Language Selection

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

இலங்கை மக்கள் இன்னொருமுறை வாக்களித்து விட்டால், இன்னொரு ஐந்தாண்டுகள் அரசியல்பற்றி சிந்திக்கத் தேவையில்லை! வாக்கு வாங்கியவர்கள் உங்களின் அரசியல் வாழ்வை கொண்டோடி    விடுவார்கள்!

கடந்த அரை நூற்றாண்டுக்கு மேற்பட்ட பாராளுமன்ற அரசியலுக்கு, மக்களும், மக்களுக்கு இவர்களும் இதைத்தான் செய்துள்ளார்கள்!

அரசியல் கட்சிகள் பலவற்றை செய்வதில்லை, நடைமுறைப்படுத்துவதில்லை, என்ற ஏமாற்று நோக்கில் இருந்தே, மக்களை நோக்கி தேர்தல் வாக்குறுதிகளை வைக்கின்றார்கள். ஆனால் நடைமுறைப்படுத்தும் விதத்தில், உத்திகளை, சாகசங்களை கையாண்டு மக்களை மயக்கி, மக்கள் பிரதிநிதிகள் ஆகிவிடுகின்றார்கள். இதுதான் முதலாளித்துவ பாராளுமன்றத்தின் பாசாங்கு அரசியல்!

செய்தியும் செய்திக் கண்ணோட்டமும்-28-02-10

அரசியலிலும், பொதுவாகவும், சிலரது நடவடிக்கைகள் சமூகத்தில் அந்நியப்பட்டவர்களைக் கூட சமூகத்தின் உந்துசக்தியாக்கிவிடும். மக்கள் விரோதியான பொன்சேகாவை மகிந்த அரசு “உலக நாயகன்” ஆக்கியதுபோல், புலம்பெயர் எச்சசொச்ச புலிகளினதும், அதன் புலத்து ஏவல்களதும் நடவடிக்கைகளால், கூட்டமைப்பும், சம்பந்தனும் தமிழ்தேசியத்தின் அடையாளமாக முத்திரை குத்தப்பட்டுள்ளனர்.

கூட்டமைப்பு எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலுக்காக செய்ததொரு நல்ல காரியம் 2004-ல் புலிகளால் நியமிக்கப்பட்ட வேட்பாளர்களுக்கு, இத்தேர்தலில் இடம் கொடுக்காதது. தமிழ்மக்கள் போல், கூட்டமைப்பும், புலிகளிடம் பலவற்றை பட்டறிந்துள்ளனரோ? என எண்ணவைக்கின்றது! பட்டறிவோ என்னவோ, கூட்டமைப்பும்- சம்பந்தனும் பலவற்றை பகிர்கின்றனர்.

செய்திக் கண்ணோட்டமும் 06.03.2010

மகோற்சவமாகியுள்ளது தேர்தல் திருவிழா!

தனிப்பெரும் தலைவர் முதல் — தனிப்பெரும் தலித்துக்கள் வரை வடம் பிடிக்கின்றனர்! இலங்கையின் பாராளுமன்றத் தேர்தல் ஓர் மகோற்சவமாகியுள்ளது. வடக்கில் அரசியல் கட்சிகள் இதை ஓர் தேர்த்திருவிழா ஆக்கியுள்ளனர். இதற்கு தனிப்பெரும் தலைவரின் பேரன் பொன்னம்பலம் முதல் தலித்துக்களின் “தனிப்பெரும் மகாசபையினர்” வரை வடம் பிடிக்கின்றனர்.

இம்முறைத் தேர்தல் திருவிழாவின்; விசேட அம்சம் “தமிழ்ஈழத்திற்கு” காங்கிரஸின் பொன்னம்பலம் வடம்பிடிப்பதே.! தனித்துவமான தேசம், இறைமை, அதிகாரம், தாயகம், தேசியம், சுயநிர்ணயஉரிமை தந்துநாமே என மந்திர உச்சாடனம் செய்கின்றார். இந்த மந்திர உச்சாடனத்தை விட்டு நேராக தமிழ்ஈழம் என்றால் என்னவோ? இந்;த ஈழத்தினால்தால்தானே, புலிகளும் இல்லாமல் போனவர்கள். இத்தேர்தலிலும் தனக்கும் இந்நிலைதானே, என சுத்தி வளைத்து அப்புக்காத்து அகராதியில் விளக்கம் கொடுக்கினறார்!

பத்திரிகையினதும்-குடும்பத்தினதும் நண்பர் ஒருவருக்கு; ஜென்னி மார்க்ஸ் எழுதிய ஓர் கடிதம் – பகுதி (01) 


ஜென்னியின் வாழ்க்கைக் குறிப்பு

 

ஜென்னி 1814-ம் வருடம் மாசிமாதம் 12-ந் திததி பிறந்தார். ஜென்னியின் பெற்றோரும், கார்ல் மார்க்சின் பெற்றோரும் பக்கத்துப் பக்கத்து வீட்டிலேயே வசித்து வந்தனர். இதன் விளைவு இருவரும் காதலர் ஆகினர். 1843-; ஆனி 19-ம் நாள் கார்ல் மாhக்ஸ் ஜென்னியைக் கைப்பிடிக்கின்றார். அன்றில் இருந்து தன் இறுதி வாழ்நாள் வரை மார்க்சின் தோழியாக, ஆசிரியையாக, மாணவியாக, குடும்பத் தலைவியாக, அன்பு மனைவியாக, வாழ்ந்தார். ஜென்னியின் தன் குடும்பவாழ்வின் பெரும்பகுதியை பஞ்சம் பசி பட்டினி பெரும்பிணி கடன்தொல்லை, பிள்ளைகளின் தொடர் மரணம் போன்ற சொல்லொனாத் துயர்களுக்கூடாகவே வாழ்ந்து முடித்தார்.

செய்திக் கண்ணோட்டமும்! 14.03.10

அன்புடையீர்!

நிகழும் விரோதி வருடம், திருவள்ளுவர் ஆண்டு, பங்குனித் திங்கள் 26-ம் நாள் (8-4-2010) அவிட்ட நட்சத்திரத்துடன் கூடிய பஞ்சமி – மரணயோகத்தில் இலங்கையின் பாராளுமன்றத் தேர்தல் வைபவம் நடைபெறவுள்ளது.

வைபவத்திற்கு இலங்கையின் 18-வயதிற்கு மேற்பட்ட வாக்காளர் பட்டியலில் பதிவுள்ள சகலரும் தங்க்ள் சுற்றம் சூழ, அக்கம் பக்கத்திலுள்ள வாக்குச்சாவடிகளுக்கு வருகை தந்து, வாக்களித்து எம்மை மகிழ்வித்தேகும் வண்ணம் அன்புடன் அழைக்கின்றோம்.

வாக்களிக்கும் சுபநேரம்: காலை 8-மணி முதல், மாலை 5-மணி வரை

பத்திரிகையினதும்-குடும்பத்தினதும் நண்பர் ஒருவருக்கு ஜென்னி மார்க்ஸ் எழுதிய ஓர் கடிதம்  (பகுதி-2)

 

எம் வாழ்க்கையின் ஒருநாளை இருந்தது இருந்தபடி சித்தரித்துக் காட்டுகின்றேன்:

இதைப் பார்த்தால் இத்தகைய இன்னல்களை நாடு கடத்தப்பட்ட சிலரே அனுபவித்திருப்பர் என்பதைக் காணலாம். செவிலித்தாய் அமர்த்துவது என்றால் மிகவும் செலவாகுமாதலால், எனது மார்பிலும் முதுகிலும் தொடர்ந்து பயங்கரமான வேதiனை இருந்தபோதிலும், குழந்தைகளுக்கு நானே பால் ஊட்டுவது என முடிவு செய்தேன். ஆனால் இந்தப் பச்சைக்குழந்தை பாலுடன் சேர்ந்து அளவற்ற கவலையினை – அடக்கி மூடப்பட்ட வருத்தங்களையும் சேர்த்துப் பருகியதால், இரவும் பகலும் பர்pதாபகரமாக கஸ்டப்பட்டபடி இருந்தது. இந்த உலகிற்கு வந்தநாள் முதல் அவன் ஒரு இரவிலாவது, இரண்டு மூன்று மணி நேரத்திற்கு மேல் நிம்மதியாக தூங்கியதில்லை. அண்மையில் அவனுக்கு கடுமையான வலிப்புக்கள் வரத்தொடங்கின. வாழ்விற்கும் சாவிற்கும் இடையே அவன் எப்போதும் போராடிக்கொண்டு இருந்தான். அவனுக்கிருந்த வேதனையில் அவன் பலமாக உறிஞ்சியதன் ;விளைவாக எனது மார்பு உரசலுக்கு இலக்காகி தோல் வெடித்து, நடுங்கும் அவனது சிறிய வாய்க்குள் இரத்தம் கொட்டியது. இவ்வாறு ஒருநாள் அவனுடன் நான் அமர்ந்திருந்தபோது எங்கள் வீட்டு நிர்வாகத்தை பார்ப்பவள் உள்ளே வந்தாள்.

 செய்திக்கண்ணோட்டமும்! 20.03.2010

எமது நாட்டின் “சரித்திர முக்கியத்துவம”; வாய்ந்த தேர்தல் திருவிழாவை, அதன் சகல உபயகாரர்களும் போட்டி போட்டு,  (மேளதாளம் -வாணவேடிக்கைகளுடன், –வில்லுப்பாட்டு கதாபப்பிரசங்கஙகளுடன்) தடல்புடலாய்ச் செய்கின்றனர். முழுநாடுமே (தேர்தல்); திருவிழாவின் குதூகல உச்சக்கட்டத்தில் உள்ளது.
இக்குதூகலம் அடுத்த ஓரிரு வாரங்களுக்கு, (சொற்பொழிவுகளாக, பிரச்சாரங்களாக, போட்டிப் பிரச்சாரங்களாக, வழக்காடு பட்டிமன்றங்களாக) மகாகோலம் கொள்ளும். குதூகலங்களுக்கு உள்ளும், எம்நாட்டு மக்களுக்கு உள்ள பெரும் கவலை, தடுமாற்றம், திணறல், என்னவெனில் இத்தேர்த்தலில் உள்ள 8,000பேரை எப்படி 196-பேர்கள் ஆக்குவதென்பதே! சர்p, மக்கள் என்னதான் செய்கின்றாhகள், என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். நான் சென்றவாரம் சொன்னதுபோல், இந்த 8,000த்தை பிரதிநிதித்துவப் ;படுத்தும், கட்சிகளும், குழுக்களும் மக்களுக்கு என்னதான் சொல்கின்றன என்பதைப் (தொட்டதை-விட்டதை) பார்ப்போம்.

செய்தியும் செய்திக்கண்ணோட்டமும்! 28.03.2010

தேர்தல் திருவிழாவிற்கு இன்னொரு பத்து நாள் உபயமே உள்ளது. நான் சென்ற வாரம் சொன்னதுபோல்  உபயகாரர்கள் தேர்தல் பிரசசாரங்களை, சொற்பொழிவுகளாக, போட்டிப் பிரச்சாரங்களாக, வழக்காடு-பட்டி மன்றங்களாக்கி மகாகோலம் கொள்ள வைத்ததில்,  மக்கள் சலிப்பிற்கும்,  உபத்திரவங்குளுக்கும் உள்ளாக்கியுள்ளனர்.  இவர்களின் இந்த சலிப்பான – உபத்திரவங்களையும்,  கடந்தவாரத்தில் விட்டதையும், தொட்டதையும் தொடாகின்றேன்.

இதில் ஜனநாயக நீரோட்டக்காரர்களான  “மகிந்த செஞ்சோற்றுக்காரர்களினதும்”  ஏனையவர்களினதும் ; தேர்தல்திருவிழா அரசியலைப் பார்ப்போம்.

உலகின் நீர் அவலம் பற்றிய குறிப்புகள்

உலக முதலாளித்து ஆளும்  வர்க்கம் மனிதகுல தேவைக்கான, பல  இயற்கையான அத்தியாவசியங்களைக் கூட இல்லாதாக்குகின்றது. இவற்றுள் குடிநீர்ப் பிரச்சினையும் ஒன்றாகியுள்ளது. இது இன்றைய சர்வதேசப் போராகவும் உருவெடுத்துள்ளது. இதை சர்வதேசத்தின் சுற்றுச்சூழல்  வாதிகள் பலமாக எச்சரிக்கின்றனர்.

செய்தியும் செய்திக்கண்ணோட்டமும்! 04-04-2010

இலங்கையின் பாராளுமன்றத் தேர்தல் திருவிழா நிறைவுற இன்னம் மூன்று நாட்களே உள்ளன. இது அவிட்ட நட்சத்திரத்துடன் கூடிய அட்டமி நவமியில், பஞசமியில் இனிதே நிறைவெய்துகின்றது. இத்தேர்தல் தற்போது தேர்த்திருவிழா கோலம் கொண்டுள்ளது.

“தந்தை செல்வாவின” 113-வது ஜனன காலத்தில், சகல அரசியல் கட்சிகளினதும்; சுயேட்சைகளினதும் தலைவர்களோடு வரதராஜப்பெருமாளும், மகிந்த மன்னனும் வடம் பிடித்து தேர் இழுத்த காட்சி, இலங்கையின் பாராளுமன்ற அரசியல் வரலாற்றில் கண்கொள்ளாக் காட்சியே! இதை நாட்டுமக்கள் சகல ஊடகங்களிலும் கண்டு களித்தனர். இவர்கள் எல்லோரும் தேரை இழுத்துவந்து வடகிழக்கு திசையில் நிறுத்தியதில், அது தென்மேற்குப் பக்கம் பார்த்தவண்ணம் இருக்கின்றது. ஆம்! இலங்கையின் பேரினவாத-குறுந்தேசிய இனவாதக் கட்சிகள் எல்லாம், கடந்த காலங்களிலும், சமகால பாராளுமன்றத் தேர்தலுக்கு ஊடாகவும் இலங்கையின் அரசியலை, வடகிழக்கு-தெற்கு மேற்காகவே ஆக்கியுள்ளார்கள். இதற்கு மகிந்த ராஜபக்ச தொடர்ந்தும் பேரினவாதத் தீனி போடுகின்றார்!

செய்தியும் செய்திக் கண்ணேட்டமும்  -  12.04.2010

கடந்த ஓரு மாதத்திற்கு மேலாக நடைபெற்ற தேர்தல் திருவிழா ஏப்ரல் 8-ன் பூங்காவனத்துடன் நிறைவெய்தியது,  2010-ன் தேர்தல் சகலதிலும் வரலாற்று முத்திரையைப் பதித்துள்ளது.  30க்கு மேற்பட்ட கட்சிகள்  800க்கு மேற்பட்ட சுயேட்சைக் குழுக்கள்  7600க்கு மேற்பட்ட  வேட்பாளர்கள்,  4அடி நீளமான வாக்குச்சீட்டில்  400-500க்கு மேற்பட்ட  தேர்தல் சின்னங்கள்  இப்படி வரலாற்றுப்  புகழ்மிக்க இன்னும் பல எக்கச்சக்கங்கள்.

தேர்தலுக்குப் பின் வரலாற்றில் மிகக் குறைந்த வாக்குகளைப் பெற்ற, மிகக்குறைந்த் கட்சிகளின்,  (அரசைத் தவிர) மிகக் குறைந்த பாராளுமன்ற உறுப்பினர்களுடன், புதுப் பாராளுமன்றத்தின் புதுமனைப் புகுவிழா நடைபெறவுள்ளது.

இலங்கையின் தமிழ்த் தேசியம் எப்போதும் மக்கள் விடுதலை நாட்டம் அற்றதாகவே இருந்தது
-மதுரைக் கருத்தரங்கில் ந. இரவீந்திரன்

இலங்கையில் ஆரம்பத்தில் இருந்து ஏகாதிபத்திய நலனுடன் கூட்டமைத்த, ஆளும் சாதித் தேசியமான தமிழ்த் தேசியம் எப்போதும் மக்கள் விடுதலை நாட்டம் அற்றதாகவே இருந்து வந்துள்ளது.

மேற்கண்டவாறு தமிழ்நாடு  மதுரை  இறையியற் கல்லூரியில்  “சாதிய சமூகத்தில் தேசிய இனப் பிரச்சினை” எனும் தலைப்பில்  நடைபெற்ற கருத்தரங்கில்  இலங்கையில்   இருந்து   வருகை   தந்திருந்த    கலாநிதி   ந. இரவீந்திரன் அவர்கள் உரையாற்றும் போது குறிப்பிட்டிருந்தார்.  தமிழ்நாடு இறையியற் கல்லூரியின்  பேராசிரியர் அறிவர். டேவிட்  இராஜேந்திரன்  தலைமையில் நடைபெற்ற கருத்தரங்கில் அவர் தொடர்ந்து பேசுகையில், இந்தியாவில் சுதந்திரப் போராட்டம் மிக வீறுடன் முன்னெடுக்கப்பட்டது. அதன் பேறாக இந்தியா விடுதலையடைந்த போது  இலவச  இணைப்பாக இலங்கைக்கும் சுதந்திரம் வழங்கப்பட்டது.  அரைக்காலனித்துவ நீடிப்புக்கு எதிராக பின்னர் தேசிய விழிப்புணர்வு ஏற்பட்டது. ஐ.தே.கட்சியில்  இருந்து பிரிந்து உருவாகிய சிறிலங்கா சுதந்திரக்கட்சி சிங்கள தேசிய முதலாளித்துவக் கட்சியாக தோற்றம் பெற்றது. அகில இலங்கை தமிழ்காங்கிரசில் இருந்து உருவாகிய செல்வநாயகம் தலைமையிலான  தமிழரசுக்கட்சி ஆரமபத்தில் தமிழ்த்தேசிய முதலாளித்துவ நலன்களை பிரதிநிதித்துவப்படுத்தியது.  பின்னர் பெருமுதலாளிய வர்க்க நலனை வெளிப்படுத்தி  ஐ.தே.கட்சியுடன் கூட்டுச் சேர்ந்தது. இலங்கையில் உருவான இரு கட்சிகளும் தமிழ்-சிங்கள இனவாதத்தின் அடிப்படையான தந்திரோபாயங்களை முன்வைத்து  தேர்தல் வெற்றிகளை ஈட்டின.

செய்தியும் செயதிக் கண்ணோட்டமும்  28-04-2010

கடந்த இரு மாதங்களுக்கு மேலாக நடைபெற்ற தேர்தல் திருவிழாவின் மூலம்  “புடம்  போட்டு  எடுக்கப்பட்ட இலங்கை மக்கள்”   ஏப்ரல் 8-ல் தங்களுக்குப் பிடித்த ,  தங்கள் அபிமான நட்சத்திரங்களை புதுப் பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுத்துள்ளார்கள்.  இதன் மூலம் இலங்கை மக்களின் அடுத்த ஐந்தாண்டிற்கான அரசியல் பணி முடிவுற்றுள்ளது.  இனி மேல் நிறைவேற்று அதிகாரம் கொண்டவரும், அவரின் குடும்ப நிறுவனமுமே இலங்கை அரசியலின் சகலதையும் தீர்மானிக்கப் போகின்றது.  மக்கள் புள்ளடியிட்டு தேர்ந்தெடுத்த 196-நட்சத்திரங்கள் போதாதென்று,  தேர்ந்தெடுத்ததுகள் தங்கள் துணைக்கு இன்னொரு 47பேரை (தேசியப்பட்டியல்) தெரிவு செய்துள்ளனர்.

அத்துடன் மகிந்த மன்னன் அதி முக்கியமான நான்கு மந்திரிப் பதவிகளை தான் எடுத்து வைத்துக் கொண்டு, தனக்குச் சேவகம் செய்ய,  தஞ்சாவூர்ப் பொம்மைகள் போன்ற  (இதுகள் எதற்கும் தலையாட்டும்)  37-முழுசும், 39-துணையும் கொண்ட மந்திரி சபையையும் ஏற்படுத்தியுள்ளார்.  இதற்குள் தான் டக்கிளசும்,  கருணாவும் முழு-அரை மந்திரிகள் ஆகியுள்ளனர்.

மேற்கு வங்கத்தின் லால்கர் பகுதி இன்று இந்தியாவின்  “பயங்கரவாத ஒழிப்பு”  யுத்தத்தின் மையமாக ஆகியுள்ளது.  ஆந்திராவில் மையங் கொண்டிருந்த மாவோயிஸ்ட் புயல்,  இன்று லால்கரில் சுழன்றடிப்பதனால், அங்கு வைத்தே மாவோயிஸ்ட் பயங்கரவாதத்தை வேரறுத்துவிடவேண்டும் என்பது, இந்திய ஆளும்தரப்பின் தீராத வேட்கையாகியுள்ளது.

இந்திய தரப்பின் விருப்பம் என்றில்லாமல், ஆளும்தரப்பு எனச் சொல்வதற்கும் காரணமுண்டு. இந்த ஒரு விடயத்தில் தான் எதிர்க்கட்சியான பா.ஜ.க.வும்,  மேற்குவங்க ஆளும் கட்சியான மார்க்சிஸ்ட் கட்சியும் காங்கிரஸ் அரசிற்கு முழு அளவிலான ஒத்துழைப்பை வழங்கியுள்ளனர். குறிப்பாக பா.ஜ.க. சிதம்பரத்தை தலைமேல் வைத்துக் கொண்டாடுகின்றார்கள். பயங்கரவாதத்தை தீர்க்கமான நடைமுறைகளினூடே ஒழிக்க முயல்வதற்காக, அண்மையில் தம்மீதான நடவடிக்கைகளை நிறுத்த வலியுறுத்தி 76 பொலீசாரை தாக்கி மாவோயிஸட்டுக்கள்  கொன்ற சம்பவத்திற்காக  பொறுப்பேற்று  சிதம்பரம் அமைச்சர்ப் பதவியை ராஜினாமா செய்ய வந்தபோது, பா.ஜ.க. அந்தக் கதையே எழக் கூடாது எனறு செல்லக் கண்டிப்பு செய்திருந்தார்கள்.

செய்தியும் செய்திக்கண்ணோட்டமும் 02-05-2010

பார்வதி அம்மாளும் பயங்கரவாதியோ?

சென்னையில் சிகிச்சை பெறவந்த விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளை திருப்பி அனுப்பியது குறித்து மத்திய அரசை உடனடியாகப் பதிலளிக்குமாறு சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிரபாகரன் தாயார் பார்வதியம்மாள் சிகிச்சைக்காக மலேசியாவில் இருந்து சென்னை வந்தார். அவர் விமான நிலையத்திலேயே திருப்பி அனுப்பப்பட்டார். இதை எதிர்த்து வழக்கறிஞர் கருப்பன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நலன் வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார்.

மனுவில்  “மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக கடந்த 16ஆம் திகதி மலேசியாவில் இருந்து சென்னை வந்த பார்வதி அம்மாளை குடியுரிமை அதிகாரிகள் திருப்பி அனுப்பியுள்ளனர். விசா உள்ளிட்ட உரிய அனுமதியுடன் வந்த பார்வதி அம்மாளை,  இந்தியாவுக்குள் அனுமதிக்காதது சர்வதேச மனித உரிமை மீறல். இதனால் பார்வதி அம்மாளை தனி விமானம் மூலம் மீண்டும் சென்னை அழைத்து வர மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்” என்று தெரிவித்திருந்தார். மேலும் மருத்துவச் செலவுகள் அனைத்தையும் மத்திய அரசே ஏற்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

செய்தியும் செய்திக்கண்ணோட்டமும் 03-05-2010

மீண்டும் வேதாளம் முருக்க மரத்தில்
 
வர்த்தக நிலையங்களில் சிங்களத்தில் பெயர்ப்பலகை எழுதுதல்,  சுற்றுலாப் பயணிகளுக்கு வாடகை வீடு கொடுத்தல்,  சிங்களவர்களுக்கு வீடு, காணி விற்றல்,  தனியார் சிற்றூர்திகளில் சிங்கள பாடல்களை ஒலிபரப்புதல் ஆகிய நான்கு விடயங்களுக்கும் தீர்வு காணுமாறு கோரி,  தமிழ்ப் பற்றுள்ள தேசிய விடுதலை இயக்கம் என்ற அமைப்பு சார்பில் யாழ்ப்பாணத்தில் இந்தத் துண்டுப்பிரசுரம் வழங்கப்பட்டுள்ளது.

“இன்று தமிழ் மக்களாகிய நாம் மிகப்பெரிய ஆபத்திற்குள் சிக்கியுள்ளோம். எமது மண்ணை ஆக்கிரமித்து நிற்கும் சிங்கள பேரினவாத அரசும் இராணுவமும் எமது இருப்பை அழித்துவிட பல உத்திகளை வகுத்துள்ளன. இந்த உத்திகளில் ஒன்று தான் தென்னிலங்கையில் இருந்து அநேக சிங்களவர்கள்,  சுற்றுலாப் பயணிகள் எனும் போர்வையில் எமது மண்ணை ஆக்கிரமித்து தமிழ் மக்களாகிய எம்மை சிறுபான்மையினராக்கும் முயற்சி.

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE