Language Selection

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

மக்கள் கூடித் தங்கள் மகிழ்வை வெளிப்படுத்தும் நிகழ்வுகள் தான் கொண்டாட்டங்கள். ஆனால் இன்று கொண்டாட்டங்கள் என்பது, நுகர்வை மையப்படுத்தியதாக சீரழிந்து விட்டது. சுயநலம் கொண்ட தனிமனித வக்கிரங்களே மகிழ்ச்சியாக வெளிப்படுத்தப்படுகின்றது. சமூகம் தான் ஒன்றாகக் கூடி வெளிப்படுத்திய சமூக உணர்வுகள் தான் கொண்டாட்டம் என்ற உணர்வை, இன்று இது மறுதலிக்கின்றது. மனித ஏற்றத்தாழ்வுகளைக் கடந்து, கூடிப் பகிர்ந்து உண்டு வெளிப்படுத்திய கொண்டாட்டங்கள், ஏற்றத்தாழ்வை வெளிப்படுத்தி அதில் பெருமை கொள்ளும் தனிமனித நுகர்வு வக்கிரமாக குறுகி சீரழிந்து விட்டது.

2. வாழ்வுக்கான போராட்டம்

எம்மக்கள் வாழ்விழந்து நிற்கின்றனர். இதில் இருந்து மீளமுடியாத வண்ணம்,  நாதியற்ற நிலையில் நிற்கின்றனர். எல்லாவற்றையும் இழந்து விட்டனர். வன்னி மக்கள் திறந்தவெளிச் சிறையில் அநாதையாகி விட்டனர். யாழ் மக்கள் நுகர்வுச் சிறையில், தலைகால் தெரியாது வீங்கி வெம்புகின்றனர். கிழக்கு மக்கள் எல்லாவற்றையும் இழந்த நிலையில்,  கேட்பாரின்றி அநாதையாக விடப்பட்டுள்ளனர்.

நூல் முன்னுரை

1.எந்தச் சூழலில் இந்த நூலுக்கான முயற்சி

விமலேஸ்வரன் படுகொலையின் பின் 19.7.1988 மதியமே என் மீதான படுகொலைக்கு முயன்றனர். இதற்கு இரு புலிகள் முயன்ற போதும், எனது தற்காப்புணர்வு அவர்கள் கிட்ட நெருங்குவதை அனுமதிக்கவில்லை. என் மீதான கொலைமுயற்சியின் போது என் தற்காப்பு உணர்வு சார்ந்த எச்சரிக்கை உணர்வு மூலம், அன்று அதிஸ்ட்டவசமாக உயிர் தப்பியிருந்தேன். அன்று இதிலிருந்து தப்பி தலைமறைவாகிய நான், அடுத்த நாள் கொழும்பு சென்றேன். இதன் பின்பாக என்னைக் கடத்தி வைத்து சித்திரவதை செய்த முகாமில் இருந்த இரு புலி உறுப்பினர்களை, அடிக்கடி கொழும்பிலும் நான் தங்கி இருந்த இடத்தின் அருகிலும், நான் போய் வரும் இடங்களிலும் காணத் தொடங்கினேன்.

சர்வதேச மனிதவுரிமைகள் தினத்தில் லலித் குமார, குகன் முருகன் ஆகிய இருவரும் அரச கூலிப் படைகளால் கடத்தப்பட்டு காணாமல் போயுள்ளனர். அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென புதிய ஜனநாயக மக்கள் முன்னணி கோருகின்றது. அவர்கள் இருவரின் விடுதலைக்காக நடாத்தப்படும், நாடுதழுவிய ரீதியில் நடாத்தப்படும் அனைத்து போராட்டங்களுக்கும், தனது ஆதரவைத் தெரிவித்துக் கொள்கின்றது.

ලංකාවේ පංතියක් නියෝජනය කරන පක්ෂයක් ලෙස වෙනස් කිරීමේ අරගලය සිදුකරන මෙන් ජ.වි.පෙ සාමාජිකයන්ට ප්‍රසිද්ධියේ ඇරයුම් කරන්නෙමු. ජාති වාද දේශපාලනය තුරන්කර, මැතිවරණ දේශපාලනය අතහැර සිය පංතියක පක්ෂයක් සේ පෙන්නුම් කරන ලෙසට ඇරයුම් කරන්නෙමු. අතීතයේ පුද්ගල ත්‍රස්තවාද දේශපාලනය ගෙන ස්වයං විචාරයක් කිරීමෙන් මහජන දේශපාලනය ක්‍රියාවට නංවන ලෙස ඉල්ලා සිටිමු.

 

இலங்கையில் வர்க்கக் கட்சியாக மாற்றி அமைக்கும் போராட்டத்தை நடத்துமாறு ஜே.வி.பி.யின் உறுப்பினர்களுக்கு பகிரங்கமாக அறை கூவுகின்றோம். இனவாத அரசியலைக் களைந்து, தேர்தல் அரசியலைக் கைவிட்டு, தன்னை ஒரு வர்க்கத்தின் கட்சியாக வெளிப்படுத்துமாறு அறைகூவுகின்றோம். கடந்தகால தனிநபர் பயங்கரவாத அரசியலை சுயவிமர்சனம் செய்து கொண்டு,  வெகுஜன அரசியலை முன்னெடுக்குமாறும் கோருகிறோம்.

 

அப்பாவிகளுக்கு குற்றவாளிகள் வழங்கிய தீர்ப்பு இதுதான். இந்தத் தூக்குத் தண்டனை, செய்த குற்றத்துக்கானதல்ல, செய்யாத குற்றத்துக்கானது. எந்த ஆதாரங்களும் இன்றி, சித்திரவதைகள் மூலம், தடா என்ற மனிதவிரோத திடீர் சட்டத்தின் கீழ்தான், பேரறிவாளன் - முருகன் - சாந்தனை குற்றவாளிகளாக்கி தூக்குத் தண்டனை வழங்கினர். இந்த வழக்கில் குற்றவாளி ஆக்கப்பட்டவர்களினதும், அவர்களின் வழக்கறிஞர்களின் வாதங்களையும் கருத்தில் எடுக்காது, தன் பிராந்திய வல்லாதிக்க நலனுக்காக வழங்கப்பட்ட கட்டைப் பஞ்சாயத்து தீர்ப்புத்தான் இந்த மரணதண்டனைத் தீர்ப்பு. 20 வருடங்களுக்கு மேலாக நீதி மறுக்கப்பட்டு சிறைகளில் கொடிய வதைகளை அனுபவித்தவர்களை, மீண்டும் கொல்வதன் மூலம் அரசியல் செய்ய முனைகின்றது இந்திய வல்லாதிக்க அரசு.

 

புதிய ஜனநாயக மக்கள் முன்னணியின் சமூக அரசியல் கல்விச் சுற்று – முதலாவது ஒலி நூல்

கேட்பதற்கு இங்கே அழுத்தவும்

{play}http://olinool.net/files/ndp_front/ndpfront_1.mp3{/play}

புதிய ஜனநாயக மக்கள் முன்னணியினரின் கல்விச்சுற்றாக வெளிவரும் தோழர் மாவோவின் கட்டுரை.

இப்பிரசுரத்தை PDF வடிவிலும் இங்கே தரவிறக்கலாம்.

தரவிறக்க: PDF

மனித சமூகம் என்பது வர்க்கங்களால் ஆனது. அதனாலேதான் அனைத்துச் சமூகங்களிலும் மனித முரண்பாடுகள் பலவிதமாக வெளிப்படுகின்றது. இந்த நிலையில் மனிதன் மனிதனாக வாழ முற்படும்போது, எங்கும் எதிலும்; போராட்டங்கள் வெடிக்கின்றது. அவற்றுக்கான உரிய தீர்வுகள் கிடைக்கும்வரை அவை தொடர்கின்றது. இந்த வகையிலேதான், நாமும் புதிய ஜனநாயக மக்கள் முன்னணி ஊடாக அணிதிரண்டுள்ளோம்.

 

கிரிக்கெட் வெறும் விளையாட்டல்ல. வெறும் பொழுது போக்கும் அம்சமல்ல. கிரிக்கெட்டுக்கு குறுகிய மத இன சாதிய உணர்வு உண்டு. இப்படி அதற்கு ஒடுக்கும் பல உணர்வுகள் உண்டு. அப்படித் தான் அது விளையாட்டாகக் காட்டி வாழ்கின்றது. இதனால் தான் ஆளும் வர்க்கத்தால் அது போற்றப்படுகின்றது.

 

1983 யூலை 23-இல் தமிழினம் மீது, சிங்கள அரச பேரினவாதம் நடத்திய வன்முறையை ஒத்ததுதான், 2011 யூலை 23-இல் நடக்கவுள்ள தேர்தல் என்ற "ஜனநாயக" கூத்து. இதே நாளில் தமிழினத்தை தேர்தல் மூலம் அடிமைகொள்ள சபதம் ஏற்று, இந்தப் பேரினவாதம் பாசிசமயமாகி கொக்கரிக்கின்றது. தேர்தல் "ஜனநாயகம்" என்ற தங்களின் போலி "ஜனநாயக"த்தைக் கூட, தமிழ் மக்கள் சுதந்திரமாக அனுபவிக்கக் கூடாது என்பதுதான் மகிந்தவின் இனவாதச் சிந்தனையாகும்.

அரசு மட்டும் தாமல்லாதவரை கொல்லவில்லை, தாக்கவில்லை. புலியும் அதைத் தான் செய்தது, செய்கின்றது. முள்ளிவாய்க்கால் முடிந்தபின் ஐயோ என்று சொல்லிப் புலம்பிய புலிகள், இனி தாங்கள் அப்படிச் செய்ய மாட்டோம் என்று வேஷம் போட முனைய, இடதுசாரி வேஷம் போட்டவர்களும் கூடி ஆமாம் போட்டனர்.

மே 18 அன்று பிரிட்டிஸ் பொலிசார் புலிக்காடையர்களிடம் இருந்து எம்மை பாதுகாக்க முற்படாது விட்டிருந்தால், முள்ளிவாய்க்காலில் எது நடந்ததோ அது லண்டன் வீதியிலும் அரங்கேறியிருக்கும். முள்ளிவாய்க்காலில் பேரினவாதம் எதைச் செய்ததோ, அதை லண்டன் வீதியில் புலிகள் மே 18 அன்று எமக்கு எதராக அரங்கேற்ற முனைந்தனர். இரண்டு வெவ்வேறு இடத்தில் பிரிட்டிஸ் பொலிசார், எம் தோழர்களை இநதக் புலிக் காடையர் கும்பலிடம் இருந்து பாதுகாத்தனர்.

தமிழ் மக்களை மந்தையாக வைத்திருக்கும் புலி ஜனநாயகம் இப்படித்தான், மேற்கிலும் கொடி கட்டிப் பறக்கின்றது. வன்னியில் இந்த புலித்தனம் தான், அவர்களுக்கு புதை குழியானது.

 

எமது மக்கள் பாரிய மனித அழிவைச் சந்தித்து இரண்டு வருடங்களாகின்து. இது இந்த நூற்றாண்டில் நடந்த பாரிய மனித அவலமாகும். இலங்கைப் பேரினவாத அரசு எம் மக்கள் மீதான ஒரு இனப் படுகொலையை நடத்தியிருந்தது. சிறுவர்கள், பெண்கள், வயோதிபர்கள் என அனைவர் மீதும் ஈவிரக்கமற்று நடத்தப்பட்ட வன்முறை, இன்றும் ரணமாகி பாரிய வலியை எம் சமுதாயத்தில் ஏற்படுத்திய வண்ணமுள்ளது.

மதியம் 2-மணியளவில் மேதின ஊர்வலம் ஆரம்பமாகும், பாரிஸ் றீபப்பிளிக் மெற்றோ நிலையம் சென்றடைந்தோம். பல அமைப்புக்கள் தம் கொடிகள், பதாகைகளுடன் அணி வகுத்து நின்றனர். அத்துடன் அரசியல் கோசங்களின் முழக்கங்களும், வாத்தியக் கோஸ்டிகளுடனான ஆடல் பாடல்களும் ஆங்காங்கே நடைபெற்றது. இதில் புலிகளின் அணி யாதுமற்ற அமைதி நிலையில். ஊர்வலத்திற்கு வந்தவர்கள் தொகையோ மிகக் குறைந்தளவு. நாம் கொண்டு சென்ற “போர்க்குற்றம் மீது சுதந்திரமான சுயாதீனமான விசாரணையைக் கோருவோம்” புதிய ஜனநாயக மக்கள் முன்னணியின் துண்டுப்பிரசுர எண்ணிக்கையோ, அங்கு வந்திருந்த தமிழ் மக்களின் எண்ணிக்கையினை விட அதிகம். என்ன செய்வது புலிகள் நிலை இப்படியாகி விட்டதே, என்றெண்ணியபடி துண்டுப்பிரசுரத்தை விநியோகித்தபடி, “முன்னணி” சஞசிகையையும் விற்க ஆரம்பித்தோம்.

போர்க்குற்றம் மீது சுதந்திரமான, சுயாதீனமான விசாரணையைக் கோருவோம்!!

 

ஏகாதிபத்திய நலனை முன்னிறுத்தியோ, ஏகாதிபத்திய எதிர் முகாமில் நின்றோ, போர்க்குற்றத்தை அரசியலாக்குவது மன்னிக்க முடியாத துரோகம். மக்களுக்கு எதிரான பாரிய போர்க்குற்றத்தை குற்றமற்றதாக்க, அதை அரசியல் நீக்கம் செய்வதும் மன்னிக்க முடியாத குற்றமாகும்.

இலங்கை அரசின் இன அழிப்பு யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில், மனிதகுலத்திற்கெதிரான பாதகச் செயல்களில் சிலவற்றை உள்ளடக்கிய அறிக்கை ஒன்றை,  ஐக்கிய நாடுகள் சபை காலம் கடந்து வெளியிட்டுள்ளது.

இவ்வறிக்கை எந்தவிதத்திலும் முற்று முழுதானதல்ல. இதன் அடிப்படையில் இலங்கை இனவாத அரசால் நடாத்தப்பட்ட பாலியல் பலாத்காரங்கள், கொலைகள் முதல் சிறுவர், வயோதிபர்கள், பெண்கள், நோயாளிகள், என அனைத்து மனித ஜீவன்கள் மீதும் நடாத்தப்பட்ட அரச பயங்கரவாதங்களை, அதனடிப்படையிலான மனிதவுரிமை மீறல்களின் ஒரு சதவீதத்தைக் கூட இந்த அறிக்கை தனக்குள் உள்ளடக்கவில்லை.

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE