Language Selection

புதிய கலாச்சாரக் கவிதைகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

மறுகாலனிய திணை மயக்கம் - துரை.சண்முகம்

கவிதையில் சில பகுதிகள்:

""பிரிவுத்துயராற்றாப் பிள்ளையின்

பருவத் துயர் போக்க

வாசலில் ஹீரோ ஹோண்டா.

வரைவு கடந்த தலைவியின் வாட்டம் போக்க

பசலை தீர்க்கும் சாம்சங் டி.வி.

அலர் தூற்றும் அண்டை, அயலாருக்கு

கலர் காட்டும் செல்பேசி.

வளப்பமுடன் இல்வாழ்வு காட்டுபவன்

பழக்கமெனும் உரிமையில்

ஓட்டடா வண்டி என்றேன்.

ஹி... ஹி... எரிபொருள் இல்லை என்றான்.

காட்டடா செல்போன் என்றேன்.

கார்டு போடவில்லை என்றான்.""

.. . . . . .. . . .. . . . .

.. . . . . . .. . . . . .. . .

.. . . . . .. . . . . .

""இன்னொருவன் நிலைகண்டு

அருவெறுக்கும் மலவண்டு.

அவனும் இவனும் உடன்போக்கு ஊட்ட

தவணை முறையில் தள்ளிக்கொண்டு வந்தான்

ஒரு வாகனத்தை. மூன்றாவது தவணைக்கு மேல்

முடியாததால் கள்ளச்சாவிபோட்டு கடைக்காரன்

வண்டியைத் தள்ளிப் போவான் என்றஞ்சி

தன் வீட்டில் வைக்காது தான் வங்கிய பஜாஜ் பல்சரை

தள்ளி நாலாவது வீட்டில் வைத்து

தினமும் மூடி வைக்கிறான் கேவலத்தை.

பல்சான்றீரே! பல்சர் வண்டியிரே!

பகர்வது கேள்மின்!

எச்சில் ஊறும் நுகர்வு வெறி, எச்சரிக்கை!

எல்லாத்திசையிலும் கள்ளச்சாவிகள்.""