Language Selection

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

இது பேய்கள்ஆட்சி செலுத்தும் தேசம். இங்கு பிணங்களுக்குத் தான் கொண்டாட்டம். இங்கு சந்தோஷமாக வாழ வேண்டுமாயின், நாமும் பிணங்கள் ஆனால் தான் அது சாத்தியமாகும். மூன்று  தசாப்தம் புலிகளோடு வாழ்ந்த மக்கள்,  இன்று பேய்கள் மத்தியில் வாழ்க்கையினை நகர்த்த வேண்டியுள்ளது. இன்று  தமிழ் மக்களின் வாழ்க்கையில் சகல வழிகளிலும் சந்தோஷங்கள் சாகடிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. புலிகள் என்ற பயங்கரவாதிகளை அழித்துவிட்டோம், நாட்டில் பயங்கரவாதமே இல்லை என்று ஓலமிட்டுக் கொண்டிருக்கும் மகிந்தாவும், மகிந்தாவின் வால்பிடி அரசியல்வாதிகளும் நாடு முழுவதும் குறிப்பாக வடபகுதியில் இராணுவ பயங்கரவாதத்தினை கட்டவிழ்த்து விட்டுள்ளது. எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, ஆட்கடத்தல்… இப்படியே வன்முறைகள் நாளுக்கு நாள் கூடி கொண்டே போகிறது.

நத்தார், புதுவருடம் வந்துவிட்டால் ஐரோப்பாவின் தெருக்கள் எல்லாம் விழாக்கோலம் பூண்டுவிடும். விதம்விதமான அலங்காரங்கள், பல வர்ணங்களில் மின்விளக்குகளின் சோடனைகள் என்று பார்ப்பவர்களை அந்த இடத்தில் சிலையாக நிற்க வைத்துவிடுகிறது. கண்ணை கவரும் இந்த அலங்காரங்கள் ஓரிரு நாட்கள் இல்லை ஒரு மாதத்திற்கு மேலாக நீடித்திருக்கும். இதற்காக பல இலட்சங்களை இந்த ஐரோப்பிய அரசுகள் செலவிடுகின்றன.

கார்த்திகை, மார்கழி மாதங்கள் ஐரோப்பாவில் மிகவும் இருள் சூழ்ந்த நாட்கள். மழை ஒருபுறம், பனி ஒருபுறம் போட்டி போட்டுக் கொண்டு மக்களை குளிரிலே உறைய வைத்துவிடுகிறது. காலையில் அலாரம் அடித்துவிட்டால் கொலை வெறி வந்து விடுகிறது அலாரம் மேல். இன்னும் சிலமணி நேரங்கள் போர்வைக்குள் ஒளித்து கொள்ள வேண்டும் போல் ஆசை. வெளியிலே கால் வைப்பதென்றால் தற்கொலை செய்ய முயற்சிப்பது போன்ற உணர்வு. கோடை காலத்தில் சொர்க்க பூமியான ஐரோப்பியாவிலே இப்படியொரு கொடூரமான நாட்களா?

இன்று பரவலாக தமிழ்மக்கள் புலம் பெயர்ந்து வாழும் வெளிநாடுகளில் அரசியற் கூட்டங்கள், இலக்கிய சந்திப்புக்கள், புத்தக வெளியீடுகள் போன்ற பல நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.

30வருடங்கள் கருத்துக்களும், சிந்தனைகளும் சிறைப்படுத்தப்பட்ட அந்த இருண்ட நாட்கள் மாறி, இப்படியான நிகழ்வுகளை சுதந்திரமாக நாடாத்த முடிகின்ற சூழ்நிலை உருவாகியிருப்பது ஆரோக்கியமான வரவேற்க வேண்டியதொரு விடயமே. இந்த வாய்ப்பினை இன்றைய கலந்துரையாடல்களும், சந்திப்புகளும் எப்படி பயன்படுத்துகின்றன என்பதைப் பொறுத்தே பயன்பாடும் அமையும். தங்கள் சுயலாபத்திற்காகவும், தங்களை விளம்பரப்படுத்திக் கொள்வதற்காகவும் நடாத்தப்படும் நிகழ்வுகள் மக்களுக்கு பயன்படப் போவதில்லை. பெரும்பாலான நிகழ்வுகள் இந்த அடிப்படையில் தான் நடைபெறுகின்றன.

தமிழ் மக்கள் விரக்தியடைந்துள்ளார்கள். 30வருட போராட்டம் மக்களை சலிப்படைய வைத்துவிட்டது என்று சொல்லிக் கொண்ட தமிழ் மக்களின் போராட்ட உணர்விற்கு ஊட்டச்சத்து கொடுக்க முன்வந்துள்ளார்கள் சில அரசியல்வாதிகள்.

புலிகள் இருக்கும் வரை புலிகளுக்கு வால்பிடித்துத் திரிந்த இந்த கூட்டம்…,

தங்களுடைய கருத்துக்களை வெளிப்படையாக கூற முடியாமல் புலிகளுக்கு தலையாட்டிக் கொண்டது மட்டுமல்லாது, புலிகளின் தவறான நடவடிக்கைகளை சரியென்று நியாயப்படுத்தி மக்கள் மீது திணித்து மக்களை தவறான சிந்தனையில் வழி நடாத்தி வந்த இந்த கூட்டம்…,

தனி மனிதர்களின் கூட்டு ஒரு சமூகமாகிறது.  ஓவ்வொரு சமூகத்தினை சார்ந்த மக்களிடமும் மொழி, கலை கலாச்சாரம், பண்பாடு… போன்றவை மாறுபட்டு காணப்பட்டாலும் பாதிப்புகள் ஒன்றாகத்தான் இருக்கிறது. நாங்கள் சொந்த நாடற்ற சிறுபாண்மையினம் என்று பார்க்கும் போது எங்களுடைய சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட வேண்டுமென்பதில் மாற்றுக் கருத்து  இருக்க முடியாது. எங்களைப் போன்று உரிமைக்காக போராடுகின்ற சிறுபாண்மையின மக்கள் பலநாடுகளில் இருக்கின்றார்கள். இந்த மக்களும் இன்னொரு அரச அதிகாரத்தினால் அடக்கி ஒடுக்கப்படுபவர்களே. ஆனால் அதே நேரத்தில் சொந்த நாட்டிலே தனது சொந்த அரசின் கீழ் வாழும் மக்களின் நாளாந்த வாழ்க்கையினைப் பார்க்கும் போது, இரண்டு மக்களினதும் பிரச்சனைகள் சொந்தநாடு, சொந்த அரசு என்ற ஒன்றைத் தவிர மற்ற எல்லா நிலைகளிலும் ஒன்றுபட்டே காணப்படுகிறது. அரச அதிகாரத்தினால் மக்கள் பல வழிகளில் சுரண்டப்படுவதும் அடக்கி ஒடுக்கப்படுவதும் எல்லா மக்களுக்கும் பொதுவானதாகவே காணப்படுகிறது. இந்த நிலைமையினைப் பார்க்கும் போது, ஒரு மனிதனுக்கு சொந்த நாடு மட்டும் அந்த மனிதனுடைய பிரச்சனைகளைத் தீர்த்துவிடாது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். மனிதனுடைய வாழ்க்கையினை முடிவு செய்வது அந்த நாட்டு அரசியல்.  இந்த அரச அதிகாரத்திலே தனிமனிதனுடைய சிந்தனையும் முடிவும் இங்கு  முக்கிய பங்கினை வகிக்கின்றது.

காலாகாலமாக மக்களை கூறுபோட்டு மக்களைப் பிரித்து வைத்து, எமது தமிழ் சமூகத்தினை சீரழித்து வருகிறது சாதி என்ற பேய். அரசியல் ரீதியாக, பொருளாதார ரீதியாக பல வழிகளில் சுரண்டப்பட்டு, ஓடுக்கப்பட்டு சித்திரவதையினை அனுபவிக்கும் அப்பாவி மக்களின் வாழ்க்கையினை துன்பத்தின் எல்லைக்கே கொண்டு செல்கிறது இந்த சாதிப் பிளவு. கூடுதலாக கிராமப் புறங்களில் வாழும் மக்களே சாதி ஒடுக்கு முறையினால் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். ஊர்களுக்கிடையிலே பிரச்சனைகள், குழுமோதல்கள் என்று பல பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் தான் அந்த மக்களின் வாழ்க்கையுள்ளது.


சிங்களஅரசினைமூச்சுக்கு மூச்சு பேச்சிலும், எழுத்திலும் இனவாத அரசு என்று குற்றம் கூறிக் கொண்டிருக்கும் தமிழ்கட்சிகளும், தமிழ் அரசியல்வாதிகளும் இனவாதம் பேசியே அப்பாவி மக்களை ஏமாற்றி தங்கள் அரசியற் பிழைப்பினை நடாத்திக் கொள்கிறார்கள். ஈழத்திலும், புலம்பெயர்ந்த நாடுகளிலுமுள்ள தமிழ் அரசியல்வாதிகள் வெறும் இனவாதத்தினை வைத்தே தங்கள்    அரசியலை ஓட்டுகிறார்கள். மக்களுடைய அடிப்படைப் பிரச்சனைகளை மறைத்து அவர்களை ஏமாற்றி தங்கள் அரசியற் பிழைப்பினை நடாத்த இந்த இனவாத அரசியலை  பயன்படுத்துகிறார்கள்.

துப்பாக்கிகள் மௌனித்து ஓராண்டினை நெருங்கியும் தமிழ் மக்களினது மௌனம் இன்னும் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. சிறிய கூடாரங்களுக்குள் ஒரு குறுகிய நிலப்பரப்பினுள் எந்தவித அடிப்படை வசதியுமின்றி குழந்தைகள், வயோதிபர், கற்பிணிகள் என்று பல தமிழ் மக்களுடைய அன்றாட வாழ்க்கை முடக்கப்பட்டு மௌனமாக்கப்பட்டுவிட்டது. பாசிசம் அவர்கள் வாய்களைப் பூட்டுப் போட்டு இறுகப் பூட்டிவிட்டது. வீடுகளை நிலங்களை இழந்து, தொழிலை இழந்து, கணவன்.. மனைவி.. பிள்ளைகளை இழந்து வேதனையோடு வாழுகின்ற இந்த மக்களுடைய வாழ்க்கை தொடர்ந்து கேள்விக்

தொலைந்து போகும் அடையாளங்களை
தூக்கிநிறுத்துவதற்கு
புலிப்பிரமுகர்கட்கும் புலிஎதிர்ப்பு பிரமுகர்கட்கும்
மகிந்த வள்ளலானார்
இரும்பும் கரும்பாய் இனிக்குமடா இனி….

 

பீகார் தலைநகர் பாட்னா மத்தியச் சிறையில் இருக்கும் கைதிகள் மருத்துவர் பினாயக் சென்னுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பைக் கேள்வியுற்ற பின் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இது இன்றைய செய்தி.

மருத்துவர் பினாயக் சென்னை ‘தேசத் துரோகி’ என்று ஒரு நீதிபதி தண்டித்த விஷயத்தை தம்மால் தங்கிக் கொள்ள முடியாது என்றும் அதனைக்  கண்டித்தும் தண்டனைக் கைதிகள், விசாரணைக் கைதிகள் என சிறையில் இருக்கும் நூற்றுக் கணக்கான கைதிகள் அனைவரும் தொடர் போராட்டங்களை நடத்தி வருவதாக IANS செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டு உள்ளது.

அமைச்சர் சிதம்பரத்தின் சமீபத்திய மகாராஷ்டிரா மாநிலப் பயணத்திற்குப்பின்  அந்த மாநிலத்தைச் சேர்ந்த தலித் இயக்கச்  செயல்வீரர்களில் முக்கியமானவரான சுதிர் தாவாலே தேசத்துரோகச் சட்டத்தில் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். கடந்த வாரம், மாவோயிஸ்ட் இயக்கம் செல்வாக்குடன் இயங்கி வருவதாகச் சொல்லப்படும் கட்ச்சிரோலி மாவட்டத்திற்கு அமைச்சர் சிதம்பரம் பயணம் செய்து போலீஸ் நடவடிக்கைகளை ஆய்வு செய்துவிட்டு வந்தார். மாவோயிஸ்டுகளையும் அதன் ஆதரவாளர்களையும் ஒடுக்க மாவட்ட நிர்வாகம் தீவிரமாகச் செயல் பட்டு எல்லாவிதமான நடவடிக்கைகளையும் எடுக்கவேண்டும் என்று  ‘கேட்டுக் கொண்டிருந்தார்’.

சட்டத்தின் பெயரால் வேசித்தனம்: பினாயக் சென்னுக்கு வழங்கப்பட்ட தண்டனை குறித்து லேன்செட் (LANCET) பத்திரிகை எழுதிய தலையங்கம்

லேன்செட் பற்றிய ஒரு குறிப்பு

உலகின் தலை சிறந்த மருத்துவ இதழாகக் கருதப்படும் லேன்செட் (LANCET)  இந்திய நீதியைக் காறி உமிழ்ந்து தலையங்கம் ஒன்றைத் தீட்டியுள்ளது. அதன் தலையங்கத்தை படிக்கும் முன் வாசகர்கள் லேன்செட் இதழைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டியது அவசியம். கடந்த 187 ஆண்டுகளாக வெளிவரும் இந்த வார இதழ் ஒரு சர்வதேச மருத்துவ அறிவியல் இதழ். மனித குலத்தை மேம்படுத்தும் ஆய்வுக் கட்டுரைகளை வெளியிடுவதே இந்த இதழின் முதல் நோக்கம். தமது வாழ்நாளில் ஒரு கட்டுரையாவது இந்த இதழில் வெளியிடமாட்டர்களா என்று உலகம் முழுதும் உள்ள அறிஞர்கள் தவம் கிடக்கும் அளவுக்கு செல்வாக்கு மிகுந்த ஒன்று. நோபெல் பரிசு வென்ற அறிஞர்கள் பலரும் தமது ஆய்வுகளை முதன்முதலாக இந்த இதழிலேயே வெளியிடுவது வழக்கம்.


பினாயக் சென்என்ற மருத்துவர் சமீப காலத்தில் இந்திய அரசியலில், நீதித்துறையினரால், பத்திரிகைகளால், அறிவாளிகளால்  பெரிதும் பேசப்பட்டு வருகிறார். அவர் ஒரு ஊழலில் திளைத்த அரசியல்வாதியோ அல்லது கிரிமினல் பணிகள் செய்து மாட்டிக்கொண்ட போலிஸ்காரரோ அல்ல, வெறும் குழந்தை நல மருத்துவர் மட்டுமே. மருத்துவர்கள் எல்லாம் நகரங்களையும், பணத்தையும் தேடி ஓடும இந்தக் காலத்தில் இவர் பணமில்லாத வறுமையில் வாடும் பழங்குடிகள் நிறைந்து வாழும் சத்திஸ்கர் மாநிலத்தில் சென்று இலவச சேவை செய்து வருபவர். வேலூர் கிறித்தவக் கல்லூரியில் படிப்பில் தங்கப்பதக்கம் வென்ற, எம்.டி படித்த ஒரு மருத்துவர் மற்றும் பேராசிரியர் இவர். அநேகமாக அவரைப்போன்றோர் இருக்கும்  இடம் அமெரிக்காவோ அல்லது குறைந்த பட்சம் நமது சென்னை போன்ற  நகரத்தின் ஐந்து நட்சத்திர மருத்துவமனைகள் தான். ஆனாலும் பினாயக் வங்காளத்தின் கர்மயோகிகள் வழியில் வந்த ஒரு மனித நேயம் மிக்க மருத்துவர்.

இந்தக் கட்டுரையின்நோக்கம் டுனிசியா, ஏமன், எகிப்து போன்ற அரபு நாடுகளில் நடக்கும் ஜனநாயகப் போராட்டங்களைப் பற்றிய செய்திகளைத் தருவது மட்டும் அல்ல. மாறாக, அரபு மக்களைப் பற்றிய பொய்ப் பிரச்சாரங்களை தொடர்ந்து மேற்கொண்டு வரும் மேற்கு உலக நாடுகளின் செயல்களை மீறி அரபு மக்களின் போராட்டம் முன்னேறியிருப்பதையும் அது சீனா, இலங்கை, பர்மா, போன்ற சர்வாதிகார நாடுகளில் வாழும் மக்களுக்கு விடுக்கும் செய்தியை வாசகர்களுக்கு உணர்த்துவதே நமது நோக்கம்.

உலகின் பிரபலமான முதலாளித்துவ பத்திரிகைகளில் முதலாவதாகக் கருதப்படும் வால் ஸ்ட்ரீட் ஜெர்னல் (Wall street Journal) இந்தியாவின் அடுத்த பிரதமர் ப.சிதம்பரமாக இருக்கக் கூடும் என்று செய்தி வெளியிட்டுள்ளது. கூடவே, இந்திய உள்துறை அமைச்சராக இருக்கும் அவருடைய ஒரு பேட்டியையும்  வெளியிட்டு உள்ளது. ஓய்வுபெற்ற உலக வங்கிக் குமாஸ்தாவான தற்போதைய இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கின் நாட்கள் எண்ணப்படுகின்றன என்று தான் தோன்றுகிறது.

கடந்த மூன்று நாட்களாக, இந்தியப் பத்திரிகைகள் தொலைக் காட்சிகளில் ஒரே ஒப்பாரி: மாவோயிஸ்டு பயங்கரவாதிகள் மாவட்ட ஒரு நல்ல ஆட்சித்தலைவரைக் கடத்திக்கொண்டு போய் விட்டார்கள். கொலைகார்கள். ஐயோ என்ன இது மோசம். மாவோயிஸ்டுப் பயங்கரவாதிகளின் நிபந்தனைகளுக்கு செவிசாய்க்கக் கூடாது. அவர்களோடு பேசக்கூடாது அவர்களுடனான போரை தீவிரப்படுத்த வேண்டும். விமானங்களைக் கொண்டு தேடவேண்டும். முடிந்தால் ராணுவ கமாண்டோக்களைக் கொண்டு அவர்களை மீட்க வேண்டும்! இப்படிப் பலவாறாக பேச்சு! உளறல் !

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE