Language Selection

புதிய கலாச்சாரம் 2005
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

 கிரிமினல் வேலைகளில் 2000 ஆண்டு பாரம்பரியம் கொண்ட சங்கரமடத்தின் பார்ப்பனக் கும்பல்  Rg=   என்ற அந்த ஏழைச் சிறுமியைச் சாம்பலாக்கிக் காற்றில் கரைத்துவிட்டது.

 

 ""என் வயிறு பற்றி எரிகிறது என்ன கொடுமையடா, ஒருவர்கூட இவர்களைத் தட்டிக் கேட்கவில்லையே'' என்று தன்னுடைய கடைசிக் கடிதத்தில் குமுறினார் சங்கரராமன். தனக்கு நேர்ந்த கொடுமையைச் சொல்லி அழுவதற்குக் கூட யாருமில்லாமல் அநாதையாய்த் துடித்து அடங்கிய Rg=   என்ற அந்த ஜீவனின் கதை இரக்கமற்ற கொலைகாரர்களையும் உருக்கவல்லது.

 

 கடைய நல்லூரில் ரயில்வே சிற்றுண்டிச் சாலையில் பணியாற்றும் ஒரு தொழிலாளியின் மகள் Rg=  வறுமையின் கொடுமை தாளாமல், படிக்க வைக்க வழியில்லாமல் தன் 8 வயதுப் பெண்ணை காஞ்சிமடம் நடத்தும் "ஏழை பிராமணப் பெண்களுக்கான விடுதி'யில் சேர்த்துவிட்டார் அவள் தந்தை.

 

 கடந்த ஜூலை 29ஆம் தேதியன்று தொடர்ச்சியான ரத்தப் போக்கு காரணமாக இறந்து போனாள் சுபஸ்ரீ. உடனே அவளது உடலை வடஆற்காடு மாவட்டம் வாலாஜா பேட்டை மயானத்திற்குக் கொண்டு சென்று எரித்துவிட்டனர் சங்கரமடத்தின் கிரிமினல்கள். போலீசில் வழக்கு கிடையாது சவப்பரிசோதனை கிடையாது இறந்த குழந்தையின் முகத்தைப் பார்க்க பெற்றோர் கூட வரவழைக்கப்படவில்லை. சாவுச் செய்தியே அவர்களுக்குத் தெரியாது. ஏன், ஏன், ஏன் என்ற கேள்விகளுக்கு விடையில்லை.

 

 ""மாதவிடாய்ப் பிரச்சினை காரணமாகத்தான் ரத்தப் போக்கு இது இயற்கை மரணம்'' என்கிறார் காமதுர்கா விடுதியின் வார்டன் வேதாம்பாள்.

 

 சோற்றுக்கு வழியில்லாத குடும்பத்தில் பிறந்த ஒரு தொடக்கப்பள்ளிச் சிறுமி 11 வயதிலேயே பருவத்துக்கு வந்துவிட்டாள் என்ற கதையை யார் நம்புவது? இதனைப் புலனாய்வு செய்த அவுட்லுக் வார ஏட்டின் நிருபர் சுபஸ்ரீ படிக்கும் எஸ்.எஸ்.கே.வி. தொடக்கப்பள்ளியின் தலைமையாசிரியை சுந்தரி என்பவரைச் சந்தித்து இதுபற்றிக் கேட்டபோது அவர் அளித்த பதில் நமக்கு அதிர்ச்சியூட்டுகிறது.

 

 ""சென்ற ஆகஸ்டு மாதம் அந்த "விடுதித் தலைவி' பள்ளிக்கு வந்து சுபஸ்ரீக்கு டி.சி. வாங்கிச் சென்றார். அவள் பருவத்துக்கே வரவில்லை. அவள் இறந்துவிட்டாள் என்பதே இதுவரை எங்களுக்குத் தெரியாது'' என்றார். இறந்துபோன பெண்ணுக்கு யாராவது மாற்றுச் சான்றிதழ் வாங்குவார்களா? இந்தக் கேள்விக்கும் விடையில்லை?

 

 ""மாதவிடாய்க்கால ரத்தப்போக்கு காரணமாக ஒரு சிறுமி இறந்துவிட்டதாகக் கூறுவது மருத்துவரீதியில் சாத்தியமே இல்லாதது'' என்கிறார்கள் மகப்பேறு மருத்துவர்கள். ஆனால் சுபஸ்ரீயின் ஏழைப் பெற்றோரை அழைத்து வந்து ""எங்கள் மகளின் மரணத்தில் எங்களுக்குச் சந்தேகமில்லை'' என்று போலீசில் சொல்ல வைத்து விட்டார்கள் சங்கரமடத்துக் கிரிமினல்கள்.

 

 யாரைச் சந்தேகிப்பது? குற்றவாளியை அடையாளம் காட்டும் வாக்குமூலத்தை அவுட்லுக் நிருபரிடம் வழங்கியிருக்கிறார் அந்த விடுதியின் காவலர். ""விஜயேந்திரரும் அவர் தம்பி ரகுவும் விடுதிப் பெண்களுக்குச் சுலோகம் சொல்லிக் கொடுக்க அன்றாடம் மாலை நேரத்தில் வருவார்கள். கடந்த 3 மாதமாகத்தான் வருவதில்லை.''

 

 அந்த விடுதி இன்னொரு தடயத்தையும் தன்னிடம் வைத்திருக்கிறது. அவை  இரண்டு ஏ.சி. அறைகள்! அந்த அநாதைச் சிறுமிகள் விடுதியில். இரவு நேரத்தை பெண்கள் விடுதியில்தான் கழிக்க வேண்டுமென்று சொல்கின்றனவா சந்நியாசிக்குரிய நியமங்கள்?

 

 இதற்கு மேல் என்ன சாட்சியம் வேண்டும் அந்த இரண்டு பன்றிகளையும் அடித்து இழுத்து வருவதற்கு? சந்தேகமில்லையென்று பெற்றோர் சொன்னால் வழக்கை முடித்துவிட முடியுமா? சுபஸ்ரீயின் பெற்றோர் ஒருவேளை விலை போயிருந்தால் அவர்கள் வெறுக்கத் தக்கவர்கள் காமகேடிகளின் பொய்யை நம்பி மோசம் போயிருந்தால் அவர்கள் பரிதாபத்துக்குரியவர்கள் போலீசிடம் எழுதிக் கொடுக்குமாறு அவர்கள் காமகேடிகளால் நிர்ப்பந்திக்கப்பட்டிருந்தால்? சுபஸ்ரீயின் பெற்றோரையும் உயிருடன் கொலை செய்தததற்காக விஜயேந்திரனும் ரகுவும் தூக்கிலிடப்பட வேண்டியவர்கள்.

 

 ஆனால் பார்ப்பன ஏடுகளோ, சுபஸ்ரீயின் பெற்றோரிடம் "எழுதி வாங்கிய' சாதனையைக் கொண்டாடுகின்றன. ""சுபஸ்ரீ வழக்கு பிசுபிசுத்துவிட்டது'' என்று கொண்டாடும் ஜூ.வி. முதலாளி பாலசுப்பிரமணியத்தின் பேத்தியையும், தினமலர் கிருஷ்ணமூர்த்தி அய்யரின் பேத்தியையும் நெருப்பு வைத்துக் கொளுத்திவிட்டு சாம்பலைக் கையில் கொடுத்தால் "ஹர ஹர சங்கர' என்று நெற்றியில் பூசிக் கொள்வார்களா? மனிதச் சங்கிலி நடத்தும் மைலாப்பூர் மாமிகள் தங்கள் பெண்களை காமதுர்க்கா விடுதியின் ஏ.சி. ரூமுக்கு "ஸ்லோகம் கற்றுக் கொள்ள' விஜயேந்திரனிடம் அனுப்புவார்களா?

 

 இது சங்கரராமன் கொலையைக் காட்டிலும் கொடிய கொலை. தனக்கு நேரவிருக்கும் அபாயத்தையும், தான் மோதிக் கொண்டிருக்கும் எதிரிகளின் இரக்கமின்மையையும் சங்கரராமன் அறிந்திருந்தார். ஆனால் சுபஸ்ரீ? பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்ட அந்தக் கொடிய தருணத்திலும் கூட தனக்கு என்ன நேர்கிறது என்பதைப் புரிந்து கொள்ளவியலாத ஒரு சிறுமி. இந்தக் கிரிமினல்களைத் தெய்வமாகக் கருதி வழிபட்டிருக்கக் கூடிய பேதை! வயிற்றுப்பசிக்குச் சோறு தேடி வந்து, இந்த மிருகங்களின் காமப்பசிக்கு இரையான ஏழை!

 

 மேற்கு வங்கத்தில் ஒரு வசதிபடைத்த குடும்பத்தைச் சேர்ந்த பள்ளிப் பெண்ணை வன்புணர்ச்சிக்கு ஆளாக்கிக் கொன்ற மிருத்யுஞ்சய் சாட்டர்ஜி தூக்கிலிடப்பட்டான். விஜயேந்திரன், ரகு மற்றும் காமகேடி மடத்தின் கிரிமினல்கள் மீது இன்னும் வழக்கே பதிவு செய்யப்படவில்லை.

 

 விடக் கூடாது. காமதுர்கா விடுதியின் ஊமையாக்கப்பட்ட பெண்கள் பேசவேண்டும். சுபஸ்ரீயின் உயிர் துடித்து அடங்கிய ஒவ்வொரு கணமும் பேசவேண்டும். காமகேடிகளை அவர்களுடைய மடத்திலேயே ஜீவசமாதி வைக்க வேண்டும்.