Language Selection

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

செய்தியும் செய்திக்கண்ணோட்டமும் – 10.05.2010

யாழ் சிறைச்சாலையில் மீண்டும் பஸ்தியாம்பிள்ளைகளோ?

யாழ்ப்பாணத்தில் அரசியல் கைதிகளாக உள்ள 8 பேர் மீது,  சிறைச்சாலை அதிகாரிகள் கடந்த 30ம் திகதி தாக்குதல் ஒன்றை நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. குறித்த சிறைச்சாலையின் ஒரு பக்கமாக உள்ள கம்பி ஒன்று கழற்றப்பட்டிருந்ததாகவும், இதனால் அங்கிருந்து இவர்கள் தப்பிச் செல்ல முற்பட்டதாகக் கூறி சுமார்  10க்கு மேற்பட்ட சிறைச்சாலை அதிகாரிகள்  குறித்த 8 பேர் மீதும் பல மணி நேரமாக தாக்குதலை மேற்கொண்டுள்ளனர் .

அவர்களில் இருவரது கை மற்றும் கால்கள் உடைந்துள்ளன. அவர்களது அந்தரங்க உறுப்புகளில் மிளகாய்த்தூள் தூவப்பட்டும் உள்ளன. சிறுநீருடன் இரத்தம் கலந்து செல்வது உள்ளிட்ட பல்வேறு நோய்த் தாக்கத்தினால் இவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்

செய்தியும் செய்திக்கண்ணோட்டமும்- 15-05-2010

மே 18-ன் ஓராண்டு

கடந்த வருடத்தின் மே மாத நடுப் பகுதியை விடுதலைப் புலிகளின் அரசியலுக்கு, அரசியல் போராட்டத்திற்கு ஏற்பட்ட சுனாமி அரசியலாகப் பார்க்கலாம். ஏன் ஓர் பயங்கரவாத அமைப்பொன்றின் அஸ்தமன காலமாகவும் கணிக்கலாம். தமிழ்த் தேசியத் தலைமை வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை தேர்தல் வெற்றிக்கான எடுகோளாக எடுக்க, புலிகள் எவ்வித சமூக விஞ்ஞான அரசியல் ஆய்வுமின்றி அதைத் தம் கைகளில் எடுத்து ஓர் 30-வருட காலம் அரசியல் அரசோச்சினார்கள். புலிகளின் இவ்வரசியல் போராட்ட மார்க்கம் விடுதலைப் போருக்கான எப்பரிமாணத்தையும் எட்டாத பட்சத்தில், முள்ளிவாய்காலுக்கு ஊடாக நந்திக்கடலில் போய் சங்கமமாகியிற்று….

புலிகளின் இத் தவறான அரசியல் போக்கால், விடுதலைப் புலிகளின் ஏராளமான தலைமைப் போராளிகள் கொன்றொழிக்கப்பட்டனர். பிரபாகரன் கூட குறைந்த பட்சம் தன் கழுத்தில் தொங்கிய சயனைற் குப்பியைக் கடிக்காததன் விளைவு, அவர் ஓர் காட்டு விலங்காட்டம் அடித்துக் கொல்லப்பட்டார். வன்னி மக்களை கேடயமாக்கியதில் 40,000ற்கு மேற்பட்ட தமிழ் மக்கள் கொல்லப்பட்டார்கள். கிட்டத்தட்ட அதேயளவு மக்கள் அங்கவீனர்களும் ஆனார்கள். இவைகள் யாவும் புலிகளின் புரட்சிகர வெகுஜனப் போராட்ட மார்க்கமற்ற ஆயுத வழிபாட்டு அரசியலின் தொழிற்பாடும் வெளிப்பாடுமேயாகும்.

செய்தியும் செய்திக்கண்ணோட்டமும்  – 25/05/2010

அமெரிக்காவில் நடைபெற்ற நாடு கடந்த அரசின் பிரதிநிதிகள் மாநாட்டில் அதன் தலைவராக  உருத்திரகுமாரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.  இம்மாநாட்டில் அமெரிக்காவின் சட்டமா அதிபரும், வியட்னாம் போருக்கு எதிரான இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவருமான ராம்ஸே கிளார்க் அவர்கள் பேசுகையில்

“உங்களுடைய சவால் மிகப் பெரியது.  சுதந்திரம் என்பது சாத்தியம் தான். ஆனால் நீங்கள் அதற்கு மிகக் கடுமையாக உழைக்க வேண்டும். அத்தோடு நீங்கள் மிகச் சரியாக இருத்தல் வேண்டும். அது மட்டுமல்லாமல் நீங்கள் சரியாகத் தான் செயற்படுகீறீர்கள் என்பதை மற்றையவர்கள் ஏற்றுக் கொள்ளச் செய்ய வேண்டும்.  அது மட்டுமன்றி உங்களுடைய வரலாற்றை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். வரலாற்றுணர்வு கொண்டவர்களாயிருத்தல் வேண்டும். அத்தோடு ஒரே தீவில் வாழ்கின்ற சிங்கள மக்களை விட வேறுபட்ட தனித்துவமான மக்கள் என்பதனைப் புரிந்திருக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

செய்தியும் செய்திக் கண்ணோட்டமும் 01-06-2010

20 வருடங்களுக்குப் பின்னர் யாழ்.பெரிய பள்ளிவாசல் வெள்ளியன்று திறப்பு

யாழ்ப்பாணம் பெரிய பள்ளிவாசல் 20 வருடங்களுக்குப் பின்னர் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்படவுள்ளது.

யாழ்.ஒஸ்மானியா கல்லூரி வீதியில் அமைந்துள்ள இந்தப் பள்ளிவாசல் 1713ம் ஆண்டில் ஒல்லாந்தர் காலத்தில் கட்டப்பட்டது. 1990 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் முஸ்லிம்களை வடக்கில் இருந்து வெளியேற்றியதை அடுத்து இப்பள்ளிவாசல் கைவிடப்பட்டது.

கடந்த வருடம் புலிகள் இயக்கம் தோற்கடிக்கப்பட்டதை அடுத்து வடக்கில் இருந்து இடம்பெயர்ந்த முஸ்லிம்கள் மீளக்குடியமர்ந்ததைத் தொடர்ந்து இப்பள்ளிவாசல் புனரமைக்கப்பட்டுள்ளது.

செய்தியும் செய்திக் கண்ணோட்டமும் – 06-06-2010

அரசாங்கத்துடனான பேச்சின் போது பிரிவினைவாதத்தை முன்வைக்கக்கூடாது   – ஜாதிக யஹல உறுமய எச்சரிக்கை

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர் தமது இருப்பினைத் தக்கவைத்துக் கொள்ள வேண் டுமானால், அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தும் போது பிரிவினைவாதத்தை முன்வைக்கக் கூடாது என ஹெல உறுமய எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஹெலஉறுமய கட்சி நேற்று நடத்திய ஊடக வியலாளர் மாநாட்டின் போது கலந்து கொண்டிருந்த அக்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எல்லாவல மேதானந்த தேரர் இதனைத் தெரிவித்தார்.

அங்கு தேரர் மேலும் தெரிவிக்கையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுதலைப் புலிகளின் கொள்கைகளை முன் வைத்து அவர்களின் நிழலாக செயற்பட எண்ணக் கூடாது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கொடுத்துள்ள சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி நாட்டைப் பிளவுபடுத்தும் நோக்கத்தை விடுத்து பேச்சுவார்த்தைக்கு தயாராக வேண்டும். அதனைத் தவிர்ப்பார்களானால் தமிழ் மக்களே அதில் பெரிதும் பாதிப்பினை எதிர் நோக்குவதுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்.

செய்தியும் செய்திக் கண்ணோட்டமும் – 14/06/2010

புலிகள் கேட்டவற்றை என்னிடம் கேட்கக்கூடாது!

சிங்களமக்கள் ஆணைப்படியே எதையும் செய்வேன்!

26-வருடங்களுக்கு முன்பு போபால் விஷவாயுத் தாக்குதலில் 20,ஆயிரம் மக்கள் பலி கொள்ளப்பட்டும் 5-லட்சம் மக்கள் மிகப்பெரும் துன்ப-துயர அவலங்களுக்கும் ஆளாகினர். இக்கொலை அவலங்களின் பிரதான காரணி அமெரிக்க நாட்டைச் சேர்ந்த ஆணடர்சன் என்பவனின் தலைமையில் இயங்கிய யூனியன் கார்பைட் இந்தியா லிமிட்டெட் என்ற இரசாயனத் தொழிற்சாலையே. அன்று உலகமே அதிர்ந்து போன இம் மாபெரும் மனிதப் படுகொலைகளுக்கு காரணகர்த்தாவான ஆண்டர்சனை, அன்றைய பிரதமராக இருந்த ராஜீவ் காந்தியே அமெரிக்காவிற்கு பாதுகாப்பாக தப்பியோடவிட்டாரென அவரின் அன்றைய முதன்மைச் செயலர் பி.சி. அலெக்சான்டர் கூறியுள்ளார்.

செய்தியும் செய்திக்கண்ணோட்டமும்     21-06-2010

இவ்வுலகில் போராட்டம் தவிர வேறும் பல உள்ளன     –கோத்தபாய

புனர்வாழ்வு அளிப்பதன் மூலம், புலி உறுப்பினர்களுக்கு சமூகத்தில் நல்ல பிரஜைகளாக வாழ்வதற்கு சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன.

வெலிகந்த சேனபுர புனர்வாழ்வு மையத்தில் வீட்டு மின்சாரப் பொறியியல், மேசன்வேலை, தச்சுவேலை, நீர்க் குழாய் பொருத்துதல்  போன்ற பல்வேறு கற்கை நெறிகளைப் பூர்த்தி செய்த 300-ற்கு மேற்பட்ட புலி உறுப்பினர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டள்ளன. இந் நிகழ்விலேயே கோத்தபாய மேற்கண்டவாறு குறிப்பிடடுள்ளார்.

செய்தியும் செய்திக்கண்ணேட்டமும்  29-06-2010

நித்தம் நித்தம் மாறுகின்ற எத்தனையோ!

நெஞ்சில் நினைத்திலே நடந்ததுதான் எத்தனையோ!

கோடு போட்டு வாழ்ந்தவர்கள் எத்தனையோ!

கொண்ட குறியும் தவறிப் போனவர்கள் எத்தனையோ!


கே.பி. சகலகலாவல்லவன்

 

செய்தியும் செய்திக்கண்ணோட்டமும்:    07-0702010

இலங்கை நாடாளுமன்றில் ரணில் மீது தண்ணீர் போத்தலினால் தாக்குதல் !

நாடாளுமன்றத்தில் நேற்று 2010 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டம் மீதான வாக்கெடுப்பு நடத்தப்பட்ட வேளையில் எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் மீது போத்தல் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

எனினும் ஐக்கிய தேசியக் கட்சியின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் அமரதுங்க, அவரது கையால் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எறியப்பட்ட போத்தலை தடுத்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால் அந்த போத்தல் ரணிலை தாக்கவில்லை.

பேரினவாத ரசிகர்களுக்கான விமல் வீரனின் “சாகாவரை சாப்பிடாமைப் போர்”—(சின்னத்திரை நாடகம்)

 ஐ.நா.முன்பாக வெறும் 50-மணிநேரக் காட்சியுடன் நிறைவெய்தியது!

 கலைஞரை விஞ்சிய விமல் வீரவன்ஸ!

செய்திக்கண்ணோட்டமும் 13-07-2010

 சாப்பிடாமைப் ‘போர் ஆட்டம்”

 “மகிந்த பானம்” அருந்த–தித்திப்பாக முடிவுற்றது.

அண்மைக் காலங்களில்-(இலங்கைப் பிரச்சினையில்) “சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்”  என ஆரம்பிக்கப்பட்ட போராட்டங்களில் யாராவது இறந்திருக்கின்றார்களா? நாம் இப்பேர்ப்பட்ட “தியாகிகளை” நாம் சாகும்படி கேட்கவில்லை. ஆனால் “சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்” எனத் தலைப்பிட்டு, அதை அசிங்கப்படுத்தாமல், உண்ணாவிரதப் போரை, அதற்குரிய “அர்த்தபுஷ்டியில்” அர்த்தப்படுத்தி போராடப் பழகுங்கள். இப்போ தமிழ்-சிங்கள அரசியலாளர்களுக்கு எதற்கெடுத்தாலும்  சாகும்வரை உண்ணாவிரதப் போராட்ட வாய்ப்பாடும், வழிமுறையும். ஓர் கைகண்ட ஒளடதம் ஆகியுள்ளது.

செய்தியும் செய்திக் கண்ணோட்டமும்  19-07-2010

போராட்டங்கள் கூடாததல்ல! அதை கூத்தாட்டம் ஆக்கக்கூடாது!

போராட்டங்கள் சிறைகளை நிரப்புவதற்கல்ல,

மக்கள் விடிவிற்கானதாக்கப்படல் வேண்டும்!

செய்தியும் செய்திக்கண்ணோட்டமும் 25-07-2010

கூட்டமைப்பின் கூத்தாட்ட அரசியல்!

என்று தணியும் இந்த இந்திய அடிமை மோகம்!

சிந்திய இரத்தம் காயும் முன்னே, சிந்த வைத்தவர்களின் காலடியில்….!

வன்னி நிலப்பரப்பில் கடந்த ஆண்டில் செய்யப்பட்ட மனிதப் படுகொலைகளுக் கூடே சிந்தப்பட்ட இரத்தம் காயவேயில்லை. மனித உடல்கள்-உக்காத முணட்ங்களாகவும்-எலும்புக் கூடுகளாகவும் உள்ளன. மூன்று லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் முட்கம்பி வேலிக்குள்ளும்-குடியேற்றப்பட்ட பகுதிகளுக்குள்ளும் பரிதவிக்கின்றனர். இவையனைத்தையும்  நேரில் சென்று பார்த்து, பரிதவித்துப்-பதறியவர்கள் தான், இக்‘கூத்தமைப்பினர்’ இவையனைத்தையும் செய்வித்த,  இக்காந்திய தேச “கசாப்புக்கடைக்காரர்”கள் தான் தமிழ் மக்களின் இரட்சகர்களாம்! இவர்களை விட்டால்,  தமிழ்மக்களுக்கு விடிவே இல்லலையாம்! என்குதுகள், இந்த இந்திய மோகம் கொண்ட ‘நவீன அடிமைகள்’!

‘எங்கள் புதிய ஜனநாயகக் கட்சியின்

புரட்சிக்கான ஆஸ்தானக் கொமிசார்’

நுர்று மலர்கள் மலரட்டும்,

நூறு கருத்துக்கள் முட்டி மோதட்டும்

என்றிடுவார்! – இருப்பினும்

இவரறியாக் கருத்துக்கள் வந்திட்டால் – யாரிவர்

செய்தியும் செய்திக்கண்ணோட்டமும் 10-08-2010

“இங்கு சிறுபான்மை என்ற ஒன்றில்லையே
எல்லாம் பெரும்பான்மையெனக் கொள்க”    –மகிந்தக் குறள்

இஸ்ரேலியப் பாணியில் மகிந்த குடியேற்றம்!

செய்தியும் செய்திக்கண்ணோட்டமும் 19-08-2010

உலகமயமாதலில் உலகம் உள்ளங்கையளவு,

உள்ளங்கையான இவ்வுலகின்–நம் வடகிழக்கு?

நம் இளைஞர் சமுதாயம் நாளைய சரித்திரம் படைக்குமா?

ஆகஸ்ட் 12- சர்வதேச இளைஞர் ஆண்டு. வட-கிழக்கின் கடந்த 3-தசாப்தங்களை தமிழ் இளைஞர்களின் ‘எழுச்சிப் போராட்டக் காலமாக’ கொள்ளலாம். எம் இளைஞர் சமுதாயம், தமிழ்த்தேசியம் வைத்த தவறான கொள்கை-கோட்பாடுகளுக்குள் விபரம் புரியாமல் மூழ்கியது ஓர் புறமிருக்க, மறுபுறம் அச்சமுதாயத்தின் விடுதலைப் போராட்ட உணர்வை, தியாகங்களை நாம் இச்சர்வதேச தினத்தில் நினைவு கூர்ந்து மதிக்கவேண்டும்.

செய்தியும் செய்திக்கண்ணோட்டமும் 28-08-2010

மனிதர்களால் மனிதர்களுக்குத் தரப்படும் கொடுமைதான்  ……

இன்றைய காலம் வரை நீடித்து வருகிறது

உலக மனிதநேய தினம்    World Humanitarian Day-

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE