Language Selection

புதிய கலாச்சாரம்

11_06.jpg

வரலாறு என்பது கடந்த காலத்தின் தேங்கிப்போன குட்டை அல்ல. அது வற்றாத ஜீவ நதி. கற்கள் சிதைந்து துகள்களாகவும். துகள்கள் சேர்ந்து கற்களாகவும் உருமாற்றம் பெற்ற வண்ணம் ஓடிக் கொண்டிருக்கும் வரலாற்றில் தியாகிகள் உருவாகிறார்கள், துரோகிகளும் உருவாகிறார்கள். தியாகிகளும் துரோகிகளும் கடந்த காலத்துக்கு மட்டுமே உரியவர்கள் அல்லர். அவர்கள் நம் கண் முன்னே நிகழ்காலத்திலும் இருக்கிறார்கள்.

11_06.jpg

18,19ஆம் நூற்றாண்டுகளின் காலனியாதிக்க எதிர்ப்புப் போராட்டங்களில், துரோகியையும் தியாகியையும் இனம் பிரித்து அடையாளம் காண்பது எளிதாக இருந்தது. திப்புநிசாம், மருதுதொண்டைமான் என தியாகத்தையும், துரோகத்தையும் எளிதாக வரையறுக்க முடிந்தது. ஆனால் இந்த எல்லைக்கோடு இருபதாம் நூற்றாண்டில் மங்கத் தொடங்கியது. எதிர்ப்புகளை நசுக்குவதற்குப் பதிலாக அவற்றை நிறுவனமயமாக்கு வதன் மூலமாகவே நமத்துப்போகச் செய்துவிடமுடியும் என்ற உத்தியை 1857 எழுச்சிக்குப் பின் அமலாக்கினார்கள் வெள்ளையர்கள்.

11_06.jpg

பார்சி சமூகத்தைச் சேர்ந்த ஜம்ஷெட்ஜி டாடா 1877இல் தனது நூற்பாலையை நிறுவி அதற்குப் "பேரரசி ஆலை' என்று பெயரிட்டார். கிழக்கிந்தியக் கம்பெனிக்காகச் சீனாவுக்கு கப்பல் மூலம் அபினி கடத்தியதில் கிடைத்த தரகுப் பணத்தையும், 1857இல் ஈரான் மீதும், 1868இல் எத்தியோப்பியா மீதும் பிரிட்டிஷ் இராணுவம் போர் தொடுத்தபோது அவர்களுக்கு உணவு சப்ளை செய்து அந்த "காண்டீன் கான்டிராக்ட்' மூலம் கிடைத்த பணத்தையும் வைத்து இந்த நூற்பாலை துவங்கப்பட்டதால், அந்த நன்றி "பேரரசி ஆலை' என்று வாலை ஆட்டியது.

11_06.jpg

"மனித குல வரலாற்றில் பழி வாங்குதல் என ஒன்று இருக்கிறது. இங்கே பழிவாங்குவதற்கான கருவிகளை உருவாக்குபவன் வன்முறைக்கு இலக்கானவன் அல்ல, அந்த வன்முறையை ஏவியவன்தான் (தனக்கெதிரான) அந்தக் கருவியையே தயார் செய்கிறான். இதுதான் வரலாற்றுப் பழிவாங்குதலின் விதி..... பிரிட்டிஷாரால் சித்திரவதை செய்யப்பட்டு அவமானப்படுத்தப்பட்டு நிர்வாணமாக்கப்பட்ட விவசாயிகளிடமிருந்து தொடங்கவில்லை இந்தியாவின் கலகம். அவர்களால் சோறும் துணியும் தந்து சீராட்டி வளர்க்கப்பட்ட சிப்பாய்களிடமிருந்துதான் தொடங்கியிருக்கிறது.

11_06.jpg

 கீழ்த்தரமான கிழக்கிந்தியக் கம்பெனி ஆட்சியை அகற்ற பாளையக்காரர்கள் ஒன்றுபட்டு ஏற்படுத்தியிருந்த தீபகற்பக் கூட்டிணைவில் தெற்கே மருதுபாண்டியர், திண்டுக்கல்லில் கோபாலநாயக்கர் எனக் கூட்டிணைவை வழிநடத்தி வந்தனர். இதில் மலபாரையும், தமிழகத்தையும் தென்னிந்தியப் புரட்சிக் கண்ணியில் இணைப்பதற்கான இடமாக விளங்கியது கொங்கு மண்டலம். அதில் ஆங்கிலேயர்களுக்கு அடங்க மறுத்த பாளையக்காரர்களில் ஒருவர் சின்னமலை.

11_06.jpg

"நானும் உழுது விதைக்கும்போது அவன்
தானும் உழவுக்கு வந்தானோ?
உழவு துறைக்கு வந்தானோ நம்மள்
உழவெருதுகள் மேய்த்தானோ?
களைமுளைகளெடுத்தானோ? இப்போ
கஞ்சித் தண்ணிக்குக் கொடுத்தானோ?
சனமோ? சாதியோ?
கும்பினியான்நம்மள்
சம்மந்தக்காரனோ கும்பினியான்
மனதுபோல நடப்பானோ? நம்மள்
மச்சானோ? தம்பி கிச்சானோ?"

கட்டபொம்மு வரலாறு' எனப்படும் கதைப் பாடலில் இருந்து.

11_06.jpg

பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் வெள்ளையர்களின் வரி வசூல் கொடுமைகளுக்கு எதிராகப் போராடிய தென்னிந்தியப் பாளையக்காரர்களின் போராட்டத்திற்கு, நெற்கட்டுஞ்செவல் பாளையக்காரரான பூலித்தேவன் 1750களில் நடத்திய போராட்டம் முன்னோடியாக இருந்திருக்கிறது. சங்கரன் கோவில் அருகே இருக்கும் இந்தப் பாளையம் அன்று நெல்லைச் சீமையின் போராட்ட மையமாக இருந்தது.

 

11_06.jpg

நாள் : 17.10.1799.
இடம் : ஆங்கிலேயர்களின் கயத்தாறு இராணுவ முகாம்

 

""விசாரணையின் போது கூடியிருந்த பாளையக்காரர் அனைவர் முன்னிலையிலும் நின்ற கட்டபொம்மனது நடத்தை, வீரமும் பெருமிதமும் நிறைந்ததாயிருந்தது. அவன் தன்னைப் பிடித்துக் கொடுக்கத் தீவிரமாக முனைந்த எட்டயபுரம் பாளையக்காரன் மீதும், சிவகிரி பாளையக்காரன் மீதும் இகழ்ச்சியும் வெறுப்பும் நிறைந்த பார்வையை வீசிக் கொண்டிருந்தான்.

11_06.jpg

"கிழக்கிந்தியக் கம்பெனியின் குலை நடுக்கம்' திப்புவின் மைசூர் அரசுக்கு அன்று லண்டன் பத்திரிகைகள் வைத்த பெயர் இது. """இந்தியாவில் கும்பினியாட்சி நீடிக்க முடியுமா?'' என்ற அச்சத்தை எதிரிகளின் மனதில் உருவாக்கியவர் திப்பு. தென்னிந்தியாவில் தொடங்கிய முதல் விடுதலைப் போரின் நாயகர்களான கட்டபொம்மன், மருது சகோதரர்கள், கோபால் நாயக்கர், தீரன் சின்னமலை, கேரள வர்மா, தூந்தாஜி வாக் போன்ற எண்ணற்ற போராளிகளுக்கு அன்று மிகப்பெரும் உந்து சக்தியாகத் திகழ்ந்தவர் திப்பு.

11_06.jpg

1800 1801இல் தென்னகத்தில் கிளர்ந்தெழுந்த முதல் இந்தியச் சுதந்திரப் போர் 1806 வேலூர் சிப்பாய்ப் புரட்சியில் முடிவடைந்தது. அந்த வேலூர்ப் புரட்சிக்கு இது 200ஆம் ஆண்டு. இதனைத் தொடர்ந்து 1857இல் கிளர்ந்தெழுந்த வட இந்தியச் சுதந்திரப் போருக்கு இது 150வது ஆண்டு துவக்கம். 1906இல் வ.உ.சி துவக்கிய சுதேசிக் கப்பல் கம்பெனி எனும் மக்கள் இயக்கத்திற்கு இது நூற்றாண்டு. ஏகாதிபத்திய எதிர்ப்புச் சிங்கம் பகத்சிங்கின் பிறந்த நாளுக்கு இது நூற்றாண்டுத் துவக்கம்.

மறுகாலனிய திணை மயக்கம் - துரை.சண்முகம்

கவிதையில் சில பகுதிகள்:

""பிரிவுத்துயராற்றாப் பிள்ளையின்

பருவத் துயர் போக்க

வாசலில் ஹீரோ ஹோண்டா.

வரைவு கடந்த தலைவியின் வாட்டம் போக்க

பசலை தீர்க்கும் சாம்சங் டி.வி.

அலர் தூற்றும் அண்டை, அயலாருக்கு

கலர் காட்டும் செல்பேசி.

வளப்பமுடன் இல்வாழ்வு காட்டுபவன்

பழக்கமெனும் உரிமையில்

ஓட்டடா வண்டி என்றேன்.

ஹி... ஹி... எரிபொருள் இல்லை என்றான்.

காட்டடா செல்போன் என்றேன்.

கார்டு போடவில்லை என்றான்.""

.. . . . . .. . . .. . . . .

.. . . . . . .. . . . . .. . .

.. . . . . .. . . . . .

""இன்னொருவன் நிலைகண்டு

அருவெறுக்கும் மலவண்டு.

அவனும் இவனும் உடன்போக்கு ஊட்ட

தவணை முறையில் தள்ளிக்கொண்டு வந்தான்

ஒரு வாகனத்தை. மூன்றாவது தவணைக்கு மேல்

முடியாததால் கள்ளச்சாவிபோட்டு கடைக்காரன்

வண்டியைத் தள்ளிப் போவான் என்றஞ்சி

தன் வீட்டில் வைக்காது தான் வங்கிய பஜாஜ் பல்சரை

தள்ளி நாலாவது வீட்டில் வைத்து

தினமும் மூடி வைக்கிறான் கேவலத்தை.

பல்சான்றீரே! பல்சர் வண்டியிரே!

பகர்வது கேள்மின்!

எச்சில் ஊறும் நுகர்வு வெறி, எச்சரிக்கை!

எல்லாத்திசையிலும் கள்ளச்சாவிகள்.""

மற்ற கட்டுரைகள் …

TPL_INFINITY_MORE_ARTICLE