Language Selection

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

எம் மக்களை அழித்த புலிகளும், அரசும், அதைப் பற்றிய அனைத்து விடையங்களையும் வரலாற்றில் இருந்து அகற்றியுள்ளது. இந்த வரலாற்றில் இயங்கிய மற்றைய இயக்கங்களும் அதைத்தான் செய்தனர். உண்மையில் தங்களின் மக்கள்விரோத வரலாற்றுக் குறிப்புகளை அவர்கள் இல்லாதாக்கினர். இதன்பின் மக்களின் கண்ணீர்களும், அவர்களின் வாழ்வும் கேட்பாரின்றி புதைக்கப்பட்டது. அவர்கள் சொல்வது தான் வரலாறு என்ற எல்லைக்குள், சமூகம் மலடாக்கப்பட்டது. இதற்கு மாறானதை அவதூறு என்றனர். 

நண்பர்களே

தோழர்களே

தோழர் மாவோவின் வாழ்வை சுருக்கமாக, தெளிவாக எடுத்துக்காட்டிய “ஒரு கம்யூனிஸ்டின் உருவாக்கம்” எனும் நூல் இங்கு தொடராக வெளியிடப்பட்டது. அத‌னைத் தொடர்ந்து, தோழர் இரயாகரனின் “இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம்” எனும் நூல் இங்கு தொடராக வெளியிடப்படவிருக்கிறது. இது இன்னும் நூலாக வெளிவரவில்லை என்றாலும் தோழரின் சிறப்பு அனுமதியின் பேரில் இங்கு வெளியிடப்படுகிறது.

பேரினவாத பாசிச அரசு,  புலத்து தமிழ் மக்கள் மத்தியில் ஊடூருவும்  சதியொன்று,  அண்மையில் அம்பலமாகியுள்ளது. நெடுந்தீவு மக்கள் தங்கள் பிரதேசத்தை அபிவிருத்தி செய்யவென, பல்வேறு புலம்பெயர் நாடுகளில் தங்களை ஒருங்கிணைத்து சுயாதீனமாக தனித்தனியாக செயல்பட்டு வந்தனர். இந்த சங்கங்களை குறிவைத்து, இலங்கைத் தூதரகத்தினூடாக சிலர் செயல்பட்டது பாரிசில் வைத்து அம்பலமானது.

இந்த ஜீவமரணப் போராட்டத்தை நடாத்திக் கொண்டிருக்கும் மாணவர்கள் என்ன நோக்கத்திற்காக, எந்த மக்களின் விடுதலையை நேசித்தார்களோ அந்த இலட்சியத்தை நீங்கள் பொறுப்பேற்பது தான் நீங்கள் அந்த மாணவர்கட்கு செய்யும் தியாகமேயொழிய கண்ணீர் சிந்துவதும் அஞ்சலிக்கூட்டங்கள் நடாத்துவதும் அல்ல —விமலேஸ்வரன்

எமதருமை அன்பு மாணவன் விஜிதரனை இழந்த நிலையில் இங்கு நாங்கள் கூடியிருக்கின்றோம். விஜிதரனின் பெற்றோர்களுக்கும் எனதருமை மக்களிற்கும் என் அன்பான சக மாணவத் தோழர்கட்கும் பாசமிக்க விரிவுரையாளர்கட்கும் எமது மாணவர்களின் சார்பாக அதாவது இந்தப் போராட்டத்தினை தொடங்கியிருக்கும் மாணவர்கள் சார்பாக எனது வணக்கத்தினை தெரிவித்துக் கொள்கிறேன்.

இங்கு நாங்கள் இன்று கூடியிருப்பது ஒரு வேதனையூட்டுகின்ற, போராடும் மக்களுக்கும் ஜனநாயகத்தையும் சுதந்திரத்தையும் நேசிக்கின்ற அனைத்து சக்திகளிற்கும் தலைகுனிவை ஏற்படுத்துகின்ற ஒரு நிகழ்ச்சியை எதிர்த்து எமது சொந்த தார்மீகப் பலத்தில் நம்பிக்கை வைத்து மாணவர்களாகிய நாம் நடாத்தும் போராட்டத்தில் ஒர் முக்கியமான கட்டத்தினை ஆரம்பித்து வைப்பதற்காகும்.

இந்த பல்கலைக்கழகத்தில் இப்போது நாம் இருந்து பேசிக்கொண்டிருக்கும் இந்த இடத்தில் எத்தனையோ நாட்கள் சிரித்தமுகத்துடன் எம்மோடு பேசி சிரித்து விளையாடிய தேசத்திற்காகவும் மக்களிற்காகவும் ஒவ்வொரு கணமும் தன் மொழிஆற்றலையும்  செலவுசெய்து போராடத் தயாராகவிருந்த  எமதருமை நண்பன் விஜிதரன் இன்று நம்மடையே இல்லை.

எமது கருத்துகள் உட்பட, நடைமுறைகள் அனைத்தும் வெளிப்படையானது. மக்களுக்கு வெளியில், எமக்கு என்று வேறு எந்த இரகசிய திட்டமோ, வேலைமுறையோ கிடையாது. அனைத்தும் பகிரங்கமானது. பிரச்சாரம், கிளர்ச்சி என்ற வகையில் எமது வெளிப்படையான செயல்பாட்டுக்கு அப்பால், தனியான இரகசியமான எந்தவொரு செயல் திட்டமும் கிடையாது.

இப்படி இருக்க எமக்கு எதிராக திட்டமிட்டு பரப்படும் சில கருதுகோள்கள் அனைத்தும், எமது திட்டம் மற்றும் எமது நடைமுறைக்கு முரணானது. எமது கருத்துகளில் இருந்து, அதற்கான ஆதாரத்தை முன்வைக்காத விசமப் பிரச்சாரத்தில் சிலர் ஈடுபடுகின்றனர். நாம் செயலை முன்னிறுத்தி, அமைப்பாக்கலை வலியுறுத்தியது முதல், எல்லா பிற்போக்கு சக்திகளும் விழிப்போடு எமக்கு எதிரான இட்டுக்கட்டிய விசமப் பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றனர்.

நாம் இவ்வளவு காலமும் புகலிடச் சிந்தனை மையம் என்ற பெயரிலே இயங்கி வந்தோம். இது எமது அரசியல் நோக்கம் மற்றும் குறிக்கோளுக்கு போதாமையும், தவறான அரசியல் அர்த்தத்தை அது கொடுப்பதால், பெயர் மாற்றம் அவசியமானதாக உள்ளது. இந்த வகையில் புதிய ஜனநாயக மக்கள் முன்னணி என்று, எமது அமைப்பிற்கான பெயர் மாற்றத்தை செய்துள்ளோம்.

தமிழ் மக்கள் மேல்,  அரசு மட்டுமல்ல புலிகளும் கூடத்தான் போர்க் குற்றத்தை இழைத்துள்ளது. இரண்டுக்கும் எதிராக போராடாத அதை அம்பலப்படுத்தாத அனைவரும் புலிகளே.  இதுதான் தமிழ்மக்களின் பெயரில் யார் புலி பினாமிகளாக உள்ளனர் என்பதை இனம் காட்டுகின்றது.

ஜனநாயகம் வேஷம் போடத் தேர்தல். வெள்ளைக்காரரை ஏமாற்ற தாங்கள் புலிகளல்ல என்று கூற வெள்ளைவேட்டி.

இதை அம்பலமாக்கிய போது பாசிசப்புலிகளின் பகிரங்க அச்சுறுத்தல். நோர்வே தொரம்சோவில் தனியாக நின்று துண்டுப்பிரசுரம் விநியோகித்த பெண்ணை கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரான வன்மத்துடன் அச்சுறுத்தினர் நோர்வே ஈழத்தமிழர் பேரவையின் உள்ளுர் கையாட்கள்.

இந்த திட்டம் ஒடுக்கப்பட்ட அனைத்து மக்களின் நலன்களை முரணற்ற வகையில் முன்னிறுத்துகின்றது. வர்க்க ஒடுக்குமுறை முதல் சமூக ஒழுக்குமுறையில் இருந்தும் விடுதலையடைய, ஒடுக்கப்பட்ட சமூகப் பிரிவுகள் அதை தமக்குள் முரணற்ற வகையில் இதற்கு எதிராக போராடக் கோருகின்றது.

 

இன ஒடுக்குமுறைக்கெதிரான போராட்டம் : ஆயுதப் போராட்டத்தை நோக்கி

70 களில் தமிழரசுக் கட்சியினதும் அதன் தொடர்ச்சியாக தமிழர் விடுதலைக் கூட்டணியினதும் "உணர்ச்சி பொங்கும்" மேடைப் பேச்சுக்களிலும் "தமிழீழம்" என்ற கனவிலும் மூழ்கியிருந்த ஆயிரக்கணக்கான இளைஞர்களில் நானுமொருவன் என்ற போதிலும், பின்னாட்களில் - 80 களில்- பாஸ்கரன், திலக் ஆகியோருடைய தொடர்புகளுக்கூடாக GUES (ஈழ மாணவர் பொது மன்றம்) இல் இணைந்து செயற்பட்டு வந்தேன்.

சந்திப்புகள், அரசியல் கருத்தரங்குகள், கண்டனக் கூட்டங்கள் என்பனவற்றோடு மாணவர் போராட்டங்களிலும் சாதீயத்திற்கெதிரான போராட்டங்களிலும் வெகுஜனமட்டத்தில் அவர்கள் செயற்பட்டுக் கொணடிருந்தனர். மாணவர்களை அணிதிரட்டுதல், மக்களை அணிதிரட்டுதல், அதனூடாக பரந்துபட்ட மக்கள் போராட்டத்தை முன்னெடுத்தல் என்பதாகவே GUES (ஈழ மாணவர் பொது மன்றம்) இன் கொள்கை இருந்தது. இவர்கள் இடதுசாரிக் கொள்கைகளால் கவரப்பட்டவர்களாக, மார்க்சியத்தின் பால் ஈர்க்கப்பட்டவர்களாக காணப்பட்டனர். இடதுசாரித் தத்துவத்தின் மீதான அறிமுகம், அதன் மீதான ஆர்வம் எல்லாமே நான் GUES (ஈழ மாணவர் பொது மன்றம்) இல் இணைந்திருந்த போது ஏற்பட்டவையே. இச் சூழல் 1981, 82 ம் ஆண்டுகளில் 1983 இனக்கலவரம் ஏற்படுத்திய உந்திய கொதிநிலைக்கு முற்பட்ட காலமாகும்.

                                                               திரு. அமிர்தலிங்கம்

போரிலும் பகையிலும்

முதல் பொருளாய்

அவளையே சூறையாடினாய்:

அவளுக்கே துயரிழைத்தாய்

உன்னால் அனாதைகளாக்கப் பட்ட குழந்தைகளையெல்லாம்

இதுவரை காலமும் புலம்பெயர் நாடுகளில் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வுகள் போல இம்முறை மாவீரர் நாளும் பெரும் எதிர்பார்ப்புகளோடு ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டு வருகிறது. வளமை போல மாவீரர் உறவுகள் கௌரவிப்பு முதல் அனைத்து ஏற்பாடுகளும் நடைபெறுகிறது.

 

பாரிஸ் லாச்சப்பலில் கடந்த கிழமை சிந்தனை மையத்தின் துண்டுப்பிரசுரம் பரவலாக விநியோக்கப்பட்டது. பல வர்த்தக நிறுவனங்கள் உட்பட பலர் கூடுதல் பிரதிகள் கேட்டு வாங்கினர். மக்கள் கடைச் சந்தியில் பிரசுரம் கொடுக்கப்படட பொழுது, ஒரு சிலர் இது என்ன நோட்டீசு என (பதட்டத்துடன்) கேட்டனர்.

பாகம்-2

ரயாகரன் :
வணக்கம். நேரடியாகவே விவாதத்துக்குப் போகலாம் என நினைக்கிறேன். இங்கு உரையாற்றியவர்களினது கருத்துகளிலிருந்து தொடங்கலாமென நினைக்கிறேன். மே17 க்குப் பிறகு ஏற்பட்டிருக்கின்ற மாற்றங்களில் முக்கியமானது அதுவரைகாலமும் புலிப் பாசிசத்தினூடாகத்தான் அனைத்தும் என புலியல்லாத தரப்பு இயக்கப்பட்டுக் கொண்டிருந்தது.

கீழ்க்காணும் துண்டுப்பிரசுரம்.  பாரிசில் நடந்த கலைநிகழ்ச்சிக்கு வந்தவர்கள் மத்தியில் விநியோகிக்கப்பட்டது. தொடர்ந்து பல்வேறு வடிவங்களில் கொடுக்கவும் உள்ளோம். அண்மையில் சுவிஸ்சில் கொடுத்த துண்டுப்பிரசுரம் உட்பட பலவற்றை தொடர்ந்து மக்கள் மத்தியில் எடுத்துச் செல்ல உள்ளோம். இதன் பி.டி.எவ் பிரதி தனியாக இணைப்பில் இணைக்க உள்ளோம். அதை பல மட்டத்தில் எடுத்துச் செல்லுமாறு கோருகின்றோம்.

மனித உணர்வுக்கு நாங்கள் மதிப்பளிக்காத வரை………

சுவிஸில் நிகழ்ந்த புகலிடச் சிந்தனை மையத்தின் முதற் செயற்பாடும் துண்டுப்பிரசுர விநியோகமும்

24. 10. 09 சனியன்று சுவிஸ் தலைநகர் பேர்ண் நாடாளுமன்ற முன்றலில் இடம்பெற்ற இளையோர் அமைப்பின் உண்மைக்காய் எழுவோம் நிகழ்வு பி. ப. 3மணிக்கு என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE