Language Selection

புதிய கலாச்சாரம்

கொமரய்யாவின் கொலைக்குப் பின்னர், தெலுங்கானா மக்கள் ஒரு மாபெரும் போராட்டத்தில் கிளர்ந்தெழுந்தனர். ஒவ்வொரு கிராமத்திலும் கூட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் நிகழ்ந்தன. ஒரு கிராமத்து மக்கள் மற்றொரு கிராமத்திற்கு ஊர்வலமாகச் செல்வர்; கிராம சங்கத்தை அங்கு அமைப்பர். பின் ஊர்வலம், அடுத்த கிராமத்திற்குத் தொடரும். ஒரு கிராமத்திலிருந்து மற்றொரு கிராமத்திற்கு, மக்களின் வெற்றிகரமான பீடு நடையாகும் அது.

இதுநாள் வரை பொதுவுடைமைக் கட்சியும் ஆந்திர மகாசபையும் கொத்தடிமை, சட்ட விரோத வரிகள், நிலத்தைவிட்டு பலாத்காரமாக விவசாயிகளை வெளியேற்றுவது மற்றும் கட்டாயமாக லெவி தானியங்களை வசூலிப்பது ஆகியவற்றிற்கு எதிராகக் கிளர்ச்சி செய்து மக்களை திரட்டி வந்தன. இப்பிரச்சினைகளின் பேரில் பல போராட்டங்கள் பல கிராமங்களில் நடத்தப்பட்டன.
1946ல் மிகவும் கொடூரமான மிராசுதாரர்களான விஷ்ணூ<ர் ராமச்சந்திரரெட்டி, புஷ்கூர் ராகவராவ், கட்டாரி ராமச்சந்திர ராவ் போன்றவர்களுக்கு எதிராக ஒரு பெரும் கிளர்ச்சி ஜனகோன் தாலுகா மக்களால் நடத்தப்பட்டது. கொத்தடிமை மற்றும் இம் மிராசுதாரர்களின் கொடூரச் செயல்களை எதிர்த்த ஜனகோன் மக்களின் போராட்டம், தெலுங்கானா பகுதி முழுவதிலும் மக்கள் இயக்கத்திற்கு ஒரு மாபெரும் உந்து விசையாகத் திகழ்ந்தது.

போங்கீர் மாநாட்டிற்குப் பின்னர் பல கிராமங்களில், "சங்கம்'' என்ற பெயரில் ஆந்திர மகாசபையின் கிளைகள் அமைக்கப்பட்டன. கொத்தடிமை, சட்ட விரோத வரிகள், கட்டாய வரி வசூலிப்பு மற்றும் விவசாயிகளை நிலத்தை விட்டுப் பலாத்காரமாக வெளியேற்றுவது ஆகியவற்றுக்கு எதிராக மாநிலம் முழுவதும் ஒரு பெரும் கிளர்ச்சி தொடங்கப்பட்டது.

1939-1940 காலப் பகுதியில், இந்நிலைமைகளின்போது முதலில் மார்க்சியக் குழுக்கள் நிஜாம் மாநிலத்தில் தோன்றின. தேசிய இயக்கத்தால் கவர்ந்திழுக்கப்பட்ட இளைஞர்கள்தான், மார்க்சியத் தத்துவத்தினாலும் கவர்ந்திழுக்கப்பட்டனர். அங்கும் இங்குமாக மார்க்சியக் குழுக்கள் அமைக்கப்பட்டன. இளைஞர்களிடையே விஞ்ஞான சோசலிசக் கருத்துகள் பரவத் தொடங்கின. ஏழை மற்றும் சுரண்டப்படும் மக்களை, வர்க்கப் போராட்டங்களுக்காக அமைப்பாகத் திரட்டும் கருத்துகள் பரவ ஆரம்பித்தன. மாநிலத்தில் விரைவிலேயே பொதுவுடைமைக் கட்சி தொடங்கப்பட்டது.

இவ்வியக்கங்களின் முன்னேற்றத்தின் பயனாக ஹைதராபாத் மாணவர்கள் "வந்தே மாதரம்'' பாடலைப் பாடும் உரிமைக்காக வேலை நிறுத்தம் செய்தனர். கல்லூரி விடுதி அதிகாரிகளால் தடை செய்யப்பட்டிருந்தும் விடுதி மாணவர்கள் "வந்தே மாதரம்'' தேசியப் பாடலைப் பாடத் தொடங்கினர். விடுதியிலிருந்து மாணவர்கள் வெளியேற்றப்பட்டனர். மாணவர்கள் வேலை நிறுத்தத்திற்கான அறைகூவல் விடுத்தனர். வேலை நிறுத்தம் ஹைதராபாத் நகரக் கல்லூரிகளுக்கு மட்டுமின்றி, வெளியேயுள்ள இதர கல்லூரிகளுக்கும் பரவியது. இவ்வேலை நிறுத்தத்தில் சுமார் 600 மாணவர்கள் கல்லூரியிலிருந்து விலக்கப்பட்டனர்.

நிலப்பிரபுத்துவ நிஜாம் மாநிலம் ஓர் இருண்ட பிரதேசமாக விளங்கியது. மிகப் பெரும்பான்மையான மக்கள் நாகரீக வாழ்வின் அறிகுறி கூட இல்லாவண்ணம் வைக்கப்பட்டிருந்தனர். பல்வேறு மிராசுதாரர்கள், பட்டேல்கள், பட்வாரிகள் ஆகியோருக்கும், கிராமங்களுக்கு வழக்கமாக வரும் இதர அதிகாரிகள் ஆகியோருக்கும், கிராம ஏழை மக்களும் சுரண்டப்படுவோரும் கொத்தடிமை முறையின் கீழ் பல்வேறுபட்ட உழைப்பினைச் செய்ய வேண்டியிருந்தது.

நிஜாம் மாநிலம், 16 மாவட்டங்களைக் கொண்டிருந்தது.மூன்று மொழி பேசப்படும் பிரதேசங்கள் இருந்தன. அதாவது 8 தெலுங்கானா மாவட்டங்களும், 5 மராட்டிய மாவட்டங்களும், 3 கன்னட மாவட்டங்களும் இருந்தன. ஒன்றரை கோடி மக்கள்தொகை கொண்ட அவ்வரசில் தெலுங்கானா மக்களின் தொகை 1 கோடியாக இருந்தது.

(19461951) இலட்சக்கணக்கான மக்கள் பங்கேற்ற ஒரு மகத்தான மக்கள் போராட்டமாகும். அது நிஜாம் மாநிலத்தின் நிலப்பிரபுத்துவ நவாப்பிற்கு எதிரானதும், அதிகார வர்க்க நிலப்பிரபுத்துவ மிராசுதாரர்களின் கொடுமையான சுரண்டலுக்கு எதிரானதும், மற்றும் நிஜாம் மாநிலத்தில் நிலப்பிரபுத்துவ அமைப்பைப் பாதுகாக்க நுழைந்த நேரு அரசின் இராணுவத்துக்கு எதிரானதுமான ஆயுதந் தாங்கிய விவசாயிகளின் ஒரு மாபெரும் விவசாயப் புரட்சியாகும். நிலத்திற்காகவும், உணவுக்காகவும், தங்களின் விடுதலைக்காகவும் தெலுங்கானா மக்களால் நடத்தப்பட்ட ஆயுதந்தாங்கிய ஒரு மகத்தான விவசாயப் புரட்சியாக அது விளங்குகிறது.

பேராசிரியர் சுப. வீரபாண்டியன் அவர்களின் "பகத்சிங்கும் இந்திய அரசியலும்'' (வெளியீடு: கனிமுத்து பதிப்பகம், 727, அண்ணாசாலை, சென்னை 600 006) என்ற நூலிலிருந்து தொகுக்கப்பட்டுள்ள சில ஆதாரங்கள்:


ஆ "மகாராணியின் அனுகூலமான என்றும் மறப்பரிய, கீர்த்திமிக்க ஆட்சியில் ஐம்பது வருடம் முடிவு பெற்றதைக் குறித்துச் சக்கரவர்த்தினியிடம் கடமைப்படி உண்மையான மகிழ்ச்சிகள் தெரிவிப்பதுடன், பாரத தேசத்தின் எல்லாப் பகுதிகளினின்றும் பிரதிநிதிகள் வந்து கூடிய இந்த ஜனசபை பிரிட்டிஷ் ராஜ்ஜியத்தின் மீது அம்மகராணி இன்னும் பல வருஷம் ஆள வேண்டுமென்று வாழ்த்துகிறது'' (1886 ஆம் ஆண்டு கல்கத்தாவில் நடைபெற்ற இரண்டாவது காங்கிரசு மாநாட்டின் முதல் தீர்மானம்.)

"வெள்ளையனே வெளியேறு!' என ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு எதிராக முழக்கமிட்டு "செய் அல்லது செத்துமடி' என தீரமிக்க ஒரு போராட்டத்தை இந்தியாவின் சுதந்திரத்திற்காக காந்தி நடத்தினாராம்! கதை விட்டு வருகின்றனர், காங்கிரசுக்காரர்கள். காந்தி விடுத்த அறைகூவலின்படி போராட்டத்தில் ஈடுபட்ட "ஆகஸ்டு தியாகிகள்' என்று தம்மைத்தாமே பீற்றிக் கொள்கின்றனர். அதற்கு இப்போது பொன்விழா கொண்டாடுகிறார்களாம் தமிழக காங்கிரசுக்காரர்கள்.

கதர் குல்லாய் அணிந்த கனதனவான்களின் கட்சியாக இருந்த காங்கிரசு இன்று கள்ளச்சாராய, கடத்தல், பேட்டை ரௌடிகளின் கூடாரமாக, அடியாட் கும்பலும் குண்டர் படையும் கொண்ட ச­மூக விரோதக் கட்சியாக மாறிவிட்டது. இன்றைய பெரும்பாலான காங்கிரசு சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் கள்ளச் சாராயம், கள்ளக் கடத்தல், உளவுச்சதி, கொலை, கொள்ளை, கற்பழிப்புச் சம்பவங்களில் ஈடுபட்டதாகக் குற்றப்பதிவேடுகளில் பதிவாகியுள்ளன.

மற்ற கட்டுரைகள் …

TPL_INFINITY_MORE_ARTICLE