைப்படம் நாகரீகக் கோமாளி.

04_2006.jpg

இது 13 வது சட்டமன்றத் தேர்தல். மீண்டும் வாக்களிக்கப் போகிறீர்களா? ஒரு முறை ஏமாறுவது மனிதனுக்கு இயல்பு; இரண்டு முறை ஏமாறுபவன் ஏமாளி; மூன்று முறை ஏமாந்தால் அவனை முட்டாள் என்றும் சொல்லலாம்.12 முறை ஏமாற்றப் பட்டபிறகும் சொரணையில்லாமல் பல்லிளித்துக் கொண்டு ஓட்டுப் போடச் செல்பவர்களை என்ன பெயரிட்டு அழைப்பது?

02_2007_puja.jpg

90களில் பயங்கரவாதத்தினால் பரிதாபமாக்கப்பட்ட காதலர்களைப் படமாக்கிய மணிரத்தினம் 2000ஆம் ஆண்டுகளில் பொருளாதாரத்தை முன்னேற்றிய முதலாளித்துவ நாயகர்களை நாடிச் சென்றிருக்கிறார். காலத்திற்கேற்ற மாற்றம்தான். 2020இல் இந்தியா வல்லரசாகுமெனப் பிதற்றித்திரியும் அரசவைக் கோமாளி அப்துல் கலாம் இளைஞர்களிடம் விற்கப்படும் காலத்தில், இன்போசிஸ் நாராயணமூர்த்தியும், விப்ரோவின் பிரேம்ஜியும் பொன்முட்டையிடும் வாத்துக்கள் எனப் போற்றப்படும் நேரத்தில் இவர்களுக்கு முன்னோடியான அம்பானியை வெள்ளித்திரையில் நினைவு கூர்கிறார் மணிரத்தினம்.

12_2005PK.jpgசெடி தூங்கும் விடிகாலை

பனித்துளி விறைத்தது பிணங்களைத் தீண்டி.

எல்லாமே அடையாளம் தெரியும் பிணங்கள்...

மழையில் குதிகால் வெளிறிக் கிடக்கு

விழியில் உறக்கம் எரிந்து கிடக்கு

முடிவாய் வந்த வார்த்தைகளோ,

காற்றின் அலறலில் உறைந்து கிடக்கு.

12_2005PK.jpg

அந்தப் பொடிசு முகம் சுளித்தது ""அய்யே, நல்லால்லே கருப்பி.''

""ஏய் வாண்டு, இந்தச் சாத்துக்குடி எவ்வளவு இனிப்பு தெரியுமா?'' ஒரு சுளையை எடுத்து நன்றாகச் சப்பிச் சாப்பிட்டுக் காட்டினாள் கார்மென். பொடிசு முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தது. கார்மெனை கருப்பி என்று தான் கூப்பிடுவான் அந்தப் பொடிசு வில்லியம்ஸ். கார்மென், ஆப்பிரிக்கப் பழங்குடிப் பெண். வேலைக்காரி. அவள் எசமானனும், எசமானியும் பிரெஞ்சுப் பணக்காரர்கள்.

மற்ற கட்டுரைகள் …

TPL_INFINITY_MORE_ARTICLE