Language Selection

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற எதிரணிக் கட்சிகளின் கூட்டு மே தின ஊர்வலத்தின் போது , புலிக்கொடியை ஏந்தி வந்த அரச ஊடகமொன்றின் இரண்டு ஊடகவியலாளர்கள் பிடிக்கப்பட்டு பாதுகாப்புத் தரப்பிடம் ஒப்படைக்கப்பட்டதாக ஐக்கிய தேசியக் கட்சி பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்திருக்கிறார்.!

என் மீது மிகத் தீவிரமான கண்காணிப்பு உடைய நாளாக 28.4.1987 அன்று இருந்தது. அன்று அமைப்பு சார்ந்த பல வேலைகளை செய்யவேண்டியிருந்தது. அமைப்பைச் சேர்ந்த பெண் தோழர் ஒருவரின் சில தன்னிச்சையான முடிவு ஒன்றைப் பற்றி அவருடன் கதைக்க வேண்டியிருந்தது. அதனால் காலை ஆறு மணிக்கே, நான் பாதுகாப்புக்காக இரவு தங்கியிருந்த ஒரு ஆதரவாளர் வீட்டில் இருந்து வெளியேறினேன். சைக்கிளில் ஏழு மைல்கள் கடந்து சென்று இருந்தேன். அதிஸ்டவசமாக அது கண்காணிக்கப்பட்டு இருக்கவில்லை. அதிகாலையாக இருந்தமையால், அவர்கள் கண்காணிப்பில் இருந்து தப்பி இருந்தேன். இதை நான் பின்பு அவர்களின் வதைமுகாமில் வைத்து உணரமுடிந்தது. ஏனெனில் என்னை பின் தொடர்ந்து இருந்தால், அந்த சம்பவம் பற்றி எனது விசாரணையில் வந்திருக்கும். அவரும் கைது செய்யப்பட்டு இருப்பார். இந்த தன்னிச்சையான அப் பெண்ணின் முடிவு பற்றியும் சற்று பார்ப்பது நல்லது.

ஆயிரக் கணக்கான லீட்டர் பால் தினசரி வீணாவதாக முறைப்பாடு

இலங்கையில் நுவரெலியா மாவட்டம், ஹட்டன் நகரில் ஒன்றுகூடிய நூற்றுக்கணக்கான பால் பண்ணை உரிமையாளர்களும் தொழிலாளர்களும், ஆயிரக்கணக்கான லீட்டர் பாலை வீதியில் வீசிஇறைத்து இன்று புதன்கிழமை எதிர்ப்பில் ஈடுபட்டனர்.

ஆட்சி மாற்றத்தால் தமிழர் உரிமை கிடைக்காது  மக்களுக்கான அரசியலை புதியதிசையில் முன்னெடுக்கவேண்டும்  யாழ்நகர் மேதினக்கூட்டத்தில் அறைகூவல்


இன்றைய மகிந்த சிந்தனை ஆட்சி நீடிப்பதால் தமிழ்,முஸ்லீம்,மலையகத்தமிழ் தேசிய இனங்களுக்கு விடிவு ஏற்படப்போவதில்லை. அதே போன்று ஏகப்பெரும்பான்மையான சிங்கள உழைக்கும் மக்களுக்கும் எவ்வித பொருளாதார அரசியல் விமோசனங்களும் கிடைக்கமாட்டாது. அதேவேளை ஆட்சி மாற்றம் ஒன்று ஏற்பட்டு ஜக்கிய தேசியக்கட்சி ஆட்சிக்கு வந்தாலும் ஆட்கள் மாறுவார்களே தவிர இன்றைய பேரினவாத தரகு முதலாளித்துவ ஆட்சி அமைப்தே நீடித்துச் செல்லும்.




இனஒடுக்குமுறைக்கு எதிராக
தரகுமுதலாளியத்திற்கு எதிராக

ஏகாதிபத்தியத்திற்கு எதிராக
இந்திய விரிவாக்கத்திற்கு எதிராக

அரை நிலப்பிரபுத்துவத்திற்கு எதிராக

புதிய-ஜனநாயக மார்க்சிச-லெனினிச கட்சியின் புரட்சிகர மேதினப் பேரணியும் பொதுக்கூட்டமும் 01-05-2012 அன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

கோஷங்களுடனும் பதாகைகளுடனும் சுன்னாகம் சந்தை வளாகத்திலிருந்து சைக்கிள் பேரணியாகச் சென்ற தோழர்கள் ஸ்ரான்லி வீதியில் அமைந்துள்ள பட்டப்படிப்புக்கள் கல்லூரி வளாகத்தில் மாபெரும் பொதுக்கூட்டத்தினை நடத்தினர்.

இன, மத, நிற, பால், சாதியம் கடந்த உணர்வுடன் உலகத் தொழிலாளி என்ற வர்க்க உணர்வுடன் அணிதிரண்டு போராடும் நாளே மே நாள்!

தொழிலாளி வர்க்க உணர்வை மழுங்கடிக்கும் மேதின கூத்துக்களுக்கும் கும்மாளங்களுக்கும் என்றும் குறைவில்லை. தொழிலாளர்களின் வர்க்க உணர்வை மழுங்கடிக்கும் களியாட்டங்களுக்கும், அறிக்கைகளுக்கும், வாழ்த்துக்களுக்கும் பஞ்சமில்லை.

மக்களை மயக்க
வெட்டரிவாளையும் சுத்தியலையும்
காட்டேரி கூடக் கையில் எடுக்கிறது
மேதின வாழ்த்துக்கு முண்டியடிக்கிறது
பாட்டாளிக் கொடியை பற்றி வருகிறது.
வெற்றியல்லவா இது நமக்கு
பற்றிய தீயின் வேகம்
முற்றிவிடாமல் மக்கள் முன்
வேடம் கட்டி வலம்வரும் நிலைக்கு
சுரண்டும் கூட்டம்கூட மேதினக்
கொண்டாட்டம்.

"மே" மாத தொழிலாளர் தினத்திலும்
எங்கள் நாட்டில் ஆச்சரியம்..!?

மானிட உரிமையின் அதி.., உச்ச
"ஜனநாயக சோசலிசக் குடியரசு" - என்ற
தத்துவப் பெயரினை
வித்தகமாய்ப் பொறித்திருக்கும்
சிறிலங்காத் தீவுத் தேசத்தில்..!

இன, மத, நிற, பால், சாதியம் கடந்த உணர்வுடன் உலகத் தொழிலாளி என்ற வர்க்க உணர்வுடன் அணிதிரண்டு போராடும் நாளே மே நாள்! 

தொழிலாளி வர்க்க உணர்வை மழுங்கடிக்கும் மேதின கூத்துக்களுக்கும் கும்மாளங்களுக்கும் என்றும் குறைவில்லை. தொழிலாளர்களின் வர்க்க உணர்வை மழுங்கடிக்கும் களியாட்டங்களுக்கும், அறிக்கைகளுக்கும், வாழ்த்துக்களுக்கும் பஞ்சமில்லை.

அறியாமைக்குள் மூழ்கடிக்கின்ற
பண்டிகைகளும் தினங்களும்
வியாபார நிறுவனங்களின் காட்சிஅறைகளில்
விளம்பரப்படுத்துவதை காண்கின்றோம்,
கண்ணாடிக்கூண்டுக்குள் மின்னுகின்ற
காட்சிப்பொருட்களை
பார்க்கும் ஏழைக்குழந்தை
கைகளில் சுமக்கமுடியாப் பொருட்களை
தள்ளுவண்டில்களில் நிறைத்தவண்ணம்
போகிறவர்களை பார்த்து பிரமித்துப்போகிறது!

மே தினம் இன்றைய உலகின் அடக்கி ஒடுக்கும் ஆதிக்க –அதிகார சக்திகளால் ஓர் கேளிக்கை களியாட்டத் தினமாக ஆக்கப்பட்டுள்ளது. எட்டு மணிநேர வேலைக்காக இரத்தம் சிந்திப் போராடிய சிக்காக்கோ தொழிலாளி வர்க்கத்தின் போராட்ட எழுச்சிகள்இ அத்தியாகிகளின் தியாக வரலாறுகள் மறைக்கப்படுகின்றன. மழுங்கடிக்கப்படுகின்றன.

தோழர் ரயாகரன், சில நாட்களுக்கு முன் மேற்குநாடுகளில், விளிம்புநிலை மனிதர்களுக்கானதும், தற்காலிக வறுமை நிலைக்கு தள்ளப்பட்டோருக்குமான சமூகநல உதவிகளை, எவ்வாறு தமது அறிவை பாவித்து புலம்பெயர் பிரமுகர். கூட்டங்கள் தமது சீவியத்தை போக்குகின்றன என எழுதியிருந்தார்.

உழைத்து வாழாது, சுரண்டி வாழும் பிரமுகர்தன அரசியல்

கருணாநிதி கோமாவில் உள்ளார்! தமிழக சஞ்சகை ஓன்று சரியாகத்தான் சொல்லியுள்ளது!

"தமிழீழக் கனவை நனவாக்க வாழ்வை அர்ப்பணியுங்கள் தி.மு.க. தொண்டர்களுக்கு அறைகூவல் !  தமிழினம் தலை நிமிர - உடல் - பொருள் - ஆவியை தர தயார்!

புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 54

மக்கள் நலன்களை நிராகரித்த புலிகளுக்கும் இந்தியாவுக்குமிடையேயான போர்: "ஒப்பரேசன் பவான்"

பாலாலி முகாமில் சயனைட் உட்கொண்டு இறந்த புலிகள்பலாலி இராணுவ முகாமில் சயனைட் வழங்கப்பட்டு தற்கொலை செய்து கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னணி உறுப்பினர்களான குமரப்பா, புலேந்திரன் உட்பட 12 பேரினதும் மரணத்தை தமிழீழ விடுதலைப் புலிகள் இந்தியாவுக்கும், இந்திய அமைதி காக்கும் படைக்கும் எதிரான போர்ப் பிரச்சாரமாக மேற்கொள்ளத் தொடங்கியிருந்தனர்.

இலங்கையில் முஸ்லீம் மக்களுக்கு எதிராக ஆரம்பித்துள்ள இனவாதப் போர் நாளுக்கு நாள் வளர்ந்த வண்ணமே உள்ளது. தம்புள்ளையில் மசூதியை அகற்ற அரசே உத்தரவிட்டது. அதையடுத்து காத்தான் குடியில் முஸ்லீம் காரியாலையம் எரிப்பு போன்றவற்றின் ஊடாக, அரசு இதை திட்டமிட்டு கட்டவிழ்த்து விடுகின்றது என்பது தெட்டத் தெளிவாகிறது. இலங்கை அரசு தனது இனவாத கோர முகத்தை தற்போது முஸ்லீம் மக்களின் மீது திருப்பியுள்ளது.

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE