Language Selection

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

மார்ச் 8ஆம் தேதியை உலக மகளிர் தினமாக கொண்டாடி வருகிறோம். வீட்டிற்குள்ளே இருந்த பெண் சமுதாயம் தற்போது வானில் பறந்து கொண்டிருக்கிறது என்றால் அதற்கு வித்திட்ட பல்வேறு போராட்டங்களின் வெற்றி தினமே இந்த மகளிர் தினமாகும்.

முதலில் அனைத்து மகளிருக்கும் எமது "லங்கா விவ்ஸ்" இணையம் சார்பில் மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

உலக மகளிர் தினத்தை வேண்டுமானால் நாம் எளிமையாகக் கொண்டாடலாம். ஆனால் இந்த உலக மகளிர் தினம் கொண்டாடுவதற்கு காரணமான போராட்டமும் அதன் வெற்றிகளும் அவ்வளவு எளிதாகக் கிட்டியதல்ல. ஆணாதிக்க சமுதாயத்திலிருந்து பெண்களுக்கான உரிமைகளை வென்றெடுத்த நாள் இது.

போராட்டம் என்பது தங்கள் நலன் சார்ந்த ஒன்றாக குறுகிப் போன காலகட்டம். இந்த மக்கள் விரோத ஜனநாயக படுகொலை வரலாற்றுப் போக்கில் இவற்றை எதிர்த்தே, நான் என் சொந்த மண்ணில் மக்களின் நலன் சார்ந்து போராடினேன். இந்த போராட்டம் என்பது பல தளத்தில், பல மட்டத்தில் நடத்த வேண்டியிருந்தது. ஆரம்பத்தில் 1980 இல் தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணியில் சாதாரண உறுப்பினராக இணைந்த நான், மிக தீவிரமாக மக்கள் மத்தியில் செயற்பட்டேன். 1983 இல் நான் வாழ்ந்த சுற்று வட்டாரம் மற்றும் மன்னார், வவுனியா, கிளிநொச்சி போன்ற பிரதேசங்களில் ஐம்பதுக்கு மேற்பட்ட அமைப்பு செயல் வீரர்களை அணிதிரட்டியிருந்தேன். மக்கள் மத்தியில் வேலை செய்வது முதல், வீடு வீடாக விருப்பார்ந்த சிறு தொகை நிதி சேகரிப்பு என்று பல்வேறு துறை சார்ந்து, அரசியல் பணியில் ஈடுபடத் தொடங்கினேன்.

விமல்வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திரமுன்னணிக்கும், ஜாதிககெல உறுமயவுக்கும் எந்தவேறுபாடும் இருப்பதாக தெரியவில்லை. மக்கள் மத்தியில் இனப்பகையை வளர்ப்பதற்காகவே ஆளும் ஜக்கிய முன்னணி அரசால் தீனிபோட்டு வளர்க்கப்படும் இவர்கள்---நல்லிணக்க  ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்றினால் தீர்க்கமான முடிவு எடுக்கநேரிடும்--என  அரசாங்கத்தை எச்சரிக்கிறார்களாம். இவர்கள் அரசாங்கத்தை எச்சரிக்கவில்லை மாறாக அரச திட்டத்தை கச்சிதமாக நிறைவேற்றும் ஒட்டுமொத்த இலங்கை மக்களினதும் பரமவிரோதிகள்.

எதிர்வரும் சனி (10.03.2012) மாலை 2.30 மணிக்கு லண்டனில், தற்போதைய உலக நெருக்கடி மற்றும் சிறிலங்கா நிலவரங்கள் குறித்த கலந்துரையாடல் ஒன்று நிகழவுள்ளது.


பிரதான பேச்சாளராக தோழர் வருண ராஜபக்ஸா கலந்து கொள்கின்றார். பரந்துபட்ட மக்களின் நலனில் அக்கறையுள்ள அனைவரும் இந்த  கலந்துரையாடலில் இணைந்து கொள்ளும்படி அழைப்பு விடப்பட்டுள்ளது.


ஜெனீவாவில் நடைபெற்றுவரும் ஜக்கிய நாடுகள் சபையின் கூட்டத்தில் தாங்கள் பங்கேற்காததற்கு பன்னாட்டு ராஜதந்திரிகளின் ஆலோசனைகளே காரணமென சுமந்திரன் சொல்ல, சம்பந்தர் ஜயா ஜ.நா மனித உரிமை பேரவையின் உறுப்பு நாடுகட்கு அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்திற்கு ஆதரவழிக்குமாறு கடிதம் போட்டுள்ளாராம்.

மக்களின் அடிப்படை வாழ்வாதாரத்தின் மீதான சுமைகள் அதிகரித்துச்செல்லும் அதேவேளை, அந்நிய கம்பனிகள் மக்களின் உழைப்பை சுரண்டிச்செல்வதற்கும் தாராளமாக இலங்கைத்தேசம் திறந்து விடப்பட்டுள்ளது.

தன்னுடைய ஆக்கிரமிப்பு நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காக, ஏகாதிபத்தியங்கள் எத்தகைய அபாண்டமான பொய்களையும், அவதூறுகளையும் "ஆதாரபூர்வமாக'ப் பரப்புவார்கள் என்பதைப் புரிந்து கொள்ள பெரிய வரலாற்றறிவு தேவையில்லை. கண்முன்னே ஈராக்கில் நடந்துவரும் ஆக்கிரமிப்பின் கதையை பாமரனும் புரிந்து கொண்டிருக்கிறான்.

 சோசலிச முகாம் என ஒன்று இல்லாத இன்றைய சூழலில் கம்யூனிசத்தை எதிர்ப்பதற்காகத் தானே உருவாக்கிய ஒரு சர்வாதிகாரியை (சதாம் உசேன்) வீழ்த்தவும், எண்ணெய் வளத்தைக் கைப்பற்றவும் இத்தனைப் பச்சையான பித்தலாட்டங்களில் ஈடுபடுகின்றன அமெரிக்காவும், பிரிட்டனும். எனில், ஏகாதிபத்தியத்தின் இருப்பையே கேள்விக்குள்ளாக்கிய சோசலிசத்தை வீழ்த்த, இவர்கள் என்னவெல்லாம் செய்திருக்கக்கூடும் என்பதை அறிவு நாணயமுள்ள எவரும் ஊகிக்க முடியும். ஊகம் வேண்டாம். ஆதாரங்களைத் தருகிறோம். "என்ன இருந்தாலும் ஸ்டாலின் செய்த கொலைகள்....'' என்று ஐ விட்னஸ் போலப் பேசும் அறிவாளிகள் தாங்கள் சோரம்போனது குறித்து வெட்கப்படுவார்களா?

சாதியமும் தமிழ்த்தேசியமும்….பகுதி-3


"நான் பள்ளிச் சிறுவனாக இருந்த போது 1958 ஆம் ஆண்டின் இனக் கலவரங்களில் நிகழ்ந்த பயங்கரச் சம்பவங்கள் என் மனதில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தின. சிங்கள இன வெறியர்களால் எம்மக்கள், ஈவிரக்கமில்லாமல் கொடூரமாகக் கொல்லப்பட்ட நெஞ்சை உலுக்கும் சம்பவங்களை நான் கேள்விப்பட்டேன். எங்கள் குடும்பத்துக்குத் தெரிந்த ஒரு விதவைத் தாயை நான் ஒருமுறை சந்தித்த போது, அவர் இந்த இன வெறியாட்டத்தால் தனக்கு நேர்ந்த துயரமான அனுபவத்தை என்னிடம் சொன்னார்.


என்மண்குழந்தை லக்சினியை தின்றவரே
பேய்களே
பிணந்தின்னிக் கூட்டமே
வன்னிவரை தின்றடங்கா கூட்டே
யார் ஆட்சியானாலும் கால்கழுவி
வாலாட்டி எலும்பெறிய கவ்விப்போ இரணியரே
யார் கேட்டு எம்மண்ணை சூழ்ந்து கொண்டாய்

 

மக்கள் தமது சொந்த ஆதாரங்கள் அனைத்தினையும் இழந்து, அவர்களது பூர்வீக இடங்களில் இருந்து சுயவிருப்பின்றி இடம் பெயர்ந்து வாழ வேண்டிய நிர்ப்பந்தத்தினை இந்த உள் நாட்டு யுத்தம் ஏற்படுத்தியதன் விளைவாக அநேகமானோர் சொல்லொனாத் துயரங்களிற்கும் துன்பங்களிற்கும் உள்ளாகிப் போயுள்ளனர். இந்த கொடிய இனவாத யுத்தம் ஆரம்பமாவதற்கு முதலே சில சிங்கள கிராமங்களிலும், அவற்றிற்கு அருகாமையிலும் வாழ்ந்த தமிழ் மக்களும், தமிழர்கள் பெரும்பாண்மையாக வாழும் யாழ் மாவட்டத்தில் வாழ்ந்த சிங்கள மக்களும், அவர்களது பாதுகாப்பினை கருத்தில் கொண்டு இடத்பெயர்ந்து வாழ நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். மேலும் புலிகளின் இனச் சுத்திகரிப்பு நடவடிக்கையின் மூலம் யாழ்பாணத்தில் வாழ்ந்த முஸ்லீம் மக்களும் அவர்கள் பூர்வீகமாக வாழ்ந்த பகுதிகளிலிருந்து விரட்டியடிக்கப்பட்டனர். இதன்பின்னர் 1995 ம் ஆண்டு இடப் பெயர்வு அதற்கு பிற்பாடு தற்போது இறுதி யுத்த இடப்பெயர்வு என பல காலமாக பல கட்டங்களில்  இத்துயரம் எமது தேசத்தில் இடம்பெற்றது.


நீதிமன்றத் தீர்ப்பும!… கட்டப்பஞ்சாயத்துத் தீர்ப்பும்!

சரத்பொன்சேக்கா அரசியலில் இருந்து விலகி நாட்டை விட்டு வெளியேறுவாரானால் விடுதலை செய்யத் தயார் --- ஜனாதிபதி

1)  சிறைப்படுத்தப்பட்டுள்ள முன்னாள் இராணுவத் தளபதி சரத்பொன்சேக்கா அரசியல் செயல்பாடுகளில் இருந்து விலகி நாட்டில் இருந்து வெளியேற தீர்மானிக்கும் பட்சத்தில் சரத்பொன்சேக்காவிற்கு மன்னிப்பு வழங்க ஜனாதிபதி ராஜபக்ஷ தயாராக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

2)   இராணுவ நீதிமன்றத்தினால் 30 மாத கடூழிய சிறைதண்டனை விதிக்கப்பட்டதுடன் அந்த தண்டனை முப்படைகளின் தளபதியான ஜனாதிபதியினால் உறுதிபடுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து சரத்பொன்சேக்hகா தற்போது வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்!

இது அண்மைக்கால இணையதள ‘ரய’ல் அட்பார் நீதிமன்ற தீர்ப்புகள்--வேண்டுகோள்கள் போலல்லவோ உள்ளது!

இதில் முதலாவதை கட்டாப்பஞ்சாயத்து தீர்ப்பாகவும், இரண்டாவதை நீதிமன்றத் தீர்ப்பாகவும் கொள்ளலாம்தானே!

ஆகா.. மகிந்தாவிற்கு கூட கட்டப்பஞ்சாயத்தின் சூட்சுமம் விளங்கிவிட்டது! ஏனெனில் அது சர்வதேச மயமாகியுள்ளது!

எங்கடை ஐனாதிபதி இலங்கையின் மிகப் பிரபலமான நபராம்?

இப்போ--இலங்கையிலென்ன—பாருககுள்ளே அவர்தான்!

“உலகின் வேறு எந்த நாட்டையும் விட அவர் ஆட்சியிலேயே தமிழ் மக்கள் மிகவும் சந்தோசமாக வாழ்கின்றார்கள்!” ஆதலினால் அவரை இப்படிக்கொள்ளலாம்!....

இலங்கையின் மிகப் பிரபலமான நபராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவு செய்யப்பட்டுள்ளதாக சிங்கள இணையமொன்று முக்கிய செய்தி வெளியிட்டுள்ளது.????

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் தொடர்பாடல் பீடத்தின் பொறுப்பாளர் கங்கானா திஸாநாயக்கவின் வழி காட்டல்களின் அடிப்படையில் ஆய்வுகள் நடத்தப்படடுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

 

இலங்கை அரசை இன்று வரை காப்பாற்றி வருவது சீன, இந்திய அரசுகள் தான் என்ற செய்தியை படிக்கும் போது மிக  வேடிக்கையாக இருக்கின்றது. புலிகளை அழிப்பதற்கு முன்பிருந்தே, இந்த அரசுகள் தமது பிராந்திய விஸ்தரிப்பை மையமாகக் கொண்டு தமக்குள் கூட்டாக போட்டியிட்டு வந்தன. அதே வேளை மேற்கத்தைய நாடுகள் அதைத் தடுத்து தாம் ஆசியாவிற்குள்  நுழைய பல சதிகளை செய்தன. இலங்கையில் சிங்கள தேசியத்தை உயர்த்தி பிடித்தும், புலிகளுடன் சமாதானத்திற்கு இடமே இல்லை எனக் கூறியும், ஆட்சியை மகிந்தா, ஜே.வி.பி மற்றும் பௌத்த பிக்குகளின் கூட்டணி கைப்பற்றியது. எதிர்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி வலுவிழந்த கட்சியாகியது. தமிழர்களின் பிரதிநிதி என அழைக்கக் கூடிய கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழர் விடுதலைக் கூட்டனி என்பனவும் தமது இருப்பை நிலை நிறுத்துவதற்கான முயற்றியில் மட்டுமே கவனத்தை செலுத்தினர்.

ராஜீவ் காந்திக்கு அடித்தவனையும் வெலிக்கடையில் தான் சிறை வைத்திருந்தனர் அவனோ படுப்பதற்கு பஞ்சு மெத்தை உண்பதற்கு புரியாணி என சகல சௌவ்பாக்கியங்களுடனும்  சிறை வாசகத்தை அனுபவித்தான். ஆனால் இன்று தமிழ் மக்களை அழித்த யுத்த நாயகன் சரத் பென்சேகா வெலிக்கடையில் வரிசையில் தடடில் வாங்கி சாப்பிடுவதும்  வெறும் தரையில் படுத்துறங்குகின்றார் என்பது ம்  இலங்கை மக்களைப் பொறுத்தவரை முக்கிய செய்தி தான்.

< 1983 பின்னர் ஆயிரக் கணக்காண தமிழ் இளைஞர்களை எந்தக் காரணம் இன்றி சந்தேகத்தின் பெயரில் கைது செய்து பலத்த சித்திரவதைகளை அனுபவித்து இன்னமும் சிறைச் சாலைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். .இவர்களைப் பற்றி எந்த நாளேடும் செய்தி வெளியிடுவதில்லை.

பொன்சேகாவின் மனைவி அழுத முகத்துடன் உள்ள படங்கள் இணையங்களில் ஆங்காங்கே வெளியாவதுடன்,  தீர்ப்பை மாற்றக் கோரி ஜே வி பியும் ஆர்பாட்டத்தை நடத்த ஆரம்பித்த வேளையில், மகிந்தவோ சரத் பொன்சேகா மன்னிப்பு கேட்டால் தீர்ப்பை மறு பரிசீலனை செய்யலாம் என்று அறிவித்த  செய்திகள் வெளியாகியுள்ளது.  இவற்றினை பார்க்கும் போது தமிழ் படங்களில் கவுண்டமணி; செந்திலின் நகைச்சுவை போனறு மிக வேடிக்கையாக இருக்கின்றன.

ஒரு வருடத்திற்கு முன் பல ஆயிரக்கணக்கான குழந்தைகள் முதியவர்கள் கற்பினிப் பெண்கள் என எந்த வித வேறுபாடும் இன்றி தமிழர்கள் என்ற ஒரே காரணத்திற்காக கொன்று குவித்த இந்த மக்கள் விரோத சக்திகள்,  இன்று தமக்குள் மோதிக் கொள்கின்றனர். இன்று சாதாரண அடிப்படை வசதியின்றி வாழ்விழந்து வழி தெரியாமல் அனாதைகளாக முகாம்களிலும், சிறைச்சாலைகளிலும் நிற்கும் தமிழ் மக்களைப் பற்றி எந்த கண்ணீரும் இல்லை. தமது எதிர்காலம் பற்றிய கேள்வியுடன்  திகைக்கும் மக்களின் முதுகின் மேல் நின்று தான் சரத்தின் விடையம் முன் தள்ளப்படுகின்றது.

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE