Language Selection

புதிய கலாச்சாரம்

உணவு தானிய விற்பனையில் பன்னாட்டு நிறுவனங்களின் ஆதிக்கத்தை இன்றே நாம் சந்தித்துக் கொண்டிருக்கிறோம். விவசாயிகளிடம் தானியக் கொள்முதல் செய்வதிலிருந்து மெல்ல விலகிக் கொண்டு, பன்னாட்டு நிறுவனங்கள் தானியக் கொள்முதல் செய்து கொள்ள ஊக்குவித்து வருகிறது அரசு. அது மட்டுமல்ல, அரிசி, கோதுமை, பருப்பு முதலான அனைத்திலும் முன்பேர வணிகத்தையும் ஆன்லைன் வணிகத்தையும் மத்திய அரசு அனுமதித்திருக்கிறது. இதன் விளைவாகத்தான் இன்று தானிய விலைகள் தாறுமாறாக உயர்ந்திருக்கின்றன.

காய்கறி விற்பனையில் ரிலையன்சும் பன்னாட்டு நிறுவனங்களும் நுழைவதென்பது வியாபாரிகளையும் விவசாயிகளையும் மட்டும் பாதிக்கின்ற பிரச்சினை அல்ல. நுகர்வோர் அனைவரையும், மக்கள் அனைவரையும் பாதிக்கின்ற பிரச்சினை. கீரைகளில் பலவகை, காய்களில் பலவகை, மாம்பழத்தில் பலவகை என்று பல ஆயிரம் ஆண்டுகளாக நம்முடைய விவசாயிகள் உருவாக்கி வைத்திருக்கும் ரகங்கள் எல்லாவற்றையும் பன்னாட்டு நிறுவனங்கள் அழித்துவிடும்.

சில்லறை விற்பனை இவர்களுடைய பிடிக்குள் சென்றால், நமது நாட்டின் உணவு தானிய உற்பத்தி, காய், கனி, மலர் உற்பத்தி அனைத்தும், அதாவது விவசாயம், தொழில்துறைகள் அனைத்தும் அந்நியக் கம்பெனிகள் மற்றும் அம்பானியைப் போன்ற சில தரகு முதலாளிகளின் கட்டுப்பாட்டுக்குள் சென்று விடும்.

"அம்பானி புகுந்த கோயம்பேடு, ஆமை புகுந்த வீடு'' என்பது அரசாங்கத்துக்குத் தெரியாதா? தெரியும். தெரிந்தேதான் அம்பானி முதல் அமெரிக்கக் கம்பெனிகள் வரை அனைவரையும் சில்லறை வணிகத்தில் அனுமதித்திருக்கிறது அரசு.


சில்லறை வணிகத்தில் பன்னாட்டுக் கம்பெனிகளையும், அம்பானி, டாடா, பிர்லா போன்ற தரகு முதலாளிகளையும் அனுமதிப்பதன் மூலம் "விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைக்கும். இடைத்தரகர்களை ஒழித்து விடுவதால் நுகர்பவர்களுக்கும் மலிவான விலையில் பொருள் கிடைக்கும்'' என்கிறார் நிதியமைச்சர் ப.சிதம்பரம்.

கோடிக்கணக்கான மக்களைப் பட்டினி போட்டுக் கொன்று ஒழிக்கும் இந்த அயோக்கியத்தனத்தைவிடப் பெரிய பயங்கரவாதம் வேறு ஏதாவது இருக்க முடியுமா? 4 கோடிக் குடும்பங்களை நரபலி கொடுத்து 4 முதலாளிகளைக் கொழுக்க வைக்கும் கொள்கையை விடக் கொடூரமான பயங்கரவாதக் கொள்கை வேறு ஏதாவது உண்டா?

அன்பார்ந்த உழைக்கும் மக்களே,


உலகப் பணக்காரன் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமம், சென்னை நகரில் காய்கறிக்கடை தொடங்குவதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியிருக்கிறது. ஒரேயொரு முதலாளி கோடிக்கணக்கில் கொள்ளை இலாபம் அடிப்பதற்காகப் பல இலட்சம் சிறு வணிகர்கள், தொழிலாளர்கள் விவசாயிகளுடைய தொழிலை நாசமாக்கி, அவர்களைப் பட்டினி போட்டுக் கொல்ல அரசாங்கம் தெரிந்தே அனுமதி வழங்கியிருக்கிறது.

தி.மு.க கூட்டணிக்கும் அ.தி.மு.க கூட்டணிக்குமிடையில் என்ன கொள்கை வேறுபாடு? ஹமாம் சோப்புக்கும் லைப்பாய் சோப்புக்குமிடையில் உள்ள வேறுபாடுதான் இவர்களுக்கிடை யிலான கொள்கை வேறுபாடு. இவர்கள் பேசுவதைக் கவனிப்பதற்குப் பதிலாக, பேசாதவற்றைக் கொஞ்சம் கவனித்துப் பாருங்கள்.

‘வாக்காளப் பெருமக்களே!’ என்று அலறும் ஒலிபெருக்கிச் சத்தம் இந்தத் தேர்தல் முடிவதற்குள் குறைந்தது சில ஆயிரம் தடவைகளாவது உங்கள் காதுகளைக் குடைந்துவிடும். இந்தச் சொல்லின் பொருள் என்ன என்று எப்போதாவது நீங்கள் யோசித்ததுண்டா?

புழுத்து நாறிவிட்டது இந்த ஜனநாயகம். இதற்குப் புனுகு பூசி, நம்பிக்கையிழந்து வெறுத்துப் போன வாக்காளர்களுக்கு நம்பிக்கையூட்டி, தேர்தலில் ஒரு விறுவிறுப்பை உருவாக்கி வாக்காளர்களைக் கவர்ந்திழுக்கிறார்கள் ஆளும் வர்க்கங்கள்.

ஒரு வாக்காளர் என்ற முறையில் சொல்லுங்கள். ஓட்டுக் கட்சிகளுக்கு உங்கள் ஓட்டு ஏன் தேவைப்படுகிறது? ஐந்தாண்டு களுக்கு ஒருமுறை நடக்கும் தேர்தல் என்ற இந்தக் கூத்தினால் என்ன பயன்?


“தேர்தல் என்ற ஒன்று நடக்காமல் அரசாங்கம் எப்படி அமையும்? நல்லதோ கெட்டதோ, அரசாங்கம் என்ற ஒன்று அமையாமல், சட்டசபை என்ற ஒன்று இல்லாமல், சட்ட திட்டங்கள் வகுப்பது எப்படி? நிர்வாகம் நடப்பது எப்படி? மக்களுக்கு நல்லது கெட்டது செய்வது எப்படி?” என்று நீங்கள் திருப்பிக் கேட்கக் கூடும்.

ஜெயலலிதா சூறாவளி சுற்றுப்பயணம், விஜயகாந்த் சுனாமி சுற்றுப்பயணம்... என்று தமிழ்நாடு முழுவதும் புழுதி பறந்து கொண்டிருக்கிறது. ‘எனக்கு ஓட்டுப் போடுங்கள்’ என்ற கோரிக்கையை முன்வைத்து மக்களைச் சந்திக்க வரும் தலைவர்களின் அணிவகுப்பால் எல்லாச் சாலைகளிலும் போக்குவரத்து ஸ்தம்பிக்கிறது. இந்தச் ‘சாலை மறியலுக்கு’ போலீசு காவல் நிற்கிறது. இக்காட்சிகளைப் புகைப்படம் எடுத்து பக்கம் பக்கமாகப் பிரசுரிக்கின்றன பத்திரிக்கைகள்.

மற்ற கட்டுரைகள் …

TPL_INFINITY_MORE_ARTICLE