Language Selection

புதிய கலாச்சாரம்

 ஜேப்பியாரா? ஆகா உலக உத்தமர் என்று சொல்ல அவர் வீட்டிலேயே ஆள் கிடையாது. உலகறிந்த சாராய ரவுடி, முன்னாள் போலீசு ஏட்டு, முன்னாள் எம்.ஜி.ஆர். அடியாள், இன்னாள் சுயநிதிப் பொறியியல் கல்லூரி தாளாளர் சங்கத்தின் நுனியாள் (தலைவர்) என்று ஏகப்பட்ட முன்னாள், இந்நாள் பேர்வழி. சத்யபாமா, ஜேப்பியார், செயிண்ட் மேரிஸ், செயிண்ட் ஜோசப், குகீகீ, மாமல்லன் போன்ற பொறியியல் கல்லூரிகள், ஜேப்பியார் ஸ்கூல், ஜேப்பியார் பால், ஜேப்பியார் சிமெண்ட், ஜேப்பியார் கான்கிரீட், ஜேப்பியார் ஸ்ட்ராங்க் ஸ்டீல், ஜேப்பியார் ஸ்வீட், ஜேப்பியார் குடிநீர், ஜேப்பியார் டிராவல்ஸ், மாட்டுப்பண்ணை, கல்யாண மண்டபம், முட்டத்தில் உருவாகும் மீன்பிடித் துறைமுகம் இப்படி பலான, பலான நிறுவனங்கள்.

 வரலாறு காணாத அளவில் உணவு முதலான அத்தியாவசியப் பொருட்களின் விலை கிடுகிடுவென உயர்ந்து கொண்டிருக்கிறது. கேமரூன், எகிப்து,  இந்தோனேசியா, செனகல், ஹைதி உள்ளிட்ட பல நாடுகளில் உணவுக் கலகங்கள் வெடிக்கின்றன. உணவுப் பொருட்களை விலை கொடுத்து வாங்க முடியாமல், தங்களது பிள்ளைகளுக்குச் சோறிட வழியில்லாமல் மக்கள் பரிதவிக்கிறார்கள். ஹைதி நாட்டில், மக்கள் களிமண்ணால் ரொட்டிகள் செய்து தின்று பசியாறுகிறார்கள். இந்தியாவில் பணவீக்கம் இரண்டு இலக்கங்களை தொட்டிருக்கிறது. உலக வங்கியின் தலைவர் ராபர்ட் ஜோலிக், மேலும் 33 நாடுகளில் கலகங்களும் கொந்தளிப்புகளும் வெடிக்கும் எனக் கவலை தெரிவிக்கிறார்.

 மெட்ராஸ் ராஜகோபாலன் ராதாகிருஷ்ணன் எனப்படும் எம். ஆர். ராதா பிறந்து நூறு ஆண்டுகள் கடந்து விட்டன. தன்னுடைய ராமாயணம் நாடகத்திற்கு ஆட்சியாளர்கள் தடைவிதித்த போது, ""குடிகாரன் கடவுளாக ஆக்கப்பட்டிருக்கிறான் என்றால் மதுவிலக்கு அமலில் இருக்கும் பிரதேசத்தில் அதை அனுமதிக்க முடியாது'' என வாதிட்டு வால்மீகி ராமாயணத்தையும், ராமனையும் நீதிமன்றத்தில் நிறுத்தியவர் ராதா.

 ""சபரி மலையின் மகரஜோதி என்பது தானே எரிவது அல்ல, அது கோயில் ஊழியர்களால் கொளுத்தப்படுவதுதான்'' என்று ஐயப்பன் கோயில் தலைமைப் பூசாரியின் குடும்பத்தைச் சேர்ந்த ராமன் நாயர் சமீபத்தில் ஒரு பேட்டியில் தெரிவித்தார். இதனை ஒட்டி பதில் சொல்லியாக வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்பட்டார் கோயிலின் தலைமைத் தந்திரி கண்டரரு மகேஸ்வரரு. அவர் சார்பில் அறிக்கை வெளியிட்ட அவரது பேரனும் கோயில் தந்திரியுமான ராகுல் ஈஸ்வர், ""வனத்துறை அதிகாரிகளும், தேவசுவம் போர்டு (அறநிலையத்துறை) அதிகாரிகளும், போலீசும் கூட்டாகச் சேர்ந்து கொளுத்தும் தீப்பந்தம்தான் மகரவிளக்கு'' என்ற உண்மையை ஒப்புக் கொண்டிருக்கிறார்.

PK_2008_3 copie.jpg

கட்அவுட் ஆடம்பர விளம்பரங்களை
கைவிட வேண்டும்!
கையில் தீச்சட்டி ஏந்தி
தீ மிதிக்கும் மூடத்தனம் ஒழிய வேண்டும்!
— இது கருணாநிதியின் ஊருக்கு உபதேசங்கள்.

 

""பெருசு அப்படித்தான் வயசான காலத்துல
பேசிவிட்டு திரியும்.
நீ பெருசு பெருசா வைடா என் கட் அவுட்டை,

எடுடா கரகத்தை,
குத்துடா அலகு காவடியை,
வெட்டுடா பிறந்தநாள் கேக்கை
— இது மு.க. அழகிரியின் மதுரைக் கொண்டாட்டங்கள்.

 

PK_2008_3 copie.jpg

சம்பவம் 1. தெற்கு தில்லி, அரியானா எல்லையில் இருக்கும் குர்கான் நகரம். அங்கு யூரோ சர்வதேசப் பள்ளியில் அவினாஷ், வினய் இருவரும் எட்டாம் வகுப்பு படிக்கிறார்கள். அதே வகுப்பில் படிக்கும் அபிஷேக் தியாகியுடன் தகராறு வருகிறது. அவினாஷின் அப்பா ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர். வீட்டில் துப்பாக்கி வைத்திருக்கிறார். தொலைக்காட்சிப் பெட்டி அருகில் தயார் நிலையிலிருந்த துப்பாக்கியை எடுத்துக் கொண்டு, அவினாஷ், வினய் இருவரும் அபிஷேக்கைச் சுட்டுக் கொல்கிறார்கள்.

PK_2008_3 copie.jpgசீனப் புரட்சியின் முக்கியமான கால கட்டத்தில், தங்களது தலைவிதியை தேசத்தின் தலைவிதியோடு இணைத்துக் கொண்டு போராடிய சீன இளைஞர்களின் கதை இது. 1931 முதல் 35 வரையிலான கொந்தளிப்பான இச்சூழலில்தான் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி, வலது மற்றும் இடது திசை விலகல்களுக்கெதிராக தன்னைப் புனரமைக்க பெருமுயற்சி செய்து வந்தது. இந்தப் பிண்ணனியில், வர்க்கப் போராட்டம் எனும் உலைக்களத்தில் புடம் போடப்படுவதற்கு முன்வந்த சீன இளைஞர்களின் வரலாற்றுச் சித்திரமே இந்நாவல்.

PK_2008_3 copie.jpgகாலகாலமாய் கன்னித்தீவைத் தேடும் சிந்துபாத் கதை, நாம் அறிந்தது. ஏறத்தாழ ஆறாண்டுகளுக்கு முன்பு, செப் 11, 2001–க்கு பிறகு தொடங்கிய ஒசாமா வேட்டை, சிந்துபாத் கதைக்கு சற்றும் குறைந்ததல்ல. ""அதெப்படி, எந்நேரமும் ரோந்து செல்லும் எண்ணிலடங்கா ஆளில்லா விமானங்கள், அலசி ஆராயும் உளவு செயற்கைக்கோள்கள், அதி நவீனப் பயிற்சி பெற்ற கமாண்டோப் படைகள், மில்லியன் கணக்கிலான பரிசுத் தொகை... இத்தனை இருந்தும், மத்திய காலத்து மனப்போக்கு கொண்ட, உடல் நலிந்துள்ளதாகக் கூறப்படும்

PK_2008_3 copie.jpgமார்ச் 8 பெண்கள் தினம். சமூக அமைப்பினாலும், குடும்ப நிறுவனத்தாலும் அடிமைப்படுத்தப்பட்ட பெண்கள், தமது விடுதலைக்கான புரிதலையும், புத்தார்வத்தையும் புதுப்பிக்க வேண்டிய நாள். உழைக்கும் வர்க்கம் மற்றும் நடுத்தர வர்க்கத்தைச் சார்ந்த பெண்கள், வீட்டுச் சிறையிலிருந்து விடுபட்டு, பெருந்திரளாக வேலைக்குச் சென்று கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில் கூட, அவர்களது சமூக நிலையில் பெருமளவு மாற்றம் ஒன்றும் ஏற்பட்டு விடவில்லை. உலகமயத்தின் நுகர்வுக் கலாச்சாரத்தால் அழகுப் பதுமைகளாக ஆக்கப்பட்டுள்ள பெண்கள், வீட்டிலோ சாதிய, மத, ஆணாதிக்க, நிலவுடைமை போன்ற பிற்போக்குகளின் கீழ் அடைபட்டுள்ளனர்.

PK_2008_3 copie.jpg

மார்ச் 2ஆம் நாளன்று காலை தில்லைச் சிற்றம்பல மேடையில் தமிழ் ஒலித்தது. கண்கள் மங்கி, கால்கள் தள்ளாடி, நடக்கும் ஆற்றலைக் கூட இழந்து விட்ட முதியவரான சிவனடியார் ஆறுமுகசாமி, சிற்றம்பல மேடையில் நின்று தேவாரம் பாடினார். ""தில்லை வாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன்'' என்று பார்ப்பன அடிமைத் தொழில் செய்வதற்கு அந்த சிவபெருமானே அடியெடுத்துக் கொடுத்ததாகக் கூறப்படும் சிற்றம்பல மேடையில் நின்றபடி தேவாரத்தின் எந்த வரிகளை அறுமுகசாமி பாடினார் என்று யாருக்கும் கேட்கவில்லை.

PK_2008_3 copie.jpg

தமிழ் மக்களுக்கு சினிமா இழைத்திருக்கும் அநீதிகள் பல. அரசியல் துவங்கி ஆனந்த விகடன் வரையிலும், அதன் அநீதியான செல்வாக்கு அதிகம். தேர்தல் காலங்களில் கூட்டம் சேர்ப்பதற்கும், விஜயகாந்த், சரத்குமார் போன்ற பிழைப்புவாத ஹீரோக்கள் கட்சி ஆரம்பிப்பதற்கும், புரட்சித் தலைவி தலைவர் போன்ற பாசிஸ்ட்டுகள் உருவானதற்கும், குடியரசு நாளில் கூட குத்தாட்ட நடிகை ஜனநாயகம் பற்றி போதிப்பதற்கும், மக்களின் எல்லா நேரத்தையும் கைப்பற்றியதற்கும், மொத்தத்தில் தமிழ் வாழ்க்கையின் தரத்தை வெகுவாக தாழ்த்தியிருக்கும் சினிமா, ஒரு கரையான் புற்று.

மற்ற கட்டுரைகள் …

TPL_INFINITY_MORE_ARTICLE