Language Selection

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

‘உலக அதிஸ்டக்காரனின்’ மரணம் !

யாமக்குச்சி (Tsutomu Yamaguchi) 16.03.1916ல் ஜப்பானில் பிறந்திருந்தார். ஒரு பொறியியல் வரைபட உருவாக்கக்காரனாக ‘மிக்சுபுசி’ கம்பனியில் கப்பல் கட்டுமான பகுதிப் பிரிவில் கடமையாற்றி வந்தார்.

அக்கம்பனியின் நிர்வாக வேலைகளின் நிமித்தம் அவர் நாகசாகியில் இருந்து கிரோசிமாவுக்கு வந்திருந்தார். தனது 3 மாதகால இப்பணியை முடிப்பதில் மும்முரமாக இருந்தவேளை: 1945ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 6ம் திகதி சுமார் காலை 8.15 மணியளவில் அமெரிக்காவின் பி -29 விமானம் அணுக்குண்டை வீசியது. இவர் இருந்த இடத்தில் இருந்து கிட்டத்தட்ட இரண்டு மைல் தொலைவில் இருந்த ‘லிற்ரில் போய்’ நகரத்தின் மீது அக் குண்டுவந்து வீழ்ந்தது. 1 இலட்சத்து 40 ஆயிரம் பேரும் இருந்த இடம் தெரியாமல் அழிந்து போனார்கள்.

பேனாக்களுக்கு ஜலதோஸ்ஷம்
‘டிகிரியில்’
எகிறிக் காய்கிறது
நூற்றி எட்டில் (108 இல்).
கசாயமோ,
குடிணீரோ குடித்தும்
குலையாத குலைப்பன்.

ஜனாதிபதி – நிறைவேற்று அதிகாரமும் தமிழ்மக்களின் – நிறைவேறாத ஆசைகளும்…

ஜனாதிபதித் தேர்தலா அல்லது பாராளுமன்றத் தேர்தலா முதலில் நிகழும் என்ற எதிர்பார்ப்புக்கு இம்மாதத் தொடக்கத்தில் பதில் கிடைத்திருந்தது. வரும் 2010ம் ஆண்டு ஜனவரி 26ம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையகம் அறிவித்துள்ளது.

இத் தேர்தலில் மகிந்தாவும் எதிரணி பொது வேட்பாளராக சரத்தும் போட்டியிடுவார்கள் என்பதும் உறுதியாகியுள்ளது. புலிகளையும் பயங்கரவாதத்தையும் ஒழித்துக் கட்டியது தாம் தான் என இருவரும் உரிமைகோரும் போட்டிப்பலத்துடன் களத்தில் குதித்துள்ளனர்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வடக்குக் கிழக்குத் தமிழ் மக்கள் வாக்களிக்க முடியவில்லை என்பதால் இரு வருடத்துக்கு முன்னரே தான் தேர்தலை வைப்பதாக தமிழ் மக்களின் மனங்களை லேசாகத் தொட முயற்சிக்கிறார் மகிந்தா. கடந்த தேர்தலில் புலியுடன் செய்துகொண்ட ரகசிய ஒப்பந்தத்தை நயிசாக மென்று விழுங்கியும் விடுகிறார்.

(செய்திக் குறிப்பு:- நவம்பர் 2009)

இம்மாதத் தொடக்கத்தில் சுமார் 50 ஆயிரம் வரையான யாழ் மாவட்ட மக்கள் மீள் குடியேற்றத்துக்கு வந்துள்ளனர். ஓகஸ்ட் மாதம் 5ம் திகதியில் இருந்து யாழுக்கு கொண்டு வரப்பட்ட மக்கள் (03.நவம் 09)அன்று 47,042 பேராக உள்ளது. அன்று இரவு 289 குடும்பங்கனைச் சேர்ந்த 894 பேர் மானிப்பாய் இந்துக் கல்லூரியில் வைத்து, அவர்களது உறவினர்கள் நண்பர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர். இவர்கள் சண்டிலிப்பாய் பிரதேசசெயலகத்தைச் சேர்ந்தவர்களாகும். இவர்களுக்கு குடும்பம் ஒன்றுக்கு தலா 5 ஆயிரம் ரூபாவை கைக்குள் வைத்து, இரண்டு கிழமைக்கான அரிசி பருப்பு கருவாட்டுடன்: நண்பர்களுடனும், உறவினர்களுடனும் சாய்த்து விடப்பட்டுள்ளனர். இவ்வாறு துரையப்பா விளையாட்டு அரங்கிலும் வைத்து பலர் ‘சாயத்;து’ விடப்பட்டுள்ளனர். இதுதான் இக் குடியேற்றத்தின் திருவிளையாடல்!

வவுனியா நலன்புரி முகாம்களில் இருந்து, தமது சொந்த இடங்களுக்குத் திரும்புவதாக விண்ணப்பித்த 2139 பேர்வரை (02.நவம் 09)ல் யாழுக்கு அனுப்பப்பட்டனர். இதில் 132 குடும்பத்தைச் சேர்ந்த, 466 தீவக மக்கள் சாவகச்சேரியிலிருந்து – அவர்களது பகுதிக்குச் ‘சாய்க்கப்’ பட்டனர். மற்றும் 529 குடும்பங்களைச் சேர்ந்த 1673 பேரை கரவெட்டி விக்கினேஸ்வரா மகா வித்தியாலத்தில் வைத்துச் ‘சாய்க்கப்’பட்டுள்ளனர.;
.

கடந்த பத்து மாதங்களாக வன்னியிலிந்து வந்தவர்களுக்காக அகதிகள் முகாமாக இயங்கிவந்த, கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் வந்து தங்கிய 352 பேரில், 284 பேர் அவர்களது உறவினர்களுடன் சாய்க்;கப்பட்டிருந்தனர். மிகுதி 68 பேர் கொடிகாமம் இராமாவில் முகாமிற்கு அனுப்பப்பட்டுள்ளனர். இவ்வாறு சாய்த்து விடப்பட்டவர்கள் போக மீதமானவர்களை சில முகாம்களுக்குள் நிரப்பி, முகாம்களைக் குறைத்து விட்டதாகவும் ஏனையவரைக் குடியேற்றி விட்டதாகவும் நல்லபிள்ளை வேடம் போடுகிறது அரசு.

“இன்று உள்நாட்டு யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்து விட்டதாக மகிந்த அரசு அறிவித்துள்ளது. பயங்கரவாதிகளின் (புலிகளின்) பிடியிலிருந்து மக்களை மீட்டதாகவும், பயங்கர வாதத்தைப் பூண்டோடு ஒழித்து விட்டதாகவும் அது கூறுகிறது. மகிந்தா அரசினால் இன்று நடத்தி முடிக்கப்பட்ட இவ் யுத்தமானது, உலக சந்தைக்கான விளைநிலங்களாக இலங்கையை மாற்றியமைக்கும் திட்டத்தின் அடிப்படையிலேயே வடிவமைக்கப் பட்டது. புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த தமிழீழப் பிரதேசமானது கடலையும், அதை அண்டிய விவசாய நிலங்களையும் கொண்ட பெரும் பிரதேசமாகும். இவ் விவசாய நிலங்கள் கடல் மட்டத்துடன் இருப்பதால், இப்புதிய உற்பத்தி முறைக்குத் தேவைப்படும் இன்றியமையாத வரப்பிரசாதமான விளைநிலங்களாக இவை அமைந்துள்ளன.” -சுதேகு-


“பசுமைப் புரட்சியின்” தந்தை என வர்ணிக்கப்படும் “அம்பி” எம்.எஸ்.சுவாமிநாதனை மகிந்த இலங்கைக்கு அழைத்திருந்தார். பயங்கரவாதத்தை ஒழிப்பதாக நடத்தப்பட்ட யுத்தத்தில் புலிகளின் தலைமையை முற்றாக அழித்தொழித்த அரசு வன்னிப் பெரும் நிலப் பரப்பைக் கைப்பற்றியது. மூன்று இலட்சத்துக்கும் மேலான அகதிகளான மக்களை மீள்குடியேற்றம் செய்வதற்கு துரித அபிவிருத்திகளுக்காக “அம்பியை” அவர் அழைத்திருந்தார். விதைப்புக்காலம் தொடங்க இருப்பதால் ஒக்டோபர் மாதத்திற்குமுன் தம் பணிகளைத் தொடங்க ஒரு பெண்கள் குழாமை அவர் அமைக்க முற்படுகிறார். இப்பெண்களைக் கொண்டு அவர் முதற் கட்டப் பணியை ஆரம்பிப்பதாக அறிவித்திருந்தார்.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை தாம் மே -18ம் திகதி சுட்டுக் கொன்றிருப்பதாக அரசு அறிவித்திருந்தது. விடுதலைப் புலிகளின் தலைவரும், தனது ஆருயிர் நண்பனுமான பிரபாகரன் மே -17ம் திகதி மதியவேளை இராணுவத்துடனான நேரடிச் சமரில் வீரமரணம் அடைந்ததாக, புலிகளின் சர்வதேசப் பொறுப்பாளரும் அவரின் நண்பருமான கே.பி அறிவித்திருக்கிறார். ஏறத்தாழ 7 வாரங்கள் கழிந்து போகும் நிலையில் இந்தியாவுக்குத் தப்பி வந்த எழுத்தாளர் மு.திருநாவுக்கரசின் பேட்டியோடு, பிரபாகரன் மே -15 பின்னிரவு அல்லது மே -16 அதிகாலை தப்பிப் போய்விட்டதாக பிரபாகரன் உயிரோடு இருப்பதாகக் கூறும் அணியினர் உற்சாகத்துடன் கூறுகின்றனர்.

ஒவ்வொரு நாள் வித்தியாசத்திலும் இம் மூன்று பகுதியினரும் தத்தமது நிலைப்பாட்டை எடுத்திருக்கின்றனர்.

யோர்தானில் இருந்த ராஜபக்சாவுக்கு மே -18 ம் திகதிதான் பொருத்தமாக இருப்பது போலத் தெரிகிறது. பிரபாகரன் நலமுடன் இருப்பதாக முதலில் கூறிய கே.பி க்கு, ‘நாடுகடந்த தமிழீழத்துக்கு’ வசதியாக மே -17 தான் இருந்துவிடும் போல் தெரிகிறது. பிரபாகரன் தப்பிவிட்டார் என்று சொல்கிற வைகோ, நெடுமாறன், மு.திருகாவுக்கரசு …. மற்றும் ‘வட்டுக்கோட்டை தீர்மானக்காரருக்கு’, இவ் இறப்புத் தேதிகளுக்கு முன்பே தப்பிச்செல்லும் தேதியாக மே – 16 தான் இறுதியாகவும் இருக்கிறது. இது இவ் முக்கூட்டுச் சக்கரத்துக்குள் இருக்கும் முரண்பாட்டின் விளைவாக, இவ் மூன்று தேதிகளுமே இவர்களுக்கு அதி வசதியாகவும் இருந்துவிடுகிறது.

இலங்கை அரசின் மீதும், அதன் ராணுவத்தின் மீதும் போர்க்குற்றம், சர்வதேச விசாரணை என, அமெரிக்காவும் பிரிட்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள், யுத்தம் முடிந்து இரு வருடங்களின் பின்னர் மிகவும் ஆக்கிரோசமாக பொங்கி எழுகின்றன. ஏன் இந்தத் திடீர் கரிசனை. இந்த இருவருட காலத்தில் என்னதான் நடந்தன என்பதனை, சற்று விரிவாகப் பார்க்கலாம்.

இலங்கை அரசின் மீதும், அதன் ராணுவத்தின் மீதும் போர்க்குற்றம், சர்வதேச விசாரணை என, அமெரிக்காவும் பிரிட்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள், யுத்தம் முடிந்து இரு வருடங்களின் பின்னர் மிகவும் ஆக்கிரோசமாக பொங்கி எழுகின்றன. ஏன் இந்தத் திடீர் கரிசனை. இந்த இருவருட காலத்தில் என்னதான் நடந்தன என்பதனை, சற்று விரிவாகப் பார்க்கலாம்.

“எமது தாயகம் தமிழீழம், எமது குறிக்கோள் தமிழீழம், எமது தலைவர் பிரபாகரன்”என்று 2009ம் ஆண்டு புலம் பெயர்ந்த நாடுகளின் தெருக்களில் நின்று மக்களை கூக்குரல் போடவைத்த புலம்பெயர் வியாபாரிகள், இன்று தமக்குள் புலிகளின் பெயரால் மக்களை ஏமாற்றி பெற்ற சொத்துகளுக்காக வெட்டுக் குத்துப்படுகின்றனர். தமிழ் மக்களின் பணத்தை தின்று ஏப்பம்விட்ட இந்த பிரகிருதிகள்,  மீண்டும் புலிகள் இயக்கம், பிரபாகரனின் பெயர் மற்றும் உயிர் நீர்த்த மாவீரர்களை பாவித்து வியாபாரம் செய்து மீளவும் மக்கள் பணத்தில் உல்லாசமாக வாழ முற்படுகின்றனர்.

“எமது தாயகம் தமிழீழம், எமது குறிக்கோள் தமிழீழம், எமது தலைவர் பிரபாகரன்”என்று 2009ம் ஆண்டு புலம் பெயர்ந்த நாடுகளின் தெருக்களில் நின்று மக்களை கூக்குரல் போடவைத்த புலம்பெயர் வியாபாரிகள், இன்று தமக்குள் புலிகளின் பெயரால் மக்களை ஏமாற்றி பெற்ற சொத்துகளுக்காக வெட்டுக் குத்துப்படுகின்றனர். தமிழ் மக்களின் பணத்தை தின்று ஏப்பம்விட்ட இந்த பிரகிருதிகள்,  மீண்டும் புலிகள் இயக்கம், பிரபாகரனின் பெயர் மற்றும் உயிர் நீர்த்த மாவீரர்களை பாவித்து வியாபாரம் செய்து மீளவும் மக்கள் பணத்தில் உல்லாசமாக வாழ முற்படுகின்றனர்.

மீள் பதிவு:

1977 ஆம்ஆண்டு தேர்தலில் போது வண்ணை ஆனந்தன் என்ற ஆசாமி “மரம் பழுத்தால் வெளவால்களை” (வெளிநாடுகளை) அழைக்கத் தேவையில்லை. அவை தாமாக பறந்து வரும் என கதை விட்டு, இளைஞர்களின் இரத்தத்தினை சுடாக்கி இரத்தத் திலகமிடவைத்தும், தாழ்த்தப்பட்ட சாதியினைச் சேர்ந்த உடுப்பிட்டி வட்டாரக்கல்வி அதிகாரியாக இருந்த இராசலிங்கம் அவர்களை உடுப்பிட்டி தொகுதியில் வேட்பாளராக நிறுத்தி, உலகமே உடுப்பிட்டி தொகுதியின் முடிவினை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றது என்று தமிழ் குறுந்தேசிய வெறியினை ஊட்டி தேர்தலில் அனைத்து தொகுதிகளையும் வென்று பாராளுமன்றம் சென்றதுடன் மக்களிற்கு கொடுத்த தமிழீழ வாக்குறுதியினையும் காற்றில் பறக்கவிட்டனர்.

 

தமிழ் மக்கள் தங்களின் விடுதலைக்காக கடந்த பல சகாப்தங்களாக போராடிய போதெல்லாம் எந்த விதமான நேரடியான அக்கறையும் அற்று இருந்த அமெரிக்காவும் மேற்குலகமும்; இன்று விசேட அக்கறையுடன் தமிழ் மக்களின் பிரச்சினையினை தமது கைகளில் எடுத்து மகிந்த அரசு போர்க்குற்றம் புரிந்துள்ளதாகவும் நீதி விசாரணை நடத்தி குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் எனவும் பல அழுத்தங்களை பிரயோகித்து வருகின்றன.

இறுதி யுத்தத்தில் இலங்கை பாசிச அரசின் அடாவடித்தனங்களை வெளிக் கொண்டு வரும் புகைப்படங்களும் காணொளிகளும்  புதிது புதிதாக வெளிவந்து கொண்டிருக்கும் இன்றைய காலகட்டத்தில், சிறிலங்காவின் இன அழிப்பிலிருந்து எம் இனத்தைக் காக்க ஆயுத மேந்திய எமது சகோதர சகோதரிகளை எந்த மனித நேயமும் அற்ற வகையில் அவர்களின் ஆடைகளைக் களைந்து புகைப்படங்களை எடுத்துள்ள மனித நேயமற்ற கீழ்த் தரமான இலங்கை ராணுவத்தின் செயற்பாடுள் அம்பலத்திற்கு வந்துள்ளது.

நாம் இலங்கையர் அமைப்பினர் என்னும் பெயரில் ஜே.வி.பியினர் யாழ் நகரின் பேருந்து நிலையத்தில் காணாமல் போனோர் மற்றும் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கக் கோரியும், அவர்களின் பெயர் விபரங்களை வெளியிடக் கோரியும், ஆர்ப்பாட்டம் ஒன்றினை நடத்தி இருந்தது. அதில் கலந்து கொள்ளவென யாழ் சென்ற ஜே.வி.பி இன் பாராளுமன்ற உறுப்பினர் உட்பட பலரை, பாசிச மகிந்த அரசின் கூலிப் படை தாக்கியது.  அத்துடன்  ஆர்ப்பாட்டத்தின் போது கல் மற்றும் கூழ் முட்டைகளை வீசியது. அதனை நடத்தவிடாது குழப்ப முயன்றதை பத்திரிக்கை செய்திகளும், காணொளிகளும, படங்களாகவும் வெளிவந்தது.

யார் இந்த ஜே.வி.பி.யினர்??

 

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைகளின் மரண ஓலங்கள் இன்னமும் ஒலித்து கொண்டேயிருக்கின்றது யுத்தத்தினால் அங்கவீனரானோர் மற்றும் காயமடைந்தோர்களின் ரணங்கள் இன்னமும் ஆறவில்லை மரணத்தின் வாயில் வரை சென்று மீண்டு வந்தவர்களது மரண பயம் இன்னமும் அடங்கவில்லை முட்கம்பி வேலிகளின் முகாம்களுக்குள் லட்சக்கணக்கானோர் இன்னமும் எதிர்காலம் பற்றிய பெரும் கேள்விக் குறியுடன்…

ஆனால் தமிழ் மக்களின் தலைவர்கள் என்று தம்மை கூறிக் கொள்பவர்களும் மற்றும் தமிழ் மக்களின் அரசியல் கட்சிகளும் இந்த மக்களிற்கு நடந்து முடிந்த 21ம் நூற்றாண்டின் மிகப் பாரிய இன அழிப்பினை பற்றிய எத்தகைய பிரக்ஞையும் இன்றி இனப் படுகொலையை முன்னின்று நடத்திய போhக்; குற்றவாளிகளுக்கு தமிழர்களின் ; பொன்னான வாக்குகளை வழங்கும்படி தமது எஜமான விசுவாசத்தினை காட்டி நிற்கின்றனர்

புலம்பெயர் தேசங்கள் எங்கனும் புலிப் பினாமிகளால் நாளை மாவீரர் தினக் கூட்டஙகளுக்கு அறைகூவல் விடப்பட்டுள்ளன. இதன் பின்னால் பல காரணங்கள் உண்டு முக்கியமானது அழித்து ஒழிக்கப்பட்ட தலைமை உயிரோடு உள்ளது என்பது போன்ற மாஜயை ஏற்கனவே பரப்பியுள்ளனர் மேலும் கணிசமான அளவு தமிழ் மக்கள் தலைமை உயிரோடு உள்ளதாகவே இன்னமும் வீணான கற்பனையில் உள்ளனர் மக்கள் விழித்துக் கொள்ளும் முன் இன்றய நிலையை தமக்கு சாதகமாக்கி பணம் கறப்பதற்கு தமிழ் நாட்டின் கழிசடை அரசியல்வாதிகளின் கூட்டுடன் புறப்படடுள்ளனர்

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE