Language Selection

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

யுத்தத்தின் போது தனது குடும்பத்தினர் அனைவரையும் இழந்து படுகாயமுற்ற நிலையில் தனித்துப்போன முன்னாள் போராளியான பவுஜியா தடுப்பு முகாமிலிருந்து மீண்டே யாழ்பல்கலைக்கழக விடுதியில் இருந்து கல்வி பயின்றுள்ளார்.

கடந்த 12 ஆம் திகதி வரை தெமட்டகொடவில் உள்ள கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த லலித் மற்றும் குகன் ஆகிய முன்னிலை சோசலிசக் கட்சியின் தமிழ் தலைவர்கள்இ இன்று (19) அதிகாலை 2.20 அளவில் அங்கிருந்து வேறு இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாக மிகவும் நம்பதகுந்த தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை அரசியலில் தொடராக வந்த பேரினவாத அரசுகள், எம்நாட்டின் தேசிய இனங்களைப் பிரித்தாண்டே வந்துள்ளன. அதிலும் சாதாரண சிங்கள-தமிழ் முஸ்லிம் மக்களிடையே பிளவுகள் ஏற்படுத்துவதில் மிகக் கண்ணும் கருத்துமாகவே இருந்து வருகின்றன.

யுத்தப்பேரவலம் ஏற்படுத்திய இழப்புகளும் வலியும் உளவியல் ரீதியாக யுவதிகளையே பெருமளவில் பாதிப்புக்குள்ளாக்கி வருகின்றது. மர்மமான மரணங்களும் தற்கொலைகளுக்குள்ளும் யுத்தத்தால் பெற்றோரை கணவனை உறவுகளை இழந்த யுவதிகளின் பொருளாதார நிலையும் பாதுகாப்பற்ற இராணுவமயமாக்கப்பட்ட சூழலும் புலத்துக் காமக்காட்டேரிகட்கும் வாய்ப்பாகியுள்ள அவலத்தை பாருங்கள்.

போர்முரசறைந்த கொடியவர்கள்
நாளை மிதிப்பது நானா அவனா எனத்தீர்மானிக்குமாறு
வாக்களிக்கும் உரிமையை பயன்படுத்தச் சொல்கிறார்கள்
போரின் அதர்மம் வெளித்தெரியாவண்ணம்
நாட்டைக் காட்டிக்கொடுக்கோமென
இரத்தம்  தோய்ந்த கரங்களால்
புத்தபீடங்களிடம் சத்தியம் செய்கிறார்கள்...

ஏழைசிங்கள இளைஞனின் குடும்ப வறுமை

வாய்பிளந்த சிங்கத்தின் கோரப்பசிக்கு இரையாகிப்போனது......

ஏழ்மையின் வாழ்வெலாம் இனப்பகையாய் திரித்து

திணிக்கப்பட்ட  துப்பாக்கியும்

கூடிவாழ்ந்த இனங்களை கொதிப்பேற்றிப் பிளந்து

மோதிமடியவைத்த நாசக்கொடியும்

சிக்கிச் சிறகொடிந்து சிறைப்பட்ட புறாவுமாய்

ஜயகோ யாருக்காய் மடிந்தேன் எனக்கேட்கிறான்...

தாங்கள் கடித்துக்குதறியது

துவாரகா இல்லையென இரணியத்தளபதி அடித்துச்சொல்கிறான்

எங்கள் மகள் எங்கள் சகோதரியென

எல்லா இதயமும் நெருப்பாய் எரிகிறது......

இனவெறியும் ஆணாதிக்கவெறியும் கோரப்பற்களால்

நெருப்பைக்கடந்த பிள்ளைகள் உயிர்களை

குடித்து எறிந்தபடியே வாக்குக்கேட்டு எப்படிவருவர்.......

அதேஉரப்பும் உரைகளும் உறுதிமொழிகளும்
உபதேசம் செய்தபடியே மீளவும் மேடையேறுகிறது
எறிகணைகளைவிடவே கொடூரமானதாய்
கரங்களை அசைத்தபடியே வருகிறார்கள்
எந்தப் பதுங்கு குழிகட்குள்ளும் ஒதுங்கமுடியாதபடியாய்
யுத்தத்தில் எஞ்சியவர்கள் கைதிகளாக்கப்பட்டிருக்கிறார்கள்

சதியொடு மூழ்கிய புலியொடு முடிந்ததோ- இனிப்
பொன்சேகா மடியினில் விடியல் வருமாம்...
மக்கள்திரளொடு மாத்தளன் மண்ணிலேதின்றவர்
கண்ணிலேஎன்னே கருணைஒளி பாரடா
வாக்குப்பொறுக்க தெறிக்கும் வார்த்தைகள் அமிர்தமாய்
காற்றில் மறையா கந்தகவாடை
முள்ளிவாய்க்கால் சேற்றினில் மூடிய சேதிகள்
தேர்தல் பேச்சொடு மாளுமோ.....

அரசரும் தளபதியும் பொற்காசுப் பொதியுடன்
அரியணைக்கனவொடு மந்திரிகள்
வெற்றிலையும் அன்னமும் சன்னம் துளைத்த மதில்களெலெல்லாம்
இழந்தெழுந்து முச்சுவிட எதிரிலே கொன்றவர்
சதியொடு மூழ்கிய புலியொடு முடிந்ததா
மக்களை நம்பு எனும் விதியடா தமிழா......

பாரதக்குடியரசு சுடுகாட்டில் பெற்றெடுத்த ஜனநாயகம்
இலங்கைத்தீவில் ஜனாதிபதியை தெரிவுசெய்கிறது
உண்ணாதிருந்த தொப்புள்கொடி முதல்வரே
வாழ்க குடியரசென வாழ்த்துப்பாடுங்கள்....

எம் உயிரை வதைத்த மன்னவனே எமக்கினியும்
தளபதியும் சேனைகளும்  களம்மாறும் தேர்தலிற்காய்
படை நடத்தி உயிர்குடித்த பொன்சேகா சிறைபுகுவார்
தேர்தல் களமாட-- கூட்டமைப்பு வீறுகொண்டு
இனமான உணர்வுகொள்ளும் .....

எமக்கான சுதந்திரத்தாரின் பிறந்தநாள்

அறுபத்தியிரண்டு வயதாகிவிட்டதாய் சொல்கிறார்கள்

குதூகலித்துக் கொண்டாடுமாறும் கோவில்களில் ஆராதிக்குமாறும்

வாரிசுளும் சீடர்களும் உபதேசிக்கிறார்கள்…..

மக்கள் மட்டுமே உறுதியாகச் சொல்கிறார்கள்

தாங்கள் சுதந்திரத்தாரை இதுவரை காணவில்லையென்று………

இனிச் சருகுகள் காலம்

குடிமனைகள் அழிவில் குடிகொண்ட சித்தாத்தர்

படைமுகாம் சூழ இருத்திவைக்கப் பட்டுள்ளார்

காடையர் இழிசெயல் வெறியொடு

தெருவினில் குதறிட அலறிடும் மழலைகள.;….

வாக்கினை பொறுக்க வருக எருமைகள் – தேர்தல்

சேற்றினில் உருண்டு நாற்ரமெடுக்க வருக வருக…

 

வறுமையும் வயிறெரியும் நினைவுக்கொதிப்பும்

வெறுமையில் தவிக்கும் விலங்கிடை சிறையும்

பொறுமையை சீண்டும் போலி உறுதிகளும்

சிறுமையில் சிக்கவே தேர்தல் கரும்பென நிமிருது

 

இனவெறித்தீக்கு பலியிடப் புலியில்லை

புகலிடச்சருகுகள் பணமூடைகாவி – அரசொடுகுலாவும்

கழுகுகள் கவ்விய குஞ்சுகள் வாழ்வை

காப்பவர் எவருளர் – எம் தெருவெலாம் வெறிநாய்கள்….

போர்சிறைகொண்ட இளையோரை
பூசாவுக்குள் வதைதொடரத் தள்ளுவதை எவன்கேட்பான்
தமிழ்த்தேசியத்தின் உறுதிக்கு தலைமையென
வெறு வாயுறுதி வீரமிகு உரப்புகளாய்
பாராளு மன்றக் கனவுகட்குள் மிதக்கும் நேரமிது..........

நெல்மணியில் பனித்துளிகள்
கதிரவன் கதிர் வீச்சில் மினுமினுக்கும்
பால்சுமந்து பசுக்கூட்டம்
பட்டிப் படலையில் முட்டிநிற்கும்
கிணற்றடிவாழை பொத்திதள்ளி
சுற்றிநின்ற குட்டிகள் குருத்துவி;ட்டு சிலிர்க்கும்
முற்ரத்து மாமரத்துப் பிஞ்சுகள்
முற்ரிக் கனிந்து மஞ்சல் தெளித்திருக்கும்
உடலுழைப்பில் அயர்ந்து தூங்கியவர்
எழுந்து பார்க்க வலிபறந்து ஒளிதெரியும்

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE