Language Selection

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

இன்றைய சுரண்டல் அமைப்பைப் பேணும் வகையில், அதற்கு எதிராக மக்கள் போராடும் உணர்வுக் கொள்ளலைத் தடுப்பது ஆளும் வர்க்கத்துக்கு அவசியமான ஒன்று. இந்த மோசமான சமூக முறைமை பற்றி அறிவதற்கு முயலும் முதல் முயற்சிகளையே தடுத்துத் தூக்க நிலையில் உணர்வை மரத்துப்போகச் செய்வதற்கு காலத்துக்குக் காலம் எதையாயினும் சிறப்பு மேளமாக உருவாக்கித் தாலாட்டுப்பாடுவர் (எப்போதும் நிரந்தர மயக்கத்தில் ஆழ்த்தும் தொடர்புசாதனங்கள் – சிறப்பு விருந்தாக முட்டாள் பெட்டியும் சினிமாவும் செய்யத் தவறும் பணியைக்கூட இவை சாத்தியமாக்கும்)

செப்ரெம்பர் 11 பின் மே 18

 

நீண்ட ஒரு இடைவெளியின் பின்னரான உரையாடலுக்கு முயல்கிகிறேன். தாமதமும்–இடைவெளியின் பின்னான  பேசுபொருளாய் “செப்ரெம்பர் 11 பின் மே 18” எனத் தலைப்பிடுவது விவகாரமாய்த் தோன்றலாம். எப்போதுமே மே மாதத்தின் பின்னர்தான் செப்ரெம்பர் வரவேண்டுமா என்ன? ஓராண்டுச் சட்டகத்துக்குள் எல்லாம் முடிவதில்லையே? வாழ்க்கை என்னவோ, எந்தப் பிரிப்பும், இல்லாமல் தொடர்ந்து ஓடியபடிதான்.

இறுதிநேர எமாற்றத்தை தந்த கிரிக்கெட் பெருவிழா முடிவெய்தி  விட்டது. இராணுவ வெற்றியைப் போல பத்தாவது உலகக் கிண்ணக் கோப்பையைக் கைப்பற்றும் கனவு கரைந்து போய் விட்டது. ஆயினும் என்ன, தமது பணப்பையைப் பெருக்கவும் மீளாத போதையில் சனங்களை ஆட்படுத்தவும் அடுத்த ஒரு சுற்று விளையாட்டுக்கு நமது வீரர்கள் இந்தியா போய்விட்டார்கள்.

இரண்டு மாதங்களுக்கு முந்திய உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாடு பற்றிப் பேசியிருந்தோம். அது தொடர்பில் சில பின்னூட்டல்கள் உண்டு. அவற்றுடனான உரையாடல் இந்தப் பேசு பொருளின் இடையீடாகக் குறுக்கிடும்.

உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாடு குறித்து மேலும் பேசுவதற்கு பலவிடயங்கள் உள்ளன. சென்ற தடவை, விமர்சனத்துக்குரியன பற்றி இனிப் பேசலாம் எனக் குறிப்பிட்ட போதிலும் இலங்கையில் பத்திரிகைகள் அதன் வெற்றி குறித்து தொடர்ந்து எழுதிவந்தமையைக் கவனத்திற் கொள்ளாமல் போக இயலவில்லை. ஜனவரி 23ம் திகதிய பத்திரிகைகளில், அது குறித்த கட்டுரைகள் இடம்பெற்றிருந்தன.  தினக்குரல் தொடர்ச்சியாக மாநாடு குறித்து முழுமையான விவரணத்தைத் தந்திருந்தது.

“சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு” கொழும்பில் ஜனவரி 6 முதல் 9வரை நடந்து முடிந்த சூழலில், இங்கு எமது பேசுபொருளை அது தொடர்பில் அமைத்துக்கொள்ள அவசியமுள்ளது. தவிர்க்க முடியாது காலதாமதமாகிய எமது சந்திப்பின் தொடர்ச்சியில், பௌத்த – சிங்களப் பேரினவாத நிலைப்பாடு தொடர்பில் பேச வேண்டும் என்ற திட்டமிருந்தது. அதனைப் பின் போடும் வகையில் இந்த மாநாடு இடையீடு செய்துள்ளது.

நாம் இறுதி மூன்று சந்திப்புக்களில் இலங்கையுடனான அமெரிக்க, இந்திய,  உறவுகள் தேசிய இனப்பிரச்சனை மீது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகின்றது எனப் பேசியுள்ளோம். அவர்கள் எம்மைக் கையாளுவதில் தமக்கான ஆதாயங்களைத் தேடுவதைப்போலவே நமக்குள்ளும் ஒவ்வொரு தரப்பும் அவர்களைப் பயன்படுத்த முனைகையில் எமக்கிடையேயான முரண் மேலும் பகை நிலையை வலுப்படுத்த ஏதுவாகிறது.

பலதரப்பட்ட நோக்குகள்

அத்தகைய மோதல் அதியுச்சமடைந்து வீழ்ந்துவிட்ட நிலையில் மீண்டும் தொடங்கும் மிடுக்கு எத்திசை வழி என்பது குறித்தே இன்று பேசவேண்டியுள்ளது. புலிகள் ஜக்கியப்பட மறுத்து, வெகுஜன மார்க்கம் பற்றிய அக்கறையின்றி, முற்றுமுழுதாக ஆயுதத்தை மட்டுமே நம்பி, சர்வதேச பார்வையின்றி ஆதீக்க சக்திகளோடு உறவாடி தமிழீழப் போராட்டத்தை தோல்விக்கு இட்டுச்சென்றாரகள்@ இந்தத் தவறுகளைக் களைந்து புதிய வடிவில் எழுச்சியைச் சாத்தியப்படுத்தினால் தமிழீழத்தை வென்றெடுத்து விட முடியும் என நம்புகிற சக்திகள் நம்மிடையே உண்டு. தமிழீழம் அல்ல, ஏற்கத்தக்க சுயாட்சி வடிவம் வேண்டும் என்போரும் உளர். எதுவும் குறியின்றி வாழ்ந்து தொலைப்போம் என்கிற போக்கிலும் ஏராளம் பேர்.

ஈழத்தமிழ்தேசிய இனப்பிரச்சினையைக் குழம்பிய குட்டையாக்கி ஆதாயம் தேடும் அமெரிக்க இராஜதந்திரத்துக்கு எதிர்வினை ஆற்றும் இந்திய நிலைப்பாடு இன்று வேடிக்கை வினோத விளையாட்டாக ஆகிவிட்டுள்ளது. ஒருபுறம் உலக மேலாதிக்கத்தில் அமெரிக்காவின் சண்டித்தனங்களை அங்கீகரித்து ஒத்தூதி அதன் பிராந்திய கூட்டாளியாக தோள் சேர்ந்தவாறே, மறுபுறம் தெற்காசியாவில் அமெரிக்க தலையீட்டை தவிர்ப்பதற்குப் போராட வேண்டிய நிலையில் இந்தியா. குறிப்பாக, இலங்கையில் அமெரிக்கா இன்று மூக்கை நுழைப்பதற்கு முட்டுக்கட்டைகளை எங்கெங்கே சொருக வேண்டும் என்ற விவகாரங்களிலேயே இந்தியாவின் இராஜதந்திரத்தின் பெரும்பாகம் செலவாகித் தீர்ந்துபோக வேண்டியதாக உள்ளது.

பௌத்த-சிங்களப் பேரினவாத அரசு தனது இறைமையை முற்று முழுதாக இந்தியப் பிராந்திய மேலாதிக்கத்திடம் தாரைவார்த்துக் கொடுத்துவிட்டது. தமது சுயநிர்ணய உரிமையையும் இழந்துவிட்ட சிங்கள மக்கள் அதனைப் புரிந்துகொள்ளாததுடன், ஏனைய இனங்களின் சுயநிர்ணயப் பிரச்சினை குறித்தும் அக்கறை அற்று, அன்றாட சுகபோக மோகத்திற்கு தீனிபோடும் நுகர்வு நாட்டத்தில் மென்மேலும் மூழ்கி மோசமாக சிதைந்தபடி…

கேரளக் கடற்கரையோரத்திலிருந்துஅவுஸ்திரேலியாவிற்கு கள்ளத் தோணியில் புறப்பட தயாராகவிருந்த 15-பேர் காவல்த்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டு,  மீண்டும் அவர்கள் இருந்த அகதி முகாமிற்கு கொண்டு வந்து விடப்பட்டுள்ளனர். வந்தவர்கள் சும்மா இருந்துவிடவில்லை, தம்மைக் காட்டிக் கொடுத்தவர்கள் என இரண்டொருவரை வெட்டித்தள்ளி வைத்தியசாலைக்கும் அனுப்பி வைத்தார்கள்.  இது ஆகஸ்ட்மாத 9-ம் திகதிய தமிழகப் பத்திரிகைகளின் செய்தி.

துடுப்பாட்டத்தில் தலை சிறந்த சுழல்ப்பந்து வீச்சாளன் முத்தையா முரளிதரன்,  2010 ஜீலை நடுப்பகுதியில் ஒய்வு பெற்றுக்கொண்டார். சர்வதேச ஊடகங்கள் கூட மிகுந்த முக்கியத்துவங்கொடுத்து, அது தொடர்பில் செய்திக் கண்ணோட்டங்களை வெளியிட்டடிருந்தன. அந்த வேளை இலங்கை வந்திருந்த இந்திய நண்பர் ஒருவர் கேட்டார், சிங்கள மக்கள் இத்தகைய சர்வதேச முக்கியத்துவத்துக்கு சமதையான மதிப்பினை அவருக்கு வழங்கியிருக்கின்றார்களா? என்பதாக.

முயன்று – தவறி – கற்றல் மனிதகுல வளர்ச்சி இன்றைய மட்டத்துக்கு உயர்ந்து வர உதவிய ஒரு வழி இது. இருப்பதில் திருப்திப்பட்படாமல் இன்னும் மேலே என ஒவ்வொன்றிலும் முன்னேறத் துடிக்கும் புது வழி ஒன்றுக்கான தேடல் எடுத்த எடுப்பில் சரி வந்து விடுவதில்லை. சரி வந்து, அந்தத்திமிரோடு அடுத்த அடி எடுத்து வைக்கும் போதாவது தவறிவிட இடமுண்டு. தவறி விடுவதால் முடங்கி விட்டால் முன்னேற்றம் சாத்தியமாவதில்லை. மீண்டும் தொடங்கும் மிடுக்குக்கான வாய்ப்பு இருப்பதாலேயே புதிய வளர்ச்சிகள் சித்திப்பன. இவற்றிலிருந்தான கற்றல் அடுத்த ஒரு முயற்சிக்கு உதவ வல்லன. சரியானதிலிருந்த மேலும் தெளிவையும் தவறிலிருந்து தவிர்ப்பு வழிகளையும் கற்றாக வேண்டும்.

எல்லோரும் இந்நாட்டு மன்னர் உலகின் ஒவ்வொரு தேசமும் ‘இந்நாடு’ என்பதற்குரியது. யாரும் யாரையும் ஆளுகை செய்ய இயலாது. எந்தத் தேசமும் வேறெந்த நாட்டினாலும் ஆளப்படவோ மேலாதிக்கம் செய்யப்படவோ முடியாது. ஒவ்வொருவரும் முழு ஆளுமை பெற்றவராக பரிபூரணத்துவம் பெற இயலும். பொதுவுடைமைச் சமூகம் சிந்தித்து ஒருவர் எல்லோருக்கும் ஆக, எல்லோரும் ஒருவருக்காக என வாழும் உன்னத எதிர் காலத்துக்கான விடிவெள்ளி முளைவிட்ட ஒரு காலம் அது.

முப்பது வருடங்களின் முன்னர் தமிழ்ச்சினிமாவில் சிவாஜிகணேசனனின் சிம்மக்குரல் கர்ச்சனையும் கண்ணீரும் கம்பீரத்தின் வெளிப்பாடுகளாக மிளிர்ந்து தமிழ் இரசிகர்களை ஆட்படுத்தியிருந்ததுண்டு@ இன்று அவற்றை விவேக் மீளச்செய்யும்போது எந்தவகையிலும் கம்பீரம் வெளிப்படுவதில்லை, சிரிப்புத்தான் வெடித்துக் கிளம்பும். இந்தச் சோகம் இன்று எமது அரசியலிலும் காட்சி தருகின்றது.

நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலின் போது முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா வெற்றி பெற்றால் தமிழ் மக்களை உண்மையாகவே கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என எழுதியவர்கள் இருந்தனர். தற்கொலைத் தாக்குதலிலிருந்து தற்செயலாகத் தப்பிப்பிழைத்த சரத் மரண விளிம்பைத் தொட்டு மீண்டவர், இதன் வன்மத்தைத் தமிழர்மீது காட்டத்தயங்காத குணமுடையவர் என்று கூறப்பட்டது.

மனிதன் ஒன்றை நினைக்க கடவுள் வேறென்றை நினைக்குமாம். இன்று தமிழ் மக்களை மட்டுமன்றி சரத்தையும், ஏன் – வெற்றிபெற்ற மகிந்த உட்பட இலங்கைமக்கள் அனைவரையுமே உண்மையிலும் கடவுள் மட்டுமே காப்பாற்ற முடியும் என்ற கட்டத்தில் இலங்கை நிலவரம் உள்ளாக்கப்பட்டுள்ளது.

“தமிழ் மக்களை இனிக் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்” என்பது எழுபதாம் ஆண்டுத் தேர்தல் முடிவை அறிந்தவுடன் தந்தை செல்வா அருளிச்சொன்னது. எந்த முகூர்த்தத்தில் சொன்னாரோ, நாற்பது ஆண்டுகளின் போக்கில் இப்படி முழுநாட்டையும் கடவுள் வந்தாலும் காப்பாற்ற முடியாத நிலை ஆட்டிப்படைக்கிறது.

உலகின் வினோதமான அரசியல் போக்கு ஒன்றின் குவிமையப்படுத்தலாக இலங்கை எதிர்கொள்ளும் இன்றைய ஜனாதிபதித்தேர்தல் அமைந்திருக்கிறது. இதுவரையிலான இலங்கையின் தேர்தல்கள் ஏதோவொருவகையில் அதன் தலைவிதியை வரையறுப்பதாக அமைந்ததுண்டு. இன்றைய தேர்தல் அடிப்படையில் எந்த மீட்சிக்கும் நம்பிக்கையற்றதாக முகங்கொள்ளப்படுகின்றது.

இருப்பினும், இதுவரையில்லாத அளவில் கடும்போட்டி நிலவுவதாகவும் இது அமைந்துள்ளமை நகைமுரன். ஓரிரு வாரங்களுக்கு முன்வரை ஆளுந்தரப்பின் வெற்றி நிச்சயம் என்பதாக இருந்தபோதே போட்டி வலுவானது என்பதாக உணரப்பட்டது. போட்டிக்கு மூன்று வாரங்களுக்குட்பட்டதாக நாட்கள் நகரும் போது எதிர்த்தரப்பு வெல்ல வாய்ப்பு வலுத்துவருகின்றமையை அவதானிக்க முடிந்த போதிலும் கடுமையான போட்டி என்பது மாறிவிடவில்லை..

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE