Language Selection

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

சுதந்திரத்தின் பின்பு ஸ்ரீலங்காவில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் சர்வதேச சமூகத்திற்கும் அதன் கருத்தியல் வடிவமான ஐக்கிய நாடுகள் (ஐ.நா.) சபைக்கும் புதிய விஷயம் அல்ல. ஸ்ரீலங்கா அரசின் மனித உரிமை மீறல்கள் தொடர்பான முதல் விவாதம் 1986 இல் ஐ. நா. சபையின் மனித உரிமைகளுக்கான ஆணைக்குழுவின் கூட்டத்தில் நடைபெற்றது. இதற்கான தீர்மானத்தை ஆணைக்குழுவின் கூட்டத்தில் கொண்டு வந்த நாடு ஆர்ஜென்டீனா. தீர்மானத்தை கொண்டு வருவதில் பின்னணியில் தீவிரமாக இயங்கிய நாடான இந்தியா தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்தது. அப்போதைய ஸ்ரீலங்காவின் ஜனாதிபதியான ஜே.ஆர். ஜயவர்த்தனாவின் நண்பர்களாகவிருந்த அமெரிக்காவும், மேற்கு ஐரோப்பிய நாடுகளும் அவர்களுடைய சொல் கேட்ட பல ஆபிரிக்க நாடுகளும் தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்தன.

 

தமிழக மகா கவியாம்
சுப்பிரமணியபாரதி தானே சாமியாடி
தன் வீட்டுக் கூரையாலும்
பொத்துப் பொத்தென வீ ழுமென
கோரிக்கை மேல் கோரிக்கை வைத்த..!?

இயற்கையில் இருந்து நாம் நுகரும் பொருட்களை, மனிதனின் உழைப்பே உருவாக்கின்றது. உழைப்பு இயற்கை மீது நிகழ்கின்றது. இப்படி உழைத்து உருவாக்கிய பொருட்கள் மீது, மனிதன் ஆளுமை செலுத்த தவறிய ஒரு உலகில் நாம் வாழ்கின்றோம்;. மாறாக பொருட்கள் மனிதன் மேல் ஆளுமை செலுத்துகின்றது. தன் கையால் உருவாக்கிய பொருட்களின் அடிமையாகிய பரிதாபம், மனித சமுதாயத்தை மீள முடியாத அடிமைத்தனத்தில் தள்ளியுள்ளது.

14.கருத்து எழுத்து பேச்சு சுதந்திரத்தை மறுத்து உருவானதே புலிப்பாசிசம்

அரசியல் ரீதியாக மக்களுக்கு எதிரான அரசியல் நிலையை இயக்கங்கள் உருவாக்கியதற்கு, இலங்கை இனவாத பாசிச அரசை நாம் நேரடியாக குற்றம் சாட்டமுடியாது. மாறாக போராடும் அமைப்புகளின் வர்க்கம் சார்ந்த, மக்கள் விரோதத் தன்மையே இதன் பிரதான அடிப்படையாகவும், மூல வேராகவும் இருந்துள்ளது. இன ஒடுக்குமுறையை பேரினவாத பாசிச அரசு தமிழ் மக்கள் மீது திணித்து அவர்களை அடக்கிய போது, அதற்கு எதிரான போராட்டம் இயல்பாகவும் இயற்கையாகவும் மனித உரிமைக்கானதாக எழுந்தது.

புலி ஒரு பாசிச இயக்கமாக, அதுவே ஒரு அரசியல் சக்தியாக இருந்ததை பலர் புரிந்து கொள்ள மறுக்கும் போதே, தொடர்ச்சியான தவறுகள் இழைக்கப்பட்டது. புலிகளை வெறும் குட்டிப+ர்சுவா வர்க்க இயக்கமாகவும், தேசிய பூர்சுவா வர்க்க நலனை பிரதிநிதித்துவப் படுத்துவதாகவும் கருதினர். புலிப் பாசிசத்தின் அடிப்படையை காணத் தவறியதன் மூலம், சரியான அரசியல் வழி தொடர்ச்சியாக நிராகரிக்கப்பட்டது. இதன் மூலம் சித்தாந்த ரீதியாகவும், நடைமுறை ரீதியாகவும் பாசிசத்துக்கு துணைபோனார்கள். உண்மையில் புலிகளின் பாசிசத்துக்கு எதிரான அணியை துல்லியமாக தனித் தனியாக ஆராய்ந்தால், பாசிசத்தை நிலை நாட்டுவதில் தோல்வி பெற்ற மற்றொரு பாசிச பண்பியலை அடிப்படையைக் கொண்ட உதிரி நபர்களும், குழுக்களும் காணப்படுகின்றனர். புலிப் பாசிசத்தை சரியாக அரசியல் ரீதியாக புரிந்து கொள்ள தவறியதன் விளைவு, எதிர் தரப்பையும் புரிந்து கொள்வதை நிராகரிப்பதன் மூலம் போராட்டமே அழிந்தது. அரசியல் ரீதியான தவறான மதிப்பீடு, அரசியல் ரீதியான பாசிச கண்ணோட்டத்தையே நட்பு சக்தியாக அனுசரிக்க கோரியது.

11.புலிகள் பாசிட்டுகளே ஒழிய ஒரு மக்கள் இயக்கமல்ல

புலிகள் தமது தேசியமாக, பாசிசத்தையே ஆணையில் வைத்தனர். பேரினவாதத்துடன் சண்டை செய்வதாக கூறிக்கொண்டு, மக்களை ஓடுக்கினர். மக்களையும், உலகத்தையும் எமாற்ற பொய்யும் புரட்டும் மூலதனமாகியது. எதிரியைப் பற்றி வாய் கிழிய கூறிக் கொள்வதன் மூலம், ஜனநாயகத்தை பறித்தெடுத்தனர். மாற்றுச் சிந்தனையை முன் வைத்து, தேசத்தின் அடிப்படையான தேசிய பொருளாதார நலன்களைப் பற்றி பேசும் போது, அவர்களை நாட்டுபற்றயற்ற துரோகி என முத்திரை குத்தினர். ஜெர்மனிய நாசிகளைப் போல், தாம் அல்லாத அனைவரையும் கொன்று புலிகளின் பாசிச சித்தாந்தம் மிகவும் உறுதியானதும், முழுமையானதும், சீரானதுமாக, முன் கூட்டியே திட்டமிட்ட ஒரு கோட்பாடுயல்ல.

இன்று ஐரோப்பிய மக்கள் மத்தியில், குறிப்பாக இளம் சந்ததியினரிடம் முஸ்லீம் எதிர்ப்புச் சிந்தனையும், கருத்துக்களும் அதிகரித்துச் செல்கின்றது. இது எல்லா வெளிநாட்டவர் மீதுமான எதிர்ப்பு அலையாக இருந்தபோதும், குறிப்பாக முஸ்லீம் மீதான எதிர்ப்பாகத்தான் பெரிய அளவில் காணப்படுகின்றது. ஆரம்பத்தில் சிறுசிறு அளவில் காணப்பட்ட இந்தவகை எதிர்ப்பு உணர்வுகள், தற்போது பேருருக்கொண்டு வன்முறையாக மாறியுள்ளது.

புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 45

 

"தமிழீழ விடுதலைப் போராட்டம்" குறித்து செயற்குழுவுக்குள் ஆரம்பித்த விவாதம்

இலங்கை அரசுக்கும் ஈழவிடுதலைப் போராட்ட இயக்கங்களுக்குமிடையில் பூட்டான் தலைநகர் திம்புவில் நடைபெற்றுக்கொண்டிருந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவுற்றிருந்தது. ஜே.ஆர் ஜெயவர்த்தன தலைமையிலான இலங்கை இனவாத அரசு வடக்கு-கிழக்கு மக்கள் மீதான போருக்குத் தயாராகிக் கொண்டிருக்க, ஈழவிடுதலைப் போராட்ட இயக்கங்களுக்கிடையிலானதும், இயக்கங்களுக்குள்ளானதுமான முரண்பாடுகளும் மோதல்களும் - ஈழவிடுதலைப் போராட்ட இயக்கங்களுக்குள்ளே காணப்பட்ட அரசியல் வறுமை காரணமாக தோற்றம் பெற்றிருந்த முரண்பாடுகளும் மோதல்களும் - வெளிப்பட்டுக் கொண்டிருந்தன.

அரசு மட்டும் தாமல்லாதவரை கொல்லவில்லை, தாக்கவில்லை. புலியும் அதைத் தான் செய்தது, செய்கின்றது. முள்ளிவாய்க்கால் முடிந்தபின் ஐயோ என்று சொல்லிப் புலம்பிய புலிகள், இனி தாங்கள் அப்படிச் செய்ய மாட்டோம் என்று வேஷம் போட முனைய, இடதுசாரி வேஷம் போட்டவர்களும் கூடி ஆமாம் போட்டனர்.

வலதும் இடதுமற்ற தமிழ் தேசிய அரசியல் அனுசரணையுடன் தான், 23.06.2011 அன்று இலண்டன் வீதியில் கொலைவெறி ஆட்டம் போட்டது புலிக் கூட்டம். இரும்புக் கம்பியும், போத்தலுமாக, கொலைவெறியுடன் அவர்கள் பாய்ந்தனர். முள்ளிவாய்க்கால் வன்னியில் மட்டுமல்ல, இலண்டன் வீதியிலும் தான் நிகழ்ந்தது . எமது அமைப்பு (புதிய ஜனநாயக மக்கள் முன்னணியின் தோழர்களுக்கு) இதற்கு முன்பாகவே, நோர்வே – பாரிஸ் – இலண்டன் வீதிகளில், இது போன்ற வேறுபட்ட வன்முறையை எதிர்கொண்டிருந்தது.

எமது மக்கள் பாரிய மனித அழிவைச் சந்தித்து இரண்டு வருடங்களாகின்றது. இது இந்த நூற்றாண்டில் நடந்த பாரிய மனித அவலமாகும். இலங்கைப் பேரினவாத அரசு எம் மக்கள் மீதான ஒரு இனப் படுகொலையை நடத்தியிருந்தது. சிறுவர்கள், பெண்கள், வயோதிபர்கள் என அனைவர் மீதும் ஈவிரக்கமற்று நடத்தப்பட்ட வன்முறை, இன்றும் ரணமாகி பாரிய வலியை எம் சமுதாயத்தில் ஏற்படுத்திய வண்ணமுள்ளது.

இலங்கை வடகடலில் இந்திய மீனவர்களின் கைதுக்கு எதிரான போராட்டங்கள், இலங்கையின் இறையாண்மையை மட்டுமின்றி அங்கு வாழும் மக்களின் உரிமையையும் கூட மறுக்கின்றது.

இந்திய விஸ்தரிப்புவாதிகளும், தமிழக குறுந்தேசியவாதிகளும் இலங்கை மீனவர்களின் வாழ்வையே மறுத்து நிற்கின்றனர். எல்லையும் கடந்து கடல் வளத்தை அழிக்கின்ற அடாவடித்தனத்தை, அது நியாயப்படுத்துகின்றது. தமிழ் தேசியமும், இடது வேஷம் போட்ட தேசியவாதமும், இதற்கு பின்னால் நின்று குடை பிடிக்கின்றன. இந்த நிலையில் இலங்கை மீனவர்கள் அரசியல் அனாதைகளாகி, பேரினவாதத்திடமே தமக்கான நியாயத்தை கோருகின்ற அவலம்.

தமிழ் தேசியவாதிகள் கூறுகின்றனர் இது “சிங்களவனின்” சுதந்திர தினம் என்று. நாங்கள் கூறுகின்றோம், அதுவுமில்லை என்று. தமிழன், சிங்களவன் என்று எவனுக்கும், இலங்கையில் சுதந்திரம் கிடையாது. ஆம் இலங்கை மக்களுக்கு சுதந்திரமில்லை. இது தானே உண்மை.

இப்படியிருக்க குறுகிய தமிழ் இனவாதம் மூலம் சுதந்திரத்தைப் பற்றிய குறுகிய இனவாதப் பிரச்சாரம், சுதந்திரம் மறுக்கப்பட்ட சிங்கள மக்களுக்கு எதிரானது. இது இனவாத அரசுக்கு சார்பானது. இது தமிழ் மக்களுக்கு எதிரானது. தமிழனை சுரண்டும், தமிழ் சுரண்டும் வர்க்கத்தை முன்னிறுத்தும், தமிழ் வலதுசாரியமாகும்.

நாட்டின் பொருளாதார நெருக்கடிகள் பூதாகாரமாகி வருகின்றன அவற்றின் வெளிப்பாடாகவே அண்மையில் டீசல், பெற்றோல், மண்ணெண்ணெயின் விலைகளும் மின்சாரக்கட்டணமும் உயர்த்தப்பட்டன. அதன்மூலம் சகல அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் போக்குவரத்துக் கட்டணங்களும் தாங்கமுடியாத அளவுக்கு உயர்ந்துள்ளன. தொடர்ந்து விலை அதிகரிப்புக்களும் கட்டண உயர்வுகளும் இடம்பெறப்போகின்றன. இவை இன மொழி மத பேதமின்றி அனைத்து உழைப்புக்கும் மக்களுக்கு எதிரானவைகளேயாகும் தமது ஆட்சி அதிகாரத்தை தேவைக்காக மக்களை இனப்பகை மூலம் பிரித்து வைத்தும் பொருளாதார நெருக்கடிகளை எல்லா மக்களின் மீதும் சுமத்தியிருக்கின்றனர். இதனால் தெற்கிலே உழழைக்கும் சிங்கள மக்கள் வீதியில் இறங்கிப் போராட்டங்களை ஆரம்பித்துள்ளனர்.

புலிகள் எப்படி ஒரு பாசிச இயக்கமாக உருவானார்கள் எனப் பார்ப்போம். முதலில் இதை நாம் வரலாற்று கூறில் இருந்து குறிப்பாக பார்ப்போம். சண் தலைமையிலான இடதுசாரி இயக்கம் முன்னிறுத்திய வர்க்கப் போராட்டமும், வடக்கில் நடத்திய சாதிப் போராட்டங்களும், தமிழ் வலது பிரிவின் பொது அரசியலை நெருக்கடிக்குள்ளாகியது. தமிழ் தேசியத்தை முன்வைத்து வந்த வலது பிரிவுகளான நிலப்பிரபுத்துவ மற்றும் தரகு வர்க்க நலன்களுக்கு, இது பலத்த அரசியல் நெருக்கடியைத் தோற்றுவித்தது. இதே போன்று இலங்கை அளவில் தொடர்ச்சியாக பல குழுக்கள் சார்ந்த இடதுசாரி போராட்டங்கள், சுரண்டும் வர்க்கத்தை நெருக்கடிக்குள்ளாக்கியது. இதை முறியடிக்கவே வலது பிரிவுகள் இனம் கடந்து, இன மோதலை உருவாக்கினர். இலங்கையில் 1960க்கு பிந்திய பத்தாண்டின் இறுதியில் நடந்த வர்க்கப் போராட்டங்கள், வலது பிரிவை ஒற்றுமைப்படுத்தியது. அமைதியான வழியில் இனப்பிரச்சனையை தீர்க்க பல முயற்சிகள் எடுக்கப்பட்டன.

 

யார் என்ன சொன்னாலும் இந்தியாவின் பங்கு தலைவர் பிரபாகரனின் மரணத்தில் அதிகம் இருக்கிறது.

 

அரசாங்கம் தாங்கள் கொன்றதாகச் சொன்னாலும் 75 வீதம் வெளிநாடுகளின் பங்கு இந்த மரணத்திலும் அழிவிலும் இருந்தது. என்பதே உண்மை!….பிள்ளையான்

இலங்கையில் எரிபொருட்களின் விலையை என்றுமில்லாதவாறு உயர்த்தி சாதனை படைத்துள்ளது இலங்கை அரசு. இதனைத் தொடர்ந்து இன்னும் சில தினங்களில் ஏனைய அத்தியாவசிய பொருட்களின் விலைகளையும் ஏற்றப்போகின்றது. இதன் மூலம் நாட்டின் சாதாரண மக்களிடமிருந்து பணத்தினை கொள்ளையிட்டு தானும் ஏகாதிபத்தியங்களும் பங்கு போடவுள்ளனர்.

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE