Language Selection

புதிய கலாச்சாரம்

அறிவு, நாணயம், வாய்மை, நேர்மை ஆகிய புரட்சியாளருக்கு இருக்க வேண்டிய அடிப்படைப் பண்புகள் இந்தியக் கம்யூனிஸ்ட் (மாவோயிஸ்ட்) கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழுவிடம் கிடையாது என்பதை இதன் மூலம் நிரூபித்து விட்டார்கள். இந்த உண்மையை அவர்களின் "பெரிய குளத்தில் தெறித்த சிறுபொறி! அரசின் அலறலும் புதிய ஜனநாயகத்தின் புலம்பலும்!'' என்ற வெளியீடும் "ஆயுதப் போராட்ட அரசியலும் நடைமுறையும்'' என்ற போராளி வெளியீடும் காட்டிக் கொடுத்துள்ளன.

உண்மையில் அரசின் / போலீசின் அடக்குமுறைகள், அவதூறுப் பிரச்சாரங்களுக்கு ஒத்திசைவாக இருப்பது மாவோயிஸ்டுகளின் செயலுத்திகளும் நடைமுறையும்தானே தவிர, புதிய ஜனநாயகம் அமைப்பின் விமர்சனங்கள் அல்ல என்பது காரண காரியங்களைப் பகுத்தறிவு கொண்டு சற்று சிந்திக்கத் தெரிந்த அனைவரும் ஒப்புக் கொள்வர்.

பெரியகுளம் முருகமலை சம்பவத்தை ஒட்டி, புதிய ஜனநாயகம் எழுதியிருந்த கட்டுரைக்கு, "பெரிய குளத்தில் தெறித்த சிறு பொறி! அரசின் அலறலும் புதிய ஜனநாயகத்தின் புலம்பலும்'' என்ற பெயரில் அறிவொளி என்பவர் எழுதி, "மனிதன் பதிப்பகம்'' ஒரு வெளியீடும், "ஆயுதப் போராட்ட அரசியலும், நடைமுறையும் அச்சுறுத்துவது அரசை மட்டுமல்ல, மா.அ.க.வையும் தான்...'' என்ற பெயரில், இ.க.க. (மாவோயிஸ்ட்)வின் "போராளி வெளியீடு'' ஒன்றும் கொண்டு வந்திருக்கிறார்கள்.

"புரட்சிப் பாதையில் முன்னேறும் போது சில நேரங்களில் பின்னடைவுகள், தியாகங்கள் தவிர்க்க முடியாதவை! புரட்சியாளர்கள் ஒப்பாரி வைத்துக் கொண்டிருக்க மாட்டார்கள்; பாடங்களைப் பயின்று ஒவ்வொரு தோல்வியையும் வெற்றியாக மாற்றுவார்கள். இது புத்தகப் புழுக்களுக்கு புரியாது!''

அன்பார்ந்த உழைக்கும் மக்களே!
 தில்லை நடராசன் கோயிலின் திருச்சிற்றம்பல மேடையில் மார்ச் 2ஆம் நாள் காலையில் தமிழ் ஒலித்தது. "சிற்றம்பல மேடையில் நின்று தமிழ் பாடக்கூடாது, தமிழன் பாடக்கூடாது' என்று தீட்சிதப் பார்ப்பனர்கள் அந்தக் கோயிலில் நிலைநாட்டி வந்த மொழித் தீண்டாமை வீழ்ந்தது.

அன்பார்ந்த  உழைக்கும்  மக்களே,
 உலகின் மிக உயர்ந்த சிகரமான எவரெஸ்டின் கீழே, இமயத்தின் அடிவாரத்தில் ஒரு மாபெரும் மக்கள் புரட்சி நடந்து கொண்டிருக்கிறது. மன்னராட்சியால் பாதுகாக்கப்படும் நிலப்பிரபுத்துவக் கொடுங்கோன்மையும், ஏகாதிபத்தியச் சுரண்டலும் ஒழிந்து ஒரு மக்கள் குடியரசு மலரப் போகும் நாளுக்காகக் காத்திருக்கிறது நேபாளம்.

இந்து மதம், அது இப்போது இல்லாத இடமே இல்லை. இராமகோபாலன் அய்யாவுடைய கோமணத்திற்கு கீழேயும் அதுதான் இருக்கிறது. சங்கராச்சாரிக்கு சொறி பிடிக்கின்ற இடுப்பிலேயும் அதுதான் இருக்கிறது. அது போதாதுனு இப்ப புதுசு புதுசா கிளம்பிட்டாங்க. உங்க வாழ்க்கையில என்ன கஷ்டம்னாலும் எங்கிட்ட சொல்லு. லெட்டர் போடு. ஜோசியப்படி கணிச்சு உன் வாசப்படியில கொண்டுவந்து சொருவுரேங்குறான். இதுக்கு இணைப்பு, பிணைப்பு, வெங்காயம், வெள்ளப்பூண்டு, வாஸ்துசாஸ்திரம் என்கிறான். எந்த நாட்டில் வாஸ்துசாஸ்திரம்? தமிழ்நாட்டில், மாராத்தியில், குஜராத்தில், வாழ்வதற்கே வசதியில்லாமல், வீடு இல்லாமல் பிளாட்பாரத்தில படுத்துட்டிருக்கிற ஜனங்ககிட்ட வாஸ்து மசுரு என்னத்துக்குன்னு கேட்போமா? கேட்கமாட்டோமா?

வசந்தத்தின் இடிமுழக்கமாக எதிரொலித்த நக்சல்பாரி உழவர் பேöரழுச்சி, வர்க்க உணர்வுள்ள தெலுங்கானா மக்களுக்கு மீண்டும் ஒரு உந்துதலைக் கொடுத்தது. விவசாயிகளின், ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கு வழிகாட்டியாக விளங்கிய நக்சல்பாரி புரட்சிப் பாதையில் நிலத்திற்கும் அரசியல் அதிகாரத்துக்குமான பேரெழுச்சியாக தெலுங்கானா பகுதிகளில் மீண்டும் இயக்கம் பரவியது. தெலுங்கானா போராட்டத்தை போலி கம்யூனிஸ்டுகள் எவ்வளவுதான் திரித்துப் புரட்டினாலும், அவர்களின் முகத்தில் கரியைப் பூசிவிட்டு நக்சல்பாரி புரட்சியாளர்கள் தலைமையில்விவசாயிகள் அணிதிரண்டு புரட்சிப் பாøதயில் முன்னேறி வருகின்றனர்.

பழைய திரிபுவாதிகளின் துரோகத்தையும், தடைகளையும் தெலுங்கானா இயக்கம் மெதுவாக வெற்றி கண்டு சில இடங்களில் உயிருடன் இருந்தது. 1963க்குப் பின்பு விவசாயக் கூலிகளுக்காகவும், நிலக் குத்தகைக்காகவும் தானியப் பிரச்சனைகளுக்காகவும் போராட்டங்கள் புதிய கண்ணோட்டத்தில் நடத்தப்பட்டன. இயக்கம் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்தது. அப்பொழுதிலிருந்து காங்கிரசு அரசாங்கம் இயக்கத்தை மறுபடியும் இரத்தத்தில்மூழ்கடிக்க ஒரு குறிப்பிட்ட திட்டத்துடன் முயன்றது.

போராட்டத்தை முதுகில் குத்தி, அரசாங்கத்திடம் ஆயுதங்கள் திருப்பிக் கொடுக்கப்பட்டன. இந்தச் சரணடைதலுடன் தெலுங்கானா இயக்கத்தின் வெற்றிகள் யாவும் இழப்பதற்கு அடித்தளம் அமைக்கப்பட்டது.

இந்தக் கட்டத்திலேயே, ஏற்கனவே கட்சியில் திரிபுவாதத்தின் பக்கம் சார்ந்த ரவி நாராயணரெட்டி, அருட்ல ராமச்சந்திரரெட்டி போன்றவர்கள் பணக்கார விவசாயிகள் மற்றும், சிறிய நிலப்பிரபுக்களின் கோரிக்கைகளைத் தாம் எடுத்துக் கொண்டு இயக்கத்தை நிறுத்துமாறு கோரினர். நாம் இந்த வளர்ச்சியையும் ஏற்கனவே பார்த்தோம்.

மற்ற கட்டுரைகள் …

TPL_INFINITY_MORE_ARTICLE