Language Selection

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

ஒடுக்கப்பட்ட மக்களைக் காட்டிக் கொடுத்தவர்கள், காட்டிக் கொடுத்ததாக கூறுகின்றனர்.

இனம் சார்ந்து குறுகிய இன அடையாளம் மூலம் இயங்கியவர்கள், இயங்குபவர்கள், தம்மை இனம் சார்ந்து மற்றவர்கள் கேலி செய்ததாக குற்றஞ்சாட்டுகின்றனர். தீப்பொறி அமைப்பையும்,  பொது இடது அரசியலையும், அது சார்ந்த நபர்களையும் புலியிடம் காட்டியும் கூட்டியும் கொடுத்தவர்கள், தம்மை அரசிடம் காட்டிக் கொடுத்ததாகக் கூறுகின்றனர். புலிகள் காலாகாலமாகச் செய்து வந்த அரசியல் இது. புலியை அடையாளமாகக் கொண்டு உருவான "மே18" ஜ அடிப்படையாகக் கொண்ட ரகுமான் ஜான் தலைமையிலான அரசியலும் இது தான்.

முதலில் முன்னேறிய சக்திகள் யார் என்பதை அரசியல் ரீதியாக பரஸ்பரம் இனம் காண்பதில் இருந்து இது தொடங்குகின்றது. ஆம் கடந்த வரலாற்றில் இருந்தும், சொந்த சுயவிமர்சனத்தில் இருந்தும் இதற்கான அரசியலை நாம் இனம் காணவேண்டும். வரலாற்று வெற்றிடத்திலோ, திடுதிப்பான திடீர் புரட்சி வேஷத்தின் பின்போ, புரட்சிகர அரசியலை நாம் இனம் காணவோ, வந்தடையவோ, முன்னெடுக்கவோ முடியாது.

2000ஆம் ஆண்டு தல் 2011ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் 14,257 பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டிருப்பதாகவும் 2000 முதல் 2010ஆம் ஆண்டு வரையில் 27,003 சிறுவர்கள் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டிருப்பதாக தகவல்கள் கிடைத்திருப்பதாக சிறுவர் அபிவிருத்தி மகளீர் விவகார அமைச்சு நேற்று சபையில் தகவல் வெளியிட்டது.

"சிறிலங்காவில் உள்ள தமிழர்கள் தமிழீழம் கேட்கவில்லை!..."

தமிழக அரசியல் கட்சியினரிடம் இப்போது ஒரு கேள்வி கேட்க வேண்டிய தேவை உள்ளது. இலங்கையிலுள்ள தமிழர்கள் தமிழ் கட்சியினர் அனைவரும் உரிமைகளுடன் கூடிய ஒன்றுபட்ட  இலங்கை தேவை என்று கூறும் போது நீங்கள் மட்டும் ஏன் தனி ஈழம் தேவை என்கிறீர்கள்? என, இந்திய நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவி சுஸ்மா சுவராஜ் கேட்டுள்ளார்.

புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 56

இந்தியப் படையினதும் புலிகளினதும் கோரத்தனதுக்கு மத்தியில் எமது செயற்பாடுகள்

1986ல் தமிழீழ விடுதலைப் புலிகளால் தடைசெய்யப்ட்டிருந்த ஈழவிடுதலை இயக்கங்களின் செயற்பாடுகள் வடக்குக் கிழக்குப் பகுதிகளில் ஆரம்பமாகிவிட்டிருந்ததுடன் தமிழீழ விடுதலைப் புலிகளைத் தேடியழிக்கும் இந்தியப்படையினரின் நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டிருந்தன.

சம்பந்தர் ஜயா, கொடி பிடித்த விடயம் கூட்டமைப்பினரிடம் தமது வாக்கு வங்கியை சரித்து விடுமோ என்ற பீதியைக் கிளப்பி விட்டுள்ளது. இந்தப் புரளியோடு அம்மனின் வாகனம் சிறிலங்கா கொடியிலிருப்பதாய், தமிழரசுக்கட்சி நந்திக்கடல் வரைக்கும் சொல்லாத விடயம் சம்பந்தர் அந்நியப்பால் குடித்தவுடன் வெளிவரும் ஞாநோதயத்தைப் பாருங்கள். 

தமது இருப்பைத் தக்க வைத்துக் கொள்வதற்காய் இனங்களிடையே பகைமையை தூண்டுவதும், மதவெறியை கிண்டிவிடுதுமாய் காலம் காலமாய் காலத்தை ஓட்டியவர்களின் திமிரான நம்பிக்கையைப் பாருங்கள்.

இனங்களுக்கிடையிலான இனவாதத்தை முறியடிக்காமல், ஒடுக்கப்பட்ட வர்க்கங்களின் ஐக்கியத்தை உருவாக்க முடியாது. இலங்கையில் வர்க்கப் போராட்டத்தை நடத்த முடியாது. இதற்கான இன்றைய தடைகள் என்ன? வர்க்க சக்திகள் முன்னுள்ள கடமைகள் என்ன?

கீழ்வரும் கோரிக்கைகளை முன்னிறுத்தி புதிய ஐனநாயக மாக்சிய லெனிய கட்சியின் மேதினம் ஹட்டனில் நடந்தது.


1)மலையக மக்களை தேசிய இனமாக அங்கரித்து சுயநிர்ணய அடிப்படையில் தீர்வு வழங்கப்பட வேண்டும்.
2)வாழ்க்கை செலவுக்கு ஏற்ப நியாமான சம்பள அளவுத்திட்டம் உறுதி செய்யப்பட  வேண்டும்.

ஸ்டாலின் துற்றப்படுவது ஏன்?: பகுதி – 23

“தனி நாட்டில் சோசலிசம்” என்பது டிராட்ஸ்கியமாகும்

“தனிநாட்டில் சோசலிசம்” கட்டப்போவதாக என்றும் ஸ்டாலின் ஒரு நாளும் கூறியது கிடையாது. ஆனால் டிராட்ஸ்கியம் இதைக் கூறிதான் இன்று வரை பிழைக்கின்றது. இதையே ஸ்டாலினிசம் என்று முத்திரை குத்துகின்றது.

மதுரை ஆதீனத்தின் அடுத்த மடாதிபதியாக “ரஞ்சிதா” புகழ் நித்யானந்தா நியமிக்கப்பட்டதிலிருந்து ஆகமங்களின்படி விதிகளின்படி நியமிக்கப்பட்டது சரியா? தவறா? என்றொரு விவாதம் சூடாக நடந்து கொண்டிருக்கிறது. நித்தி நியமிக்கப்பட்டதில் எந்த விதி மீறல்களும் இல்லை என்று மதுரை மூத்த ஆதீனம் அருணகிரிநாத ஞானசம்பந்த தேசிகர் கூறுகிறார். சொத்துகளை அபகரிப்பதற்காகவே இந்த நியமனம் நடந்திருக்கிறது, நித்தியின் கட்டுப்பாட்டில் ஆதீனம் இருக்கிறார் என்று இந்து அமைப்புகள் கூறுகின்றன. இதற்கிடையே பிடதி சொத்துக்களை விட்டுவிட்டு வரத் தயார். ஏனைய ஆதீனங்கள் விட்டுவிட்டு வரத்தயாரா? குறுகிய காலத்திற்குள்ளேயே என்னால் மீண்டும் சம்பாதித்துக் கொள்ள முடியும் என்று சவடால் விட்டிருக்கிறார் நித்தி. பிடதி நித்யானந்தாவை என்ன, காஞ்சி தேவநாதனைக்(காஞ்சி கோவில் மூலஸ்தானத்தில் கடவுளுக்கு சொந்த புளுபிலிம் காட்டியவன்) கூட நியமித்துக் கொள்ளட்டும், அதில் நமக்கு பிராச்சனை ஒன்றுமில்லை. ஆனால் வேறு கேள்விகள் இருக்கின்றன.

மனித சமூகத்தின் அடையாளங்கள், மனிதனை ஆட்டிப் படைக்கின்றது. அவலப்படுத்தி அடக்கி-ஒடுக்குகின்றது. அடிமையும் கொள்கின்றது.

மனிதனின் நிற அடையாளம் நேரடியாக காணக் கூடிய ஒன்று. சாதிய அடையாளத்தை எது கொண்டு காண்கின்றார்கள். உண்மையில் கறுப்பின மக்களை நிறத்தால் காண்கின்ற, காட்சிப் புலனை, பார்க்கின்ற சிந்தனை முறைமையை விட, சாதிய அடையாளம் என்பது பார்வைக்கு தென்படுவது அசாத்தியமே. ஆனால் அதனுடைய அதிகார வீச்சுத்தான், மக்களை அவலப்படுத்தி, அடக்கி-ஒடுக்கி அடிமையும் கொள்கின்றது.

முள்ளிவாய்க்காலில் வெள்ளைக்கொடியை தூக்கச் சொன்னவர்கள், சம்பந்தரை சிங்கக்கொடியை சேர்ந்து பிடிக்கச்சொல்லியிருக்கிறார்கள். ஆம் இதுதான் நடந்தது. இதற்கான விளக்கம் இராஜதந்திர நகர்வாக மக்களிடம் சொல்லப்படலாம். இதைத்தான்

"ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து யாழ்ப்பாணத்தில் நடத்திய மே தினக் கூட்டத்தில் தேசியக் கொடியை ஏந்தியது குறித்து மேலதிகமாக பேச வேண்டிய அவசியம் இல்லை" என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்

புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 55

இந்தியப் படைகளுக்கெதிரான புலிகளின் போராட்டம் குறித்து "தீப்பொறி" செயற்குழுவுக்குள் விவாதம்

இந்திய-இலங்கை ஒப்பந்தம் இந்திய மேலாதிக்க நலன்களைக் கொண்ட, எம்மீது திணிக்கப்பட்டதொன்று என்ற கருத்தைக் கொண்டிருந்த நாம், இந்தியப் படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமிடையிலான போர் குறித்த விவாதத்தை ஆரம்பித்திருந்தோம்.

இன்று காலை 9 மணி அளவில் தோழர் சீனிவாசன் இறந்த செய்தியை தோழர்கள் தெரிவித்தனர்.

தோழர் சீனிவாசன் 70 களின் பிற்பகுதியிலிருந்தே புரட்சிகர அரசியலின் ஆதரவாளர். அமைப்பு அரசியலின் மீது கொண்ட ஈடுபாட்டின் காரணமாக அரசு பணியிலிருந்து விருப்ப ஓய்வில் விடுபட்டு கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் கலை இலக்கிய கழகத்தின் மாநில பொருளாராகவும் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளராகவும்  பொறுப்புக்களை ஏற்று அயராது பணியாற்றியவர்.

வடபுலத்துப் போர்ச் சூழலால் இயல்பு வாழ்வும் ஜனநாயகமும் கடந்த காலங்களில் மறுக்கப்பட்டு வந்தது. போர் முடிந்த பின்பும் அதே நிலை தொடருகிறது. இதன் மத்தியிலேயே இம்முறை மேதினம் யாழ்ப்பாணத்தில் பேரணிகளுடன் கொண்டாடப்பட்டது.

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE