Language Selection

புதிய கலாச்சாரம்

PK_2008_01 .jpg

""உள்ளே ஒரு மிருகம் காத்திருக்கிறது; தூண்டி விட்டால் அது வெறியோடு கிளம்பும்'', என்பது ஒரு சௌகரியமான பொய். மிருகத்தன்மை மாறி பரிணாம வளர்ச்சியடைவதுதான் மனிதத்தன்மை. பரிணாமம் பின்னோக்கிப் போகாது. குஜராத்தில் நடந்த வெறியாட்டம், தற்செயலாக தட்டி எழுப்பப்பட்ட மிருககுணம் அல்ல. அது இயல்பாக மனிதனிடம் உள்ள குணநலன்களை மழுங்கடித்து, பல காலமாக அவனது மூளையில் பதிய வைக்கப்பட்ட பேதவெறி; தன்னை விடத் தாழ்ந்தவனின் தலை சற்றே கூட நிமிரக்கூடாது எனும் ஆதிக்க வெறி; யதேச்சையாய் வெடித்த கலவரமல்ல, அது ஒரு திட்டமிட்ட வேட்டை.

PK_2008_01 .jpgஅது ஒரு தகரப் பெட்டிக்கடை. வெளியில் நின்றுதான் பாதாம் பால் குடிக்க வேண்டும். முதல் நாளே அவளைக் கவனித்தேன். கடையை விடத் தள்ளி கொஞ்சம் உள்ளடங்கி இருக்கும் வெளிச்சம் குறைந்த பகுதியில் நின்றிருந்தாள். அந்த சூழ்நிலைக்கு கொஞ்சம்கூட பொருந்தாமல் தெரிந்தாள். நடுத்தர வயதிலும் பலமான மேக்கப். வழக்கு மொழியில் சொன்னால் செமகட்டை. நான் பார்ப்பது தெரிந்ததும் என்னைப் பார்த்து சிரித்தாள். எனது ஆறாவது அறிவுக்கு உடனடியாகப் புரிந்தது.

PK_2008_01 .jpg

"ஒரு சமயம் "காஞ்சி காமகோடி பீடாதிபதி சங்கராச்சாரியார்' திருவாரூர் "விஜயம்' செய்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அவரை எதிர்ப்பது என்று எங்கள் கட்சியின் (திராவிடர் கழகம்) பெரியவர்கள் திரு. சிங்கராயர், "தண்டவாளம்' ரங்கராஜு ஆகியோர் முடிவு செய்து விட்டார்கள்... ஒட்டகம், யானை, பதாகை ஏந்திய சில வீரர்கள், இந்த வரிசைகளுக்குப் பிறகு ஒரு பல்லக்கில் சங்கராச்சாரியார் பவனி வருவது வாடிக்கை! அதே போல பவனி வந்து கொண்டிருக்கிறார். திடீரென ஒரு குரல், ""மானங்கெட்ட பசங்களா! இந்த ஆசாமியைத் தூக்க நீங்கதான் கிடைச்சிங்களா? ஏன்! பாப்பான்க தூக்கினாலென்ன?'' என்று கேட்டது....

PK_2008_01 .jpg

சமீபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த சேலம் வேலு காந்தி எனும் 82 வயது முதியவர் உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொதுநல மனுவைத் தாக்கல் செய்தார். அம்மனுவில், சாதி நம்பிக்கையற்றோர், "கலப்பு'த் திருமணம் செய்து கொண்டவர்கள், அனாதைக் குழந்தைகள், மதம் மாறியோர் ஆகிய நான்கு வகையினரைக் கொண்டு, "காந்தி சாதி' என்ற ஒரு புதிய சாதியை உருவாக்க உத்தரவு தருமாறு நீதிமன்றத்திடம் வேண்டுகோள் விடுத்தார். இதன் மூலம் சாதிகள் ஒழிய வழிபிறக்கும் என வாதிட்டார்.

PK_2008_01 .jpg

"வேலை காலி இல்லை என்ற பலகை தொங்கியது அந்தக் காலம். இன்று எங்கு திரும்பினாலும் வேலை இருக்கிறது. இது "தனியார்மயம் தாராளமயம் உலகமயம்' என்ற கொள்கைக்குக் கிடைத்த வெற்றி'' என்கிறார்கள் ஆட்சியாளர்கள். இந்தியத் தரகு முதலாளிகளோ, "மனித வளம் அதுதான் நம்முடைய பலம்' என்று மக்களை நாக்கில் நீர் சொட்டப் பார்க்கிறார்கள். ""மக்கள்தொகைப் பெருக்கம்தான் நாடு முன்னேறாததற்குக் காரணம்'' என்று அரசாங்கமும் முன்புபோல மக்களை இப்போது கரித்துக் கொட்டுவதில்லை. மொத்தத்தில், மக்களுக்கு இப்போது மதிப்பு கூடிவிட்டது.

PK_2008_01 .jpg

"இந்த முகமூடி எனக்கும் மக்களுக்கும் இடையே வலிமையான பிணைப்பை ஏற்படுத்தியது. நான் தாக்கப்பட்ட போதெல்லாம், என் வலியை மக்கள் உணர்ந்தார்கள்.''

(மோடியின் பேட்டி, டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ், டிசம்பர்25)

 

"அண்ணனே, தளபதியே, அம்மா, அய்யா' என்று, தலைவனாகிய ஆண்டவனைத் தொண்டர்கள்

PK_2008_01 .jpg

அமெரிக்காவில் பணிபுரியும் இரு இந்தியப் பெண்கள், புத்தாண்டைக் கொண்டாடுவதற்காக, பல்லாயிரம் ரூபாய்களைச் செலவழித்து மும்பைக்கு வந்து ஓட்டலில் தங்குகிறார்கள். அருகிலிருக்கும் ஜூகு கடற்கறைக்கு தங்கள் கணவர்களுடன் இரவு சென்றபோது, அங்கு ஏற்கனவே மற்றுமொரு நட்சத்திர விடுதியில் நடிகை பிபாஷா பாசுவின் ஆபாச நடனத்துடனும், போதையுடனும் புத்தாண்டைச் சந்தித்துக் கொண்டிருந்த 80 பேர் கொண்ட இளைஞர் கும்பல் இந்தப் பெண்கள் மீது பாய்ந்து, உள்ளாடைகளைக் கிழித்து, சொல்லக் கூசும் பாலியல் வன்முறைகளையும் அரங்கேற்றியது.

நவம்பர் புரட்சி நாளை நெஞ்சில் ஏந்துவோம்!
புதிய ஜனநாயகப் புரட்சிக் கனலை மூட்டுவோம்!!

1917 நவ 7.

"உழைக்கும் மக்களால் வாழவே முடியாது,
இதில் ஒரு நாட்டை ஆளமுடியுமா?"என்று இறுமாப்புடன்
ஏளனம் பேசியது முதலாளித்துவம்.

oct_2007_pk.jpg

டெல்லி இந்தியாவின் தலைநகரம் மட்டுமல்ல, ஏகாதிபத்திய உலகமயமாதலின் கீழ் அழகுபடுத்தப்படும் உலகப் பெருநகரம். உலகமய விளம்பரதாரர்கள் ""உலகமயம் என்பது உலக யதார்த்தம், அது வந்தே தீரும். நமது சொந்த விருப்பத்தினால் வருவதும் போவதும் அல்ல'', என்று சொல்கிறார்கள். அதாவது அந்த எடுபிடிகளின் டெல்லி மாநகரத்தில், ஒரு பொது விடுதியில் லெபனான் சமையல் மணக்கிறது; ஃபிலிப்பைன்ஸ் நாட்டு நவீன இசை கதறுகிறது; உள்ளே ஐரீஷ் நாட்டுப் பீப்பாய்களிலிருந்து சாராய மழை பொழிகிறது;

"பதில் கிடைக்காத கேள்விகள் பல எனக்குள் வாழ்கின்றன தேவதூஷணமாகிவிடும் என்பதால் அவற்றை வெளியிட அஞ்சுகிறேன் ஒருவேளை கடவுள் இருந்தால் என்னை மன்னித்துக் கொள்ளுங்கள் என் சிந்னைகளை சொர்க்கத்தை நோக்கி எழுப்ப முயல்கிறேன் அங்கோ தண்டிக்கும் வெறுமை அந்தச் சிந்தனைகள் கூரிய கத்திகளாய்த் திரும்ப வந்து என் இதயத்தைக் கிழிக்கின்றன தேவன் என்னை நேசிப்பதாகச் சொல்கிறார்கள் இருப்பினும் எதார்த்தத்தில் இருளும் உணர்ச்சியின்மையும் வெறுமையும் என்னுள் நிறைந்து மேலோங்கியிருப்பதால்

oct_2007_pk.jpgகடந்த ஜூன் மாதம் 20ம் தேதியன்று, பெரம்பலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள தத்தனூர் வளவெட்டிக்குப்பம் தெற்குத் தெருவைச் சேர்ந்த பன்னீர் செல்வம் எனும் காய்கறி வியாபாரி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். பன்6னீர் செல்வத்தின் கதை, பத்மாவின் கதை போல புலனாய்வுத் தொடருக்கான சுவாரஸ்யங்கள் நிறைந்த "சமூகப் பிரச்சினையல்ல.'

மற்ற கட்டுரைகள் …

TPL_INFINITY_MORE_ARTICLE