Language Selection

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

பள்ளிவாசலுக்காக போராட்டம்இலங்கையில் மாத்தளை மாவட்டம் தம்புள்ளை நகரில் கடந்த வெள்ளிக்கிழமை பெளத்த மத குழுவொன்றினால் தாக்குதலுக்குள்ளான பள்ளி வாசலுக்காக இன்று வெள்ளிக்கிழமை தலைநகர் கொழும்பு உட்பட நாட்டிலுள்ள ஜூம்மா பள்ளி வாசல்களில் விசேட பிரார்த்தனைகள் நடைபெற்றன.

பாஸிசம் எவ்வாறு அதிகாரத்திற்கு வருகின்றது?

பாஸிசம் அதிகாரத்திற்கு வருவது என்பது, சாதாரண முறையில் ஒரு முதலாளித்தவ அரசு போய், அடுத்த முதலாளித்துவ அரசு வருவதைப் போலல்ல. முதலாளி வர்க்கத்தின்--வர்க்க ஆதிக்கத்தின் ஓர் அரசாங்க வடிவத்திலிருந்து, அதாவது முதலாளித்துவ ஐனநாயகத்திலிருந்து அடுத்த வடிவம் பகிரங்கமான பயங்கர வடிவத்திலான சாவாதிகார முறையாக மாறி இடம் பெறுவதாகும்.

தமிழர் பிரச்சனையை பயங்கரவாதமாக சித்தரித்து  காலத்தை ஓட்டிய அரச பயங்கரவாதம் பாசிசத்தை நிறுவன மயப்படுத்த சுமங்கள தேரர் இறக்கி விடப்பட்டுள்ளார். அமைச்சர் கிஸ்புல்லா மற்றும் அரச துதிபாடுகின்ற நீதி அமைச்சர் கக்கீம் போன்றோர் முஸ்லீம் மக்களிடம் முறையாக மாட்டிக் கொண்டுள்ளனர்.

வேசம் கலைஞ்சு போச்சு கோத்தண்ணை

உன் வாய்க்குத்தான் வந்திருக்கு ஆப்பண்ணை

பாயைச் சுருட்டியோடு கோத்தண்ணை

உன் பரம்பரைக்கே வந்திருக்கு ஆப்பண்ணை

புலி அல்லாத அனைவரும் துரோகிகள், சமூக விரோதிகள். இதைத் தான் மாத்தையா சொன்னான் என்றால், புலிகள் தங்கள் பாசிச வரலாற்றை இப்படித்தான் தேசியமாக்கினர். தாம் அல்லாத மற்றவர்கள் மாற்றுக் கருத்தை வைத்திருப்பது முதல் ஆயுதம் வைத்திருக்கும் உரிமை அனைத்தையும், சமூக விரோத செயலாகவும், சட்டவிரோத செயலாகவும் கூறிய புலிகள், சில ஆயிரம் பேரைக் கொன்று ஒழித்தனர். இப்படி மக்கள் விரோத அரசியலை பாதுகாக்கவும், இதற்கு தலைமை தாங்கிய "மேதகு"வின் சர்வாதிகாரத்தை பாதுகாக்கும் அடிப்படையில், ஆயிரம் ஆயிரம் படுகொலைகளை புலிகள் செய்தனர்.

முன்னிலை சோஸலிசக் கட்சியின் முன்னணி உறுப்பினர்களான பிரேம்குமார் குணரத்தினம், திமுது ஆட்டிகல ஆகியோர் கடத்தப்பட்டு தீவிர விசாரணைகளின் பின்னர் இலங்கை அரசால் விடுதலை செய்யப்பட்டிருந்தனர். தமிழீழ விடுதலைப்புலிகள் பலம் பெற்றிருந்த காலத்தில் மடடுமல்லாமல் அவர்கள் முள்ளிவாய்க்காலில் தோற்கடிக்கப்பட்டு மூன்றாண்டுகள் ஆகிவிட்ட பின்னரும் கூட இலங்கையில் ஜனநாயகம் கேள்விக்குள்ளாக்கப்படடுக் கொண்டிருப்பதையே காணமுடிகிறது.

ஜெனிவாத் தீர்மானத்திற்குப் பின்பு நாட்டில் இனங்களுக்கிடையிலான துருவமயப்படுத்தல் செயற்பாடுகள் வேகப்படுத்தப்படுகின்றன. தீவிர பேரினவாத சக்திகளும் மதவாதிகளும் இவற்றில் முன் நிற்கின்றன. இவற்றுக்கு ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தின் ஆசிர்வாதமும் வழிகாட்டல்களும் உண்டு.

நமது பாதுகாப்புக்காக
நாம் அவர்களின் பற்களை உடைப்போம்
நமது பாதுகாப்புக்காக
அவர்களின் தலைகள் மீதும்

அவர்களின்  பாதுகாப்பின் மீதும்
அவர்களின் பழத் தோட்டங்களின் மீதும்
அவர்களின் திராட்சைக் கொடிகளின் மீதும்
அவர்களின் வீடுகளின் மீதும்

முஸ்லிம்கள் மலசலகூடத்தைக் கூட பாவிக்கக்கூடாது!

புத்தத்தின் "புனித" நகராம் தம்புள்ள. ஆங்கேயுள்ள முஸ்லிம் பள்ளிவாசல், புத்த புனிதத்தை கெடுக்கப் போகின்றதாம்.

விடுதலைப் புலிகளின் வீழ்ச்சி தவிர்க்க இயலாதது என்பதை 2006இல் போர் மீண்டும் தொடங்கி ஓராண்டிற்குள் பலர் விளங்கிக் கொண்டனர். எனினும் எல்லாராலும் எண்ணங்களை வெளிவெளியாகக் கூற இயலவில்லை. அக் கருத்தை முன்வைப்பது விடுதலைப் புலிகளைப் பலவீனப்படுத்தும் என்பது சிலருடைய காரணமாயிருந்தது. அது அரசாங்கத்தின் போர் முனைப்பை ஊக்குவிக்கும் என்பது வேறு சிலருடைய கவலையாயிருந்தது.

விசேட செவ்வி

தன்னை நாடுகடத்தியதன் மூலம் மக்களிடமிருந்து தன்னை விலக்குவதற்கு முதலாளித்துவ ஆட்சியாளர்கள் முயற்சித்தாலும் இம்மக்களுக்கு அரசியல் ரீதியாக சேவையாற்றுவதை தடுக்க முடியாது என அவுஸ்திரேலியாவுக்கு நாடு கடத்தப்பட்ட, முன்னிலை சோஷலிஸக் கட்சியின் தலைவர் பிரேம்குமார் குணரட்ணம் கூறியுள்ளார்.

புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 53

பலமுனை நெருக்கடிக்குள்ளான இந்திய-இலங்கை ஒப்பந்தம்

இந்திய-இலங்கை ஒப்பந்தம் குறித்த விவாதம் "தீப்பொறி" செயற்குழுவுக்குள் நடைபெற்றுக் கொண்டிருந்தவேளையில் தென்னிலங்கையிலும், வடக்கு-கிழக்குப் பகுதிகளிலும் நிலைமைகள் வேகமாக மாற்றமடைந்து கொண்டிருந்தன.

தமிழ்க் கவிதையுலகின் மிக முக்கிய ஆளுமையான சண்முகம் சிவலிங்கம் மறைந்து விட்டார். ஒரு பிரியாவிடை என்னும் இக்கவிதை அவரிற்கு அவரே எழுதிய ஒரு கல்வெட்டு. மாணிக்கங்களை இழந்து போகிறேன், வளநதிகளை விட்டுச் செல்கிறேன், அது என்வரையில்தான், உங்களிற்கு நான் முகமற்ற ஒரு நிழல் என்ற வரிகள் சங்ககால கவிதைகளை நினைவூட்டும். வருமானவரியும், இறப்பும் தான் வாழ்க்கையில் தவிர்க்க முடியாதவை என்ற ஒஸ்கார் வைல்டின் வரிகள் ஞாபகத்திற்கு வருகின்றன. ஒரு வெய்யில் சுடர்ந்தது, ஒரு மெல்லிய காற்று வீசியது, அவர் போய் விட்டார்.

இலங்கையின் மத்திய மாகாணத்தில் தம்புள்ளை நகரத்தில் பௌத்தக் கொடிகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் அங்குள்ள பள்ளிவாசல் ஒன்றை அகற்ற வேண்டும் என கோசமிட்டார்கள்.

முன்னதாக, இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 3.30 மணிளவில் பெற்றோல் குண்டைப் போன்ற ஒன்று அந்தப் பகுதியில் வீழ்ந்து வெடித்துள்ளது. அதில் எந்தவித பாதிப்புகளும் ஏற்படவில்லை.

தொழிற்கட்சியின் முன்னாள் தலைவரும், பிரதம மந்திரியாகவும் WHO  (ஜ நா வின் உலக சுகாதார நிறுவனம் ) இன் தலைமைப் பதவி வகித்தவருமான குறூ கார்லெம் புறுந்லாண்ட் என்ற, நோர்வேஜிய தொழிற்கட்சியின் ஊடான பிரபலமும் செல்வாக்கும் அரசியல் ஆளுமையும் மிக்க இந்தப் பெண் அரசியல்வாதியின் கழுத்தைத் துண்டித்துக் கொலை செய்து, அப்படுகொலையை அல்கைதா பாணியில்   வீடியோப் பதிவு செய்து பரப்புவது தனது மிகுந்த இலக்குகளில் ஒன்றாகவிருந்தது என்று தனது சாட்சியத்தில் கம்பீரத்துடனும் பெருமையுடனும், இறுமாப்பான புன்னகையுடன் தனது திட்டங்கள் பற்றி பதிலளித்தான் அன்டர்ஸ் ப்ரைவிக்.

சீரியலுக்கும், சினிமாவிற்கும், சந்தை இலக்கியத்திற்கும் எதிரானவர்களாக தங்களைச் சித்தரித்துக் கொள்ளுகிறார்கள், சிற்றிலக்கியவாதிகள். இவர்கள் இலக்கியத்தில் தேடும் புதுமைக்கும், ஜீன்ஸ் போட்ட சேட்டுப் பெண்கள் ஸ்பென்சர் பிளாசா செருப்புக் கடையில் தேடும் புதுமைக்கும் சாரத்தில் வேறுபாடு இல்லை. இலக்கிய மேட்டிமையின் நுகர்வுப் பசியும், மேட்டுக் குடியின் நுகர்வு வெறியும் தோற்றுவிக்கும் படைப்பு கழிவு.

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE