Language Selection

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

வெறுகுடிலில் தனிமையில்
அருகணைத்துக் கிடக்கும் குழந்தைகளால்
எரியும் உணர்வுகள் பொறியடங்கிக் கிடக்கிறது
கொடும் அரக்கர்
நந்திக் கடலில் குடித்த இரத்தமும்
வெறிகொண்டு ஆடிய பேய்களும்
உயிர் குடிக்க அலைகிறது
பேயரசு ஆட்சியில் ---வேறெது உலாவும்

இலங்கையில் கடத்தப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டு, தற்போது ஆஸ்திரேலியா திரும்பியிருக்கும் முன்னிலை சோஸலிச கட்சியின் முக்கிய பிரமுகரான பிரேமகுமார் குணரட்ணம் செவ்வி.

மகிந்த பாசிசம் அதிசயம் ஒன்றை இலங்கை மக்களிற்கு காட்டியிருக்கிறது. குடும்பசர்வாதிகாரம் நாட்டை ஆள்கிறது. தமக்கெதிரான எந்த அசைவுகளும் கண்காணிப்பிற்கு உட்பட்டே இருப்பதாயும் சொல்லப்படும் எச்சரிக்கை தான் முன்னிலை சோசலிசக் கட்சி தோழர்களின் கடத்தல்.

சுதந்திரமும் ஜனநாயகமும் நாட்டில் கடத்தப்பட்டு காணமல் போகின்றது. நாட்டில் அச்சமும் பீதியும் விதைக்கப்படுகின்றது. மூச்சுவிடுவதற்கு கூட அக்கம்பக்கம் பார்க்கவேண்டும். புலிக்கு பதில் இன்று ஓநாய்களும் நரிகளும் குதறுகின்றன.

தான் கடத்தப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த மூன்று நாட்களில் கை, கால்களில் விலங்கிடப்பட்டு உடல் ரீதியாகவும் பாலியல் ரீதியாகவும் சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டதாக பிரேம்குமார் குணரட்ணம் தெரிவித்துள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பெண் ஆளுமைகள் பற்றிய விழிப்புணர்வுகள் பரிமாணங்கள், தெரிவுகள், சுயங்கள், நிலைப்பாடுகள் என்பன சமகாலத்தில் பெண் உயர்ச்சிக்கும் பெண் பற்றிய பதிவுகளுக்கும் மிகவும் அவசியமானவைகளாக கருதப்படுகின்றன. பெண் ஆளுமைகள் மேலோங்கியிருப்பதும் பெண்களின் உயர்வும் சமத்துவமும் ஒன்றுடன் ஒன்று தொடர்பு பட்டதாகக் காணப்படுகின்றன.

விடுதலை செய்யப்பட்ட தோழி திமுது ஆடிக்கல உடனான இன்று(10 சித்தரை 2012 ) நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் எடுத்த பேட்டி    

முன்னிலை சோஸலிச கட்சியின் உறுப்பினரான திமுது ஆட்டிகல கடந்த 06 ம் திகதி கடத்தப்பட்டிருந்தார். 04 நாட்களாக எவ்வித தகவல்களும் இல்லாமல் இருந்த போதிலும் இன்று காலை யாரும் எதிர்பார்த்திராத வேளை மாதிவெல மு.சோ.கட்சியின் அலுவலகம் திரும்பினார்.

முன்னிலை சோஷலிசக் கட்சியின் தலைவர் குமார் குணரட்னவுடன் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்ட திமுது ஆட்டிகல  மெதவலவிலுள்ள கட்சி அலுவலகத்திற்கு திரும்பிவந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இவர் ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இன்று இரவு கிடைத்த தகவல்களின் படி பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்  கோதாபய ராஜபக்ஷ, இலங்கையில் உள்ள தொலைக்காட்சிக்கு பேட்டி அளிக்கும்  போது "முற்போக்கு சோசலிசக் கட்சியின் தலைவரான பிரேம்குமார் குணரட்னம், நாட்டில் உள்ள  பொலீஸ் நிலையம் ஒன்றில்   சரணடைந்துள்ளளார்" கூறியுள்ளார். அதேவேளை இந்த தகவலை சுயாதீன அடிப்படையில் உறுதிப்படுத்த முடியவில்லை.

சுந்தரராமசாமி, ஜெயமோகன் முதலான இலக்கியவாதிகளின் உள்ளங்கவர்ந்த ஜார்ஜ் ஆர்வெல், ஸ்டீபன் ஸ்பெண்டர், ஆர்தர் கீஸ்லர் போன்ற மேலை எழுத்தாளர்கள் தமது கம்யூனிச எதிர்ப்பு இலக்கிய தரிசனங்களுக்காக பிரிட்டிஷ் உளவுத்துறை மற்றும் சி.ஐ.ஏ.விடம் சன்மானம் பெற்றவர்கள் என்பதை ஆதாரங்களுடன் அம்பலப்படுத்துகிறது இந்தக் கட்டுரை.

சுதந்திரமும் ஜனநாயகமும் நாட்டில் கடத்தப்பட்டு காணமல் போகின்றது. நாட்டில் அச்சமும் பீதியும் விதைக்கப்படுகின்றது. மூச்சுவிடுவதற்கு கூட அக்கம்பக்கம் பார்க்கவேண்டும். புலிக்கு பதில் இன்று ஓநாய்களும் நரிகளும் குதறுகின்றன.

முன்னிலை சோஷலிசக் கட்சியால் லண்டனில் நடத்தப்படவிருந்த ஆர்பாட்டம் பிரதமர் இல்லத்தினை அண்டிய பகுதிகளில் திடீரென மேற்க்கொள்ளப்பட்ட தவிர்க்க முடியாத பாதுகாப்பு காரணத்தால் ரத்து செய்யப்பட்டுள்ளது.

முன்னிலை சோஷலிஸக் கட்சியின் அங்குரார்ப்பண மாநாட்டுக்கு புதிய ஜனநாயக மக்கள் முன்னணியின் வாழ்த்துச் செய்தி.

ஊடகங்களுக்கான அறிக்கை                            09.04.2012

ஜே.வி.பி.யில் இருந்து வெளியேறி தனிக்கட்சி அமைப்பதில் ஈடுபட்டிருந்த அதிருப்தியாளர் குழுவைச் சேர்ந்த பிரேமகுமார் குணரட்ணம், திமுது ஆட்டிகல ஆகிய இருவரும் கடந்த ஆறாம் திகதி இரவு வெவ்வேறு இடங்களில் வைத்துக் கடத்தப்பட்டுக் காணாமல் போயுள்ளனர். இச்சம்பவத்தைப் புதிய- ஜனநாயக மாக்சிச- லெனினிசக் கட்சியின் அரசியல் குழு மிக வன்மையாகக் கண்டிக்கின்றது. அதேவேளை இக்கடத்தலும் காணாமல் போயுள்ளமையும் திட்டமிட்ட அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை என்பதில் எவ்வித ஐயமும் இல்லை எனவும் கட்சி சுட்டிக் காட்டுகிறது.

திகதி : 09/04/2012

முன்னிலை சோஷலிஸக் கட்சியின் அங்குரார்ப்பண மாநாட்டுக்கு புதிய ஜனநாயக மக்கள் முன்னணியின் வாழ்த்துச் செய்தி.


தோழர்கள் அனைவருக்கும் புரட்சிகர வாழ்த்துக்கள்..!


மகிந்த பாசிச அரசு, இனமத ரீதியாக மக்களைப் பிரித்து வைத்து, ஏகாதிபத்திங்களின் முரண்பாட்டுக்குள் தன்னை புதைத்து, மீளமுடியாதிருக்கும் மிக நெருக்கடியான இந்த காலகட்டத்தில், புரட்சிகரமான 'முன்னிலை சோஷலிஸக் கட்சியின்" தோற்றம் என்பது வரலாற்று  நிகழ்வாகும்..!

முன்னிலை சோஷலிசக் கட்சியின் தலைவர் தோழர் பிரேம்குமார் குணரட்னம் ஏதேனும் தவறு செய்திருந்தால் சட்டரீதியாக அவரை கையாளுமாறும் அவர் அப்பாவி எனில் அவரை விடுதலை செய்யுமாறும் தோழர் குணரட்னத்தின் தாயார் திருமதி டி.ஆர். குணரட்னம் அதிகாரிகளை கோரியுள்ளார்.

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE