Language Selection

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

இலங்கை தூதரகத்துக்கு முன் நடந்த போராட்டத்தின் பின்புலத்தில், தமிழ் சிங்கள உறவுக்கு ஆப்பு வைக்கும் சதியும் கூடவே அரங்கேறியது. இந்தப் பின்புலத்தில் புலிகள் உள்ளிட்ட போலி இடதுசாரியம் பேசும் பிரிவினைவாத இனவாதிகளின் கூட்டுச் சதியுடன் தான் இது நடந்தேறியது.

கொலைகார புலிப் பாசிசம் நிலவிய அன்று, எனது உரையை பத்திரிகைகள் இருட்டடிப்பு செய்து இருந்தன. இந்திய ஆக்கிரமிப்பு நிலவிய அன்று, எந்த மாற்றமும் நிகழவில்லை. மற்றொரு பாசிசம் வந்து குடியேறிய ஆரம்ப காலம். மிக விரைவிலேயே இந்த பத்திரிகைகளை தனக்கு சார்பாக இயங்கக் கோரி,  அச்சிடும் இயந்திரங்களையே இந்திய ஆக்கிரமிப்பாளன் குண்டு வைத்து தகர்த்தான். இப்படி பத்திரிகைகள் உண்மைகளை வெளியிடும் "சுதந்திர" அமைப்பாக இருக்கவில்லை.

உயிர் பிரிந்து இலங்கை மக்கள்
விம்மியழுத கண்ணீர்
கருமணியின் கனல் வெப்பத்தே
உப்பளத்து விழைச்சலையும் மிஞ்சும்
கூட்டியள்ளி கோத்தபாய திரை நீக்கி
போரின் சின்னமாய் முதலிட்டான்......

நரபலியாடிய நாட்களின் துயரொடு
நொருக்கிய கனவுகள்
கருக்கிய உயிர்களின் சாம்பலில்
முளைத்த காட்டாட்சி அரசு
மனிதம் அலறிட அமைதியான உலகில்
மானுடம் மறுமுறை செத்தது
பொறியிடு நகர்வாய் புலத்தவன் வீழ்த்தினான்
வறுகிய செல்வம் வாய்த்தும் அடங்குமா.....

காலிலே போட்டாட்டி கண்மணியே உறங்கென்று
எண்ணை குளிப்பாட்டி ஏராளம் கனவோடு
பிஞ்சுடல் நோகாது மெல்லத்தடவி கிராமத்துக்
கொஞ்சும் பாட்டிலே வளர்ந்தவர்கள்
கஞ்சியோ கூழோ காலாறியிருந்து முற்றத்தில்
கெந்தி விளையாடி கிளித்தட்டு மறிப்புமாய்
குதூகலித்துக் கிடந்தவர்கள் நெஞ்சு பதைக்கிறதே....

சொந்த நிலமென்று அம்பெடுத்து எய்யாதே
சொற்கேட்டு கற்பாறையில் போய் உட்காரு
எப்படி முடியுமென்று எழுவதாயின்
இலங்கைத் தமிழன் இரத்தம் உறையாத கரங்களை
உயர்த்திச் சொல்கிறது இந்தியப்பேய் அடங்கிப்போ.........

தொட்டில் அற்று தூக்கம் அற்று
தோள்கிடத்தித் தட்டித் தூங்க வைக்க நாதியற்று
வெட்டியபதுங்கு குழியும் விழும்குண்டால் இடியும்
மடியில் பொத்திய மழலைகள் வீரிட்டு அலறும்
கத்திடும் அவலக் குரல் ஜயோ என்று
காத்திடும் எந்தமீட்பன் காதையும் எட்டவில்லை

அழகுபடுத்தும் வீதிகட்காக
தகரங்களால் மூடப்பட்ட தெருவோரக் குடியிருப்புகள்
யாருக்காக அவசரமாகவே இடிக்கப்படுகிறது
ஆழிப்பேரலை விழுங்கிய குடிசைகள்
அடுக்குமாடி உல்லாச விடுதிகளாக எதற்காய் நிமிர்கிறது
வயிற்றுப் பசிக்கு கைநீட்டி அலைந்து
வாகன இரைச்சலிடையே கண்ணயர்ந்தவர்கள்
‘பிச்சைக்காரர் கொலை செய்யப்படுகிறார்களாம்’

எழுந்திடுவோம் எனும் துணிவு இதயத்தே துளிர்த்தது
வெந்து புண்ணாகிய உணர்வுகள் வேகம்கொள்வது தெரிந்தது
மனிதம் வாழ்வதாய் மனது தேற்ரியது
சாவுக்குள் மிஞ்சிய சனத்தின் தவிப்பும்;;..தப்பிய
பிள்ளைகள் உடலெங்கும் ரவைகளாய்
ரணத்தின் பொழுதுகளிலும்
துரும்பைத்தன்னும் அசையென மனிதம் உறுத்தாதிருப்பது எப்படி......

மருத்துவமாதோ அதிகாரியோ
மாணவியோ சிறுமியோ கடித்துக் குதறவும்
எதிர்த்தெழுந்தால் கழுத்தை நெரித்து
கட்டித்தொங்கவிட வெட்டிப்புதைக்கவும்
காப்பதற்கு சட்டமே துணைநிற்கும்......

கிளைகளில் மொட்டுக்கள் அரும்பினால்
விதைகளைப் பரப்பிவிடும்
பட்சிகள் வரும்
கூடு கட்டும் குஞ்சுகள் பொரிக்கும்

சூரியதேவனின் சுடுவீச்சுக்கு
இளசுகள் இளைப்பாற வந்துவிடும்
விழுதுகள் வேரோடு இணையும்
கொப்புக்களிற்கு தூணாகித் தாங்கிவிடும்

மூச்சுக்காற்றையும் கண்காணிக்க
புலத்துப் பணத்தில்
புலனாய்வுக் கருவிகள் இறக்கப்பட்டதில்
மக்களையும் எதிரியையும் மறந்து போயினர்

எமது மக்கள் அழிவில் மூழ்கியது
எவ்வாறு உருவாகி
இவ்வாறு நந்திக்கடலில் முடிவாகியதெனவும்
அதை எவ்வாறாய் இவ்வாறில்லாமல்
மாற்றல் முடித்திருக்குமெனவும் உபதேசித்தபடியே
அநாகரீகதர்மபாலவின் ஆராச்சியில்
வித்துவான்கள்
வெழுத்து வாங்கிக் கொண்டிருக்கிறார்கள்....

மீள்குடியேற்றம் மீளாத்துயருள்
மீண்டதாயில்லை
வாள்கொண்ட கொடுமரசு வீழுமென
நாமிழந்ததோ கொஞ்சமில்லை
நீள்கின்ற வஞ்சகமும் குழிபறிப்பும்
மீளெழுந்து தொடர்கிறதோ......

ஜயகோ எழுத்தறிவித்தவன் இறைவனவன்
காமம் அல்ல கருணை ஒளியிதுவோ
ஆயுதம் தரித்தவன்
கூரிய எழுத்தாணி கொண்டவன்
தொட்டு சேட்டை துயர் சூழ்ந்த இனத்தவள் நீயாம்
கொட்டிய குண்டைவிடக்
கொடுமரக்கர் காமக்கணைக்கு எந்தப் பதுங்கு குழி இனியுதவும்...

அடக்கமான உடைகள்
எந்த அங்கமும் வெளித்தெரியாவண்ணம்
மூடிக்கட்டி மொட்டாக்கிட்டுமென்ன
பொட்டிட்டு  பூச்சூடி
கண்கண்ட தெய்வத்தின் பாதத்து வீழ்ந்து வணங்கியென்ன…

எந்த ஏழையும் வாளும் தீப்பந்தமுமாய்
இன்னோர் ஏழையை எரித்ததாயில்லை
காத்து அனுப்பியதும் கண்ணீர் விட்டதுமே கண்டோம்
வடக்கும் கிழக்கும் வரவேற்காதிருக்க நியாயமில்லை

இழந்த ஒவ்வொரு உயிரும் உயிர்ப்புறும்
எழுந்து இன்னோர் தலைமுறையாய் விழிப்புறும்
கொழுந்துகளை கிள்ளினும் செழிப்புறும்
புலத்துக் கொடியவர் மமதை அழிவுறும்;;;;.........

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE