Language Selection

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

நோர்வேயில் உள்ள புலிகளின் அமைப்பான NCET இலங்கை அரச தலைமையை (மஹிந்த & கோ) மனித குலத்திற்கெதிரான குற்றம்   புரிந்தவர்கள் என  விசாரிக்க நோர்வேயில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இது சம்பந்தமாக நோர்வேகின் பத்திரிகை ஒன்றிற்கு பேட்டி அளித்த   NCET தலைவர் பஞ்சகுலசிங்கம் கந்தையா.  புலிகளும் அதே குற்றத்தை (அதாவது   மனித குலத்திற்கெதிரான குற்றம்கள்)  புரிந்தவர்கள் ஆனால் அவர்கள் மீது வழக்கு தொடுக்க முடியாதுஇ  காரணம் புலிகளின் தலைமை இறந்து விட்டது . ” எனக்  கூறுகிறார் .

 

வரலாற்றிலிருந்து ஹிட்லரை எடு

மனித மாண்போடு மன்னிப்புக் கொடு

சொல்கிறார்கள் சுக்ரீவனை கொன்ற இராமாயணர்கள்

அசோக மன்னன் அவன் அடி மனம் துடித்தது.

போர் வெறியினைக் களைந்ததால்

மக்கள் மனதினில் மன்னிப்பும் எழுந்தது.

நான் எந்த அதிகார வர்க்கத்திலிருந்தும்

ஊற்றுப் பெற்றவன் அல்ல நண்பரே

அடக்கப்பட்டு ஒடுக்கப்பட்டு ஓதுக்கப்பட்ட

சமூகத்திலிருந்து போராடிப் பெற்ற

அனுபவக் கல்வியின் ஆழத்திலிருந்து

கொதித்தெழுந்து வந்தவன்.

விடுதலைப் போராட்டத்தின் கடந்த காலங்களில் இயக்கப் படுகொலைகளிற்கும், சதிகளிற்கும் துணைபோன பலர் இன்று தம்மையும், தம்முடன் கூடி கொலைகளிற்கும் சதிகளிற்கும் உடந்தையாக இருந்தவர்களையும்  களங்கமற்றவர்களாக இனம் காட்டும் நோக்கில்; இவர்களுடன் கூடியிருந்து அராஜகம் புரிந்து இன்று மரணித்துப் போய்விட்டவர்களை  கொலையாளிகள் என கூறுவதுடன்,  மரணித்துப் போன நேர்மையான போராளிகளை தமக்கு சார்பானவர்களாக இருந்தார்கள் என பொய்க் கதைகளை அவிட்டு விடுவதன் ழூலம் மீண்டும் சிம்மாசனத்தைக் கைப்பற்றும் கானாவில் வலம்வர முயற்சிக்கின்றனர்.  இதே போன்று மாக்சியம் பேசி புலிகளை விமர்சிப்பது போல் நாடகமாடிக் கொண்டு புலிவாலை இறுகப் பிடித்து தோற்றுப் போன தமிழ் தேசியத்தில் நீச்சலடிக்க  முனைகின்றது இன்னோர் மக்கள் விரோத அரசியல போக்கு. இவர்கள் குறித்த எச்சரிக்கையாக இருக்கும் எனக் கருதி இந்த கட்டுரை மீள்பிரசுரம் செய்யப்படுகின்றது.

வெட்டிச்சாய்க்கப்பட்ட உயிர்கள் எத்தனை.

வீதிகளில் அனாதைப்பிணங்களாய் சுட்டுச் சரிக்கப்பட்டவர்கள் எத்தனை.

நேசித்த தேசத்தின் மக்களின் விடுதலைக்காய் போராடப் புறப்பட்டோர் புத்தி பேதலித்தவர்களால் புதைகுழிகளில் மண்ணோடு மண்ணாய் புதைக்கப்பட்டவர்கள் எத்தனை எத்தனை.

புளட் இயக்கம் பல்கலைக்கழகத்தில் நுழைந்தது விஞ்ஞானபீடத்தின் வாயிலாகத்தான். ஆனால் புளட்டிடம் அப்போது தனியான மாணவர் அமைப்பு இருக்கவில்லை. விஞ்ஞானபீடத்திலிருந்து உள்வாங்கப்பட்ட மாணவர்களும் இடம்பெயர்ந்த மாணவர்களும் புளட்டின் மக்கள் அமைப்பில் தங்களை இயங்குசக்தியாக்கிக் கொண்டார்கள். இவர்களுக்கு பலசுற்றுப் பாசறை வகுப்புகள் நடாத்தப்பட்டு அவர்கள் கிராமங்களில் மக்கள் அமைப்புக்களை உருவாக்கும் அரசியல்பணியில் பிரச்சாரப்பணியில் ஈடுபடுத்தப்பட்டார்கள். பெரும்பான்மையான முதற்கட்ட பாசறைவகுப்புகள் தோழர் தங்கராசாவினால் கொக்குவில் பிரதேசத்தில் நடாத்தப்பட்டன.

நோர்வேயில் நாடுகடந்த தமிழீழத்துக்கான வேட்பாளர்களில் ஒருவராக போட்டியிடும் திருவாளர் பெர்னாண்டோ அவர்கள் தனது பிரச்சார உத்திகளுக்கு தான் கடந்தகாலங்களில் ஆற்றியிருக்கும் சேவைகள் பற்றியும் தான் கலாநிதி? கணபதிப்பிள்ளை சிவராசாவுடன் இணைந்து தொரம்சோவில் செய்த சேவைகள் பற்றியும் தந்த தகவல்கள் பற்றி சிறிது வரலாற்றை புரட்டிப்பார்ப்போம்.

அவர் தந்துள்ள சில விபரங்கள்;

கலாநிதி கணபதிப்பிள்ளை சிவராசாவுடன் இணைந்து ரொம்சோ பல்கலைக்கழகத்திற்கும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கும் இடையிலான கூட்டுச்செயற்பாடுகள் உருவாக்கப்பட்டு மாமனிதர் துரைராஜா நோர்வே தேசத்துக்கு வந்து ஒப்பந்தங்களினை மேற்கொள்ள பங்களிப்பு செய்தவன். என்கின்றார்.

கள்ளர் கூட்டம்
ஊரை அடிச்சு
உலையில போடுவார்
என்ர பிள்ளையள்
கொட்டின ரத்தத்த
விட்ட அரும் உயிர
சொல்லி அழுதல்லோ
ஊரெல்லாம்
உலகமெல்லாம்
சொத்துச் சேத்தாங்கள்

பசியில பஞ்சத்தில வாடிற வயித்துக்கு
கஞ்சியாகிலும் ஊத்திட,
காத்து மழயில கடும்கும்மிருட்டில,
கடலில மோதி விரட்டிற அலையில
தோணித்துரும்பில
வாழ்வை வெல்லும் எங்கட சாதி ஊர்மனை பக்கமா
அட ராசா நீ உன் காலில மணல் பட
நடந்தாயா?

அல்ஃபைடா எனப்படும் ‘இலாபம்” இந்தப் பிரமாண்டமான சதுரங்கப் பலகை வாஷிங்டன் இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்கு முன்னர், பயங்கரவாதிகளை உருவாக்குவது மற்றும் இராணுவச் சதிகள் (படுகொலைகள்) மூலமாகவே ஆடப்பட்டது. 2001ஆம் ஆண்டுக்குப் பின்னான இந்தப் பத்துவருடத்தில் இதே பயங்கரவாதத்தை ஒழிக்கும் யுத்தமாகவும், இறுதி 5வருடங்களில் புதிய தொடக்கமாகவும் ஆடப்பட்டது. இந்தப் பிரமாண்டமான சதுரங்கப் பலகை யூரேஷியாவை அடிப்படையாகக் கொண்ட உலகின் பிரமாண்டமான ஒரு துருவ தலைமைத்துவத்துக்கான யுத்த ஆட்டத் தொடக்கமாகும். குறிப்பாக தெற்காசியாவின் பாரசீக வளைகுடாவை மையப்படுத்திய ஒரு நீண்டகால காலனித்துவ யுத்தம் என்ற கண்ணோட்டத்திலேயே இந்தச் சதுரங்க ஆட்டம் தெரிவு செய்யப்பட்டதாகும். இருப்பினும், 2001 ஆம் ஆண்டு நியூயோக் இரட்டைக் கோபுரத்தை அல்கைடா விஸ்வரூபம் எடுத்துத் தாக்கியதாக அமெரிக்கா இந்தச் சதுரங்க ஆட்டத்தை வெளிப்படையாகவே ஆடத் தொடங்கியது. பயங்கரவாதத்துக்கு எதிரானது என்ற கோசத்தோடு மேற்குலகையும் சேர்த்து வெளிப்படையாக பலமாக ஆடநினைத்த ஆட்டமாகும்.

2025ஆம் ஆண்டுக்குள் அமெரிக்காவின் பொருளாதாரத்தை உலகில் முதலிடத்திலும், ஐரோப்பிய யூனியனை இரண்டாம் இடத்துக்கும் கொண்டுவருவதற்கான ஒரு மூர்க்கத்தனமான ஆக்கிரமிப்பு ஆட்டமாகும். சுருங்கச் சொன்னால் இது மத்திய ஆசியாவை ஆக்கிரமிக்கும் சுனாமி ஆட்டமுமாகும். மத்திய ஆசியா எனப்படுவது சோவியத் யூனியனில் இருந்து உடைந்த மேற்சொன்ன ஜந்து நாடுகள் உள்ளடங்கலாக, ஈரான், ஆப்கானிஸ்தான், பாக்கிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு வடக்காக அமைந்திருக்கிறது. அதேவேளை அதன் மேற்கெல்லையாக காஸ்பிக் கடலையும், கிழக்கில் சீனாவையும் கொண்டு அமைந்திருக்கும் கனிமவளங்கள் கொட்டிக்கிடக்கும் ஒரு கேந்திரப் பிரதேசமாகும்.

பின்லேடன் கொலை!

சர்வதேச நாடுகள் எங்கிலும் சல்லடைபோட்டுத் தேடப்பட்டு வந்த ஒருவர் பில்லேடன். அமெரிக்காவின் பயங்கரவாதிகள் பட்டியலில் முதல் நபராக இவர் இடம்பெற்றும் இருந்தார். இவரை அண்மையில் அமெரிக்க சிறப்புப்படையினர் சுட்டுக் கொன்று விட்டதாகச் செய்திகள் வெளிவந்திருந்தன. எப்படி இலங்கையில் பிரபாகரன் சுட்டுக்கொல்லப்பட்ட செய்திகள் வெளிவந்தபோது, அவரது ஆதரவாளர்களால் நம்பமுடியாமல் திகைத்துப்போய் இருந்தனரோ, அதேமாதிரி பில்லேடனின் ஆதரவாளர்கள் மத்தியிலும் இது காணப்பட்டது. பின்லேடன் உலகநாடுகளை எல்லாம் மிரட்டிக்கொண்டிருந்தாரோ இல்லையோ, அமெரிக்காவின் கண்களில் தன் விரலைவிட்டு ஆட்டிப்படைத்துக் கொண்டிருந்தார் என்பது மிகையாகாது.

கடலால் தான் இந்த உலகமே கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் கண்டு பிடிக்கப்பட்ட இந்த உலகமே இன்று ஏகாதிபத்திய உலகமயமாகியும் உள்ளது. இதுவே இக்கடலையும் ஆக்கிரமிக்கத் தொடங்கியுமுள்ளது. இவ் ஆக்கிரமிப்பு, கடல்வளங்களை வரலாறு காணாத வேகத்தில் சுரண்டத் தொடங்கி விட்டது. சமுத்திரச் சட்டங்களாகவும், அதற்கான கடலோரத் திட்டங்களாகவும் இன்று இவை கடல்வளத்தை அபகரிக்கிறது. இதற்காகவே மீனவர்கள் கடலிலே தொடராகப் படுகொலை செய்யப்படுகிறார்கள். யாருக்கும் தெரியாமலே பலர் கடலிலே தொலைந்தும் போகிறார்கள். தமது சொல்வழியைக் கேளாமல் நடப்பதால் தான்; இவைகள் நிகழ்ந்து விடுவதாக இவ்விரு அரசுகளும் (இந்திய -இலங்கை) ஆளுக்காள் கைகளையும் விரித்தும் விடுகிறது.  ‘ரோக்கின்”  வேண்டி கடலிலே இறக்கும் ரோலர்காரன் வீட்டிலே சுகமாக இருந்து விடுகிறான். பாவப்பட்ட வயிற்றுப் பிழைப்புக்குப் போகும் கூலி மீனவன் படுகொலை செய்யப்படுகிறான்!.  ‘ரோக்கின்” வேண்டும் முதலாளியோ இருப்பிலுள்ள சட்டதிட்டங்களை தொழிலாளிக்குக் கூறுவதில்லை. இந்த அரசியல் சட்ட திட்டங்கள் பாழாய்போன வயிற்றுப் பட்டினிக்குத் தெரிவதுமில்லை. ரோலர்காரனான இவன் அரசியல்வாதியாகவும் இருப்பதால் பாமரக் கூலி ஏமாந்தும் விடுகிறான். ஏன் இந்த ரோலர்காரன் தனது பெரும் மூலதன, அதி நவீனத் தொழிலில்: இந்த அற்ப கூலிக்குத் தொழில் பார்க்கும் தொழிலாளிக்கு ஆயுட்காப்புறுதிகளைச் கூடச் செய்வதுமில்லை.

இலங்கைக் கடலானது, பல கண்டமேடைகளையும் குடாக்கடல் பொட்டலங்களையும் கொண்ட, அரும் பெரும் பொக்கிசக் கடலாகும். கிழக்குக் கடல் தவிர்ந்த ஏனைய இலங்கை சூழ் கடலானது, கண்டமேடைகளால் நிறைந்தவை. இதில் பாதியளவு வடமாகாணத்தில் உள்ளது. பாக்குத் தொடுவாய் ஆழம் குறைந்த கடற்பகுதியாக இருந்தும் வருவதால், இக்கண்ட மேடை வடமாகாணத்தில் அகலமாகவும், அதிகமாவும் காணப்படுகிறது.

தென்னிந்திய மீனவர்கள் இலங்கைக் கடலிலே படுகொலை செய்யப்பட்டு வருகிறார்கள். இந்தப் படுகொலைகள் நீண்ட காலமாகவே நடந்தும் வருகிறது. கிட்டத்தட்ட இதுவரை 500 பேருக்கு மேல் படுகொலை செய்யப்பட்டும் விட்டார்கள். இலங்கைக் கடற்படையாலும், இந்திய ரோலர் கண்காணிப்பு காவல் படைகளாலும், புலிகளாலும் இந்திய – இலங்கை மீனவர்கள் படுகொலை செய்யப்பட்டும் துன்புறுத்தப்பட்டும், காணாமற் போயும் இருந்தனர். இந்த மீனவர் படுகொலைகளையும் ஆக்கிரமிப்புகளையும் ஆதரிக்கவோ, நியாயப்படுத்தி விடவோ எவராலும் முடியாது. அதேபோல இப்போது நடக்கும் தமிழக மீனவப் படுகொலைகளையும் ஓர் ”இனப்படுகொலை” யாகக் காட்டி, ஏழை மீனவர்களின் அடிப்படைப் பிரச்சனையை திசை திருப்பிவிடவும் முடியாது.

இன்று உலகத்தின் மிகப்பெரிய பிரச்சனையாக இருப்பது ‘பொலித்தீன் பூக்கள்’ என்றால், வாசகர்களுக்குச் சிரிப்புத்தான் வரும்.  இது என்ன’ பொலித்தீன் பூக்கள்’ என்று நீங்கள் கேட்கலாம். இன்று ஆபிரிக்க மற்றும் மூன்றாம், நான்காம் உலக வீதிகளின் ஓரங்களில் தினமும் மிகையாகப்  பூத்துக்கிடப்பவைதான் இந்தப் ‘பொலித்தீன் பூக்கள்’ ! ஜரோப்பா முதல் உலகம் பூராகவும் பூங்காக்களிலும், காடுகளிலும்…. என்று, பூத்துக் குலுங்குபவை இந்த ‘பொலித்தீன் பூக்கள்’ என்றால் அது மிகையாகாது! ஆனால் அமெரிக்காவும், மேற்குலக நாடுகளும் இன்று இதை ”ஆபிரிக்காவின் பூக்கள்” என்று செல்லமாக அழைப்பதை நாம் காணலாம்…

உலகில் காணப்படும் பொலித்தீன் கொள்ளளவுகளில் மட்டும்  44 சதவீதத்தை ஆசிய பசுபிக் நாடுகள் கொண்டுள்ளன. இது கிட்டத்தட்ட 12 மில்லியன் தொன்களுக்கு மேலாகக் காணப்படுகிறது. இதில் இந்தியாவும், சீனாவும் மட்டுமே 8 மில்லியன் தொன்களுக்கு மேலாகக் கொண்டுமுள்ளது. இன்றைய புதிய உலக ஒழுங்கமைப்பு நகர்வில் (2006)…,  உலகின் இரண்டாவது பெரிய உற்பத்தியாகிய பொலித்தீன், பிளாஸ்திக் உற்பத்திகள் : ஆசிய பசுபிக் நாடுகள், மத்தியகிழக்கு நாடுகளின் சந்தைப் பகிர்வின் ஊடாக மொத்த உலகக் கொள்ளளவில் 80 சதவீதத்தை, கைப்பற்றும் புதிய உலக ஒழுங்கமைப்பு சாத்தியப்பாடான நிலைகளை எட்டியுள்ளது……………. (இது மொத்த பிளாஸ்திக் உற்பத்தியையும் உள்ளடக்கியது)

தேர்தலுக்குப் பின்னரான வன்முறைகளை தடுப்பதற்காக நாடங்கலாக பொலிஸாரை உசார்ப்படுத்தப்பட்ட நிலையில் தாம் வைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஸ்ட அத்தியட்சகர் ஐ. எம். கருணாரத்ன தெரிவித்துமிருந்தார்.

ஆனால் தேர்தல் முடிவுகள் முழுதாக அறிவிக்கப்பட்டதன் பின்னர் கழிந்து சென்ற 36 மணித்தியாளங்களுக்குள் 33 வன்முறைகள் நடந்திருந்தன! இது மணித்தியாலத்துக்கு சராசரியாக ஒரு வன்முறையாக வராலாற்றுப் பதிவுகளை ஏற்படுத்திச் செல்கிறது. …

 பாரதூரமான வன்செயல்களாக 18 சம்பவங்களும், தீ மூட்டல் சம்பவங்களாக 07 சம்பவங்களும் போக, மீதி 15 வன்முறைகளாக இருக்கிறது. இதில் 02 கொலைகள் உட்பட  துக்கமான அல்லது பாரதூரமான 04 ன்கு சமபவங்களும்,  ‘தீ’ நடவடிக்கைள்  மற்றும் ஒரு கொள்ளை உட்பட: இந்த 33 வன்முறைகளும் பதிவாகியுள்ளது. இவற்றை சி.எம்.ஈ.வி உம் :  இதனூடாக 1997 ல் உருவான கபே, மற்றும் எவ்.எம்..எம் (  FreeMedia Movement )  இணைந்து உருவாக்கிய  ‘இன்போர்ஃம்’ ( HumanRights Documentation Centre. ) செய்திகளாக வெளியிட்டும் உள்ளது.

இலங்கையில் முதல் தடவையாக ஒரே நாளிலும், இரண்டு வருடத்துக்கு முதலாகவும் இவ் ஜனாதிபதித் தேர்தல் நடக்கிறது. இத் தேர்தலில் ஒரு கோடியே 40 இலட்சத்து 88 ஆயிரத்து 500 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். 11ஆயிரத்து 98 வாக்களிப்பு நிலையங்களையும், இதற்கான காவற் கடமையில் 68 ஆயிரத்து 800 பொலீசாரும் தயாரான நிலையில் இருந்தது.

இத் தேர்தலைக் கண்காணிப்பதற்கு உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த சுமார் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஆயத்தமாக இருக்கின்றனர். தேசிய வாக்களிப்பு கண்காணிப்பு நிலையம், தேர்தல் கண்காணிப்புக்கான வலையமைப்பு, வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையம், பெப்ரல், கபே போன்றவைகளும் வேறு சில தனியார் தேர்தல் கண்காணிப்பு நிலையங்களும், கண்காணிப்பில் ஈடுபடத் தயாராக இருப்பதாக தேர்தல் திணைக்களம் தெரிவிக்கிறது.

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE