Language Selection

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

1930.10.17ம் திகதி பகத்சிங்குக்குத் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டது. கூடவே ராஜ்குருவுக்கும், சுக்தேவிற்கும் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டது.


இற்றைக்கு 80 வருடங்களுக்கு முன்பு இவ் அழகிய இலக்கியம் படைப்பாகியது. இன்னும் சரியாகச் சொல்வதென்றால் 1931ம் ஆண்டு மார்ச் மாதம் 23ம் திகதி பகத்சிங், ராஜ்குரு, சுக்தேவ் ஆகியோர் தூக்கிலிப்பட்டபோது அது பிறந்தது. பகத்சிங்கும் அவர்களது தோழர்களும் தூக்கிலிடப்பட்டவுடன் பிரிட்டிஷ் அரசு இவர்கள் பற்றிய நூல்கள் அனைத்தையும் தடைசெய்தது. தமிழ் நாட்டில் மட்டும் 11 தமிழ் நூல்கள் தடைசெய்யப்பட்டன. ஆனாலும், பகத்சிங்கும் அவரது தோழர்களும் தூக்கிலிடப்பட்ட ஐந்து மாத இடைவெளிக்குள் அவர்கள் பற்றிய புத்தகமொன்று 6தடவைகள் பதிப்பைப் பெற்றிருந்தது. ஆறாவது பதிப்பு மட்டும் 5000 பிரதிகளைப் பெற்றிருந்தது.

இன்றைக்கு இருக்கின்ற இந்தச் சமுதாயம் நேற்று இருந்திருக்கேலாது எண்டது விளங்குதோ உனக்கு?


அப்படி விளங்கியிருந்தா சமுதாயம் எண்டா என்னடாப்பன் சொல்லு பாப்பம். தலையைச் சொறியிறது உனக்குத் தொழில். உனக்கு விளங்கப்படுத்த படாதபாடு படுகிறது என்ர தொழில் தம்பி.


மனிசராகப்பட்ட நாங்கள் தனிச்சு வாழலேலாது தம்பி. மற்ற மனுசர்களோட ஒரு ஒழுங்கு முறையுக்குள்ள சேர்ந்து பகிர்ந்து வாழுறது தான் சமுதாயம் எண்டிறம் தம்பி. தனிச்ச மனிசனாக சமுதாயத்தினுடைய எந்தப் பொருளையோ உறவையோ தீண்டாம வாழ ஏலாது தம்பி. நாங்க ஒவ்வொருத்தரும் சீவிக்கிறதுக்கு மற்ற மனிசர் கைபட்டு உருவாகின பொருள் எதையுமே தீண்டாம, மனிசரிட தொடர்ப முற்றுமுழுசாக அறுத்துக் கொண்டு வாழ ஏலாது தம்பி. பிறந்தவுடனேயே தாய்ப்பாலுக்கும் அணைப்புக்கும் பாதுகாப்புக்கும் பராமரிப்புக்கும் எண்டு ஆரம்பிக்கிற வாழ்க்கை அதின்ர ஓட்டத்தில மனிசர்களோட சங்கிலித் தொடரா இணைஞ்சு வாழ வேண்டிய நிர்ப்பந்தம் இருக்கோ இல்லையோ?

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம், கொழும்பு. கோடை கால வருகையை பறை சாற்றும் ஜூலை மாதம். விமான நிலைய குடிவரவு அதிகாரிகளுக்கு முன்னால் பயணிகளின் நெரிசல். உட்புகும் விசா குத்தி அனுப்புவதில் அவ்வளவு தாமதம். என்னை சுற்றி நின்ற பயணிகளில் புகலிடத் தமிழர்களே அதிகம் காணப்பட்டனர். சுவிஸ், பிரான்ஸ், கனடா என்று பல திசைகளில் இருந்தும் பிள்ளை, குட்டிகளுடன் வந்திறங்கியிருந்தார்கள். ஜூலை, ஆகஸ்ட் மாதங்கள் மேற்கு நாடுகளில் பாடசாலைகளுக்கு கோடை விடுமுறை விட்டிருப்பார்கள். அதனால் விடுமுறையை தாயகத்தில் கழிக்க குடும்பத்துடன் வந்திருப்பார்கள். ஒரு மீட்டருக்கும் குறையாத பயணிகளின் வரிசை குடிவரவு சுங்க எல்லையைக் கடக்க ஒரு மணி நேரம் எடுத்தது. சுவிட்சர்லாந்து, பிரிட்டனில் இருந்து வந்தவர்கள் அதிக நேரம் காக்க வைக்கப் பட்டனர். வெள்ளயினத்தவர்களின் கடவுச்சீட்டுகள் கூட நேரமெடுத்து சோதிக்கப்பட்டதை அங்கே தான் பார்த்தேன்.

பிரிட்டனில் இருந்து இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படும் இலங்கை தமிழர்கள் அங்கு சித்திரவதை மற்றும் பாலியல் வல்லுறவுக்கான ஆபத்துக்களை எதிர்நோக்குவதாக இரு மனித உரிமை அமைப்புக்கள் கவலை வெளியிட்டுள்ளதை பிரிட்டன் கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது.

வன்னி யுத்தம் குறித்த ராணுவ நடவடிக்கையினை திட்டமிட்டு வழிநடத்திய சர்வதேசம்

மனிதவுரிமையை நிலைநாட்டவா? தமிழ் மக்களின் நியாயமான உரிமைகளுக்கு தீர்வு காணவா? தமிழ் மக்களின் மீதான குற்றங்களுக்கு நீதி வழங்கவா? ஏகாதிபத்தியத்தை எதிர்க்கவா? தேசத்தின் சுயாதிபத்தியத்தை பாதுகாக்கவா? சொல்லுங்கள்? இதனால் எதற்காவது நியாயம் கிடைக்குமா? இல்லை நியாயம் கிடைக்கும் என்று கூறுகின்ற, காட்டுகின்ற அனைத்தும், ஏன் இந்த மோசடியை அம்பலப்படுத்தாத அனைத்தும் பொய்யானது புரட்டுத்தனமானது. இதை ஒட்டுமொத்தமாக முன்வைத்துக் கோராத, போராடாத அனைத்தும் மோசடியானது.

கடந்தவாரம் நடைபெற்ற மகிந்தா-சம்பந்தன் சந்திப்பு பற்றி பெரும்-பெரும் வியூகங்களிலான பரபரப்புச் செய்திகளை காணமுடிந்தது. சம்பந்தனின் காலில் (ஜெனீவாககூட்டம்) மகிந்தா விழுந்தது மாதிரியான சில தமிழ்த்தேசிய ஊடகங்களின்  குதூகலிப்பு!!










நீதியின் நேசவல்லவர்கள் கூடுதலும்
நீசர் ஆட்சியின் நெட்டூரம் காணுதலும்
கால ஓட்டத்தில் கைகோர்த்து நிற்றலும்
தேச வழமையாய் ஜெனிவாவில் ஆனது

தர்மச்சக்கரத்தில் உலகைச் சுழற்ற..புதிதாய்
தலைவர் வருகிறார்
புலத்து தமிழா தெருவில் இறங்கு
கொடியைத் தூக்கு
விடியலைத்தரும் சூரியதேவன்

மண்டியிட்டு சரணடைந்து மாண்டுபோன புலிகள் போய்..
பிஞ்சுகளின் உறவுகளை பிணமாக்கி.. இறுதியிலே
அகதியாய் வேடமிட்டு உன் அரவணைப்பு தேடி வந்துள்ளார்
சிங்கக்கொடியை கொடு சிம்மாசனமும் கொடு.. அவர்
கையைப் பிடித்து தமிழினத்தின் கண்ணில் குத்து
உலகுக்கு பறைசாற்று.. கையேந்து
ஒட்டு மொத்த இலங்கையையும் அடகுவை

கூடங்குளம் அணு உலைக்கெதிரான மக்களின் போராட்டத்தை மத்திய ஆட்சியாளர்கள், வெளிநாட்டு சக்திகளின் தூண்டுதலில் நடப்பதாகவும், மக்கள் பணம் வாங்கிக்கொண்டு போராடுகிறார்கள் என்றும் கொச்சை படுத்திவருகின்றனர்.இதோடு கூடங்குளம் அணு உலையால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்றும் புளுகிவருகின்றனர்.

ஏலவே வடக்குக் கிழக்கு மக்களை யுத்தத்தால் கொன்றொழித்து, வந்த பேரினவாத முதலாளித்துவ ஆளும் வர்க்கம் இப்போது நாட்டின் ஏகப் பெரும்பான்மையான அனைத்துத் தொழிலாளர்கள் விவசாயிகள், மீனவர்கள் மற்றும் உழைக்கும் மக்களை விலை உயர்வுகளால் சாகடிக்க ஆரம்பித்துள்ளது. இவ் இடத்தில் இன, மொழி, மதப் பேதங்களுக்க அப்பால் அனைத்து உழைக்கும் மக்களும் ஐக்கியப்பட்டு வீதியில் இறங்கிப் போராடுவதே ஒரே மார்க்கமாகும்.

ஆட்சிமாற்றங்கள் ஒவ்வொன்றும்
அடுத்து மாற்றம் நிகழப்போவதாய்
வாக்குப்போடுங்கள் தீர்வு வருமென்றார்கள்
பிரிவினை நாடும் ஆயுததாரிகள்
அழிக்கப்பட்டதும் நாடு சொர்க்கபுரியாகும் என்றார்கள்
பயங்கரவாதம் இல்லாதுபோனதாய்
தேசத்தின் மகுடம்
பட்டொழிவீசி மிளிர்வதாய் ஆயுதக்காட்சியாக்கினார்கள்

முற்குறிப்பு:

ஜனனி செல்லத்துரையுடனான இந்தப் பேட்டி 2011 புரட்டாதி மாத ஆரம்பத்தில் எடுக்கப்பட்டது. மேலும் பாதுகாப்புக் காரணங்களினால் கடந்த இதழில் இப்பேட்டி வெளியிடப்படவில்லை. தற்போது அவர் பாதுகாப்பான சூழலில் உள்ளதனால் அவரின் சம்மதத்துடன் இப்பேட்டி இங்கு பிரசுரிக்கப்படுகிறது. அத்துடன் அவரின் பெயர் மற்றும் தனிப்பட்ட விபரங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.


ஒரு கம்யுனிஸ்ட்டு சாதி, மதம், மொழி கடந்தவன் அல்லது கடந்தவள். அவர்களிற்கு தேசங்கள் எல்லைக்கோடுகள் போட முடியாது. அவர்கள் சர்வதேசியவாதிகள். ஆர்ஜென்டினாவில் பிறந்து கியூபப்புரட்சியாளர்களுடன் தோள் சேர்த்து போராடி, புரட்சியின் வெற்றிக்கு பிறகு கிடைத்த பதவியை துச்சமென தூக்கி எறிந்து விட்டு பொலிவியாவின் போராளிகளுடன் சேர்ந்து போராடும் போது சி.ஜ.ஏ கொலையாளிகளினால் சித்திரவதைப்படுத்தப்பட்டு மரணமடைந்த தோழன் சேகுவராவின் வாழ்வு ஒரு கம்யுனிசப் போராளியின், சர்வதேச மனிதனின் வாழ்விற்கான எடுத்துக்காட்டு.

ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்ட முன்னோடிகள்

“ஆண்ட பரம்பரை மீண்டுமொருமுறை ஆள நினைப்பதில் என்ன குறை” இக்கோசம் 70-ம். ஆண்டு தேர்தல் காலத்திலும், வட்டுக்கோட்டை மாநாட்டிலும் “தமிழ் ஈழத்திற்காக” ஓங்கி ஒலித்தது. தமிழர் கூட்டணியின் அன்றைய பிரச்சார மேடைகளின்” ஆஸ்தான கவிஞர் காசியண்ணா அவர்களால் இளைஞர்களை உசுப்பேத்துவதற்கும் பாடிய வரிகளாகும்.

தோழர் அகிலனால் எழுதப்பட்ட “அரசிற்கு எதிராக வெள்ளாள மாக்சியர்கள்! அரசிற்கு ஆதரவாக தலித்து வெங்காயங்கள்!” என்னும் ஆக்கம் குறித்து பல வாசகர்களிடமிருந்தும், தோழர்களிடமிருந்தும் விமர்சனங்கள் இணைய குழுவினராகிய எம்மை நோக்கி வந்துள்ளன. தோழர் அகிலன் இந்த ஆக்கத்தினை குறிப்பாக இரு சம்பவங்கள் குறித்த எதிர்வினையாகவே எழுதியிருந்தார். இந்த ஆக்கம், குறிப்பான இரு சம்பவங்கள் மீதும் சரியான வகையில் எதிர்வினை ஆற்றியிருந்த போதும், அவர் அவ்விரு சம்பவங்களுக்குள் மட்டும் ஆக்கத்தை குறுக்கிக் கொண்டதால் வாசகர்கள் மற்றும் தோழர்கள்  மத்தியிலிருந்து  இந்த ஆக்கம் பிழையான கருத்தினை முன்வைப்பதாக விமர்சனங்கள் எழுந்தன. குறிப்பாக தோழர் இந்த ஆக்கத்தினை மேலும் விரிவாக எழுதி பூரணப்படுத்தி இருந்திருக்க வேண்டும்.

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE