Language Selection

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 43

 

எமது தற்பாதுகாப்புக்கு ஆயுதம் வழங்கிய சிறீ சபாரத்தினம்

இந்திய அரசின் அழுத்தம் காரணமாகவும், இந்திய மத்தியத்துவத்துடனும் இலங்கை அரசுக்கும் ஈழவிடுதலை போராட்ட இயக்கங்களுக்குமிடையில் பூட்டான் தலைநகர் திம்புவில் பேச்சுவார்த்தை ஆரம்பமாவதற்கு முன்னராக இலங்கை அரசு போர்நிறுத்தத்தை அறிவித்திருந்தது. ஜே.ஆர் ஜெயவர்த்தனா தலைமையிலான இலங்கை அரசினால் தமிழ் மற்றும் முஸ்லீம் மக்கள் மீதான பிரகடனப்படுத்தப்படாத ஒரு யுத்தத்தை முகம் கொடுத்து வந்த வடக்கு கிழக்கு மக்கள், அரசின் யுத்தநிறுத்தமும் இந்திய மத்தியத்துடனான திம்புப் பேச்சுவார்த்தையும் இனப்பிரச்சினைக்கொரு நிரந்தரத் தீர்வையும் சமாதானத்தையும் கொண்டுவரும் என எதிர்பார்த்தவர்களாகக் காணப்பட்டனர்.

‘நாதா, என்ன ஆழ்ந்த சிந்தனையில் இருக்கின்றீர்கள். முகம் கவலையில் வாட்டமுற்றிருக்கிறது.”

‘வா தேவி, வந்து இப்படி உட்காரு. நீ நாள் முழுவதும் சமையலில் கழித்து விடுகிறாய். உனக்கு எதுவுமே தெரிவதில்லை. எல்லா பிரச்சனையும் என் தலையை தானே வந்து விழுகிறது.”

பக்கத்தில் உட்கார்ந்த படியே தேவி, ‘நீங்கள் எதை கூறுகின்றீர்கள். எனக்கு எதுவுமே புரியவில்லை. கொஞ்சம் விளக்கமாகத் தான் சொல்லுங்களேன்.”

வனிதாவிற்கு பெரிய அதிர்ச்சி…

கோபமும் வேதனையும் மனதினை வாட்ட, ஒரே குழப்பம். அவளால் எந்த முடிவுக்கும் வரமுடியவில்லை. வீட்டுக்கு வந்ததும் உடுப்புக் கூட மாத்தாமல் கட்டிலில் வந்து விழுந்து விட்டாள்.

சாதாரணமாக அவள் வெளியிலே போவதில்லை. பல நாட்களுக்கு பிறகு நேற்றுத் தான் அம்மாவோடு ரவுனுக்கு போனாள். தீபாவளி வருகுது, நிவேதாவுக்கும் ஏதாவது வாங்கிக் கொண்டு வரலாம் என்று அம்மா கூப்பிட்டதால் தான் அவள் போனாள். பேசாமல் வீட்டில் நின்றிருந்தால் எதுவும் தெரிந்திருக்காது. எதையுமே கேட்டிருக்க வேண்டியதில்லை..! நல்ல வேளையாக அம்மா கேட்கவில்லை. அம்மா கேட்டிருந்தால் மனமுடைந்து போயிருப்பாள்.

இன்று ஆட்சியாளர்களுக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழும் நிகழ்வுகள் பல நாடுகளில் நடைபெறுகின்றது. அது நாளை எங்கே எப்படி வெடித்தெழும் என்பது யாருக்குமே தெரியாது. இந்த மக்கள் எழுச்சியினை ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பாளர்கள் தங்கள் நலனுக்கு சார்பாக பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பது ஒருபுறம்.., ஆனால் அதிகார வர்க்கம் என்றுமில்லாத அளவிற்கு மக்களை பார்த்து சற்று பயப்பட ஆரம்பித்துள்ளது.

அரைவாசிவண்டில் நிறைந்து விட்டாலும் இன்னும் ஒரு சில பொருட்கள் எடுக்க வேண்டியிருக்கிறது. தான் வாங்க வந்ததை.., பிள்ளைகள் சொல்லிவிட்டது.., எல்லாம் எடுத்தாச்சு. ஆனால், மனுசி சொல்லி விட்டதைத் தான் இன்னும் எடுக்கவில்லை.

 

அதை எந்த மூலைக்குள் கொண்டுபோய் வைச்சிருக்கிறாங்களோ..?


நேரம் பன்னிரண்டு மணி ஆகப்போகிறது. ஒரு மணிக்கு வேலைக்கு வேறை இறங்க வேணும்.  ஆனா, மனுசி சொன்னதை வாங்காமல் போகமுடியாது. வாங்காது விட்டால், வெள்ளிக்கிழமை அதோ கதியாகிவிடும்.

அவனுடைய நெஞ்சு உச்சவேகத்தில் பட்டுப்பட்டென்று அடித்தது. கைகால்கள் படபடக்க.., ஆத்திர ஆத்திரமாக வந்தது. அழுகை.., கத்தல்.., ஒப்பாரி.., சத்தம் கூடக்கூட அவனது இரத்தக் கொதிப்பும் மேலும் மேலும் ஏறிக் கொண்டிருந்தது. எல்லோரையும் விலத்திக் கொண்டு போய் அங்கே இருக்கும் உலக்கையினை எடுத்து அந்த இருவரதும் மண்டையினைப் பிளந்து விட வேண்டும் போலிருந்தது. கோபத்தை அடக்கிக் கொண்டு சிந்தனையையும், பார்வையினையும் வேறு பக்கம் திருப்பிக் கொண்டான்.

ஓய்ந்து கொண்டிருந்த அழுகைச் சத்தம் இரண்டாவது தடவையாக திடீரென உச்சத்திற்கு வந்தது. பார்வையினை அந்தப் பக்கம் திருப்பினான்.

70க்கு பிறகு பேரினவாதம் இலங்கை அரசியலினை ஆக்கிரமித்துக் கொள்ள இனவாதமும் மக்களை பற்றிக் கொண்டது. அது நாளுக்கு நாள் மக்கள் பேச்சிலும் மனதிலும் வளர்ந்து வந்து இன்று பல தமிழ்மக்கள் மத்தியில் சிங்கள, முஸ்லீம் மக்களை எதிரிகளாகப் பார்க்கும் மனநிலை கூடுதலாக காணப்படுகிறது. சிங்கள மக்களோடு நாங்கள் சேர்ந்து வாழ முடியாது என்ற கருத்தியலை இன்றைய தமிழ் அரசியல்வாதிகளாலும், தமிழ் நாட்டு அரசியல்வாதிகளாலும் பரவலாக சாதாரண தமிழ் மக்களின் சிந்தனையில் பரப்பப்பட்டு வருகிறது. இது அரசியல்வாதிகளின் இனங்களை கூறு போடும் அரசியல் நடவடிக்கையாகும். இந்த அரசியல்வாதிகளின் சுயநல அர சியற் போக்கும், தவறான அரசியற் பார்வையுமே இதற்கு முக்கிய காரணமாக அமைகிறது.

70க்கு பிறகு பேரினவாதம் இலங்கை அரசியலினை ஆக்கிரமித்துக் கொள்ள இனவாதமும் மக்களை பற்றிக் கொண்டது. அது நாளுக்கு நாள் மக்கள் பேச்சிலும் மனதிலும் வளர்ந்து வந்து இன்று பல தமிழ்மக்கள் மத்தியில் சிங்கள, முஸ்லீம் மக்களை எதிரிகளாகப் பார்க்கும் மனநிலை கூடுதலாக காணப்படுகிறது. சிங்கள மக்களோடு நாங்கள் சேர்ந்து வாழ முடியாது என்ற கருத்தியலை இன்றைய தமிழ் அரசியல்வாதிகளாலும், தமிழ் நாட்டு அரசியல்வாதிகளாலும் பரவலாக சாதாரண தமிழ் மக்களின் சிந்தனையில் பரப்பப்பட்டு வருகிறது. இது அரசியல்வாதிகளின் இனங்களை கூறு போடும் அரசியல் நடவடிக்கையாகும். இந்த அரசியல்வாதிகளின் சுயநல அர சியற் போக்கும், தவறான அரசியற் பார்வையுமே இதற்கு முக்கிய காரணமாக அமைகிறது.

என்ரை அம்மா…, என்ரை அப்பா…,

ஐயோ என்ரை பிள்ளை… என்று பலஅவலக் குரல்களையும் அலறல்களையும் சனல்-4 தொலைகாட்சியில் பார்த்து நெஞ்சு அடைத்துப் போகும் நிலைக்கு நாம் சென்று விட்டோம். ஆனால் எங்களுக்குக் கேட்காத எங்களால் பார்க்க முடியாத இன்னும் எத்தனை ஆயிரம் அலறல்கள் அந்த வன்னி மண்ணுக்குள் புதைந்து போயிருக்கின்றது.

உலகம் இயந்திரமயமாகிவிட்டது. பூமி தன் இயற்கை சக்தியிiனை இழந்து இயந்திரத்தால் இயக்கப்பட வேண்டி நிலமைக்கு வந்து கொண்டிருக்கிறது. பொருளுக்குள் வாழ்தல் தான் உலகமாகிவிட்டது. இந்த பொருளுக்காக அலையும் முதலாளித்துவம். இயந்திரமயமகாக்குதல், நவீனத்துவம், உலகமயமாக்குதல் … இப்படியே புதிய புதிய திட்டங்களையும் மாற்றங்களையும் திடீர் திடீரென உருவாக்கி, தனது உச்சலாபத்தினை நோக்கி தன்னை நகர்த்திக் கொண்டிருக்கிறது. இயந்திரங்களோடு பழகிப்பழகி மனிதர்களையும் இயந்திரமாகவே பார்க்கின்றது இந்த முதலாளித்துவம்.

போர்குற்றங்களுக்கு நடவடிக்கை எடுத்தால் வீட்டோ அதிகாரமுள்ள நாடுகளோடு சேர்ந்து எதிர் நடவடிக்கை எடுப்போம் என்கிறது இலங்கை அரசு. தாங்கள் செய்தது போர்க்குற்றம் தான் ஆனால் அதற்கு எதிராக யாரும் எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்கிறது மகிந்த பாசிசக் கும்பல்கள். தாங்கள் குற்றச் செயல்களை மறைப்பதற்கு இன்று ரசியாவின் கால்களில் அடைக்கலமாகியுள்ளது இந்த பாசிச கும்பல்கள்.

 

வீட்டோ அதிகாரத்தினால் பான் கீ மூன் மீது எதிர்நடவடிக்கை எடுப்போம் என்று ஐக்கியநாடுகளுக்கு மிரட்டல் விடுத்துள்ளது. 30 ஆண்டுகால யுத்தத்தினை ஆராயாமல் போரின் இறுதி மூன்று நாட்களை மட்டும் பார்க்கிறார்கள் என்ற இலங்கை அரசின் அறிக்கை, அந்த மூன்ற நாட்களும் நாங்கள் செய்தது போர்க்குற்றம் தான், ஆனால் 30வருடம் புலிகள் செய்த குற்றங்களைப் பார்த்தால் அது ஒன்றுமே இல்லை என்கிறார் இலங்கை அரசின் ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல. ஒரு பாசிசத்திற்குள் இன்னொரு பாசிசத்தினை மறைத்துவிடப் பார்க்கிறார் இந்த ரம்பத்வெல.

தமிழ்மிரர் பத்திரிகைக்கு இராணுவ அதிகாரி மேயர் ஜெனரல் ஹத்துருசிங்க வித்தியாசமான ஒரு பேட்டியினை வழங்கியுள்ளார். இந்த ஜெனரலுடைய கடந்த கால நடவடிக்கை பற்றி எதுவும் தெரியாது. அவரது இந்த பேட்டி பற்றிய பார்வை தான் இது.

கொள்ளையடிக்க விரும்புபவர்கள் கொள்ளையடிக்கலாம். கொலை செய்ய விரும்புபவர்கள் கொலை செய்யலாம். பெண்களை கற்பழிக்க விரும்புபவர்கள் கற்பழிக்கலாம். நீங்கள் இதையெல்லாம் யாருக்கும் தெரியாமல் எந்தத் தடயங்களும் இல்லாமல் செய்தால் பாவங்களைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை. வாரத்திற்கொரு முறை விரதமிருந்து கோவிலுக்கு சென்று வந்தால் போதும் எல்லாப் பாவங்களும் தீர்ந்துவிடும்.

இன்று ஈழத்தில் என்ன நடக்கிறது?

பல துரோகக் கும்பல்கள் புதிய முகங்களோடு மக்கள் முன் தோன்றியுள்ளார்கள். வன்னியை புனரமைக்க ஒருவர், யாழ்பாணத்தை வசந்தமாக்க ஒருவர், கிழக்கு மக்களை தூக்கி நிறுத்த சிலர் என்று திடீர் அரசியற் பிறப்பெடுத்துள்ளார்கள். கோடிக் கணக்கில் மக்கள் பணத்தினை சுருட்டி தங்கள் கணக்கில் பதுக்கி வைத்திருக்கும் பண முதலைகள் தான் இவர்கள். இவர்கள் தான் இன்று மீட்பாளர்களாக அவதாரம் எடுத்துள்ளார்கள்.

முழுப் பூசனியினை சோற்றில் மறைத்த கதை போல முடிந்து போன நிகழ்வுகளை, திட்டமிட்டு மக்களுக்கு மறைத்து வரும் புலிகளின் நடவடிக்கையினால் பல அப்பாவி புலி ஆதரவாளர்கள் மனதால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். தலைவர் இருக்கிறார், வருவார், போராட்டம் மீண்டும் ஒருநாள் தொடரும், சிங்களவனின் திமிரை அடக்கியே தீருவம் என்ற சிந்தனையும் நம்பிக்கையும் பலருடைய மனதிலே பதிந்துள்ளது. தங்கள் சுயநலத்திற்காக இந்த அப்பாவிகளை ஏமாற்றி வரும் புலிகள், கடந்த கால அரசியற் தவறுகளை…, தலைவரின் மரணத்தினை… மறைப்பதன் மூலம், தங்கள் எதிர்கால அரசியலினை நகர்த்தி வருகிறார்கள். உண்மையினை கூறிவிட்டால், தங்களுக்கொன்று எதிர்காலத்தில் அரசியல் எதுவும் இல்லாது போய்விடும் என்ற பயம் இவர்களிற்கு. ஆனால் இவர்களை நம்பி,

தோழர்களே கவனம்

எங்களுக்காக கண்ணீர்விடுவது ஓநாய்

மழையில் நனைந்தால் தப்பித்துக் கொள்ளலாம்

இந்த ஓநாயிடம் தஞ்சமாகிவிட்டால்

மரணம் நிச்சயம்…

 

தோழமையுடன்

உங்கள்

ஆடு.

 

 

திருட்டை ஒழிக்க கொள்ளைக்காரன்

வகுக்கும் திட்டம்…!

 

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE