Language Selection

புதிய கலாச்சாரம்

கடந்த ஜூன் 25ஆம் தேதியன்று பெரியகுளம் முருகன்மலைப் பகுதியில் மாவோயிஸ்டுக் கட்சியைச் சேர்ந்த 3 தோழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பழனிவேல், வேல்முருகன், முத்தமிழ்ச்செல்வன் என்ற இந்த 3 பேரிடமிருந்து துப்பாக்கிகள், கையெறி குண்டுகள் போன்ற ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டதாக போலீசு கூறுகிறது. மற்ற சிலர் தப்பிவிட்டதாகக் கூறி, சிலருடைய புகைப்படங்களை ஊடகங்களில் வெளியிட்டிருக்கிறது, போலீசு. ஜூலை 8ஆம் தேதியன்று இரவு சுந்தரமூர்த்தி, கார்த்திக், ஈஸ்வரன் ஆகியோர் திருப்பூரில் கைது செய்யப்பட்டு, போலீசு விசாரணைக்குப்பின் சிறை வைக்கப்பட்டிருக்கின்றனர்.

"பகுதியளவில் மக்களின் அரசியல் அதிகார அலகுகளை கட்டியமைத்து விடுதலை தளப் பிரதேசத்தை நிறுவுவதே புரட்சிக்கு தலைமைத் தாங்கும் கம்யூனிஸ்ட் கட்சியின் முதன்மையான மையக் கடமையாகும். அதற்காக மக்களை அணிதிரட்டி ஆயுதப் போராட்டத்தை நடத்தி, ஆளும் வர்க்கங்களையும் எதிரியின் ஆயுதப் படைகளையும் பகுதியளவில் வீழ்த்த வேண்டும். இதனை நிறைவேற்ற வேண்டுமெனில் மக்கள் அடித்தளம், ஆதரவு மட்டுமின்றி ஆயுதப் போராட்டத்தில் அவர்களின் நேரடியான பங்களிப்பும் அவசியம்.

மக்கள் திரள் அடித்தளத்தைப் பெறாமலேயே அதற்கான முயற்சிகள் ஏதுமின்றியே ஆயுதப் போராட்டத் தயாரிப்பு, ஆட்களையும் ஆயுதங்களையும் சேகரிப்பது, பயிற்சி எடுப்பது ஆகிய நடவடிக்கைகளில் ஈடுபடும் செயலுத்தியை மாவோயிஸ்டு கட்சியின் தலைமை பின்பற்றுவதாக கட்சியின் உள்ளேயும் வெளியேயும் திரும்பத் திரும்ப விமர்சனங்கள் வந்த பிறகு பின்வருமாறு எழுதுகிறார்கள்.

மாவோயிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலக் குழுவின் மீதும் அதன் மையத் தலைமை மீதும் புதிய ஜனநாயகம் அமைப்பு முன்வைக்கும் விமர்சனங்களைப் புரிந்து கொண்டு பொறுப்பான பதில் கூறாமல், அவற்றைத் திரித்துக் கூறி தவறான வியாக்கியானம் செய்து அறிவொளியும் போராளியும் பல விதண்டாவாதங்கள் புரிகின்றனர்.

"பெரியகுளத்தில் தெறித்த சிறுபொறி'' பிரசுரத்தை எழுதியவர் அறிவொளி அல்லவா! தனது அறிவொளியைக் கொண்டு பெரிய குளத்தில் மாவோயிஸ்ட் அமைப்பு மக்கள் ஆதரவைப் பெற்றிருந்ததாக சாணக்கியத்தனமாக (சாணக்கியன் மண் பொம்மைகள் செய்து உயிர் கொடுத்த மாதிரி) மாவோயிஸ்ட் ஆதரவாளர்களைப் படைத்திருக்கிறார்.

"வெளிப்படையான செயல்பாடுகளை அனுமதிக்காமல் புரட்சிகர அமைப்பின் மீதும், மக்களின் மீதும் கொடூரமான அடக்குமுறையை அரசு கட்டவிழ்த்துவிடும்போது, இதனை இரகசியமாக செய்ய வேண்டியுள்ளது. அதற்கான செயலுத்திகளையும், வழிமுறைகளையும் கடைப்பிடித்து மக்களை ஆயுதப் போராட்டத்திற்கு அணிதிரட்ட வேண்டியுள்ளது. இத்தகைய செயலுத்தியையும் தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் நடைமுறைப்படுத்திய சிறப்பான அனுபவம் மாவோயிஸ்ட் கட்சிக்கு இருக்கின்றது. சட்டவாத நடைமுறையைத்தவிர, அரசியல் பிரச்சாரத்தைத் தவிர வேறெதுவும் அறியாத, அனுபவமில்லாத மா.அ.க.வின் தலைமைக்கு இதையெல்லாம் புரிந்து கொள்வது அவர்களின் கற்பனைக்கும் எட்டாத விசயமாகும்.''

தமிழ்நாட்டில் எவ்வாறு மாவோயிஸ்டுகளின் ஆயுதப் போராட்ட முன்னெடுப்புகள் திரும்பத் திரும்பக் கருச்சிதைவடைகின்றனவோ, அதுதான் கர்நாடகாவிலும் நிகழ்ந்துள்ளது. அங்கு இ.க.க.(மாவோயிஸ்ட்)இலிருந்து வெளியேறி தனி அமைப்பை நிறுவிக் கொண்டுள்ள தோழர்கள் அந்த அனுபவத்தைப் பின்வருமாறு தொகுத்துள்ளனர்.

"1990க்குப் பிறகு எதிரியின் அடக்குமுறைக்கு எதிராக, புதிய செயலுத்தியாக இரகசிய மக்கள் திரள் அமைப்புகள், இரகசிய செயல்பாடுகள் மற்றும் சுய பாதுகாப்புக்காக ஆயுதமேந்திய குழுக்களுடன் இயக்கம் வளர்ச்சியடைந்து வந்தது.'' "1996 அக்டேõபர் பிளீனத் தீர்மானத்தின்படி மக்கள் திரள் அமைப்புக் கிளைகளின் எண்ணிக்கையைப் பெருக்கி,

"வடதெலுங்கானா இன்று கொரில்லா மண்டலத்தின் உயர்ந்த கட்டத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றது; தென் தெலுங்கானா, கிழக்கு மண்டலம் (ஆந்திரா, ஒரிசாவின் பகுதிகள்) இராயல சீமா தெற்கு கடற்கரை மண்டலம் (ஆந்திரா) ஆகியன கொரில்லா மண்டலத் தயாரிப்புக் கட்டத்தில் உள்ளன.'' (ஆதாரம்: போராளி, ஜனவரிஏப்ரல் 2000, பக்.21) என்று 2000வது ஆண்டில் எழுதினார். இப்போது கூட "புதிய ஜனநாயகம்'' ஏட்டிற்கு எதிராக வெளியிடப்பட்ட பிரசுரங்களில் ஆந்திராவில் மாவோயிஸ்டுகளின் மக்கள் யுத்தம் தொடர்ந்து சாதனைகள் புரிந்து வருவதாகவும், லட்சக்கணக்கான மக்கள் ஆதரவைப் பெற்றுள்ளதாகவும் பீற்றிக் கொள்கிறார்கள்.

ஆயுதப் போராட்டத்தை எப்போது, எங்கு, எவ்வாறு தொடங்குவது என்பதைத் தீர்மானிக்கும் இடம், பொருள், கால அடிப்படையிலான காரணிகள் எவையெவை என்று மார்க்சிய லெனினிய மாவோ சிந்தனையின் வழிகாட்டுதல்களைக் கொண்டு புதிய ஜனநாயகம் அமைப்பினர் வகுத்து வரையறுத்துக் கொண்டிருக்கின்றனர்; அவை அகநிலை விருப்பங்களால் தீர்மானிக்கப்பட முடியாது; அகநிலை கூறுகளாலும் அமைப்பு பலம் மற்றும் மக்கள் ஆதரவு மற்றும் புறநிலைக் கூறுகளாலும் புரட்சிக்கு சாதகமான மற்றும் ஆளும் வர்க்கங்களுக்குப் பாதகமான அரசியல், பொருளாதார, சமூக நிலைமைகளாலும் தீர்மானிக்கப்பட வேண்டும்.

புதிய ஜனநாயகத்திற்கு எதிரான மேற்கண்ட அவதூறை நியாயப்படுத்தும் முயற்சியாக மாவோயிஸ்டுகள் தாங்கள் மட்டுமே ஆயுதப் போராட்டப் பாதையில் ஊன்றி நின்று சாதனை புரிந்து வருவதாகவும், நாம் ஆயுதப் போராட்டத்தை கண்காணாத தூரத்திற்குத் தள்ளிப் போட்டுள்ள வலது சந்தர்ப்பவாதிகளாக உள்ளதாகவும் "பெரிய குளத்தில் தெறித்த சிறுபொறி...'' வெளியீட்டில் புளுகித் தள்ளியிருக்கிறார்கள்.

மற்ற கட்டுரைகள் …

TPL_INFINITY_MORE_ARTICLE