Language Selection

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

இவரை நம்பலாமா? யாரை பொன்சேகவையா?.... நம்ப நடக்கலாம்!.....

வடக்கில் சிவில் நிர்வாகத்தில் இராணுவத்தினரின் தலையீடு இருக்கிறது என்பதை நான் முழுமையாக ஏற்றுக் கொள்கிறேன். சிவில் நிர்வாகத்தில் இராணுவத்தினர் தலையிடக் கூடாது. அது முழுமையாக நிறுத்தப்பட வேண்டும். இராணுவம் இராணுவத்தின் வேலையை மட்டும்தான் செய்ய வேண்டும்.

கடந்த மூன்று வருடங்களில் இராணுவத்தை இவர்கள் சிவில் நிர்வாகத்திலிருந்து விலக்கியிருக்கலாம். இப்போது இவர்களால் போடப்பட்டிருக்கும் அதிகாரிகள் கூட தகுதிவாய்ந்தவர்கள் அல்லர். அரசியல் அடிவருடிகளைத்தான் இவர்கள் நியமித்துள்ளனர். யாழ்ப்பாணத்தைப் பாருங்கள். இதுதான் நிலைமை. கொள்கை இல்லாமல் போனால் இப்படித்தான் இருக்கும் என்றார்

புரட்சிக்குப் பிந்தைய தீர்வைக் கொண்டு, புரட்சிக்கு முந்தைய முரண்பாடுகளை தீர்க்கலாம் என்று கூறுவது, புரட்சிகரமான அரசியல் நடைமுறையை நிராகரிப்பதாகும். குறிப்பாக இனப்பிரச்சனையில் இதை முன்னிறுத்துகின்ற அரசியல் போக்கைக் காண்கின்றோம். இனப்பிரச்சனை அல்லாத மற்றைய முரண்பாடுகள் மேல், இந்த அணுகுமுறையை இவர்கள் கையாள்வதில்லை. இது எதை எடுத்துக் காட்டுகின்றது என்றால், இனவாதத்தைக் கடந்து பாட்டாளி வர்க்கமாக சிந்திக்கவில்லை என்பதைத்தான். பெரும்பான்மை சார்ந்த இடதுசாரிகள், பாட்டாளிவர்க்க சக்திகள் மத்தியில் இக் கருத்துப்போக்கு செல்வாக்குச் செலுத்துகின்றது. வர்க்க அரசியல் கூறுக்கு பதில், இந்த இனவாதக் கூறு பொதுவில் காணப்படுகின்றது.

எரியும் இனவாத நெருப்பிற்கு எண்ணை ஊற்றும் வேலைகள்!
தமிம்-முஸ்லிம் மக்கள் விழிப்பாக செயற்படவேண்டும்!

மன்னார் ஆயர் அதிவண இராயப்பு ஜோசப்பை தம்புள்ள பிக்குவுடன் ஒப்பிட்டுப் பேசிய அமைச்சர் ரிஷாட் பதியூதீன், இந்த பாராளுமன்றத்தில் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் அத்துடன் அவர் இவ்வாறு பேசியமை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வன்மையாகக் கண்டிக்கின்றது என்று கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம்.பி. செல்வம் அடைக்கலநாதன்!

2003 இல் நடிகர் ஸ்ரீகாந்தின் நடிப்பில், கரு.பழனியப்பனின் இயக்கத்தில், வித்தியாசாகர் இசையமைக்க வெளி வந்த திரைப்படம் பார்த்திபன் கனவு. இதன் சில பகுதிகள் இலங்கையில் படமாக்கபட்டுள்ளது.

தற்போது இப்படத்தில் உள்ள பாடல் ஒன்றின் இசை நோர்வேயின் ஆதி குடிகளான சாமி மக்களின் இசையை திருடி இசை அமைக்கபட்டுள்ளதாகவும், தமது பாரம்பரிய இசை தவறாக பாவிக்கபட்டுள்ளதாகவும் சர்சையை கிளப்பி உள்ளது  நோர்வே தேசிய ஒளிபரப்பு  நிருவனமான NRK (sapmi). இந்த சர்ச்சையில் முன்வைக்கப்படும் விவாதங்கள் சரியாக இருந்தாலும் , விவாதத்தின் அடிபடையில் உள்ள தகவல்கள்  தவறானது ஆகும்.    (இந்தியர்களின்) இசை திருட்டு சம்பந்தமான சேதியை ஒலி/ ஒளி பரப்பிய நோர்வே தேசிய ஒளிபரப்பு  நிருவனமான NRK sapmi இந்த இசை திருட்டை இலங்கை தமிழர்கள் செய்ததாக தனது ஒலி/ ஒளி செய்தியில் கூறுகிறது .

அரசியல் பழிவாங்கலுக்காகத் தடுத்து வைக்கப்பட்டு நீதி மன்றத் தீர்ப்புகள் மூலம் சிறை வைக்கப்பட்டிருந்த முன்னாள் ராணுவத் தளபதி சரத்பொன்சேகாவிற்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய முடியுமானால் ஏன் நீண்ட பல வருடங்களாக விசாரணை இன்றித் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய முடியாது?

அந்த வகையில் தமது விடுதலைக்காக நீதி கோரி கடந்த 5 நாட்களாகச் சிறைகளில் உண்ணாநிலைப் போராட்டம் நடாத்தி வரும் தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கை முற்றிலும் நியாயமானவையாகும். அவர்களின் விடுதலைக் கோரிக்கையை அரசாங்கம் முழுக் கவனத்தில் கொண்டு உடன் விடுதலைக்கு ஆவன செய்தல் வேண்டும்.

பல ஆயிரம் ஆய்வு கட்டுரைகள் எழுதி அணுஅணுவாக ஆராய்ந்து, மக்கள் நலம் சார்ந்த பார்வையில், புலிகளின் அழிவை அரசியல் ரீதியாக எதிர்வு கூறியவர்கள், புலிகளின் அரசியல் பிரசாரத்துக்கு எதிராக அரசியலை முன்னெடுத்தோர் என பலர் இன்றும் தேசத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் உள்ளனர் . அவர்கள் எவருமே பிரபாகரன் என்ற தனிமனிதனை எல்லா அழிவுக்கும், அரசியல் சீர்கேட்டுக்கும் தனியாளாக காரணம் என கூறியது கிடையாது.

புலியை ஒரு பாசிச இயக்கமாக சிங்கள மக்கள் புரிந்துகொள்ளாது, பயங்கரவாத இயக்கமாகவே புரிந்துகொண்டுள்ளனர். இந்த அரசியல் மகிந்த பாசிசத்தை புரிந்து கொள்வதற்கு தடையாக உள்ளது. சிங்கள மக்கள் புலியைப் புரிந்து கொண்ட விதம், அரசு கூறிய உள்ளடக்கதில் இருந்து தான். இதனால் புலி பற்றி மட்டுமல்ல இனப்பிரச்சனையை புரிந்து கொண்ட விதமும் கூட, அரசு சொன்னதை தாண்டியல்ல. இதற்கு மாறாக புலியை சார்ந்து நின்று சொன்ன, சிறியளவு புரிதலும் காணப்படுகின்றது.

பாஷண அபேவர்த்தன

தமிழில்: மீராபாரதி

நீங்கள், இலங்கையில் ஜனநாயகத்திற்கான பத்திரிகையாளர்கள் (Journalists for Democracy in Sri Lanka- JDS) என்ற உங்கள் அமைப்பினர்இ நண்பர்கள் ஆகியோர் பங்களிப்பு இல்லாமல் சர்வதேசச் சமூகத்தையே உலுக்கிய கைப்பேசி வீடியோவில் எடுக்கப்பட்ட படுகொலைக் காட்சிகள் வெளிச்சத்துக்கு வந்திருக்க மாட்டா. இந்த வீடியோ படங்களை சானல் 4 தொலைக்காட்சிக்குத்தான் வழங்க வேண்டுமென எப்படித் தீர்மானித்தீர்கள்?

முதலில் நான் ஒன்றைக் கூற வேண்டும். இலங்கை அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்ட பயங்கரமான படுகொலைகளும் குற்றச் செயல்களும் ரகசியமாக நடந்தவையல்ல. சர்வதேச அதிகார சக்திகளைப் பொறுத்தவரை இவ்வாறான இன அழிப்பு நடவடிக்கை இடம்பெறப் போகிறது என்பதை ஏற்கனவே அவர்கள் அறிந்திருந்தார்கள். இந்தப் படுகொலைக் களத்தின் ஆர்வமிக்க பார்வையாளர்களாக ஏராளமானோர் தொலைதூரத்தில் இருந்தார்கள். இந்த உண்மைஇ ஐ. நா. அவையின் மனிதாபிமானச் செயல்பாடுகளுக்கான தலைவர் சர் ஜோன் ஹோல்ம்ஸ் சானல் 4இல் வெளிப்படையாகக் கூறிய ஒரு கருத்தில் மிக நன்றாகவே பிரதிபலித்தது:

போர் முடிவடைந்து மூன்றாண்டுகள் கடந்துவிட்ட போதிலும், மனிதாபிமான பேரவலத்திற்கு முடிவில்லை என்று வன்னிப் போரினால் மிகவும் பாதிக்கப்பட்ட தமிழ்மக்கள் கொழும்பிலிருந்து வெளிவரும் தமிழ் வார வெளியீடு ஒன்றுக்கு தமது சோகக்கதைகளை விபரித்துள்ளனர்.

இம் மக்கள் கலந்துரையாடலில் கிளிநொச்சியை அண்டிய பிரதேச மக்கள் முன்வைத்த அவர்களின் சோகக் கதைகளையும் போரின் பின்பும் மீண்டு எழுதத் தடையாக இருக்கின்ற நிலைமைகளையும் இப்பகுதியில் தொகுத்துத் தருகின்றோம்


முன்னிலை சோசலிசக் கட்சியின் உறுப்பினர்கள் இருவர் நீர்கொழும்பு பிரதேசத்தில் சுவரொட்டிகளை ஒட்டிக்கொண்டிருந்த போது, அங்கு சென்ற இராணுவத்தினர், கட்சியின் உறுப்பினர்களை அச்சுறுத்தியதுடன் அவர்கள் ஒட்டிய சுவரொட்டிகளை கிழித்தெறிந்துள்ளனர்.

இன்று அதிகாலை 5மணியளவில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் சென்ற இரண்டு இராணுவத்தினர், சோசலிசக் கட்சியின் உறுப்பினர்களை அச்சுறுத்தியுள்ளதுடன், அவர்கள் வைத்திருந்த சுவரொட்டிகளை பறித்துச் சென்றுள்ளனர்.அவ் உறுப்பினர்களையும் கடத்திச் சென்றுள்ளனர்.

"சிங்கள இனவெறி அரசின் திட்டமிட்ட வன்முறை தமிழ் மாணவர்கள் மீதாக தொடருமானால், அன்று எப்படி மாணவர் சமூகம் அடக்குமுறையை உடைப்பதற்கு தள்ளப்பட்டார்களோ, அதே வழியில் எதிர்காலத்திலும் செயற்படுவதற்கு தயங்கமாட்டார்கள் என்பதனை தமிழ் உணர்வுள்ள அனைவரும் ஆழமாக நம்புவார்கள் .

இக்கட்டமான நெருக்கடிக்குள்ளும் தங்கள் உயிருக்கு அஞ்சாமல் தமிழ்த் தேசிய உணர்வுடன் செயற்படும் அனைத்து மாணவர்களுடன் நாம் இருகரம் பற்றி அணைக்கும் நேரத்திலும் அவர்களுக்கு ஏற்படும் சிங்கள் அரசின் அச்சுறுத்தலை மற்றும் வன்முறையை நாம் வாழும் யேர்மன் அரசிடம் மற்றும் அரச கட்சிகளிடம் ஊடகத்திற்கும் தொடர்ந்து அறிவித்துக் கொண்டே இருகின்றோம் என்பதை இத்துடன் தெரிவிக்க விரும்புகின்றோம்."

வன்னி அவலமும், படுகொலைகளும் எங்கள் மனதோடு அழிக்க முடியாத பதிவுகளாக பதிவாகி விட்டது. மே பிறந்து விட்டால் அந்த அவலக் குரல்களும், கெஞ்சல்களும் எம்மை வாட்ட ஆரம்பித்து விடுகிறது. உண்மையாகவே மக்களை நேசிக்கும் உள்ளங்களால், இந்த உணர்வினை ஓரம் தள்ளி வைத்துவிட்டு தன் நாளாந்த இயல்பு வாழ்க்கையில் ஈடுபட முடியாது. இலட்சக் கணக்கான அந்த அப்பாவிகளின் கத்தலும், கதறலும் அவ்வளவு இலகுவில் எங்களை அமைதி கொள்ளவிடாது. மக்களுக்கெதிராக இந்த கொடுமைகளையும், துரோகத்தனத்தையும் இழைத்த அந்த ஒவ்வொரு அரசியல் அதிகார வெறியர்களையோ அவர்களின் சூழ்ச்சிகளையும், கபடநடவடிக்கைகளையும் என்றும் மறக்கவும் முடியாது, மன்னிக்கவும் முடியாது.

வெறும் கண்டனங்களைக் கடந்து, இதை நாம் கூட்டாக எதிர்கொள்வது எப்படி என்பதே எமது அக்கறை. இந்த சம்பவத்தை குறுகிய அரசியல் நோக்கங்களுக்கு பயன்படுத்துவதைக் கடந்து, எமது சமூகத்தின் மீதான அரசியல் பிரச்சனையாக கருதியே இதை அணுகுகின்றோம்.

இந்த வன்முறை மூலம் அரச பயங்கரவாதம் எமக்குக் கூறுவது என்ன? பேரினவாதத்துக்கு அடங்கிப் போ என்கின்றது. மறுதளத்தில் இதற்கு எதிரான போராட்டம், வரலாற்றுப் பொறுப்புடன் இதை வழிகாட்டக் கோருகின்றது. இந்த வன்முறை தொடர்பாக யாழ் பல்கலைக்கழக மாணவ தலைவர்களுடனான எமது உரையாடல் மற்றும் கருத்துப் பரிமாற்றங்கள் சார்ந்து இதை விவாதிக்கின்றோம். தொடரும் அரச பயங்கரவாதத்தை எதிர்காலத்தில் எப்படி எதிர்கொள்வது என்பதே, எம் முன்னுள்ள சவால். இது பற்றியதே எமது விவாதம்.

வெறும் கண்டனங்களைக் கடந்து, இதை நாம் கூட்டாக எதிர்கொள்வது எப்படி என்பதே எமது அக்கறை. இந்த சம்பவத்தை குறுகிய அரசியல் நோக்கங்களுக்கு பயன்படுத்துவதைக் கடந்து, எமது சமூகத்தின் மீதான அரசியல் பிரச்சனையாக கருதியே இதை அணுகுகின்றோம்.

இந்த வன்முறை மூலம் அரச பயங்கரவாதம் எமக்குக் கூறுவது என்ன? பேரினவாதத்துக்கு அடங்கிப் போ என்கின்றது. மறுதளத்தில் இதற்கு எதிரான போராட்டம், வரலாற்றுப் பொறுப்புடன் இதை வழிகாட்டக் கோருகின்றது. இந்த வன்முறை தொடர்பாக யாழ் பல்கலைக்கழக மாணவ தலைவர்களுடனான எமது உரையாடல் மற்றும் கருத்துப் பரிமாற்றங்கள் சார்ந்து இதை விவாதிக்கின்றோம்;. தொடரும் அரச பயங்கரவாதத்தை எதிர்காலத்தில் எப்படி எதிர்கொள்வது என்பதே, எம் முன்னுள்ள சவால். இது பற்றியதே எமது விவாதம்.

இதையோர் யுத்த வெறியாகத்தான் தமிழ்மக்கள் கொள்வார்கள். முள்ளிவாய்க்காலின் யுத்த முடிவிற்குப் பின் தமிழ்மக்களுக்கு கொடுத்த வாக்குறுதி பயங்கரவாதம் ஓழிக்கப்பட்டு விட்டது. அடுத்ததாக தமழ் மக்கள் பிரச்சினைக்க தீர்வு காணப்படுமென!

கடந்த மூன்றாண்டுகள் தமிழர் தாயகம் இனச் சுத்திகரிப்பிற்குள்ளாகி, அதன் சகலதும் சர்வாதிகாரம் கொண்டு செயற்படுகின்றது. நேற்றுமுன்தினம் தனது அரசியல் கருத்தைச் ஜனநாயக வழி நின்று சொன்ன பல்கலைக்கழக மாணவன் அரச இனவெறியர்களால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் உள்ளான்!

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE