Language Selection

புதிய கலாச்சாரம்

“கலர் டிவி, கிலோ 2 ரூபாய்க்கு அரிசி, 2 ஏக்கர் நிலம்” என்று வாக்குறுதி தருகிறார் கருணாநிதி. “இலவச சைக்கிள் கொடுத்தேன், பாடநூல் கொடுத்தேன், வெள்ள நிவாரணம் கொடுத்தேன், கோயிலில் அன்னதானம் போட்டேன், இலவசத் திருமணம் நடத்திவைத்தேன்” என்று சாதனைப் பட்டியல் படிக்கிறார் ஜெயலலிதா. “மாதம் 15 கிலோ அரிசி இலவசமாகத் தருகிறேன், அதையும் வீட்டுக்கே கொண்டு வந்து தருகிறேன், கல்யாணம் பண்ணி வைத்து பிள்ளை பெத்தால் அதற்கும் பணம் கொடுக்கிறேன்” என்கிறார் நடிகர் விஜயகாந்த்.

இது 13 வது சட்டமன்றத் தேர்தல். மீண்டும் வாக்களிக்கப் போகிறீர்களா? ஒரு முறை ஏமாறுவது மனிதனுக்கு இயல்பு; இரண்டு முறை ஏமாறுபவன் ஏமாளி; மூன்று முறை ஏமாந்தால் அவனை முட்டாள் என்றும் சொல்லலாம்.12 முறை ஏமாற்றப் பட்டபிறகும் சொரணையில்லாமல் பல்லிளித்துக் கொண்டு ஓட்டுப் போடச் செல்பவர்களை என்ன பெயரிட்டு அழைப்பது?

இனவாதிகளின் அவதூறும் எமது நிலையும் மா ற்று இயக்கத்தினர் மீது இட்டுக்கட்டி அவதூறும் பொய்யும் புனைச் சுருட்டும் பரப்புவதாலேயே மட்டும் எந்தவொரு இயக்கமும் வளர்ந்துவிட முடியுமா? அப்படித்தான் நம்புகிறார்கள் தமிழினவாதிகள். தேசிய இனப் பிரச்சினையாகட்டும், இட ஒதுக்கீடாகட்டும், ஈழப் பிரச்சினையாகட்டும், இந்தத் தமிழினவாதிகளின் நிலைப்பாடுகளை "அப்படியே'' ஏற்காதவர்களை எதிரிகளோடு இணைவைத்து முத்திரை குத்தி அவதூறு செய்கிறார்கள். குறிப்பாக, புதிய ஜனநாயகப் புரட்சிகர இயக்கத்தினரிடம் மட்டும் இந்தச் சிறப்பு அணுகுமுறையை வைத்திருக்கிறார்கள்.

"குடியரசு'' என டாம்பீகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள இந்த நாட்டில், பார்ப்பனமேல்சாதிக் கொழுப்பு தட்டிக்  கேட்க ஆளின்றி பொங்கி வழிவதை இட ஒதுக்கீடு எதிர்ப்புப் போராட்டங்களே நிரூபிக்கின்றன. இந்தக் கொழுப்பின் சகிக்க முடியாத வக்கிரத்திற்கு "டெக்கான் கிரானிகல்'' என்ற ஆங்கில நாளிதழில் வெளியிடப்பட்ட கேலிச்சித்திரத்தை உதாரணமாகக் கூறலாம்.

ம. க.இ.க; வி.வி.மு; பு.மா.இ.மு; மற்றும் பு.ஜ.தொ.மு; ஆகிய புதிய ஜனநாயகப் புரட்சிகர அமைப்புகள் நடத்திவரும் பார்ப்பன பயங்கரவாத எதிர்ப்பு இயக்கத்தை இரண்டு பிரிவினர் "மட்டுமே'' எதிர்க்கின்றனர். ஒருபிரிவு, நாம் எல்லோருக்குமே தெரியும் பார்ப்பன பயங்கரவாதிகள். இன்னொரு பிரிவினர், யாரென்று பலருக்கும் தெரியாது. அவை, த.தே.பொ.க., த.ஒ.வி.இ. போன்ற சில தமிழினவாதக் குழுக்கள்.

இட ஒதுக்கீடு விவகாரம் மீண்டும் பூதாகரமான பிரச்சினையாக எழுந்து உத்திரப்பிரதேச மாநிலத்தை ரணகளமாக மாற்றியுள்ளது. இட ஒதுக்கீட்டு முடிவை எதிர்த்தும், எட்டு மலை மாவட்டங்களை உள்ளடக்கிய "உத்தர்கண்ட்'' தனி மாநிலம் கோரியும் மேல்சாதியினர் போராட்டத்தைத் தீவிரப்படுத்தி வருகின்றனர். போராட்டத்தை ஒடுக்க போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டிலும், மேல்சாதியினர் நடத்தும் எதிர்த்தாக்குதலிலும் இதுவரை 40க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.

பார்ப்பனர்களுடனும், பார்ப்பனியத்துடனும் தானே பலவாறு சமரசம் செய்து கொண்டு "புதிய ஜனநாயகம்'' அவ்வாறு செய்வதாகப் பழி தூற்றுகிறது வீரமணி கும்பல். இதற்கு ஏதோ பல சான்றுகள் இருப்பதைப் போல "கடந்த கால வரலாற்றை முன்வைத்து ஆராய்வோம்'' என்று சொல்லி மண்டல் கமிசன் பற்றி நமது நிலைப்பாடு என்கிற ஒரே ஒரு உதாரணம் கொடுத்துள்ளது. அதிலும் நமது நிலைப்பாட்டைத் திரித்துச் சொல்லி, பார்ப்பனியத்துடன் நாம் சமரசம் செய்து கொண்டதாகப் புளுகி இருக்கிறது.

இட ஒதுக்கீடு மண்டல் பரிந்துரை அமலாக்கத்திற்கு எதிரான வழக்கில் சர்ச்சைகளுக்கும் தகராறுகளுக்கும் முடிவு கட்டும் தீர்ப்பைத் தருவதற்கு நாட்டின் உச்சநீதி மன்றம் தவறிவிட்டது. வழக்கை விசாரித்த உச்சநீதி மன்றத்தின் முழு அமர்வுக் குழுவில் உள்ள ஒரு நீதிபதி கூறியதைப்போல, நாடாளுமன்ற அரசியல் தலைமை, அதாவது அரசாங்கம் தானே பிரச்சினையைத் தீர்ப்பதற்குப் பதில் பொறுப்பை உச்சநீதி மன்றத்தின் வாசலிலே கொண்டு போய் போட்டுவிட்டுத் தப்பிக்க முயன்றது. உச்சநீதி மன்றமோ, "தெளிவான'' தீர்ப்பைப் போன்ற தோற்றமுடைய ஆனால், குழப்பமாகவும் மோசடியாகவும் உள்ள தீர்ப்பை வழங்கியதன் மூலம் மீண்டும் அதை நாடாளுமன்ற அரசியல் தலைமையிடம் தள்ளிவிட்டு ஒதுங்கிக் கொள்ள முயன்றுள்ளது.

இட ஒதுக்கீடு மோசடிகள்: திராவிடக் கட்சிகளை அம்பலப் படுத்தும் மண்டல்' என்ற கட்டுரையை புதிய ஜனநாயகத் தில் படித்தேன். என்ன? நாம் படிப்பது "துக்ளக்'கா? என்று எனக்கு சந்தேகம் வந்துவிட்டது.


பார்ப்பனரல்லாத உயர் சாதியினருக்கும் இட ஒதுக்கீடு தரப்பட்டதை விமர்சிக்கிறீர்கள். அவர்களும் கல்வி மறுக்கப்பட்டவர்கள் தான் என்பதை உங்களால் மறுக்க முடியுமா? கம்யூனிஸ்டுகள் என்றால் ருஷ்ய நூல்கள் மட்டுமல்ல, இந்த மண்ணின் வரலாறும் படித்துத் தெரிந்திருக்க வேண்டாமா?

தி. க. வீரமணி கும்பலின் அதிகாரபூர்வ ஏடுகளில் ஒன்று "உண்மை''. அதன் 91 நவ. 115 இதழ் "மானமிகு'வின் பதில் கள் பகுதியில் ந.அப்துல் ரகுமான் என்ற வாசகரின் கேள்வியும், அதற்கான பதிலும் பின்வருமாறு வெளிவந்துள்ளது.


"கேள்வி: நான் RSYF என்ற நக்சலைட் இயக்கத் தோழர் ஒருவரை சமீபத்தில் சந்தித்தேன். ("புதிய ஜனநாயகம்' இதழை நடத்துபவர்கள்). மண்டல் கமிசன் அறிக்கையில் தி.க. உட்பட திராவிடக் கட்சிகள் இட ஒதுக்கீடு விசயத்தில் செய்த மோசடி குறிப்பிடப்பட்டு இருக்கிறது. அதனால்தான் தி.க. அறிக்கையை முழுவதும் தமிழில் மொழி பெயர்த்து வெளியிடாமல் சில பக்கங்களை மட்டும் மேற்கோள் காட்டி கட்டுரைகள் வெளியிடுவதாகவும் சொன்னார். உங்கள் பதில் என்ன?

ம ண்டல் கமிசன் அறிக்கை, அயோத்தி விவகாரம் குறித்து பு.ஜ.வுக்கு கேடயம் எழுதிய பதில்கள், விமர்சனங்களுக்கு இன்னமும் நீங்கள் ஏன் பதில் சொல்லவில்லை? பெயர் குறிப்பிட விரும்பாத வாசகர்

மற்ற கட்டுரைகள் …

TPL_INFINITY_MORE_ARTICLE