Language Selection

புதிய கலாச்சாரம்

லெனின் தன்னுடைய உயர் படிப்பைப் தொடர கசான் என்ற நகரின் பல்கலைக் கழகத்தில் சேர்ந்தார். அந்தக் காலத்தில் ஜார் மன்னனுக்கு எதிராக மாணவர்கள் போராடிக் கொண்டிருந்தனர்.

லெனின் 1870-ஆம் ஆண்டு ஏப்ரல் 22-ம் தேதி சிம்பிர்ஸ்க் என்ற நகரில் பிறந்தார். அவருடைய தந்தையான இல்யா உல்யனாவ் மாவட்டக் கல்வி அதிகாரியாக பணி புரிந்தார். நேர்மையான மனிதர். தாயார் மரியா

எந்த நாட்டை எடுத்துக் கொண்டாலும் அங்கே பணக்காரர்கள் இருப்பார்கள். அதுபோலவே ஏழைகளும் இருப்பார்கள். ஒருவன் பணக்காரன் என்றால், 100 பேர் ஏழைகள். இந்த ஏழைகளின் உழைப்பைச் சுரண்டி பணக்காரர்கள்

1924-ஆம் ஆண்டு ஜனவரி 27-ம் நாள் மாலை நேரம். அமெரிக்காவின் பெரிய நகரங்களில் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்து வீதிகளில் ஊர்வலமாக வருகின்றனர். அவர்களின் கையில் சிவப்பு நிறக் கொடி ஒரு மனிதரின் உருவப்படத்தையும் சுமந்தபடி சோகமாக செல்கின்றனர்.

“துப்பாக்கிக் குழாயிலிருந்து அரசியலதிகாரம் பிறக்கிறது” அரசியல் சித்தாந்தமல்ல

  • துப்பாக்கியால் ஞானஸ்நானம் பெற்றவர்களெல்லாம் போராளிகளா?
  • நீதியற்ற வழிமுறைகளைக் கோருகிற இலட்சியம் நீதியான இலட்சியமா?
  • உயிரைத் துறக்கும் போராளிக்கு நேர்மையைத் துறக்கும் உரிமை உண்டா?
  • -நாவல் விமரிசனத்தினூடாகப் பரிசீலிக்கப்படும் கேள்விகள் இவை.

     

தொழிற் சாலையின்
உயர்ந்த கூரைகளிலும்
மெளனம் கவிந்தது.
மெர்க்க்குரி விளக்குகளும்
துருப்பிடித்துப் போயின
..
ஆதிகாலக்
குகையைப் போன்ற
அர்த்தமற்ற இருளுக்கும்
நிசப்த்த்திற்கும்
யார் பொறுப்பு?
..
சுழன்று கொண்டிருந்த
எல்லாச் சக்கரங்களையும்
இயங்கிக் கொண்டிருந்த
எல்லா உயிர்களையும்
ஒரு நொடிக்குள்
நிறுத்தி வைத்தது
யார்?
..
தங்களின்
கவலைகளையும்
கனவுகளையும்
சோகங்களையும்
நம்பிக்கைகளையும்
சுமந்து வந்த
நம்மை
முடமாக்கியது யார்?
..
கண்களை
எதிர் காலத்தைக்
குருடாக்கியது யார்?
..
அரை வயிற்றுக் கஞ்சிக்கும்
ஆடைக்கும்
நம்மை
அலைய விட்டவர்கள்
யார்?
..
அவர்கள்-
.
நிரம்பி வழியும்
மதுக் கிண்ணங்களோடு
தொழிற்சங்கத் தலைவரின்
தோள் மீது கைபோட்டுக்
கொண்டிருக்கிறார்கள்
ஒநாய்களையும்
நாய்களையும்
சட்டத்தையும்
காவலுக்கு வைத்துவிட்டு
குண்டு துளைக்காத
கூண்டுகளுக்குள்
பாதுகாப்பாக
இருக்கிறார்க்ள்.
..வேதப்புத்தகங்களை
பகவத் கீதைகளை
ரத்தக் கறைபடிந்த
விரல்களால்
புரட்டிக் கொண்டிருக்கிறார்கள்
.வருத்தப்பட்டு
பாரம் சுமக்கிறவர்களே
இவர்களை நீங்கள்
என்ன செய்யப் போகிறீர்கள்?
..உங்கள் குழந்தைகளின்
சின்னஞ்சிறு குடல்
குளிர்வதெப்போது?
..
உங்கள் பானைகளில்
சந்தோஷம், பொங்கி
வழிவதெப்போது?
..
உங்களை முடமாக்கியவர்களை
நீங்கள்
என்ன செய்யப் போகிறீர்கள்?
..
சொல்லுங்கள்.
*****************
-புதியஜீவா

 

"காலியாய்க் கிடக்கிறது
அரிசிப் பானை
ததும்புகிற்து
விழிக்குடம்
இதயம் நோகிறது
தாயே உன்னை நான்
எப்படிக் காப்பாற்றுவேன்?
இனியும் நான்
இங்கே இருக்க முடியாது -
அதோ
மக்கள், படை செல்கிறது
மலைகள் அதிரும் ஒலிகேட்கிறது
மாட மாளிகை நொறுங்கும்
ஒலி கேட்கிறது
இனியும் என்னைக்
காத்திருக்க வைக்காதே
தாயே
நானும்
அங்கே போக வேண்டும்
விடியலைக் கீறிச்
சூரியனைக் கொண்டு வர!"

 

 

"எனது கவிதைகள்
சாகட்டும்
போர்க்களத்தின்
சாதாரணச்
சிப்பாயைப் போல"
...
-கவிஞர் மாயகாவ்ஸ்கி

 

 

மற்ற கட்டுரைகள் …

TPL_INFINITY_MORE_ARTICLE