Language Selection

நூல்கள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times


வீரம் செறிந்த மகத்தான தெலுங்கானா போராட்டம் பல்வேறு விதமான சுரண்டல்களை இல்லாதொழித்ததுடன், காலங்காலமாக இருந்துவரும் "வெட்டிச்சாக்கிரி' (கொத்தடிமை)யையும் ஒழித்தது. நிலப்பிரபுத்துவ ஒடுக்குமுறையை ஒழித்து, சுமார் 3000 கிராமங்களில் விவசாயிகள் தங்களது சொந்த அரசியல் அதிகாரத்தை நிலைநாட்டினர். நிலப்பிரபுக்களின் சுமார் 10 இலட்சம் ஏக்கர் நிலங்களைத் தங்களுக்குள் விநியோகித்துக் கொண்டனர். தங்களது சொந்த நிலத்தைப் பாதுகாக்க மக்கள் ஆயுதம் ஏந்தினர். இவ்வாறாக வீரம் செறிந்த மாபெரும் தெலுங்கானா போராட்டம் மூன்று கோடி ஆந்திர மக்களை ஒன்றிணைத்த ஒரு மாபெரும் விவசாயப் புரட்சியாகத் திகழ்ந்தது. இந்தியாவில் விவசாயப் புரட்சியை தெலுங்கானா போராட்டம் முன்னணிக்குக் கொண்டு வந்தது. அது இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் தலைமையில் நடத்தப்பட்ட முதல் மிகப் பெரிய விவசாயப் போராட்டமாகும்.


ஆனால், இந்த வீரம் செறிந்த மாபெரும் தெலுங்கானா போராட்டம் போலி கம்யூனிஸ்டுகளான திரிபுவாதிகளாலும் நவீன திரிபுவாதிகளாலும் காட்டிக் கொடுக்கப்பட்டது. அதன் எல்லா வெற்றிகளும் அவர்கள் மேற்கொண்ட நாடாளுமன்றப் பாதையினூடே இழக்கப்பட்டன. இப்போராட்டத்திலிருந்து, இந்தியாவில் விவசாயப் புரட்சிக்கான இயக்கத்தை கட்டியெழுப்ப நாம் சரியான படிப்பினைகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.