Language Selection

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

அரசியலில் எதிரியும் கிடையாது, நண்பனும் கிடையாது என்பார்கள். அதற்கு உதரணம் தான் மகிந்த, பொன்சேகா இருவரும். இவர்களின் அன்றைய நட்புக்கு காரணம் தமிழ் மக்களை அழிப்பது. இன்றைய பகைமைக்கு காரணம் எந்த வல்லரசின் பக்கம் சார்ந்து இலங்கை மக்களை சுரண்டுவது என்பதே.  மிகிந்தவே சீனாவின் கைப் பொம்மையாக செயற்படும் நிலையில் சரத்தோ மேற்கு நாடுகளின் பெம்மையாக செயற்பட ஆரம்பித்தார். இதன் விளைவே சரத்தின் இந்த நிலைக்கு காரணம். அன்று தமிழர்களை அழிப்பதற்கு இருவரும் கூட்டாக நின்று சிங்கள தேசியத்தை முன்னிறுத்தி சிங்கள மக்களை சுரண்டி வாழ்ந்தனர். யுத்தம் முடிவிற்கு வந்த பிற்பாடு ஒட்டு மொத்த சுரண்டலை நடத்த ஏற்பட்ட போட்டியின் விளைவே இது.  இங்கு மக்களை யார் பார்க்கிறார்கள். தமது கல்லாப் பெட்டியை அல்லவா பார்க்கிறார்கள்.

 

முன்னாள் பெண் போராளிகளுக்கு வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகத் அரச தகவல்கள் தெரிவிக்கின.றன.  மேலம் "புனர்வாழ்வுப் பயிற்சியின் பின்னர் சமூகத்துடன் இணைக்கப்படவுள்ள பம்பைமடு புனர்வாழ்வு நிலையத்தில் உள்ள யுவதிகள் வேலை வாய்ப்பு பெறுவதற்காக அந்த நிலையத்தில் ஆடைத்தொழிற்சாலை நிறுவனங்கள் கலந்து கொண்ட நடமாடும் சேவையொன்று இடம்பெற்றுள்ளது. இதில் சுமார் 12 நிறுவனங்கள் கலந்து கொண்டு, தம்மிடமுள்ள தொழில் வாய்ப்புக்கள் குறித்து இந்த பெண்களுக்கு விளக்கியுள்ளனர்." இப்படிபட்ட அக்கறை  முன்னாள் பெண் போராளிகள் மீது. தொழில் வாய்பளிக்கப்படுவதாக அரச சார்பு ஊடகங்கள் இதை தெரிவிக்னின்றது.


இந்த செய்திக்கான   பு.ஜ.ம.மு இன்  கண்ணோட்டம்  செய்தியின் இறுதியில் இணைக்கப்பட்டுள்ளது.

சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தி கிடைப்பதை பெற்றுக் கொள்ளுவோம்…

நமக்கு கிடைக்கும் நல்ல சந்தர்ப்பங்களை பயன்படுத்தி கிடைப்பவற்றை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று பாரம்பரிய மற்றும் கைத்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். அரியாலை கிழக்கில் உள்ள வயல்நிலங்கள் 15 வருடங்களின் பின்னர் மக்களிடம் கையளிக்கப்பட்ட நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் பொழுதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்த செய்தியானது சிங்கள இனவாதிகளும், பௌத்த மதவாதிகளும், அவர்களின் தலைமையிலான அரசும் இலங்கையில் சிறுபான்மையின மக்களிற்கு எந்தவிதமான அரசியல் உரிமைகளையும் எக்காலத்திலும் வழங்கமாட்டா என்பதனை மேலும் உறுதி செய்துள்ளது. இவர்கள் தொடர்ந்தும் இனவாதத்தினை உயர்த்தி பிடிப்பதன் ழூலம் தமக்கும் தமது அந்நிய எஜமானர்களிற்கும் எதிரான சகல இன மக்களின் ஒன்றுபட்ட எழுச்சியினை இல்லாதொழிக்க முயல்கின்றனர்.

இவர்களை வெற்றி கொள்வது என்பது, சகல இன மக்களையும் இனவாதம் மதவாதம் மற்றும் நாட்டின் சகல வளங்களையும் கொள்ளையிடும் அந்நிய ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக அணிதிரட்டி போராட்டத்தினை முன்னெடுப்பதன் ழூலமே சாத்தியமானதாகும்.

************

சிறுபான்மையின மக்களின் அடிப்படையான சகல அரசியல் உரிமைகளையும்

மறுத்து போரில் வெற்றி கொண்டதன் ழூலம் அவர்களின் இன

அடையாளங்களை மேன் மேலும் இல்லாதொழித்துக் கொண்டு மறுபுறத்தே

அபிவிருத்தி, நிவாரணம் என கதை அளந்து இந்திய, சீன மற்றும் அந்நியர்களிற்கு வடக்கு கிழக்கிலே அடிமைத் தொழிலாளர்களை பிடித்துக் கொடுத்து உங்கள்

குடும்ப சொத்தினை மேன் மேலும் பெருக்கி ஏன் எதிர்காலத்தில் இலங்கைத்

தீவே உங்கள் குடும்பச் சொத்தென்று உரிமை கோரினால் கூட

ஆச்சரியப்படுவதற்கில்லை.

செய்தியும் செய்திக்கண்ணோட்டமும் 22-09-2010

மக்களுக்காக—மக்களால்---மக்களுடைடயதாம்---ஜனநாயகம்!

நம்நாட்டில் அது மகிந்தாவிடம் மண்டியிட்டுள்ளது!

செப்டெம்பர் 15ஆம் திகதியை சர்வதேச ஜனநாயக தினமாக அனுஷ்டிக்கும் தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் சபை 2007 நவம்பர் 8 ஆம் திகதி பொதுச் சபையில் நிறைவேற்றியிருந்தது.

இதேவேளை சர்வதேச ஜனநாயக தினம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை விடுத்துள்ள அறிக்கையில், ஜனநாயகம் என்பது மக்கள் தமது அரசியல் பொருளாதாரம் சமூக மற்றும் கலாசார நடைமுறைகளை தீர்மானிப்பதுடன் தங்களது வாழ்க்கையின் அனைத்து சந்தர்ப்பங்களிலும் அவை பயன்படுத்தப்படுவதை சுதந்திரமாக வெளிப்படுத்துவதை மையமாகக் கொண்ட உலகளாவிய நடைமுறை என்பது பரந்துபட்ட அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று என்று கூறியுள்ளது.

இந்த கருத்தை ஐக்கிய நாடுகள் அமைப்பில் அங்கம் வகிக்கும் 192 நாடுகளும் 2005ஆம் ஆண்டு ஜனநாயகம் தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போது அதனை ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.!

 

செய்தியும் செய்திக்கண்ணோட்டமும் 15-09-2010

 

விலை கொடுத்த வீரமகிந்தன்  தொடர் துடுப்பெடுத்தாட,

விலை போனதுகள் பந்து வீசப்போகுதுகள்!

ஆம்! கடந்தவாரம் மகிந்த குடும்பத்தினருக்கு, விலைபோன விபச்சார அரசியலாளர்கள், மகிந்தாவை ஓர் பாசிஸ்ட் வீரன் ஆக்கியுள்ளார்கள். இந்தவீரன்--இனி--மக்கள்மேல் (‘பாசிஸ-சர்வாதிகாரப்’) துடுப்பெடுத்தாட, இதுகள் பந்து வீசப்போகுதுகள்!.  இந்த பாசிஸ்ட்-- இவ்விபச்சார அரசியலாளர்களின் நடவடிக்கைகளால் திமிர் கொண்டெழுந்துள்ளான். இப்போ இலங்கையில் எனக்கு நிகரான எப்பலம் கொண்ட எவருமிலை என எக்காளமிட்டு என்னதான் சொல்கின்றான்.

ஆயுததாரிகளால் கடந்த மூன்று மாதங்களில் 32 பேர் கடத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடத்தப்பட்டவர்களில் ஐவரின் சடலங்கள் கொழும்பிலும் அதனைச் சுற்றியுள்ள பிரதேசங்களிலும் கண்டுபிடிக்கப்பட்டன. கடத்தப்பட்டவர்கள் ஐவர் விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்த ஐந்து மாதங்களில் மூன்று பேர் காணாமற்போயுள்ளனர்.

கடத்தப்பட்டவர்கள் அனைவரும் வெள்ளை வேன்களில் வந்த ஆயுதம் தாங்கியோரால் கடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பாசிச அரசையும், அதிகார திமிர் பிடித்து ஆடும் மகிந்த குடும்ப சர்வாதிகார ஆட்சியையும் நாட்டின் அதிகாரத்தில் இருந்து விரட்டியடிக்க வேண்டியது இலங்கை மக்களே. நாட்டையும் நாட்டின் பொருளாதாரத்தையும் குடும்ப சொத்தாக்கி, இந்த கும்பல் போடும் கூத்து எல்லை தாண்டிவிட்டது. கடத்தல், கொலை, மிரண்டல் என்று மக்களை மறைமுகமாக அச்சுறுத்தி வைத்து கொண்டு, சிறு உயிரைக் கூட கொலை செய்யக் கூடாது என்று வாழ்ந்த புத்தபிரானின் அவதாரங்கள் தாங்கள் தான் என்று பொய் முகத்தினை வெளியில் காட்டிக் கொண்டிருப்பவர்கள் தான், இந்த மகிந்த கும்பல்.

ஸ்டாலின் துற்றப்படுவது ஏன்?: பகுதி 22

 

டிராட்ஸ்கியம் என்பது, அரசியல் சதிகளை மூலமாக கொண்டது

டிராட்ஸ்கியும், நான்காம் அகிலமும் தமது அரசியல் உள்ளடக்கத்தில் சோவியத்யூனியன் பற்றி கூறும் போது சோவியத் யூனியனை சீரழிந்த தொழிலாளர் அரசு” என்றனர். டிராட்ஸ்கி தனது தொடர்ச்சியான எழுத்ததுகளில் ஸ்டாலின் அதிகாரத்துவத்துக்கும் அதன் மூலம் உலக ஏகாதிபத்தியத்துக்கும் சேவை செய்கின்றார். ஆனால் அவர் அதிகாரத்துவம் தனது சொந்த நலன்களின் பேரில் சுரண்டும் சமூக அடிப்படைகளை பேனாமல் அதிகாரத்துக்குச் சேவை செய்ய முடியாது. அந்தளவுக்கு ஸ்டாலின் தேசிய மயமாக்கப்பட்ட சொத்துக்களை ஏகாதிபத்தியத் தாக்குதல்களில் இருந்தும் அதிகாரத்துவத்தின் பொறுமையிழந்ததும் பேராசை கொண்டதுமான தட்டினரிடமிருந்து கூடப் பேணுகின்றார். எவ்வாறெனின் அவர் இந்த பாதுகாப்பினை சோவியத் சமுதாயத்தினை பொதுவாக ஒழித்துக் காட்டும் தயாரிப்பு நடவடிக்கைகளுடனேயே இதை அழுல் செய்கின்றார். சரியாக இதன் காரணமாகவே ஸ்டாலினிசக் கும்பல் தூக்கிவீசப்படவேண்டும்” என்று எழுதுகிறார். சீரழிந்த தொழிலாளர் அரசு என்று கண்மூடித்தனமாக புலம்பிய போது, அதன் வர்க்கத் தன்மையை பற்றி மூடிமறைக்கிறார். மறுபுறத்தில் முரண்பாடாக தனது தலைமைய அதன் மேல் நிறுவ, சோவியத் அமைப்பை பாட்டாளி வர்க்கத் தன்மை உடையது என்கின்றார். ஆனால் சீராழிந்த பாட்டாளி வர்க்கத் தன்மை என்கின்றார். இப்படி முரண்பாடான, மார்க்சியமல்லாத புலம்பல் ஒரு முதலாளித்துவ மீட்சிகான ஒருமுயற்சியே. இப்படி பிதற்றும் டிராட்ஸ்கியம் பற்றி லெனின் மார்க்சியத்தின் முக்கியப் பிரச்சனை எதிலும் டிராட்ஸ்கி ஒரு போதும் உறுதியான கருத்தைக் கொண்டிருந்ததில்லை. எந்தக் கருத்து வேறுபாட்டிலும் உள்ள விரிசல்களில் நுழைந்து கொள்ள எப்போதும் அவர் கடும் முயற்சி செய்கிறார். ஒரு சாராரைக் கைவிட்டு இன்னொரு சாராருடன் சேர்ந்து கொள்கின்றார்” என்றார். டிராட்ஸ்கிய கோட்பாடு இப்படி முரண்நிலையாகவும், தனது தனிப்பட்ட நலன்களை சார்ந்து விளக்கம் பெறும் போது, சோவியத்யூனியனில் சீராழிந்த தொழிலாளர் வர்க்க அரசு” ஒன்று நிலவுவதாக கூறுவது, அடிப்படை மார்க்சியத்தையை மறுப்பதாகும். வர்க்க சமுதாயத்தில் இப்படி ஒன்று இருக்கவே முடியாது. இருக்க முடியாத நிலையில் அதை இருப்பதாக கூறுவது தான் டிராட்ஸ்கியமாக உள்ளது. எதார்த்தத்தின் உண்மையை யாரும் மறுத்து புனைய முடியாத நிலையில், முரண்நிலையில் புலம்புவது தொடங்குகின்றது. சோவியத் ஆட்சி பாட்டாளி வர்க்க ஆட்சியாக அல்லது முதலாளித்துவ அரசாக, இரண்டில் ஒன்றுதான் இருக்கமுடியும். இரண்டுமாக அல்லது இரண்டும் அல்லாததாக இருக்க முடியாது. இது வர்க்க அமைப்பு பற்றி அடிப்படையான மார்க்சிய ஆய்வுரையாகும். இதை மறுத்து தான் ஸ்டாலின் ஆட்சியை அகற்றி தனது தலைமையை நிறுவ டிராட்ஸ்கியம் கொள்கை விளக்கம் அளிக்கின்றது.

ஸ்டாலின் துற்றப்படுவது ஏன்?: பகுதி 21

 

டிராட்ஸ்கிய சதியில் வெளிநாட்டு உளவாளிகளின் தொடர்புகள் குறித்து …

சோவியத்தில் டராட்ஸ்கிய சதி பற்றி சர்வதேச ரீதியாக பல தகவல்கள் அன்று வெளியாகியது. அதேநேரம் அன்று சோவியத்தில் என்ன நடந்தது என்பது தொடர்பாக ஏகாதிபத்திய மதிப்பீடுகள் என்னவாக இருந்தது என்பதை பார்ப்போம். டிராட்ஸ்கி 1920 களில் லெனினை எதிர்த்து பகிரங்கமாகவும் இரகசியமாகவும் தனக்கான கோஷ்டியை உருவாக்கி, பிளவு நடவடிக்கையில் ஈடுபட்டதை லெனின் குறிப்பில் இருந்து பார்த்தோம் அல்லவா. இதை குறிப்பிட்டு சோவியத்தில் உளவாளியாக செயற்பட்ட பிரிட்டீசின் இரகசிய இலாக்காவைச் சேர்ந்த புருஸ் லோக்கார்ட் தனது குறிப்பில் “லெனினுக்கும் டிராட்ஸ்கிக்கும் இடையில் கருத்து வேறுபாடு” என தனது இரகசிய பிரிவுக்கு செய்தி அனுப்பினான். அமெரிக்க நிருபர் ஜசக் இந்நிலை தொடர்பாக கொடுத்த அறிக்கையில் “லெனினுடைய ஆட்சி கவிழ்ந்து விடும். டிராட்ஸ்கியும் அவனுடைய இடதுசாரிக் கூட்டத்தினரும் ஆதிக்கத்துக்கு வந்து விடுவர் என்றும் கம்யூனிஸ்டு வாலிபர்களும், பல அதிகாரிகளும், செம்படை வீரர்களும் டிராட்ஸ்கிக்குப் பக்கபலமாகி விடுகிறார்கள்” என அறிவித்தான். இக்காலத்தில் டிராட்ஸ்கி நாடு முழுவதும் சுற்றித் திரிந்ததுடன் பல கூட்டங்களில் “பழைப போல்சுவிக்குகள் பிற்போக்குகளாகி விட்டனர் வாலிபர்களே! என்பக்கம் வாருங்கள்” என அறைகூவல் விடுத்தான். இந்த நிலையில் தான், லெனின் மிக கடுமையாக இந்த போக்கை அம்பலப்படுத்தி விவாதித்ததின் ஒரு பகுதியை நாம் முந்தைய பகுதிகளில் பார்த்தோம். இதில் டிராட்ஸ்கி தோற்றுப் போன போது, ஒரு நாளும் தன்னை சுயவிமர்சனம் செய்யவில்லை. தனது மார்க்சிமல்லாத போக்கை நிறுத்திவிடவும் இல்லை. மாறாக பலாத்காரமான முறையிலும், சதிகள் மூலம் ஆட்சியை கவிழ்க்கும் முயற்சியை தொடங்கினான். கோஷ்டிவாதம் கூர்மையாகியது. லெனின் கட்சிக்குள் கோஷ்டி கட்டுவதை தடை செய்தார். இருந்தும் டிராட்ஸ்கிய குழு இரகசிய மற்றும் சட்டபூர்வமான அனைத்து வழியிலும், தன்னை ஒரு இரகசிய சதிக் குழுவாக புனர்நிர்மாணம் செய்து கொண்டது.

ஸ்டாலின் துற்றப்படுவது ஏன்? : பகுதி – 20

 

முதலாம், இரண்டாம் உலக யுத்தங்களின் போது, ஜெர்மன் – சோவியத்  ஓப்பந்தங்கள் மீதான அவதூறுகள் மீது 

ஜெர்மன் – சோவியத் இடையிலான பிரஸ்ட் லிட்டோவ்ஸ்கி ஒப்பந்தத்தை எதிர்த்து டிராட்ஸ்கி, கட்சியின் முடிவுகளையே மீறிச் செயல்பட்டான். இது தொடர்பான இறுதி விவாதம் இரண்டு நாட்கள் நடைபெற்ற போது, அதில் டிராட்ஸ்கி கலந்து கொள்ளவே மறுத்தான். டிராட்ஸ்கிய நிலைக்கு சார்பாக அக்காலத்தில் சதிகளில் ஈடுபட்டு இருந்த பிரஞ்சுத் தளகர்த்தன் மார்ஷல் போக், நேசநாட்டு இரகசிய கூட்டம் ஒன்றில் பேசியதைப் பார்ப்போம். ஜெர்மன் போரை விரைவில் முடிக்க வேண்டும் நேச நாடுகளின் படைகளை ஒன்று திரட்டிச் சோவியத் ரஷ்சியாவைத் தாக்க வேண்டும்” என்று அறைகூவல் விடுத்தான். ஏகாதிபத்தியங்கள் தமது முரண்பாட்டை முடிவுக்கு கொண்டு வருவதன் மூலம் சோவியத்தை அழிக்க நினைத்தனர். ஆனால் டிராட்ஸ்கி இரண்டு பக்க மோதல் மூலம் சோவியத்தை அழிக்க நினைத்தான். இந்த இடத்தில் முந்திக் கொண்ட லெனின், ஜெர்மனுடன் சமாதானம் செய்து நேசநாட்டுப் படைகளின் பலத்தை சிதறடிக்க வைத்ததன் மூலம், மிகச் சிறந்த இராஜதந்திரத்தைக் கையாண்டார். இதை எதிர்த்து டிராட்ஸ்கி ஒரு முறையல்ல பலதரம் கட்சி முடிவை மீறி தன்னிச்சையாக செயல்ப்பட்டு, ஒப்பந்தம் செய்ய முடியாத நிலைமையைத் தோற்றுவித்து சோவியத் ஆட்சியை அழிக்க முனைந்தான். இறுதியில் டிராட்ஸ்கி இன்றியே அவ்வொப்பந்தம் கையெழுத்தானது. இரண்டாம் உலகயுத்தத்தில் ஜெர்மனியுடன் மேற்கு நாடுகள் தொடர்ச்சியான சமரச ஒப்பந்தங்களையும், விட்டுக் கொடுப்புகளையும் செய்தது. சோவியத்தை தாக்கி அழிக்க தாரளமாக ஆயுத உதவி, பொருளாதார உதவிகளை நல்கினர். சோவியத் ஜெர்மனிக்கு எதிராக ஒரு பாசிச எதிர்ப்பு ஐக்கிய முன்னணியை கோரிய போது, மேற்கு நாடுகள் அதை மறுத்தன. இந்த நிலையில் சதியை முறியடிக்கவும், ஏகாதிபத்தியத்தின் ஒன்றுபட்டு தாக்குதலை முறியடிக்கவும், சோவியத்ததை கைப்பறுவதன் மூலம் ஒன்றுபட்ட நலன்களையும் ஒற்றுமையையும் சிதறடிக்கும் திட்டத்தை முறியடிக்கவும், ஜெர்மனியுடன் பரஸ்பரம் தாக்குவதில்லை என்ற ஒப்பந்தத்தை சோவியத் செய்தது. இதை டிராட்ஸ்கியவாதிகள் எதிர்த்து அவதூறு செய்ததுடன், இன்று வரை அது தொடர்கிறது. அன்று லெனின் ஜெர்மனியுடன் செய்த ஒப்பந்தத்தை எப்படித் தூற்றினரோ, அப்படியே ஜெர்மனியுடான சோவியத் உடன்பாட்டையும் தூற்றினர், தூற்றிவருகின்றனர்.

ஸ்டாலின் துற்றப்படுவது ஏன்?: பகுதி – 19

 

லெனினுக்கு எதிராக  டிராட்ஸ்கியின் வெட்டித்தமான சதி அரசியல்

டிராட்ஸ்கி ஜனநாயகம் பற்றிய வாயொழுக பீற்றிய போது லெனின் சம்பிரதாய ஜனநாயகம் புரட்சிகர அக்கறைக்குப் கீழ்ப்பட்டதாகவே இருக்க வேண்டும் என்பதை புரிந்து கொள்ள புஹாரின் முற்றிலும் தவறி விட்டார். டிராட்ஸ்கியின் நிலையும் இதுவே இந்த விசயத்தின் சாரத்தைப் பற்றிய விவாதத்தை எப்பாடுபட்டும் தவிர்க்கவோ, விலக்கிவைக்கவோ தான் லெனின் விரும்புகிறார் … இதன் பலன் என்ன? டிசம்பர் 25 இல் இந்தப் “பரந்த விவாதத்தை” டிராட்ஸ்கி தொடங்கி சற்றே ஒரு மாதம் கடந்துள்ளது. இந்த விவாதத்தில் அறவே சலிப்படையாத, இதன் பயனின்மையை உணராத பொறுப்பான கட்சி ஊழியர் நூற்றில் ஒருவரைக் கூட காண்பது அரிது. வெறும் சொற்களையும் மோசமான ஆராய்ச்சியுரைகளையும் விவாதிப்பதன் பேரில் டிராட்ஸ்கி கட்சி நேரத்தை வீணாக்கும்படி செய்திருக்கிறார்…

ஸ்டாலின் துற்றப்படுவது ஏன்? : பகுதி – 18

 

வர்க்க சர்வாதிகாரத்தை நாசப்படுத்தும், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தைத் குப்புறக் கவிழ்க்க டிராஸ்கி முனைந்தான். 

பாடட்டாளி வர்க்க தலைமைக்கு எதிரான டிராட்ஸ்கியம் “ஆழ்ந்த பொருளிலில்லாத, வெட்டித்தனமான அரசியலாகும்” என்றார் லெனின். தனது விமர்சனத்தில் தொடர்ச்சியாக இந்த ஆய்வுரைகளை எடுத்துக் காட்டி அம்பலப்படுத்திய போது “இந்த வாதங்களை வாசகர்கள் கவனமாகப் பரிசீலித்து தீரச் சிந்தித்துப் பார்ப்பார்களாக. இவற்றில் “முத்துக்கள்” அப்படியே நிரம்பி வழிகின்றன. முதலாவதாக, இந்தப் பிரகடனம் கோஷ்டிவாதத்தின் நோக்கு நிலையில் இருந்து மதிப்பீடு செய்யப்பட வேண்டும். டிராட்ஸ்கியும் “வேறு பல” இராணுவத்துறை ஊழியர்களும் அதிகார வர்க்க உணர்வை வளர்த்துக் கொண்டு இருக்கிறார்கள், காட்டுமிராண்டித்தனத்தின் எச்சங்களை ஊக்குவிக்கிறார்கள் என்று குற்றம் சாட்டி தோம்ஸ்கி ஒரு கொள்கை விளக்கத்தை வெளியிட்டிருப்பாரானால், டிராட்ஸ்கி என்ன சொல்லியிருப்பார், அதை அவர் எப்படிச் சொல்லியிருப்பார் என்பதைக் கற்பனை செய்து கொள்ளுங்கள். இங்கு பகைமைத் தன்மை, கோஷ்டித் தன்மை அனைத்தையும் காணத் தவறுகின்ற, திட்டவட்டமாகவும் கவனிக்கத் தவறுகின்ற, ….” தன்மையை ஸ்டாலின் அல்ல லெனினினே சுட்டிக் காட்டுகின்றார். லெனின் இதை மேலும் அம்பலப்படுத்தும் போது “.. பல தொழிற் சங்கவாதிகள் “தமது மத்தியில் ஒரு உணர்வை வளர்க்கப் பார்க்கிறார்கள்”.. இது முற்றிலும் ஒரு அதிகார வர்க்க அணுகுமுறை. இதில் முழுமையாகக் காணும் அம்சம் கோடிக்கணக்கான மக்கள் திரளின் வளர்ச்சி மட்டமோ, வாழ்க்கை நிலைமைகளோ அல்ல, மாறாக “தமது மத்தியில்” தோமஸ்கியும் லசொல்ஸ்கியும் வளர்க்க முயலும் “உணர்வே”…” என்று டிராட்ஸ்கியத்தின் அதிகார வர்க்கப் போக்கையும், தனக்கு தேவைபட்டவர்களை மக்களுக்கு எதிராக வளர்க்கும் போக்கையும் திட்டவட்டமாக சுட்டிக் காட்டுகின்றார். டிராட்ஸ்கிக்கு எதிராக லெனினின் எதை அம்பலம் செய்து போராடினரோ, அதை அப்படியே டிராட்ஸ்கி, ஸ்டாலின் மீது முத்திரை குத்தினான். இதுவே கடந்த 80 வருட டிராட்ஸ்கியின் அரசியலாகி, நீடிக்கின்றது. டிராட்ஸ்கி கட்சியின் பெயரால் செய்த கோஷ்டிவாத முயற்சி, அதிகார வடிவத்தில் அதிகார வர்க்கம் சார்ந்து மேல் இருந்து சிலர் ஆட்சியை அமைப்பதன் மூலம் பாட்டாளி வர்க்கத்தை தூக்கியெறிய முயன்றான். இந்த முயற்சி லெனினுக்கு எதிராகவே முதலில் தொடங்கப் பெற்றது. இது ஸ்டாலினுக்கு எதிராக பின்னால் வளாச்சி பெற்றது.

ஸ்டாலின் துற்றப்படுவது ஏன்? : பகுதி – 17

 

டிராட்ஸ்கியம் “ஆழ்ந்த பொருளிலில்லாத,    வெட்டித்தனமான அரசியலாகும்” லெனின்

பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை வெளிப்படையான போராட்டத்தின் மூலம், டிராட்ஸ்கியால் தோற்கடிக்க முடியவில்லை. இதில் இருந்து பின்வாங்கிய டிராட்ஸ்கி, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை கவிழ்க்க, ஒரு இரகசிய சதிக் குழுவாக தம்மை மாற்றிக் கொண்டான். அது தன்னை மூடிமறைத்துக் கொண்டு செயல்படத் தொடங்கியது.

டிராட்ஸ்கி இது தொடர்பாக வழங்கிய சொந்த வாக்கு மூலங்கள் கூட, இந்தச் சதியை நியாப்படுத்த தயங்கவில்லை. அதைப் பார்ப்போம். 1938இல் டிராட்ஸ்கி எழுதிய லியோன் செடோவ் என்ற நூலில் “1923 இல் லியோன் எதிர்ப்பு இயக்கத்தில் ஈடுபட்டான். பதினேழு வயதிலேயே அவன் புரட்சிக்காரனான். சதிவேலை, இரகசியக் கூட்டங்கள், பிரசுரங்கள் வழங்குதல் ஆகிய கலைகளைக் கற்றுக் கொண்டான். காம்சமால் அதாவது கம்யூனிஸ்ட் வாலிபர்கள் சங்கத்திலும், சோவியத் எதிர்ப்பாளர்களைத் தயாரித்தான்” என்று டிராட்ஸ்கி தனது மகன் தொடர்பாக வழங்கிய வாக்கு மூலம், தெளிவாக சதிகளையும், இரகசிய வேலைகளையும், இரகசிய அச்சகங்களையும் நிறுவியதை தெளிவாக்குகின்றன. இக் காலம் லெனின் உயிருடன் வாழ்ந்த காலமாகும். லெனினுடன் மத்திய குழுவில் டிராட்ஸ்கி இருந்த காலத்திலேயே, லெனினுக்கு எதிராக திட்டமிட்டு செயல்பட்டான் என்பதை இது தெளிவாக்குகின்றது. இதைக் கவனத்தில் கொண்டே லெனின் 1921 மார்ச்சில் கட்சிக் கட்டுப்பாட்டைக் கோரினார்.

ஸ்டாலின் துற்றப்படுவது ஏன்? : பகுதி – 16

 

“டிராட்ஸ்கியின் கொள்கைத் திட்டத்திலும் எண்ணங்களிலும் ஏற்பட்ட இன்னொரு மாற்றமா அல்லது வேறு காரணமா என்பதை நான் அறியேன்” லெனின் 

1917இல் லெனின் தலைமையில் பாட்டாளி வர்க்கம் ஆட்சியை கைப்பற்றிய பின்பும், டிராட்ஸ்கிய குழுவுக்கும் லெனினின் தலைமையிலான கட்சிக்கும் இடையில் தொடர்ச்சியான முரன்பாடுகள் நீடித்திருந்தன. 1918 துவக்கத்தில் புரட்சி நடைபெற்று சிறிது காலத்தில் ஜெர்மனிய சோவியத் சமாதான உடன்பாடு தொடர்பாக, கடுமையான மோதல் எற்பட்டது. கட்சியில் இதுபற்றி முரண்பாடுகள் இயற்கையே என்ற போதும், கட்சியின் பெரும்பான்மையை முடிவுக்கு முரனாகச் சென்றான் டிராட்ஸ்கி. தனது சிறுபான்மை கருத்தை தன்னிச்சையாக அமல் செய்ய முயன்றதன் மூலம், கட்சியின் உயிரோட்டமான ஜனநாயக மத்தியத்துவத்தையே மீறுமளவுக்குச் சென்றான். 

 

ஜெர்மனியுடன் ஒரு சமாதான ஒப்பந்தம் செய்வது தொடர்பாக லெனினுக்கும், டிராட்ஸ்கிக்கும், மற்றும் மூன்றாவது அணிக்கும் இடையில் எற்பட்ட கருத்து முரண்பாட்டின் தொடர்ச்சியில், சமாதான ஒப்பந்தம் கையெழுத்து இடப்படவேண்டும் என்ற முடிவுக்கு கட்சி வருகின்றது. இருந்த போதும் டிராட்ஸ்கி முதற் சுற்று பேச்சுவார்த்தையின் போது கட்சியின் முடிவை மீறி, தனது சொந்தக் கொள்கையை அமலுக்கு இட்டுச் செல்கிறார். இதனால் சோவியத்தின் மீது ஜெர்மனிய தாக்குதல் நடந்ததுடன், பல பிரதேசத்தை சோவியத் இழந்து விடுவதில் முடிந்தது. கட்சி முடிவுக்கு அமைய தொடர்ந்தும் சமாதான உடன்பாட்டை செய்ய மறுத்ததுடன், கட்சிக் கட்டுப்பாட்டை எற்க மறுத்த நிலையில் தனத பதவியை துறந்தான். இதை அடுத்து சமாதானப் பேச்சு வார்த்தையில் டிராட்ஸ்கி கலந்து கொள்ளாமலேயே, கடுமையான நிபந்தனையுடன் கூடிய ஒப்பந்தைத் செய்ய வேண்டிய அவலம் லெனினுக்கு எற்பட்டது. இவை தொடர்பாக கட்சியில் நடந்த விவாதத்தின் போது, தனது திட்டத்தை ஏற்க கோரினான். இதை நிராகரித்த கட்சியை எதிர்த்து டிராட்ஸ்கி தனது அயல்துறை அமைச்சர் பதவியை இராஜினாமா செய்தான். லெனின் செய்த இந்த ஒப்பந்தத்தை துரோகத்தனமானது என வருணித்த டிராட்ஸ்கி, லெனினுடன் மோதினான். பதவியை விட்டு விலகியதுடன் லெனின் தோல்வியடையப் போகும் சூழலை தனக்கு சாதகமாக மாற்றும் தருணத்துக்காக காத்துக்கிடந்தான்.  இதன் மூலம் லெனுக்கு துரோக பட்டம் சூட்டவும் முனைந்தான்.

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE